வியாழன், 21 செப்டம்பர், 2017

சபரிமாலா : நிச்சயம் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஏழைகளின் கல்விக்காகப்
பாடுபடுவதாகச் சொல்லும் எடப்பாடியின் ஆட்சியில்தான் ஏழை மாணவி அனிதா தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இப்போது நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம், நீட் விலக்கிற்காகப் போராடினோம் என நீட்டி முழக்கிக்கொண்டிருக்கிறார். இந்த மாதிரி பக்கா கோழைத்தனமும் படுகேவலமான ஆட்சி வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. அனிதா செத்தவுடன் நாடே கொந்தளித்துப் போராடிய போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பஜனை பாடுகிறார் எடப்பாடி. மேடையில் அண்ணா படம் வைக்காமலேயே அண்ணா பிறந்தநாள் கொண்டாடிய அதிசய மனிதர்கள்தான், நீட்டை எதிர்க்கிறோம் என்கிற அதிசயத்தையும் நிகழ்த்துகிறார்கள். நிச்சயம் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்... அதுவும் வெகு விரைவில்''’என கொந்தளித்தார் சபரிமாலா. (மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்) - அ.அருண்பாண்டியன்

நடிகர் ஜெய் குடித்து விட்டு காரோட்டி கைது... உடனே விடுதலை

இன்று அதிகாலை அடையாறு மேம்பாலத்தில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தில் சிக்கிய நடிகர் ஜெய் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
'கோவா', 'ஈசன்', 'சென்னை 28' போன்ற படங்களில் நடித்தவர் ஜெய். இவரும் நடிகர் பிரேம்ஜி, அபினவ் உள்ளிட்டோரும் நெருங்கிய நண்பர்கள். ஜெய், நேற்று நள்ளிரவு நண்பர்களுடன் விருந்தில் கலந்துகொண்டு மது போதையில் தனது ஆடி சொகுசுக்காரில் மந்தைவெளியிலிருந்து அடையாறு நோக்கி வேகமாக சென்றுள்ளார்.
அடையாறு பாலம் அருகே வரும்போது வேகமாக வந்ததால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி முன்பக்கம் நொறுங்கியது.
விபத்து பற்றி பொதுமக்கள் வந்த சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

கட்டண குறைப்பு Jio வுக்கு லாபம் ,,,, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ... இழப்பு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி


அழைப்புக் கட்டணம் குறைப்பு: லாபம் யாருக்கு?நெட்வொர்க் இணைப்புகளுக்கான அழைப்புக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர் பிற நெட்வொர்க் வாடிக்கையாளருக்கு அழைப்பு விடுக்கும் போது, இணைப்புச் சேவைக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து வோடஃபோனுக்கு கால் செய்யும் போது ஏர்டெல் நிறுவனம் வோடஃபோனுக்கு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இக்கட்டணத்தை டிராய் அமைப்பு 6 பைசாவாகக் குறைத்து நிர்ணயித்தது. மேலும், 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இக்கட்டணமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

18 MLA .. ஆளுநர் - எடப்பாடி வாக்குவாதம்? : என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல? அருண் ஜெட்லி சொன்னார்.. அவர் சொன்னார் இவர் சொன்னார் ...


