வியாழன், 2 நவம்பர், 2017

நடிகை பிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கண்ணீர் youtube

Mayura Akilan - Oneindia Tamil : பிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கதறல்-வீடியோ ஹைதராபாத்: என் மகள் தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து விஷத்தை ஊற்றி கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழில் முரளியுடன் மனுநீதி என்ற படத்தில் நடித்தவர் பிரதியுஷா. நடிகர் பிரபுவுடன் 'சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் தவசி', உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை பிரதியுஷா. சிரித்துக்கொண்டே பேசும் வசனங்கள் அதிக அளவில் ரசிகர்களை ரசிக்கச் செய்தது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். பிரதியுஷா தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.
 கடந்த 2002ம் ஆண்டு பிரதியுஷா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சித்தார்த் என்பவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

நாடார் தேவர் சாதி சிக்கலில் ஸ்டாலின்! "காமராஜரைக் காப்பாற்றினார் முத்துராமலிங்கத் தேவர்!”

நக்கீரன் "அப்படி ஒரு நிகழ்வு நடந்ததோ, நடக்கவில்லையோ, வரலாறு குறித்துப் பேசும் போது,‘நாம் இப்படிப் பேசுவது என்றாவது ஒருநாள் வில்லங்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடக் கூடாது’என்பதை உணர்ந்து பேச வேண்டும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இதை உணர்ந்து பேசினாரா?  இல்லையா? என்று தெரியவில்லை. ஆனாலும், ஜாதி லாபியில் அவரைச் சிக்க வைத்துவிட்டார்கள்.
விவகாரம் இதுதான் -
பொதுக்கூட்டம் ஒன்றில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்து மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் வீடியோ பதிவில்,
“விருதுநகர் நகராட்சியிலே நகர்மன்ற உறுப்பினருக்கான தேர்தலிலே காமராஜர் போட்டியிடுகிறார். அப்படி போட்டியிடும்போது, அந்த ஊரிலே இருக்கக்கூடிய சில பெரிய மனிதர்கள், காமராஜரை வெளியிலே விட்டால், அவர் தேர்தல் பிரச்சாரத்திலே ஈடுபடுவார். மக்களைச் சந்தித்துப் பேசுவார் என்று அங்கு இருக்கக்கூடிய சில பெரிய மனிதர்கள் ஒரு திட்டம் தீட்டி, அவரைப் போய்ப் பிடித்து, யாருக்கும் தெரியாத இடத்தில் கொண்டுபோய், அவரை ஒரு அறையிலே பூட்டி வைத்து விடுகிறார்கள்.

புதன், 1 நவம்பர், 2017

கன்னடத்தைக் கட்டாயமாக்கும் கர்நாடகா

minnambalam :கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
“கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவருமே கன்னடர்கள்தான்” என்று பெங்களூருவில் இன்று (நவ.1) நடைபெற்ற கர்நாடக உதய தின விழாவில் பேசிய அவர், “கர்நாடகாவில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடம் கற்க வேண்டும். தங்கள் குழந்தைகளையும் கன்னடம் கற்கச் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.
தான் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் அல்ல என விளக்கமளித்த அவர், அதேநேரத்தில் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடம் கற்காமல் இருப்பது, அந்த மொழியை அவமதிப்பதிப்பது போன்றது என்றார்.
கன்னட மொழியைப் பாதுகாக்கும் விதமாக, கர்நாடகாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கன்னடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறிய அவர், கன்னட மொழியை முதன்மை வாய்ந்ததாக மாற்றக் கடந்த 60 ஆண்டுகளில் அரசு தவறிவிட்டதாகத் தனது வேதனையைத் தெரிவித்தார்.

பிறந்தது ‘தன்னாட்சித் தமிழகம்’!.. ’மத்தியில் கூட்டாசி மாநிலத்தில் சுயாட்சி’

மின்னம்பலம் : தமிழக உரிமைகளுக்காகப் போராடத் தன்னாட்சித் தமிழகம் என்கிற கூட்டியக்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மொழிவாரி மாநிலங்கள் உருவான இன்று (நவம்பர் 1) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டியக்கத்தின் முதன்மைக் கோரிக்கைகளாக, ‘தமிழ்நாடு ஒரு மாநிலமாக உருவான நவம்பர் முதல் தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வேண்டும்’ ஆகியவை முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று சென்னையில் நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தன்னாட்சித் தமிழகம் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், ஸ்டாலின் சமதர்மன் (மக்கள் இணையம்) துரை.தங்கபாண்டியன், செல்வி (சோஷலிச மையம்), அருள்தாஸ் (பச்சைத் தமிழகம்), அறிவுச்செல்வன் (தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி), மாணவர் அமைப்புச் செயல்பாட்டாளர் செம்பியன் உள்ளிட்டோர் இந்த கூட்டியக்கத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

உ.பி: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 16 உயிரழப்பு ,, 100 பேர் காயம்..

16 Dead, 100 Injured In Boiler Blast At NTPC Power Plant In Uttar
மாலைமலர் :உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. உ.பி: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கட்டலோனியர்கள் :அறிவு இல்லாமல் வணிகம் இல்லை, வணிகம் இல்லாமல் அறிவு இல்லை!


Ravishankar Ayyakkannu : கட்டலோனியர்கள் வணிகத்தின் வலுவால் மட்டுமில்லாமல் அறிவின் வலுவாலும் உரிமைக் குரல் கொடுக்கிறார்கள். அறிவு இல்லாமல் வணிகம் இல்லை, வணிகம் இல்லாமல் அறிவு இல்லை!
விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மொழியிலும் இருக்க வேண்டிய 1000 முக்கியமான கட்டுரைகள் பட்டியல் உண்டு. அதில் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது உருசிய மொழி (100 புள்ளிகள்). அடுத்து கட்டலோனிய மொழி (99.90 புள்ளிகள்). அதற்குப் பிறகு தான் சீனம், ஆங்கிலம் எல்லாம் வருகிறது. (இணைப்பு மறுமொழியில்)
அவர்கள் மக்கள் தொகை என்ன தெரியுமா? வெறும் 40 இலட்சம்!
விக்கிமீடியா அறக்கட்டளையில் நாடுகளுக்கு மட்டும் தான் தனி கிளை தொடங்க அனுமதி தருவார்கள். இந்த கட்டலோனியாகாரர்கள் மட்டும் முதன் முறையாக ஒரு மொழி/பகுதிக்கு என்று 2008லேயே தனி கிளை கேட்டு வாங்கி விட்டார்கள்.

தினகரன் + பன்னீர்செல்வம் இணைந்து ... ? எடப்பாடி சந்தேகம் ,,, வலுசேர்க்கும் உளவுத்துறை ..

வெப்துனியா : தனக்கு எதிராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் ஒன்றாக இணைந்து செயல்பட வாய்ப்பிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இரு அணிகளும் ஒன்றாக இணைந்து விட்டாலும், தனக்கும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கும் சரியாக அங்கீகாரம் மற்றும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என ஓ.பி.எஸ் அதிருப்தியில் இருப்பதாக இதற்கு முன்பே செய்திகள் வெளியானது. இதன் விளைவாக சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் ஓ.பி.எஸ். அப்போது, தன்னை பற்றியே பிரதமரிடம் ஓ.பி.எஸ் புகார் கூறியிருக்கிறார் என கருதுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அந்நிலையில், அதிருப்தியிலிருக்கும் ஓ.பி.எஸ்-ஐ தினகரன் பக்கம் இழுக்கும் முயற்சிகளும் நடந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. மேலும், எடப்பாடிக்கு எதிராக தினகரனும், ஓ.பி.எஸ்-ஸும் ஒரு அணியில் இணைய வாய்ப்பிருக்கிறது என உளவுத்துறை அளித்த அறிக்கையும் எடப்பாடிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

புல்லட் ரயில் வழித்தடம் நஷ்டத்தில் இயங்குகிறது! ரயில்வே நிர்வாகம் தகவல்

விகடன் : கார்த்திக்.; புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் அகமதாபாத் முதல் மும்பை வரையிலான வழித்தடம் நஷ்டத்தில் இயங்கிவருகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அகமதாபாத் முதல் மும்பை வரையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் சேர்ந்து அடிக்கல்நாட்டினர். இந்த நிலையில், அகமதாபாத்-மும்பைக்கிடையேயான வழித்தடம் குறித்து சமூக செயற்பாட்டாளர் அனில் கால்காலி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரயில்வேயிலிருந்து தகவல் பெற்றுள்ளார்.

வடசென்னையை கண்டு கொள்ளாத தமிழக அரசு ... தமீம் அன்சாரி


நக்கீரன் : வடசென்னையை கண்டுகொள்ளாத அரசு, ஜெயக்குமார் கருத்து பொறுப்பற்றது: தமிமுன் அன்சாரி நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி வடசெனையில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்த அவர், "வடசென்னை பகுதி அரசினால் கண்டு கொள்ளப்படவில்லை. திரு.வி.க.நகர் பகுதி வெள்ள நீரால் நான்கு நாட்களாக சூழப்பட்டுள்ளது. ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களால் பொதுமக்கள் படுகாயம் அடைந்து வருகின்றனர். மின்சார இணைப்புப் பெட்டிகள் பெருமளவில் ஆபத்தை உண்டாக்கக் கூடிய நிலையில் உள்ளது. ராமசாமி தெரு, டிகாசன் ரோடு, மன்னார்சாமி தெரு இதுபோன்ற இடங்களெல்லாம் மிக மோசமாக உள்ளது. ஆத்துத்தொட்டி பக்கத்தில் உள்ள ஹவுசிங் போர்டு மிகவும் மோசமான நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ளது. 100 குடும்பத்திற்கு மேலாக அதில் குடியிருந்து வருகின்றனர். அவர்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு ஜெர்மன் எளிது! வாய்ப்புக்களும் அதிகம் ,

ம. சுசித்ரா tamil.thehindu.com  :  நாம் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களான   பற்பசை, காபிக்கான ஃபில்டர், நாளிதழை அச்சடிக்கும் ‘பிரிண்டிங் பிரஸ்’ இயந்திரம், ஜீன்ஸ் பேண்ட், கார், பைக், ‘முதல் புரோகிராமிங்’ கணினி, ஆஸ்பிரின் மாத்திரை, எம்பி3 பிளேயர் இப்படி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாமல் இயைந்து இருக்கும் பல விஷயங்களை இன்று நாம் பயன்படுத்தும் வடிவில் முதன்முதலில் தயாரித்து, வெகுஜனப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தவர்கள் யார் என்று எண்ணிப்பார்த்ததுண்டா? ஜெர்மானியர்கள்.
தமிழர்களுக்கு ஜெர்மன் எளிது!
இன்றும் ஜெர்மனி, கண்டுபிடிப்புகளின் தேசமாகவும் வாய்ப்புகளின் வாசலாகவும் மிளிர்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் மருத்துவம், பொறியியல், சி.ஏ. மட்டுமே உயரிய பணிவாழ்க்கைக்கான தொழில்முறைத் துறைகளாகக் கருதப்படுவதில்லை. மொத்தம் 330 விதமான பணிகள் அங்குத் தொழில்முறைத் துறைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

tamilthehindu : எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இன்று சென்னையில் காலமானார். சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை மறைந்தார். அவருக்கு வயது 67.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை தனது படைப்புகளில் கொண்டுவந்தவர். ‘மின்சாரப் பூ’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்து, இளம் வயதிலேயே குடும்பச் சுமையை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர். இதனால் ஆரம்பப் பள்ளியைத் தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிக் கல்வியிலிருந்து விடுபட்டாலும் இலக்கிய வாசிப்பும் வாழ்க்கை அனுபவங்களும் அவரை எழுத்தாளராக்கின.
உயிர்நிலம் உள்ளிட்ட நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் என புனைகதை இலக்கியம் சார்ந்து 36 நூல்களை எழுதியுள்ளார்.
 அவரது இறுதி அஞ்சலி நாளை காலை சென்னையில் நடைபெற உள்ளது.

‘‘அ.தி.மு.க எங்கள் கன்ட்ரோலில்!’’ - தமிழிசையின் ஓப்பன் ஸ்டேட்மென்ட்

விகடன்:  கரூரில் நடந்த பி.ஜே.பி-யின் மாநில பொதுக்குழுவில் தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பேச்சுதான் ஹைலைட். ‘‘கறுப்பும் சிவப்பும் ஆட்சி செய்த தமிழகத்தில் இனி காவியும் ஆட்சி செய்யும். ஆவியைப் பார்த்துப் பயப்படுவதுபோல் இனி காவியைப் பார்த்துப் பயப்படுவார்கள்’’ என்றவர், ‘‘தமிழக ஆட்சி பி.ஜே.பி-யின் கன்ட்ரோலில் இருக்கிறதா எனக் கேட்கிறார்கள். அதற்கு நான் சொல்லும் பதில் ‘ஆமாம்’ என்பதுதான். அ.தி.மு.க-வை முன்பு அந்த அம்மா கன்ட்ரோலில் வைத்திருந்தார். இப்போது அ.தி.மு.க-வை மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களையும்  மோடி கன்ட்ரோலில் வைத்துள்ளார். அதாவது இப்போது பிரதமர் மோடிதான் இந்தியாவுக்கே அம்மா” என்றார்

அமலா பால் மட்டுமல்ல சுரேஷ் கோபியும் வரி ஏய்ப்புதான் ,,ஆனால் கிரண் பேடி நடிகர் சுரேஷ் பற்றி வாயே திறக்கமாட்டார்

அமலாபால்நடிகர் சுரேஷ் கோபி அவசர அவசரமா பிஜேபி யிலே செர்ந்தானேனு பார்த்தா இதற்குத்தானாம் . அமலா பாலுக்கு அம்புவிட்ட கிரேன் பேடி இவனைப் பற்றி பேச்சு மூச்சே இல்லையே. இதுதான் ஹசாரே + பாபா ராம்தேவ் + கிரேன் கோக்குமாக்கு
விகடன் : ஜெ.முருகன். அ.குரூஸ் தனம் : ”தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தரகர்களாக மட்டுமே செயல்படுகின்றன” என்று அமலாபால் விவகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகை அமலாபால் போலி முகவரியைத் தந்து புதுச்சேரியில் 1.12 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் எஸ் என்ற காரை பதிவு செய்திருக்கிறார் என்று அவர் மீது புகார் எழுந்தது. அதேபோல பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளர் ஃபாசிலின் மகனுமான ஃபகத் ஃபாசில் உட்பட பலர் இப்படி போலி முகவரியைத் தந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் புகார் கிளம்பியது. புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தை கையில் எடுத்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகை அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளருக்கும், போக்குவரத்துத் துறை ஆணையருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதுச்சேரி- கடலூர் சாலையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அலுவலகத்துக்குச் சென்ற கிரண்பேடி, அங்கிருந்த அனைத்துப் பிரிவுகளையும் தீவிரமாக ஆய்வுசெய்தார். அப்போது வாகனங்களுக்கு வழங்கப்படும் உரிமங்கள் பற்றிய விவரங்களையும் ஆய்வுசெய்தார்.

அமெரிக்கா, லண்டன் போல் மழைநீர் வடிகாலுக்கு சிறப்பான ஏற்பாடு: அமைச்சர் வேலுமணி டமார் !


tamilthehindu :சென்னையில் மழைநீர் வடிகால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்குமே மழைநீர் தேங்கவில்லை, அமெரிக்கா போன்று லண்டன் போன்று சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அமைச்சர் எஸ்.பி.வேலு பேசியதை அடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் வேலுமணி திணறினார்.
சென்னை மாநகராட்சியில் இன்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூறினார்.
''தமிழக அரசு முதல்வர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கவில்லை, ஒரு சில இடங்கள் அதுவும் சரி செய்யப்பட்டுவிட்டது.

