வெள்ளி, 5 ஜனவரி, 2018

Good , bad , ugly ,,, திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? அதுவும் தெரியாதா?

Shalin Maria Lawrence : ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் !!!
திரு . ரஜினிகாந்த் அவர்கள் முதன் முதலில் எப்போது தேர்தலில் தன் வாக்கை பதிவு செய்தாரோ அன்றே அவர் அரசியலில் குதித்து விட்டார் .
ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரை முன்மொழிந்த இயக்கத்தின் அரசியல் சித்தாந்தத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டும், ​தேர்தல் அரசியலை ஆதரித்து ஏற்றுக் கொண்டும் அந்த வேட்பாளருக்கு வாக்களித்ததன் மூலம் அரசியலில் பங்கெடுத்துக்​ கொண்டதன் மூலம் என்றைக்கோ அரசியலில் நுழைந்துவிட்டார் 18 வயதை கடந்த வாக்காளர் ரஜினிகாந்த் .
வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் அரசியல்வாதி தான். அரசியலில் ஈடுபடும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு .
இதுநாள் வரை passive அரசியல்வாதியாக இருந்த ரஜினிகாந்த் active அரசியல்வாதியாக மாறுவாரா இல்லையா என்பதே நிதர்சனம். அது அவரது தனிப்பட்ட விருப்பமும் கூட .
ஒருவேளை active அரசியல்வாதியாக மாறினால் எந்த அரசியல் சித்தாந்தத்தை முன்மொழிவார் என்று வேண்டுமானால் கேள்வி எழுப்பலாம்
ஒருவேளை பாஜக ஆர்எஸ்எஸ் போல் தீவிர மக்கள் விரோத வலதுசாரி(Right) சித்தாந்தமா.!?
காங்கிரஸ் அதிமுக போல் மையவாத (centrist) சித்தாந்தமா.!?
இந்திய கம்யூனிஸ்ட்கள் திமுக போல் இடதுசாரி மையவாத (left centrist) சித்தாந்தமா.!?
அம்பேத்கர் பெரியார் போல் தீவிர சமூக நீதி பொருளாதார அரசியலை முன்னெடுக்கும் இடதுசாரி (Left) சித்தாந்தமா.!?

தமிழ்நாட்டில் முதன் முறையாக பீமா கோரிகாவ் போர் வெற்றி வீரவணக்க நாள்:

காட்டாறு : தமிழ்நாட்டில் முதன்முறையாக காட்டாறு குழு நடத்திய - வீரமும், விவேகமும் இணைந்த பீமா கோரிகாவ் போர்வெற்றியின் வீரவணக்கநாள்:
1818 ஜனவரி 1 ல், பார்ப்பன பேஷ்வா படைகளை வென்றது மகர்களின் தலைமையிலான திராவிடர் படை. மராட்டியக் களத்தில் தோற்று ஓடியவர்கள் இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் பிடித்துக்கொண்டார்கள். ஆனாலும், 600 க்கும் மேற்பட்ட பார்ப்பனர்களைப் பலிகொடுத்துத் தோற்ற, பீமாநதிக்கரைப் போராட்டம், இன்றும் பார்ப்பனக் கும்பலுக்குப் பெரும் அவமானமாகவே இருக்கிறது.
வெற்றியின் 200 வது ஆண்டிலும், அதே பார்ப்பன வன்மத்தோடு, 01.01.2018 லும் பீமா கோரிகாவ் வெற்றிச் சின்னத்தின் அருகே உறுதி ஏற்க வந்த மண்ணின் மைந்தர்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

தினகரன் : கமலஹாசன் அரசியலில் எடுபட மாட்டோம் என்ற அச்சத்தில் ....

