
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பா.ஜ.க. மீது சுமத்தினார். தங்களது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.100 கோடி தருவதாகவும், அமைச்சர் பதவி தருவதாகவும் கூறி பா.ஜ.க. பேரம் பேசுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், குதிரை பேரம் நடப்பதை குடியரசுத்தலைவரும், ஆளுநரும் அனுமதிக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் மீது எங்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக நடக்கக்கூடியவர்கள். ஒருவேளை பா.ஜ.க. ஒரு எம்.எல்.ஏ.வை அழைத்தால், நாங்கள் இரண்டு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் இழுப்போம்’ என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக