வியாழன், 17 மே, 2018

பாஜகவின் வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு.. உ.பி யில் உவைஸியின் கைங்கரியத்தால் பாஜக 19.தொகுதிகளில் ..

ஆலஞ்சியார் : பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு.. நீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா..
இஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட Assignment வேலையே அதுதானா.. ஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்.. 

வாக்கு அரசியலே வேண்டாமா அல்லது நாம் ஏன் தொடர்ந்து ஒரு கட்சியை ஆதரிக்கவேண்டும் அவர்களால் நமது தேவைகள் சமூகத்திற்கு பலனை பெற முடியவில்லையே.. நமது பலத்தை காட்டினால் தான் நமக்குரிய பங்கை உரிமையை பெற முடியுமென மூளைசலவை செய்கிறார்கள்.. யார் வந்தாலும் நமக்கான உரிமையை அவ்வளவுமிகவும் சீக்கிரம் பெற முடியாது ..

புதன், 16 மே, 2018

பதவி ஏற்கும் எடியுரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர் ... எதிர்கட்சி எம் எல் ஏக்களை அடித்து பிடிக்க பகிரங்க ஆதரவு?

ஆளுநருடன் சந்திப்பு
காலை 9.30 மணிக்கு பதவியேற்பு Karnataka Governor releases letter inviting Yediyurappa to form the government and gives 15 days time for horse trading... err... To prove majority.
Veera Kumar - Oneindia Tamil பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவின் எடியூரப்பாவுக்கு அம்மாநில ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிட்டுள்ளது.
 எடியூரப்பா நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க அரசு அமைந்த நாள் முதல் 15 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை செய்தி தெரிவிக்கிறது.
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் பலம் தேவை என்ற நிலையில், 78 தொகுதிகளை வென்ற காங்கிரசும், 38 தொகுதிகளை வென்ற மஜதவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்து ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
 முன்னதாக பாஜகவும் தங்களை ஆட்சியமைக்க அழைப்புவிடுக்குமாறு கோரியது. இந்த நிலையில் இன்று ராணிபென்னூர் தொகுதி தனிக்கட்சியொன்றின் எம்எல்ஏ சங்கர் பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தார் (மாலையில் ஆதரவை சங்கர் வாபஸ் பெற்றுக்கொண்டார்). எனவே, மொத்தம் 105 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறியுள்ள எடியூரப்பா அதற்கான கடிதத்தை இன்று ஆளுநரிடம் வழங்கினார்.

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்! மின்னம்பலம் :காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான திட்டத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 14ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி காவிரி வரைவுத் திட்டத்தை மத்திய நீர்வளத் துறை செயலாளர் யு.பி.சிங் தாக்கல் செய்தார்.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அளிக்கலாம். மாநிலங்கள் இந்த வரைவு செயல்திட்டம் குறித்த தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்கலாம் அல்லது கோர்ட்டு உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம்.

300-க்கும் மேற்பட்ட நாவல்களைப் படைத்த பாலகுமாரன் ..மக்கள் அஞ்சலி

tamilthehindu :வி.ராம்ஜி சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில்
பாலகுமாரனின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் நேற்று மதியம் காலமானார். அவருக்கு வயது 72. அவரது உடலுக்கு திரையுலகினர், எழுத்தாளர்கள், வாசகர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சினிமா, எழுத்து என அயராது உழைத்த பாலகுமாரன் ஏற்கெனவே 2 முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர். ஆனாலும், தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதி வந்தார். சமீபத்தில்கூட மகாபாரதம், ராமாயணத்தை எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நுரையீரலில் தொற்று பரவியிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பாலகுமாரன் நேற்று மதியம் 12.40 மணி அளவில் காலமானார்.

ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு

ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு? - நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்மாலைமலர் :கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்தாகவும், நாளை காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை முதல்வராக பதவியேற்பதாக தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க இன்று இரவே அழைக்கிறார் ஆளுநர்?

Kalai Mathi - Oneindia Tamil பெங்களூரு: பாஜக தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க இன்று இரவே ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உரிமை கோரிய குமாரசாமி எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி.
போராட்டம் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலாவை ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தினர். அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை முன்பாக பாஜகவை கண்டித்து ஜேடிஎஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அணிவகுப்பு? ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் ஆளுநர் முன்பாக அணிவகுக்க காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால் அணிவகுப்புக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது.

குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் தந்தார்

Veera Kumar - Oneindia Tamil  பெங்களூரு: 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி. 
காங். தலைவர் பரமேஷ்வர் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூர் குயின்ஸ் சாலையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங். மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். 
 இதேபோல தனியார் ஹோட்டலில், குமாரசாமி தலைமையில் கூடியது, மஜத எம்எல்ஏக்கள் கூட்டம். எடியூரப்பா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம், மல்லேஸ்வரத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சியிலும் ஆட்சி அமைப்பது குறித்த வாத, விவாதங்கள் தூள் பறந்தன. தங்கள் கட்சி முடிவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டனர். கூட்டம் முடிந்த பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராம்நகரம் மாவட்டம் பிடதி அருகேயுள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில், தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள், கூட்டணி ஆட்சிக்கு அளித்த சம்மத கடிதத்தோடு ஆளுநரை இன்று மாலை குமாரசாமி, பரமேஸ்வர், மொய்லி ஆகியோர் சந்தித்தனர். அப்போது தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் உரிமை கோரினார் குமாரசாமி. 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களையும் ஆளுநரிடம் கொடுத்தார் குமாரசாமி. முன்னதாக 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா.

கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை! பாஜகவின் பகல் கொள்ளை ஆரம்பம் !


மின்னம்பலம்:  தொங்கு சட்டமன்றம் அமைந்திருக்கும் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி, தேர்தல் முடிவுகள் வந்து 24 மணிநேரம் ஆகியும் நீடித்துவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சித் தலைமைகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டதாக வெளியான தகவல்களால் கர்நாடக அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியிடப்பட்டன. அதில் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78, ம.ஜ.த 37 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை!தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைப்பதற்கான அறிகுறிகள் நேற்று காலை தென்பட ஆரம்பித்தன. ஆனால் திடீர் திருப்பமாக மஜத ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனையடுத்து ஆளுநர் வஜூபாயைச் சந்தித்த மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார். தொடர்ந்து பெங்களூரு அசோகா ஹோட்டலில் மஜத-காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

14 கர்நாடக எம் எல் ஏக்களை காணவில்லை ... பாஜக கடத்திவிட்டதா ?

வெப்துனியா :கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும்
அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக,  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.  அதேசமயம், 104 தொகுதிகளை பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது.
;எனவே, மஜத கட்சியிலிருந்தோ, அல்லது காங்கிரஸ் கட்சியிலிருந்தோ சில எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்து பாஜக ஆட்சி அமைக்க முயலும் எனக் கூறப்பட்டது. அல்லது, மஜதவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டது. பாஜக மேலிட தலைவர்கள் குமாரசாமியிடம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.;"
;ஆனால், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி “பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுத்தது போல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

குமாரசாமி :எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.100 கோடி பேரம் பேசும் பாஜக

kumarasamyநக்கீரன் : -;ச.ப.மதிவாணன் : எங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி வளைத்துப்போட பா.ஜ.க. முயற்சி செய்துவருவதாக ம.ஜ.த. தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தாலும், யார் ஆட்சியமைப்பார்கள் என்ற முடிவு இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. ஆட்சியமைக்க ஆளுநரைக் கோரும் வேளையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கூட்டணி 117 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியமைக்க தயாராக இருக்கிறது. அதேசமயம், இருதரப்பினரும் தங்களது எம்.எல்.ஏ.க்களை விலைபோகாமல் பார்த்துக்கொள்ளவும் தீராத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மீது சுமத்தினார். தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி பா.ஜ.க. பேரம் பேசுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் - கவர்னரை சந்தித்த பின்னர் குமாரசாமி பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் வாய்ப்பு தர வேண்டும் - கவர்னரை சந்தித்த பின்னர் குமாரசாமி பேட்டிமாலைமலர் :உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தனிபெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கூடாது என கவர்னரிடம் வலியுறுத்தியதாக மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூர்:< கர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.< 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

எண்ணெய் செக்குகள்: தோன்றி, மறைந்து மீண்டும் இன்று வளரும் கதை!