விகடன் கார்த்திக்.சி :ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என்று நடிகர் கமல்ஹாசன் நினைக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஆனந்தவிகடனில் கமல்ஹாசன் எழுதும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' தொடரில் ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் பெற்ற வெற்றியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு பதிலளித்த டி.டி.வி.தினகரன், 'அரசியலில் எடுபடமாட்டோம் என்ற அச்சத்தில் கமல்ஹாசன் இந்த மாதிரி பேசுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை, கமல் பிச்சைக்காரர்களாகக் கருதுகிறாரா? கமல் நல்ல நடிகர். நல்ல சிந்தைனையாளர் என்று நினைத்தேன்.
ஆனால், வாழ்க்கையில் நடிக்கிறார். கமல் மனநிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் கபடி ஆடலாம் என்று கமல் நினைக்கிறார்' என்று தெரிவித்துள்ளார்

வியாழன், 4 ஜனவரி, 2018

தமிழர் பிரதமரானால் என்ன செய்வீர்கள்? - இந்தித் திணிப்பு குறித்து சசிதரூர் பாராளுமன்றத்தில் முழக்கம்!

ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவது குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மத்திய அரசின் மொழி சார்ந்த கொள்கைகள் குறித்து சரமாரியாக கேள்விகள் எழுப்பியுள்ளார். இந்தி மொழியை ஐநாவில் இந்தியாவின் அலுவல் மொழியாக அறிவிப்பது குறித்து அரசு ஆர்வம் காட்டுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அப்போது பேசிய சசி தரூர், ‘இந்தி நம் நாட்டின் தேசிய மொழி கிடையாது. மாறாக அது இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்று என்பதை மறுக்கமுடியாது.

ஜெ.விற்கு கால்கள் இருந்ததா? - விசாரணை கமிஷனில் மருத்துவர் பதில்


வெப்துனியா :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் எம்பார்மிங் செய்யப்பட்ட போது அவருக்கு கால்கள் இருந்தனவா என மருத்துவர் சுதா சேஷயன் விசாரணை கமிஷனிடம் விளக்கம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. ஜெ.வின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜெ.விற்கு நெருக்கமானவர்கள், சசிகலாவின் உறவினர்கள் பலரிடம் விசாரணை நடைபெற்று வந்தது. ஜெ.வின் சிகிச்சை குறித்த வீடியோ வெளியானதால் கிருஷ்ணபிரியாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல், தினகரன், சசிகலாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்நிலையில், ஜெ.வின் சிகிச்சை தொடர்பான 4 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை தினகரனின் வழக்கறிஞர் ஆறுமுகச்சாமியிடம் வழங்கினார்.

நீரிழிவு நோயாளிகள் செலவு: கனிமொழி கேள்வி!

மின்னம்பலம் :நீரிழிவு நோயாளிகள் சிகிச்சைக்காகத் தங்கள் வருமானத்தில் 25 சதவிகிதம் செலவழிப்பது குறித்து மாநிலங்கவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் லேடி ஹார்திங் கல்லூரி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள நீரிழிவு நோயாளிகள், நீரிழிவுநோய் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் ரூ. 8,958 செலவிடுவதாக ஆய்வறிக்கை வெளியிட்டது. இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மாநிலங்களவையில் எழுத்துபூர்வமான கேள்வி எழுப்பியுள்ளார்.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்கள், தங்கள் மொத்த வருமானத்தில் 25 சதவிகிதத்தை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செலவிடுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இளம் விஞ்ஞானி விருதை வென்ற பழங்குடி மாணவன்!

இளம் விஞ்ஞானி விருதை வென்ற பழங்குடி மாணவன்!
மின்னம்பலம் :தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த பழங்குடி மாணவர் ‘மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து, ‘இளம் விஞ்ஞானி’ விருதை வென்றுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், 25ஆவது தேசிய அறிவியல் மாநாடு நடந்தது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்த இந்த மாநாடு கடந்த டிசம்பர் 27 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 6 ஆசிய நாடுகளிலிருந்தும், இந்தியாவில் 30 மாநிலங்களிலிருந்தும் மாணவர்களிடம் இருந்து ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்க்கப்பட்டன.
தமிழகத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், இரண்டு கட்டுரைகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. அதில், ஒன்றுதான் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி மாணவர்களின் கட்டுரை. “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அவருடைய கட்டுரை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

லாலு தண்டனை: மிரட்டப்பட்டாரா நீதிபதி? ஜெயா பாணி?

லாலு தண்டனை: மிரட்டப்பட்டாரா நீதிபதி?மின்னம்பலம் :கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று (ஜனவரி 4) தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாகத் தண்டனை விவரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கால்நடைகள் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேரை குற்றவாளிகள் என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சிவபால் சிங் கடந்த மாதம் 23ஆம் தேதி தீர்ப்பளித்தார். குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தீர்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இறந்துபோன 2 வழக்கறிஞர்களுக்கு நேற்று நீதிமன்றத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றதையடுத்து தீர்ப்பு விவரம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

ரஜினியின் கோபாலபுரம் வருகை ... ஏன் திமுகவினர் ரசிக்கவில்லை?

டிஜிட்டல் திண்ணை!
மின்னாம்பலம் :
“நாம் நேற்று முன் தினம் மாலையே சொன்னபடி, திமுக தலைவர் கருணாநிதியை நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்தில் சென்று சந்தித்துவிட்டார் ரஜினி. கருணாநிதியைச் சந்திப்பதற்கு ரஜினி வீட்டிலிருந்து சுதாகர் மூலமாக ஸ்டாலின் வீட்டுக்குப் பேசி இருக்கிறார்கள். ஸ்டாலின், ‘வந்து பார்க்கட்டும். எங்களுக்கு எதுவும் பிரச்னை இல்லை..’ என சொல்லிவிட்டாராம்.
கருணாநிதியைப் பார்க்க ரஜினி போகப் போகிறார் என்ற தகவல் பரவியதுமே, ஸ்டாலினுடன் பேசியிருக்கிறார் முரசொலி செல்வம். ‘இப்போ இருக்கும் அரசியல் சூழ்நிலையில் அவரை எதுக்கு தலைவரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுத்தீங்க. அவரு தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லைன்னு கட்சி தொடங்கப் போறதாக அறிவிச்சிருக்காரு. அவரு நமக்குதான் போட்டியா இருப்பாருன்னு எல்லோரும் பேசிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல அவரு தலைவரைப் பார்க்கிறது சரியா இருக்குமா? அப்பாயின்மெண்ட் கொடுக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கலாமே...’ என கேட்டாராம் செல்வம்.

BBC :கமலஹாசன் : திருடனிடம் பிச்சை எடுத்த ஆர் கே நகர் வாக்காளர்கள்

சென்னை வெள்ளத்தில் அன்புடன் உதவி செய்த மக்கள் 20 ரூபாய் டோக்கன்களுக்கு விலைபோயுள்ளது பிச்சை எடுப்பதற்கு கேவலம் என்று ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கடுமையாக சாடியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.
'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் தமிழ் வார இதழான ஆனந்த விகடன் இதழில் நடிகர் கமல்ஹாசன் தொடர் ஒன்றை எழுதிவருகிறார்.
சினிமா, அரசியல், பொழுதுபோக்கு, சமூக பிரச்சனைகள், அவலங்கள் என இத்தொடரில் நிறைய பேசுகிறார் நடிகர் கமல் ஹாசன்.
இதுவரை 13 பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்று வெளியான 14வது பாக கட்டுரையில் ஆர்.கே.நகர் தொகுதிவாசிகளையும், அங்கு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரனையும் கட்டுரையில் கடுமையாக சாடியிருக்கிறார் கமல் ஹாசன்.
திருடனிடம் பிச்சை எடுக்கலாமா? சென்னை மழை வெள்ளத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் செயல்பாடுகளை மெச்சிய கமல் ஹாசன், இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன்களுக்கு தொகுதிவாசிகள் விலைபோயுள்ளதாகவும், அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் கமல் கேள்வியெழுப்பியுள்ளார்.
டோக்கன்கள் தற்காலிக இன்பம் மட்டுமே அளிக்கும் என்றும், வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம் : 2ஜி வழக்கில் உண்மை வென்றது !


மாலைமலர் :புதுடெல்லி; 2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த வழக்கிலிருந்து 3 தனியார் நிறுவனங்களும் விடுவிக்கப்பட்டன. இதையடுத்து, கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்ந்தனர். . இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 2ஜி வழக்கில் உண்மை வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 2ஜி வழக்கில் இருந்து நீங்கள் விடுதலையானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

யானைகள் நலவாழ்வு முகாம்... ஷவர் குளியல்... பாதக்குளியல்...இது யானைகளுக்கான பிக்னிக்!


vikatan எம்.புண்ணியமூர்த்தி- தி.விஜய்: யானைகள் புத்துணர்வு முகாம் என்பது கோயில் யானைகளுக்கு பிக்னிக் மாதிரி என்று இந்து சயமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா  தெரிவித்தார்.;
மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில்யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்குகிறது. இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, “ 4-ம்தேதி, முதல் பிப்ரவரி 20-ம்தேதி வரை யானைகள் புத்துணர்வு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமிற்கு  மொத்தமாக  33  யானைகள் வர உள்ளன. அதில் 5 யானைகள் மடங்களுக்கு சொந்தமானவை. 2 யானைகள் புதுச்சேரியிலிருந்து வர இருக்கின்றன. மீதம் உள்ள யானைகள் அத்தனையும் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள யானைகள்தாம். மொத்தம் 48 நாட்களுக்கு நடக்க இருக்கிற முகாமில் இந்த யானைகளுக்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.

Padman - "அருணாச்சலம் முருகானந்தம்" உபகண்டம் போற்ற வேண்டிய உயர்ந்த மனிதன்

Shalin Maria Lawrenc : எனக்கு இந்த உலகில் இரண்டு ஆண்களை மிகவும் பிடிக்கும்.
1.இந்த உலகத்தில் முதலில் கால் பதித்தது ஒரு பெண் என்று ஆராய்ந்து சொன்ன ஒருவர்.
2.பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினை கண்டுபிடித்தவர்.
முதலில் குறிப்பிட்டவர் பெண்ணடிமைத்தனத்தின் ஆணி வேறான மத கட்டுக்கதைகளை உடைத்தவர்.
இரண்டாவது மனிதர் பெரும்பாலான பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து முன்னேற ஊன்றுகோளாய் இருந்தவர்.
கொஞ்சகாலம் முன்பாக மூன்றாவதாக ஒரு ஆண் என் கண்கலங்க வைத்தார் .
அவர் அமெரிக்கரோ இல்லை ஐரோப்பியரோ இல்லை .இந்த தமிழ் மண்ணில் பிறந்த சூப்பர் ஹீரோ அவர் .
"அருணாச்சலம் முருகானந்தம்"
இந்த உலகத்தில் கண்டுபிடிப்புகளுக்கு காரணியாக இருப்பது மூன்று விஷயங்கள் இருக்கின்றன
அறிவியல் மீதான காதல்
மானுடத்தின் மீதான காதல்
மனைவியின் மீதான காதல்
நம் வாழ்வின் அன்றாட பாரங்களை குறைக்கும் பல அரிய கண்டுபிடிப்புகள் அந்த மூன்றாம் காரணத்தால் உண்டானவைதான் .
இந்த காரணம்தான் இன்று நான் அருணாச்சலம் முருகானந்ததை பற்றி எழுத என்னை ஊந்தியது.
மனைவியின் மீது கொண்ட காதல் ஒரு மனிதனை சிந்திக்க வைத்தது ,தீர்வுகள் தேடி ஓடவைத்தது ,விசித்திர வழிகளை கையாள வைத்தது ,பைத்தியக்காரன் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது ,எந்த மனைவிக்காக இதெல்லாம் செய்தாரோ அவரே இவரை பிரிய வைத்தது ,இறுதியில் சாதனையாளர் ஆக்கியது.இதுதான் அருணாச்சலத்தின் கதை.
கோயம்புத்தூரில் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்

கலைஞர் ரஜினி சந்திப்பு .. இம்புட்டும் பேசினாகளா...