மின்னம்பலம் : நம்பத்தகுந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஒரு நண்பர். ‘நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். அதான் புது நம்பர்ல இருந்து கால் பண்றேன்!’ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தார் அந்த நண்பர். அவர் சொன்னது இதுதான்...டிஜிட்டல் திண்ணை:  ஆட்சி சஸ்பெண்ட்? ஆளுனர் கோபம்!“நேற்று நீதிமன்ற நிகழ்வுகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ஆளுனர் வித்யாசாகர் ராவ். அதன் பிறகு இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது முதல்வரிடம், ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மீது எதுக்காக நடவடிக்கை எடுத்தீங்க. ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே..இப்போ எவ்வளவு சிக்கல் வந்துடுச்சு பாருங்க..’ என்று கோபமாக கேட்டாராம் ஆளுனர். அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘நீங்க சொல்றது சரிதான்...ஆனால் எல்லாத்தையும் அருண் ஜெட்லிகிட்ட கேட்டுட்டுதான் செஞ்சோம். அவர் சொன்ன பிறகுதான் இங்கே நடவடிக்கை எடுப்பட்டது. உங்களுக்கு அங்கிருந்து சொல்லிருப்பாங்கன்னு நினைச்சோம். மத்தபடி உங்களுக்கு சொல்லக்கூடாதுன்னு எதுவும் இல்லை...’ எனச் சொன்னாராம்.
அதற்கு ஆளுனர், ‘அவங்க சொல்லுவாங்க.. இவங்க சொல்லுவாங்கன்னு நீங்க எதுக்கு நினைச்சுட்டு இருந்தீங்க.. நீங்களே சொல்லி இருக்கலாமே... நீங்க கூப்பிட்டு நான் எப்போ பேசாமல் இருந்தேன்? அவசரப்பட்டு நீங்க முடிவெடுத்துட்டீங்க. இப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என் பெயரை இழுத்துட்டு இருக்காங்க.

சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது: நீதிமன்றம்! அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு போராட்ட...


மின்னம்பலம் : அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பான வழக்கில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று (செப்,21) நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்திக் கடந்த 7ஆம் தேதி முதல் 9 நாட்களாக வேலைநிறுத்தம், காத்திருப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 21ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று நீதிபதிகள் கே கே சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார்.

12 லிருந்து 13 மணி நேரம்வரை பணியாளர்களை நிற்கவைத்து வேலை வாங்கும் கொடூர கம்பனிகள்

tamilthehindu : ‘சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் தொடர்ச்சியாக பத்து மணி நேரத்துக்கும் மேலாக ஓய்வின்றி நிற்க வைக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொண்டு வருகிறார்கள்..’ தி இந்து இங்கே.. இவர்கள்.. இப்படி! பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், இப்படியொரு தகவலைப் பதிவு செய்திருந்தார். வறுமைப்பட்ட பெண்கள் : மக்களின் நுகர்வுக் கலாச்சாரத்தை தங்களுக்கான அறுவடைக் களமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்களையே பணியில் அமர்த்துகிறார்கள். அதிலும், வறுமைப்பட்ட பெண்கள் தான் பெரும்பாலும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.
இதில் பெரும்பகுதி வணிக நிறுவனங்கள் சொற்பமான சம்பளத்துக்கே பெண்களை வேலைக்கு எடுக்கின்றன. இதில், பலவற்றில் 12 லிருந்து 13 மணி நேரம்வரை பணியாளர்களை நிற்கவைத்து வேலை வாங்குகிறார்கள்.

கமலஹாசன் அர்விந்த் கேஜ்ரிவால் சந்திப்பு .. சென்னையில் ....

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்து அவரது வீட்டில் சந்தித்து ஒருமணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், கமலஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னை சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியும். ஊழலை எதிர்க்கும் எவரும் எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பது உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. என் அப்பா காலத்தில் இது அரசியல் வீடாக இருந்தது. அதில் நான் மட்டும் தனித்திருந்தேன். இன்று ஒரு அரசியல் சந்திப்பில் நான் இருந்திருக்கிறேன். நாங்கள் சந்தித்திருப்பதன் நோக்கம் ஒன்றுதான்.

திருமுருகன் காந்தியின் அரசியல்? - திராவிடத்தை எதிர்க்க கிடைக்கும் எதையும் ஆரியம் பயன்படுத்தும்