கல்செக்கு
எண்ணெய்.vikatan.comt; துரை.நாகராஜன் : அது 1950-ம் ஆண்டு. அக்கால மக்கள் எண்ணெயைக் கல் செக்கிலிருந்து வழித்து எடுத்து வைத்துக்கொண்டு சேமித்து உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள். கல்செக்கில் எடுக்கப்படும் எண்ணெய்க்கு அப்போது காலாவதி தேதியெல்லாம் யாரும் நிர்ணயம் செய்திருக்கவில்லை. ஆரோக்கியமாகத்தான் அக்கால மக்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.  அப்போதெல்லாம் ஊருக்குக் கோயில் இருக்கிறதோ இல்லையோ, இரண்டு ஊருக்குக் கட்டாயம் ஒரு கல்செக்கு வீதம் இருந்திருக்கின்றன. 1980-ம் ஆண்டு வரைக்கும் எல்லாமும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதன் பின்னர் மக்களின் வாழ்வில் உணவு, உடை, விளையாட்டு, இருப்பிடம் என அனைத்திலும் பல மாறுதல்கள் நிகழ ஆரம்பிக்கின்றன. அப்போது முதலே மாடு கட்டி கல்செக்கில் எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்த நிலையும் மாறுகிறது. மக்கள் அவசரங்களுக்காக மோட்டார் இயந்திர செக்குகளை நாட ஆரம்பிக்கின்றனர்.

நடிகையர் திலகம் எனப்படும் ஒரு மகாநதி

கேபிள் சங்கர் -மின்னம்பலம்:
சிறப்புக் கட்டுரை: உண்மையின் பங்கு என்ன?நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்டபோதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாக அதில் நடிப்பவர்கள் பற்றித் தெரியவர, கீர்த்தி சுரேஷ்தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்துக் கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான தேர்வு என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும்போது அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஏறி இறங்கிய அத்துணை சம்பவங்களையும் சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாக நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும் என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது.

கர்நாடகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முதல் முதலாக வெற்றி பெற்றுள்ளார்

கணக்கைத் தொடங்கிய பகுஜன் சமாஜ்!மின்னம்பலம் :நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயித்தும் வரலாறு படைக்க முடியுமா என்று பாஜக காத்துக் கொண்டிருக்க... கர்நாடக மாநிலத்தில் கொள்ளேகால் என்ற ஒரே ஒரு தொகுதியில் வென்று வரலாறு படைத்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
உத்திரப்பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தோடு கூட்டணி அமைத்து இருபது தொகுதிகளில் போட்டியிட்டது. அக்கட்சியின் தலைவரும், முன்னாள் உபி முதல்வருமான மாயாவதி கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
இந்நிலையில் போட்டியிட்ட இருபது தொகுதிகளில் கொள்ளேகால் தனித் தொகுதியில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை சுமார் ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் மகேஷ். இவர் இத்தொகுதியில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

கர்நாடகத்தில் பாஜக 29 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது ,,

Thagadoor Sampath  :கர்நாடகத்தில் பா.ஜ க இருபத்தொன்பது தொகுதிகளில் கட்டுத்  தொகை இழந்து படுதோல்வி அடைந்துள்ளது.
அதிலும், 'ராமநகரம்' என்பது பட்டுக்கூடு தொழிலும், வணிகமும் தொடர்புடைய நகர்புற தொகுதி. இந்த தொகுதியில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.
திராவிட (தென்னகத்தில்) நாட்டில் மதவெறி  பாஜகவுக்கு  'செல்லும், ஆனால் செல்லாது' (வரும் ஆனா வராது' என்பது போல்) என்பது போன்ற நிலையே கிட்டியுள்ளது.  இதற்காக பாஜகவை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. எந்த ஈனத்தனத்தையும் முன்னெடுக்கும் கட்சி அது. நண்பர்களே கர்நாடகாவில் 29 தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் காலி
இதைப்பற்றி எந்த ஊடகமாவது பேசுமா என்றால் ம் மூச் வாயையே திறக்காது...
இதை சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸாருக்கு இருக்கிறது.
குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து .. பெருமளவில் பணம் கொடுத்து . 106 தொகுதிகளை பா.ஜ.க வென்றுள்ளது ... மகத்தான ஆதரவு என்றால் ... 29 தொகுதிகளில் ஏன் டெபாசிட்டை பறிகொடுத்தது பாஜக ... அதுவும் 12 தொகுதிகளில் ... நம்ம தமிழ்நாட்டை போலவே .. 5000 க்கும் குறைவான ..
வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது ...
Sharvanabelagola 7,506
Magadi 4,379
Rama Nagaram 4,837
Kanakapura 6,213
Malavalli. 8,372
Maddur 3,948
Melukote. 1,587
Shirirangapatna 11,326

வாரணாசியில் மேம்பாலம் இடிந்து 30 பேர் உயிரிழப்பு ... வாகனங்கள் சேதம் ... மோடியின் தொகுதியில்