கிரானைட் மோசடி... துணை போகும் எடப்பாடி! - சமாதி ஆக்கப்பட்ட சகாயம் கமிஷன்

விகடன் : ஈ.ஜெ.நந்தகுமார் வீ.சக்தி அருணகிரி: ஈ.ஜெ.நந்தகுமார் 
கிரானைட் மோசடியை விசாரிக்க உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் விசாரணை கமிஷனை ஊத்திமூடும் வேலையில் இறங்கிவிட்டது எடப்பாடி அரசு. கிரானைட் மோசடிக்காரர்கள் சொன்ன கருத்துகளையே அரசும் சொல்லியிருப்பதன் மூலம், மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள்மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது உறுதியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்த கிரானைட் குவாரிக் கொள்ளைக்கு, மதுரை கலெக்டராக இருந்த சகாயமும், அன்சுல் மிஸ்ராவும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதிரடி நடவடிக்கையாக, முறைகேடான குவாரிகள் சீல்வைக்கப்பட்டன. பி.ஆர்.பி உள்பட முக்கிய கிரானைட் புள்ளிகள் சிறைக்குப் போய்வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான், ‘கிரானைட் மோசடியை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார் டிராஃபிக் ராமசாமி. இதில்தான் சகாயம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்தது நீதிமன்றம். மதுரையில் ஒரு வருடத்துக்கும் மேல் தங்கி, பல ரிஸ்க்குகளை எதிர்கொண்டு, விசாரணையை நடத்தி முடித்தார் சகாயம்.

சகாயத்திற்கு கடைநிலை ஊழியர்கள் கூட ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை: இரா.முத்தரசன் பேட்டி

நக்கீரன் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ’’வடகிழக்கு பருவ மழை முன்கூட்டியே தெரிந்து இருந்தும் எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. அரசு எவ்வகையில் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். மழை தொடர்வதால் டெங்கு மேலும் பரவும் அபாயம் உள்ளது. இந்த எடப்பாடி அரசின் செயல்பாடு ஆட்சியை தக்க வைக்கவும் இருக்கும் பணத்தை பாதுகாக்கவும் அரசு நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த மறுக்கிறது இந்த அரசு. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’ கிராணைட் வழக்கை விசாரிக்கும் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு கடைநிலை ஊழியர்கள் கூட ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. சகாயம் கொடுத்திருக்கும் ஆவணங்களின் படி கிராணைட் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மத்திய அரசின் திட்டமான பண மதிப்பிழப்பினால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் 8ம் தேதி கருப்பு தினமாக அறிவித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’என்று கூறினார். - ஜீவாதங்கவேல்

கழிவு நீருக்காக கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்த மாநகராட்சி அதிகாரிகள்... பொதுமக்கள் கடும் கண்டனம்

Chinniah Kasi : கழிவு நீரை விடுவதற்காக கொரட்டூர் ஏரிக்கரையை உடைத்த அதிகாரிகள்
மாநகராட்சி செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்
அம்பத்தூர், அக். 31-
சென்னை அம்பத்தூர் தொழிற் பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் அருகே உள்ள கொரட்டூர் ஏரியில் கலந்து வந்தது.இதனால் சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொரட்டூர் ஏரியில் முற்றிலுமாக மாசு ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து கொரட்டூர் ஏரியில் எந்தவொரு கழிவு நீரும் கலக்க விடக்கூடாது என பசுமைத் தீர்ப்பாயம் அரசுக்கு உத்தரவு வழங்கியது.

BBC : நியூ யார்க்கில் டிரக் தாக்குதல் 8 பேர் மரணம் , 11 பேர் காயம்... அல்லாகு அக்பர் என்று கத்திகொண்டே ..


The New York terror attack suspect apparently shouted "Allah Akbar" ... have died and several others have been injured in lower Manhattan.
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக வந்த தகவல்களை அடுத்து, சம்பவ இடத்தில் அவசரகால சேவை நியூயார்க்கில் கீழ் மன்ஹாட்டனில் டிரக் ஓட்டுநர் ஒருவர் நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் சென்ற மக்கள் மீது மோதியதால் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டு்ள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமை CBS வாகனத்தில் இருந்து வெளிவந்த 29 வயதான ஒருவரை போலீஸார் சுட்டு கைது செய்துள்ளனர். கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மேகம் எப்போது விலகும்

savukkuonline.com :  தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் மேகம் எப்போது விலகும், எப்போது விடியல் வரும் என்றே பெரும்பாலான தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் நடந்த பல்வேறு அவலங்களுக்கான தீர்வுகளை நாடி, பல்வேறு தரப்புகளும் நீதிமன்றத்தை அணுகி, இன்று நீதிமன்றத்தின் கரங்களில் தமிழக ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   இது ஒரு துரதிருஷ்டமான சூழல்தான் என்றாலும், மத்தியில் ஆளும் கட்சியும், மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அணியும், ஒன்று சேர்ந்து சேர்ந்திசை வாசிக்கையில், ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்தை நாடுவதுதானே சரியான வழி முறை ?  அதைத்தான் எதிர்க்கட்சிகள் செய்திருக்கின்றன.
பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தின் முகத்தில் விழும் கரும்புள்ளி என்பதை மக்கள் உணர்ந்தே என்று இந்த அவலம் தீரும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.  ஆனால் நீதிமன்றங்களோ மந்தகதியில் இது தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகின்றன.
1991 ஜெயலலிதா ஆட்சிகாலத்தில், அப்போதைய ஆளுனர் சென்னா ரெட்டியிடம், முதல்வர் ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க அனுமதி வேண்டி டாக்டர் சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார்.  அவரது மனுவை ஏற்ற சென்னா ரெட்டி, சுப்ரமணிய சுவாமிக்கு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

தினத்தந்தி பவள விழா .. பிரதமர் மோடி தலைமையில் 06-11-2017 ,, இப்போது புரிகிறதா!

Bhimraj Gandhi : தந்திக்கு எப்படி சிறந்த ஊடகம் என 2016 ல் தேசிய விருது கிடைத்தது?
தந்தி ஏன் அமித் ஷா மகனின் ஊழலை பற்றி விவாதிக்க வில்லை?
தந்தி ஏன் பாஜக ரவுடிகள் விசிக வை தாக்கியதை, மோதல் என்றது?
தந்தி ஏன் ஆட்சியில் இல்லாதவர்களை மட்டும் குற்றம் சுமத்துகிறது?
தந்தி ஏன் திருமுருகன் காந்தியை ரங்கராஜ் பாண்டேவுடன் விவாதிக்க விடுவதில்லை?
தந்தி ஏன் கமல் அரசியலை 2 மாதமாக கொண்டாடி வருகிறது?
தந்தி ஏன் உபி மாட்டிறைச்சி கொலைகள் பற்றிய செய்தி போடுவதே இல்லை?
தந்தி ஏன் பொன்னரையும் சீமானையும் முன்னிலை படுத்துகிறது?
தந்தி ஏன் தமிழிசை பேசுவதற்கு முன்பே மைக்கை நீட்டுகிறது?
தந்தி ஏன் அதானி நிலக்கரி ஊழலை பற்றி பேசுவதில்லை?
தந்தி ஏன் எப்போதும் திருமாவை வன்முறையாளர் போல சித்தரிக்கிறது?
தந்தி ஏன் நாராயணன், கே.டி.ராகவன் போன்றோரை அதிகம் பேச விடுகிறது?
தந்தி ஏன் கதிராமங்கலம் போன்ற பகுதிகளுக்கு நேரே செல்ல மறுக்கிறது?
தந்தி ஏன் சசிகலாவை சின்னம்மா என முதலில் அழைத்தது?
இப்படி பல கேள்விகளுக்கு பதில் இந்த படம்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

விடுதலை சிறுத்தைகள் துண்டறிக்கை ; மதவெறி மாய்ப்போம் - மண்ணில் மனித நேயம் காப்போம்! வாரீர்! வாரீர்!