சிவசங்கர் எஸ்.எஸ் : தலைவர் கலைஞர் முன் போய் நிற்கிறார் ரஜினி.
ரஜினி: அய்யா, வணக்கம்
கலைஞர்: வாய்யா, எப்படியிருக்க
ரஜினி: நல்லாருக்கேன் அய்யா. நீங்க எப்படி இருக்கீங்க ?
கலைஞர்: நான் நல்லாயிட்டேன்யா. ஆனா தமிழ்நாட்டு அரசியல் தான் மோசமாயிட்டு இருக்கு.
ரஜினி: அதத்தான் அய்யா, நானும் சொன்னேன், "சிஸ்டம் சரியில்ல" அப்படின்னு. எல்லாரும் கழுவி, கழுவி ஊத்தறாங்கய்யா
கலைஞர்: முதல்ல உன் சிஸ்டத்தை சிங்கப்பூர் போய் சரி பண்ணுய்யா
ரஜினி: அது இப்ப பரவால்லைங்கய்யா
கலைஞர்: வேற என்ன செய்தி?
ரஜினி: அரசியல்ல இறங்கல்லாம்னு இருக்கேன்ய்யா. உங்க ஆசிர்வாதம் வாங்கத் தான் வந்தேன்ய்யா
கலைஞர்: ராஜாதிராஜா படத்தில் ஓர் பாட்டு பாடினீயேய்யா
ரஜினி: ஆமாங்கய்யா.... 'ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம்"
கலைஞர்: அப்புறம் என்னய்யா ஆச்சி ?
ரஜினி: ஆமாங்கய்யா. இப்பவும் கட்சியும் இல்ல, கொடியும் இல்ல. ஆன்மீகம் தான்ய்யா
கலைஞர்: அதென்னய்யா ஆன்மிகம்?
ரஜினி: அது உண்மை, உழைப்பு, உயர்வுங்கய்யா
கலைஞர்: இது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரமாச்சேய்யா?

புதன், 3 ஜனவரி, 2018

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்! ஆதியில் இருந்த பௌத்த கோவில் பெயரையே வைக்கலாமே?

Sabarimala was actually a Buddhist shrine and Ayyappa was actually Buddha, சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரை மாற்றப்போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ பத்மகுமார் நேற்று (ஜனவரி 2) அறிவித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!திருவிதாங்கூர் தேவசம் போர்டு வசம் மொத்தம் 1248 கோவில்கள் உள்ளன. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில்தான் மிகப் பெரிய கோயில். ஆண்டுதோறும் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா , ஆந்திராவைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, கடுமையான விரதங்களை மேற்கொண்டு, இருமுடி சுமந்து, சபரிமலைக்கு வந்து, ஐயப்ப சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை ’சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா’ என மாற்ற உள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

எம் எல் ஏக்களுக்கு எடப்பாடி வகுப்பு ... தினகரன் என்ன பேசினாலும் ஒண்ணும் சொல்லாதீங்க .. அடிச்சும் கேப்பான் ?

டிஜிட்டல் திண்ணை!
மின்னம்பலம் :“அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்தது. உடல்நிலை சரியில்லை காய்ச்சல் வந்துவிட்டது என ஆறுகுட்டி, சிவசுப்ரமணியன் அகிய இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு வராததுக்குக் காரணம் சொல்லி இருந்தார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ.க்கள் பிரபு, பவுன்ராஜ் ஆகியோர் சபரிமலைக்குச் சென்றுவிட்டனர். வேலுநாச்சியார் விழாவுக்காக அமைச்சர் கடம்பூர் ராஜு, பாஸ்கரன் ஆகியோர் சிவகங்கை போய்விட்டார்கள். இப்படியாக 7 பேர் இன்றைய கூட்டத்துக்கு வரவில்லை.
துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ‘ஏழு பேரு கூட்டத்துக்கு வராமல் போனதுக்கு காரணத்தை தெளிவாக மீடியாவுக்கு சொல்லிடுங்க. இல்லைன்னா அந்த ஏழு பேரும் என்னோட ஆதரவாளர்கள்னு தினகரன் சொல்லிடுவாரு. சட்டமன்றம் கூடும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிறைய கேள்வி கேட்பாங்க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆர்வக்கோளாறில் எழுந்து டென்ஷனாகிப் பேச வேண்டாம். அந்தந்தத் துறைக்கான அமைச்சர்கள் பதில் சொல்லுவாங்க. உங்களை டென்ஷன் ஆக்கணும் என்பதற்காகத்தான் அவங்ககிட்ட இருந்து கேள்விகளே வரும். அதுக்கெல்லாம் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்.