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலி
தினத்தந்தி : வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர் பலியானார்கள். 50 பேர் காயம் அடைந்தனர்.
 வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் மற்றும் மேம்பாலம் அருகே நின்றவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
 இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆளுநர் முன் எம்.எல்.ஏ.க்கள்,அணிவகுப்பு,காங்.,ம.ஜ.த.,தலைவர்கள் திட்டம்


தினமலர் :பெங்களூரு : தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் முன் தங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் அணிவகுப்பை நடத்த, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., தலைவர்கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு முன்னே, ம.ஜ.த., காங்கிரஸ் தலைவர்கள், பேரம் பேச துவங்கினர்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ம.ஜ.த.,வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், குமார கிருபா சாலையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு கட்சி தலைவர்களும் நேற்றிரவு, அவசர ஆலோசனை நடத்தினர். ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமி, ரேவண்ணா, காங்கிரசின் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர், மேலிட பொறுப்பாளர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், அசோக் கெலட், லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டி.கே.சிவகுமார், ரோஷன் பெய்க் உட்பட, இரு கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

எடியூரப்பா ஆட்சி..,?,, ஆதரவை நிருபிக்க ஆளுநர் 7 நாள் அவகாசம்! எம் எல் ஏக்களை வலைவீசி பிடிக்க ஆளுநர் ஆலோசனை?

;Veera Kumar - Oneindia Tamil : ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா பெங்களூர்: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநர் வஜூபாயை சந்தித்து பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா உரிமை
கோரினார். இதையடுத்து பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். ஆட்சி அமைப்பதில் எடியூரப்பா மற்றும் குமாரசாமி தரப்பு கடும் போட்டா போட்டியில் உள்ளது.
ஆளுநர் மாளிகையில் மஜத தலைவர்கள் குவிந்தனர். ஆனால் ஜேடிஎஸ் நிர்வாகிகள், குபேந்திர ரெட்டி, ரமேஷ் பாபு, சரவணன் ஆளுநர் மாளிகை சென்றபோதிலும் அவர்களை அனுமதிக்க ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்து விட்டது. 
இதனிடையே ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா. அவர் திடீரென மத்திய அமைச்சர் அனந்த்குமார், பாஜக எம்.பி. பிசி.மோகனுடன் ஆளுநர் மாளிகை விரைந்து சென்று, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

தமிழ்நாட்ட சீரழிச்சிட்டியே எடப்பாடி!” சாமியாடிய பக்தர்… அதிர்ந்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமிvikatan vikatan ::ஜெ.அன்பரசன் அர்ச்சனை என் பேருக்கு இல்ல… சாமி பேருக்கு.” “எந்த சாமிக்குமா?” “நம்ம தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அய்யா பேருக்கு…”
– என்ற விளம்பரத்தின் முடிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி வெங்கடாஜலபதி வடிவில் தனது தெய்வீகக் காட்சியை பக்தர்களுக்கு அருள்வார். அந்த விளம்பரம் பற்றி சமூக வலைதளங்களில் தமிழக மக்கள் வறுத்தெடுக்க, அதன்பிறகு அந்த விளம்பர ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தியது அரசு. இது, சென்ற வார வைரல்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சாமி கும்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அங்கே, கோயிலில் பக்தர் ஒருவருக்கு திடீரென்று அருள் வந்துவிடவே, எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து “தமிழ்நாட்டை சீரழிச்சிட்டியே எடப்பாடி…” என்று சாமியாடியபடியே சத்தமாகக் கத்தினார். எதிர்பாராத இந்தச் சூழ்நிலையால் அதிர்ச்சியானது முதல்வர் தரப்பு. உஷாரான பாதுகாவலர்கள், உடனடியாக அந்த பக்தரை சுற்றிவளைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தேர்தல் முடிவுகளை மக்கள் எடுக்கவில்லை.. அமிட்ஷா எடுக்கிறார்.. E V M மெசின் துணை ..

Swathi K : வர இருக்கும் சட்டிஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் அனைத்து சீனஅதிபரை போல மோடியும் நான் தான் நிரந்தர பிரதமர் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை..
மாநில சட்டமன்ற தேர்தலிலும் தேர்தல் கமிஷின் மற்றும் EVM உதவியுடன் பிஜேபி மாபெரும் வெற்றி பெறும் (எவ்வளவு பெரிய வெற்றி என்பதை அமிட்ஷா முடிவு பண்ணுவார்).. 2014ல் மோடி பெற்ற வெற்றியை விட அதிகமான இடங்களில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் "தேர்தல் கமிஷின் மற்றும் EVM" உதவியுடன் பிஜேபி மாபெரும் வெற்றி பெறும்.. ஏற்கனவே இந்தியாவின் தன்னிச்சை அமைப்புகள் அனைத்துக்குள்ளும் காவி கூட்டம் நுழைந்து விட்டதால்.. இதெல்லாம் எளிதாக நடக்கும்..
We have transitioned into a dictatorship long back.. every institution in this country has been systematically infiltrated and has been compromised... they are just managing perceptions.
நாடு முழுவதும் மக்கள் பொறுமை இழந்து கத்துவார்கள்.. கதருவார்கள்.. தெருவுக்கு வந்து போராடுவார்கள்.. அரசு போராட்டத்தை அடக்கும்.. அதெல்லாம் தாண்டி போராட்டம் அதிகமாகும்.. ஒரு பக்கம் மக்கள் போராட்டம் தொடரும்.. இன்னொரு பக்கம் மோடி அலை'னு பொய்யான செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும்.. மற்ற நாடுகளில் நடந்தது போல் மக்கள் புரட்சி இங்கும் ஆரம்பமாகும்.. இதெல்லாம் இன்னும் 2-3 வருடங்களில் ஆரம்பமாகும்.... அங்கு இருந்து தான் மாற்றம் ஆரம்பமாகும்.. அதுவரை அமிட்ஷா & மோடி தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டு தான் இருப்பார்கள்..
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது.. இந்தியாவின் தன்னிச்சை அமைப்புகளில் தனக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவிகளில் உக்காரவைத்து இந்த அமைப்புகளை தனது கண்ட்ரோலின் கீழ் கொண்டுவந்தது..

செவ்வாய், 15 மே, 2018

EVM microchip program சில சதவிகித காங்கிரஸ் ஓட்டுக்கள் பாஜகவுக்கு சென்றன ...

Swathi K : எவ்வளவோ கோல்மால்கள், கேவலமான தேர்தல் பிரச்சாரம் செய்து
பிஜேபி வெற்றி பெற்று இருந்தாலும்.. இந்த தேர்தல் முடிவு சொல்லும் சில சேதிகள்..
1. ஓட்டு விகிதம் - காங்கிரஸ் 38%, பிஜேபி 36.2%.. காங்கிரஸ் பிஜேபியை விட கிட்டத்தட்ட 7 லட்சம் ஓட்டுக்கள் அதிகம் வாங்கி இருக்கிறது.. கண்டிப்பாக EVM microchip program மூலம் சில சதவிகித காங்கிரஸ் ஓட்டுக்கள் ஓட்டு எண்ணிக்கையின் போது பிஜேபிக்கு சென்று இருக்கும்.. அதையும் தாண்டி காங்கிரஸ் 1.8% ஓட்டுக்கள் பிஜேபியை விட அதிகம் பெற்று இருக்கிறது..
2. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி 43% ஓட்டுக்களும், காங்கிரஸ் 40% ஓட்டுக்களும் பெற்று இருந்தது.. பிஜேபி 43%ல் இருந்து 36% க்கு குறைந்து இருக்கிறது.. காங்கிரஸ் 40%ல் இருந்து 38%க்கு குறைந்து இருக்கிறது.. மோடி அலை 7% கீழ் நோக்கி சென்று இருக்கிறது.. 2014ல் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மக்களில் 22+ லட்சம் பேர் இப்போது பிஜேபிக்கு ஓட்டு போடவில்லை..
3. காங்கிரஸ் + ஜனதா கூட்டணி: இப்போது ஆட்சி அமைக்குமா என்று தெரியவில்லை.. (அமிட்ஷா ஜனதா or காங்கிரஸில் இருந்து சிலரை விலை கொடுத்து வாங்கி பிஜேபி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது).. ஆனால் 2019ல் இந்த கூட்டணிக்கு கர்நாடகாவில் மாபெரும் வெற்றி நிச்சயம்.. 2019 தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு கிடைத்த முதல் கூட்டணி இது.
4. இந்த தேர்தல் காங்கிரஸ்க்கு ஒரு நல்ல பாடத்தை கொடுத்து இருக்கும்.. இதே ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்னால் காங்கிரஸ்'வுடன் கூட்டணி பற்றி பேசிய போது மறுத்த காங்கிரஸ்.. இப்போது முதல்வர் பதவியே கொடுக்க ரெடி.. இந்த கூட்டணியை அப்போதே வைத்து இருந்தால் இப்போது 160+ இடங்களில் இந்த கூட்டணி வெற்றி பெற்று இருக்கும்.. பிஜேபி மாதிரி கிரிமினல் கட்சியை வீழ்த்த காங்கிரஸ் மாநில கட்சிகளை அரவணைக்க வேண்டிய நேரமிது..