athithakarikalan.vck: இந்திய ஒன்றியத்திற்குட்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கென ஒரு சில சிறப்பு தகுதிகள் உண்டு. சமூக நீதிக்கு முன்னோடியான மாநிலம், வகுப்பு வாதமும் மத வாதமும் இங்கே எடுபடாது என்பது தான் அது. அதற்கு அடிகோலியவர்கள் பன்டிதர் அயோத்தி தாசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் போன்றவர்கள் ஆவர்.
சமூக நீதிக்கு எதிரான குரலோ அல்லது மதவெறி, இனவெறி, மொழிவெறி பாசிசமோ இங்கே தென்பட்டால் அதனை தமிழர்கள் தங்கள் இடது காலால் இடறித் தள்ளி சென்று விடுவது தான் வாடிக்கை. ஆனால் அது தான் இப்போது மதவெறி கும்பலுக்கும் சங் பரிவார தலைவர்களுக்கும் மிகப்பெரிய சவாலாகவும் அச்சமாகவும் உள்ளது. மதப் பெரும்பான்மை வாதத்தை முன்னிறுத்தி மற்ற மாநிலங்களில் தாங்கள் காலூன்ற முடிகிற நிலையில் இங்கே தொடர் தோல்விகளை மட்டும் சந்திப்பதும், மதக் கலவரங்களை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்றிவிடும் உத்திகளும் இங்கே தமிழகத்தில் எடுபடவில்லையே என்ற தோல்வி மனப்பான்மையே இவர்களை நேர்மறையாக சிந்திக்கவும் செயல்படவும் விடுவதில்லை.

சு.சாமி :ஆதாரைக் கட்டாயமாக்குவது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து Aadhaar a threat to national security: Subramanian Swamy

தினமணி :புதுதில்லி: அரசின் திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்குவது எனபது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சில வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முதலில் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இறுதித்தேதி என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்த கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் பொழுது மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நலத்திட்டங்களுக்கான மானியம் வங்கி கணக்குகள் மூலம் செலுத்தப்படுவதால் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறும் மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ராமதாஸ் கலைஞர் சந்திப்பு ,, கோபாலபுரம் வீட்டில்

சென்னை, தினகரன் : உடல் நலக்குறைவு காரணமாக தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக இல்லம் வந்த ராமதாஸை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.

திமுக என்பது ஆரியத்தைத் தவிர அனைத்து சாதி, மத, இன மக்களுக்கும் ....

Sowmian Vaidyanathan : தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் சென்று மரியாதை செய்ததை இங்கு சிலர் விமர்சித்து வருவதைக் கண்டால் பத்திக்கிட்டு தான் வருது...!
திமுக என்பது ஆரியத்தைத் தவிர அனைத்து சாதி, மத, இன மக்களுக்கும் பொதுவான இயக்கம். ஆரியம் தவிர்த்த மற்றையோர் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அல்லது ஒரே நூலிழையில் இணைக்கும் பணி தான் திமுகவினுடையது.
அப்படியான ஒரு குடையாகவோ அல்லது இணைப்புக் கயிராகவோ திமுக செயல்பட்டே ஆக வேண்டிய கட்டாயம் அதற்கு இருக்கின்றது. இல்லையென்றால் ஆரியம் குறுக்குசால் ஓட்டி அனைவரையும் தனித்தனியே பிரித்து வைத்து..., உங்களுக்குள் ஆண்டான், அடிமை என்று பிரிந்து நில்லுங்கள்... ஆனால் நீங்கள் அனைவருமே எமக்கு அடிமைகள் தான் என்பதை பறைசாற்றிக்கொண்டே இருக்கும்..!

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது! ஏன் தெரியுமா ? சுரேஷ் காமாட்சி ....

Shankar  Oneindia Tamil  சென்னை: தமிழ் ராக்கர்ஸை உங்களால் பிடிக்கவே முடியாது. அதைவிட்டுவிட்டு திருட்டு விசிடியை ஒழிக்க ஒரிஜினல் சிடி மார்க்கெட்டைத் திறந்துவிடுங்க என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பேசினார். 6 அத்தியாயம் படத்தின் இசை வெளியீடு நேற்று பிரசாத் லேபில் நடந்தது. இந்தப் படத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவர் இயக்கியுள்ளார். அஜயன் பாலா, கேபிள் சங்கர், சுரேஷ், சங்கர் தியாகராஜன், லோகேஷ், ஸ்ரீதர் என ஆறுபேர். இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தமன், விஷ்ணு, 'பசங்க' கிஷோர், 'குளிர் 100' சஞ்சய், 'நான் மகான் அல்ல' வினோத், பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.