ரஜினி கட்சியில் லைகா நிறுவனத் தலைவர்! லைக்கா சொல்றான் ரஜினி செய்யறான் ..

ரஜினி கட்சியில் லைகா  நிறுவனத் தலைவர்!மின்னம்பலம் :லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் ராஜு மகாலிங்கம் ரஜினிகாந்த் கட்சியில் சேர முடிவு எடுத்திருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த லைகா நிறுவனம் இங்கிலாந்தைத் தலைமையகமாக வைத்துச் செயல்பட்டு வருகிறது. 23 நாடுகளில் இருக்கும் இந்த நிறுவனம் உலகின் பல நாடுகளில் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தியாவிலும் லைகா தயாரிப்பு நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்துஇருக்கிறது. லைகா தயாரிப்பு நிறுவனத்தின் இந்தியக் கிளையின் தலைவராக ராஜு மகாலிங்கம் செயல்பட்டுவந்தார். இவர் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியின் 2.0 படத்தைத் தயாரிக்க இவர் அதிக முயற்சிகள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது லைகா நிறுவனம்தான் அந்தப் படத்தைத் தயாரித்துவருகிறது.

அரியானா மருத்துவமனைக்குள் 6 பேர் கொலை: ராணுவ அதிகாரி.. ஒய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட்

மருத்துவமனை, 6 பேர் கொலை, மாஜி, ராணுவ, அதிகாரியின், ரத்த வெறிதினகரன் :பல்வால்: மனைவி மறுத்து பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த மாஜி ராணுவ அதிகாரி மருத்துவமனைக்குள் நுழைந்து 6 அப்பாவிகளை அடித்தே கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.< அரியானா மாநிலம் பால்வால் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் நேற்று மதியம் 2.45 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க மர்மநபர் திடீரென இரும்பு கம்பியுடன் நுழைந்தார். அங்கு கண்ணில் பட்டவர்களையொல்லாம் சரமாரியாக தாக்கினார். இதில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

எச்.ராஜா பயம் காட்டுகிறார் தினகரனுக்கு நாளை டைம் பாம் வெடிக்கும்

வெப்துனியா :தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார்.
தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்தது.

BBC :28 ஆயிரம் மராட்டியர்களை தோற்கடித்த 800 மஹர்கள்.. பீமா கோர்கான்


மகாராஷ்டிராவின் பல இடங்களில் தலித்துகளுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் நடைபெற்ற வன்முறை மோதல்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.. கோரேகாவ் பீமா, பாபல், ஷிகர்பூர் ஆகிய இடங்களில் தொடங்கிய மோதல்கள் வன்முறையாக உருமாறின. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 200 ஆண்டுகளுக்கு முன், கோரேகாவ் பீமா என்ற இடத்தில் 1818 ஜனவரி முதல் நாளன்று மராட்டிய அரசர் பேஷ்வாவுக்கு எதிராக நடைபெற்ற போரில், பேஷ்வா தரப்பு தோல்வியைத் தழுவியது. ஆங்கிலேயப் படையில் மஹர் தலித் மக்கள் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது நடைபெற்ற போரில் உயிரிழந்த மஹர்களின் நினைவாக
கோரேகாவ் பீமாவில் நிறுவப்பட்டுள்ள வெற்றித் தூணுக்கு தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அஞ்சலி செலுத்தப்படுவதாக கூறி மராட்டிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
200வது ஆண்டான இந்த ஆண்டு நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வன்முறை வெடித்தது, ஒருவர் கொல்லப்பட்டார், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: 9 பேர் சமுகம் அளிக்கவில்லை ... அரசுக்கு 103 எம் எல் ஏக்களே உள்ளனர் ?

மாலைமலர் :வரும் 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது."வழக்கமாக எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டசபை கூட உள்ள ஒரு நாளுக்கு முன்னர் தான் நடக்கும். ஆனால் இந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் சட்டசபைக்கு வர உள்ளதால் முன்கூட்டியே இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு 102 எம்எல்ஏக்கள் தான் வருகை புரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டம் முடிந்த பின்னர் 104 எம்எல்ஏக்கள் வருகைபுரிந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் உயிரிழந்ததால் லாலு பிரசாத் யாதவின் தண்டனை விபரம் நாளை அறிவிப்பு

வழக்கறிஞர் உயிரிழந்ததால் லாலு பிரசாத் யாதவின் தண்டனை விபரம் நாளை அறிவிப்புமாலைமலர் :மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ்க்கு இன்று தண்டனை அளிக்கப்பட இருந்த நிலையில், வழக்கறிஞர் உயிரிழந்ததால் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 1990-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்வர் ஆனார். அப்போது கால் நடை தீவன ஊழலை அவருக்கு எதிராக பூதாகரமாக எதிர்க்கட்சிகளால் கிளப்பப்பட்டது.

லாலுபிரசாத் யாதவின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு!... கால்நடைத் தீவன ஊழல் வழக்கு

விகடன் தினேஷ் ராமையா  : கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றம் இன்று அறிவிக்கிறது. பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், பீகார் மாநில முதல்வராக இருந்த >லாலு பிரசாத்< உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், கடந்த டிசம்பர் 23-ல் தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட  7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்பட உள்ளது

மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து 1771 கோடி ரூபாய்கள் கொள்ளை அடித்த ஆட்சி

தினகரன் :* அபராத வசூலில் எஸ்பிஐயை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
* நிகர லாபத்தையும் தாண்டி, கணிசமான அளவு அபராதம் வங்கிகளுக்கு வசூலாகியுள்ளது.
* ஜன்தன் போன்ற அடிப்படை சேமிப்பு கணக்குகள், சிறுவர்களுக்கான கணக்குகள் போன்றவற்றுக்கு அபராத விதி பொருந்தாது.

புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதித்த வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,320 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் 1,771 கோடி கிடைத்துள்ளது.  சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2,320 கோடி வசூலித்துள்ளன. இதில். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 1,771 கோடி வசூலித்துள்ளது.  பாரத ஸ்டேட் வங்கிக்கு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் கிடைத்த நிகர வருவாய் 1,581.55 கோடியை விட, அபராத வகையில் அதிகமாக கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலையில் தங்கம் இல்லை !100 கிலோ தங்கம் போசடி ... ஒரு துளி தங்கம்கூட

புதிதாக செய்யப்பட்ட சிலைகளில் தங்கமே இல்லை: ஏடிஎஸ்பி தகவல்; தொடர்ந்து தீவிர விசாரணை
tamilthehindu :காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி அம்மன் சிலைகளில் தங்கம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று ஏடிஎஸ்பி வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருவாச்சி காணாமல் போய்விட்டதாக தினேஷ் என்பவரும், புதிதாகச் செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்கு சுமார் 100 கிலோ அளவில் தங்கத்தை வசூலித்துவிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவுப்படி சேர்க்க வேண்டிய 5.75 கிலோ தங்கம் கூட சேர்க்கவில்லை என்று அண்ணாமலை என்பவரும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இவர்கள் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகாரில் தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் செயல் அலுவலர் முருகேசன், சிலை செய்த மாசிலாமணி உட்பட 9 பேர் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.