நல்லகண்ணு : கமல் மாநாட்டில் பங்கேற்க ஒப்புதல் அளிக்கவில்லை”

கமல் அழைப்பு: நல்லகண்ணு மறுப்பு!மின்னம்பலம்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெறும் விவசாய சங்கங்களின் கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (மே 14) செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “காவிரியில் நமது உரிமைக்கான கூட்டத்தை, காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம். இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 19ஆம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள மெட்ரோ மேனர் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இந்த விரிவான உரையாடலுக்கு அனைத்து விவசாய அமைப்புகள், அனைத்துக் கட்சிகள், மாணவர்களை அழைக்கிறோம். இந்தக் குரலின் மூலம் உரையாடலுக்கான கதவுகளும், மூடப்பட்ட அணைகளின் கதவுகளும் திறக்க வேண்டும்’’ என்று கூறினார்.
மேலும், இந்தக் கூட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெறும் என்றும் கமல் குறிப்பிட்டார்.

மம்தாவின் கர்நாடக தேர்தல் கணிப்பு மிக சரியாகவே உள்ளது

தேர்தல் முடிவு: முன்பே கணித்த மம்தாகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் கணிப்பு ஏறக்குறைய தேர்தல் முடிவுகளுடன் நெருக்கமாக உள்ளது.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இழுபறியான நிலை தொடர்கிறது. பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் தனிப்பெரும்பான்மையை பெறாததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதாகவும் மஜகவின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவின் முதல்வராகக் குமாரசாமி பதவியேற்பார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 11ஆம் தேதி ஜி 24 கண்டா என்ற வங்க ஊடகத்துக்குப் பேட்டியளித்திருந்த மம்தா, “பாஜக மற்றும் காங்கிரஸ் சம அளவில் தொகுதிகளைப் பெற வாய்ப்புள்ளது.

ஆளுநருடன் குமாரசாமி, சித்தராமையா சந்திப்பு!

ஆளுநருடன் குமாரசாமி, சித்தராமையா சந்திப்பு!மின்னம்பலம் :பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்த மஜத தலைவர் குமாரசாமி, கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். சந்திப்பில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை (மே 15) தொடங்கியது. பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக்கூடிய அறிகுறிகள் தென்பட்ட நிலையில், பாஜகவுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்தனர். ஆனால் ஆட்சியமைக்கக்கூடிய அளவுக்கு பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை.
இதையடுத்து திடீர் திருப்பமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. மேலும் மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி முதல்வராவதற்கும் ஆதரவு தெரிவித்தது. இதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆனால் அவர்களைச் சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டார்.

காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததையடுத்து ஆளுநரை சந்திக்க அனுமதி கேட்டு குமாரசாமி எழுதிய கடிதத்தில், "மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

ராகுல் குமாரசாமியிடம் : பாஜக வரக் கூடாது.. நீங்க எடுக்கும் முயற்சிக்கு நாங்க ஒத்துழைக்கிறோம்.

டிஜிட்டல் திண்ணை:  டெல்லியில் முடிவான டீல்!
மின்னம்பலம் :“கர்நாடகா தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கியிருக்கிறது. காலையில் தேர்தல் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியதிலிருந்தே உற்சாகத்தில் இருந்தது பிஜேபி. ‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்... எடியூரப்பா சூப்பர் ஸ்டார் என்று கர்நாடகா பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகத்தில் கோஷங்களும் போட்டனர். வெடியும் போட்டனர். துணை முதல்வர் பன்னீர், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் என எல்லோரும் எடியூரப்பாவுக்கு வாழ்த்தும் சொன்னார்கள். மதியத்தைக் கடந்தபோதுதான் பாஜகவுக்கு முன்னிலை 104 ஆகக் குறைய ஆரம்பித்தது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகிக்க ஆரம்பித்தன.
காலையில் இருந்த நிலவரம் தந்த தெம்பில், ‘மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என பாஜகவின் மத்திய அமைச்சரான சதானந்த கவுடா அறிவித்தார். ஆனால் நிலைமை மாற, மாற யாருடைய ஆதரவும் இல்லாமல், பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று சொல்லி வந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள்.