Devi Somasundaram : திரு முருகன் காந்தி அரசியல்...
அவர் பெரியாரை கொண்டாடுகிறார்...மகிழ்ச்சி ..ஆனா அதுகாக அவர் பேசும் தமிழ் தேசியம் ஏற்பானது தானா? .. இல்லை .ஆரிய அரசியலை புரிந்து கொள்ளாத குழந்தை தன அரசியல் அறிதல் கொண்டவர்கள் தான் காந்தி தமிழ் தேசியத்தை மீட்பார்ன்னு நம்புவார்கள்...
ஆரியம் தன் எதிரியை தானே உருவாக்கும்...வேறு எதிரி உருவாகி விடாமல் தடுக்க ஒரு வழியா இதை பயன் படுத்தும்.. 2000 ஆண்டுகால அரசியலை படித்தவர்களே குழம்பி போகும் இடம் ஆரிய சூது..நாம் எம்மாத்ரம்..? துரோணர் ஏன் கெளரவர் பக்கம் நின்றார்...கிருஷ்ணன் ஏன் பாண்டவர் பக்கம் நிற்க வைக்க பட்டார்.. செத்த வூட்ல பிணமாவும் , கல்யாண வீட்ல மாப்பிள்ளையாவும் ,மணப்பெண்ணாவும் தானே இருக்க முயலும் ஆரிய அரசியல் அது....
கதைல சில கேரக்ட்டர் ஏன் இருக்குன்னே தெரியாது..ஆனா இருக்கும்.. நகுலனும் ,சகாதேவனும் ஏன்னே புரியாது. எங்காவது பலி தர அவர்கள் வளர்க்க படுவார்கள்..
ராஜாஜிக்கு ஒரு மாபொ சி.. மாதிரி தனக்கான எதிரியை மைய படுத்த விடாமல் பிரித்து ஆளும் அரசியல்..
நிதானமா யோசிச்சா சில கேரக்கடர்லாம் ஏன் அரசியல் பேசுதுன்னே தெரியாது..ஆனா பேசிட்டு இருக்கும்..பழ நெடுமாறன் ஒரு வெகு சனம் அறியாத நபர் , தமிழருவி ஒரு சதாரான நபர்..வைகோ ஒரு கவுன்சிலர் போஸ்ட்கூட ஜெயிக்க துப்பில்லாதவர்...இவர்கள் யார் அரசியலை பேசுகிறார்கள்..யார்காக பேசுகிறார்கள் ..

உத்தர பிரதேசம் ... ஒரு பைசா விவசாய கடன் தள்ளுபடி .. பிராடுகளின் ஆட்சியில் கூத்துக்கள் அரங்கேற்றம்

tamilthehindu :சங்கிகள் அடிமுதல் நுனிவரை அத்தனையிலும் ப்ராடுதனத்தில் ஊறியவர்கள் என்பதற்கான மற்றொரு சான்று:- கடந்த ஏப்ரலில் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.36,000 கோடி பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கில் இழப்பு கண்ட ஒரு விவசாயிக்கு ஒரே ஒரு பைசா மட்டும் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.
அதாவது மாநிலத்தின் 86 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை இதன் மூலம் தள்ளுபடி கிடைக்கும். இந்நிலையில் மதுராவில் உள்ள ஆதிங் கிராமத்தைச் சேர்ந்த சிட்டி சர்மா என்ற விவசாயிக்கு பயிர்க்கடன் தள்ளுபடியாக 1 பைசா தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிறைய பேருக்கு மிகமிகக் குறைவான தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தனக்குக் கிடைத்தது ‘கொடூரமான ஜோக்’ என்று கோபாவேசமாகக் கூறினார் சிட்டி சர்மா. ஆனால் இவரது பயிர் இழப்பு லட்சக்கணக்கான ரூபாய்கள் ஆகும்.

“பால் கட்டு” ஆணுக்குப் பெண்ணின் வலியை பற்றி புரிதல்கள் தேவை

Vijay Bhaskarvikay : பள்ளிக் காலங்களில் ஒரு பெண் டீச்சரைப் பார்த்து ’பால்பண்ணை’ என்று மாணவர்கள் கூப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
அவருடைய மார்பு பெரிதாக இருப்பதுதான் காரணம்.
அதற்கும் முன் சிறுவயதில்.....
"சம்சாரம் அது மின்சாரம்" திரைப்படத்தில் லட்சுமி நடித்திருக்கும் கேரக்டருக்கு பால்கட்டி கொண்டது என்று துன்பப்படுவதாக ஒரு காட்சி வரும்.
ஒரு விநாடி இப்படின்னா என்ன? என்று என் அன்னையிடமே கேட்கத் தயங்கினேன்.
பொதுவாக பெண்ணின் மார்பு என்பது ஆணுக்கு உச்சமான இன்பத்தைக் கொடுக்கும் விசயம். பார்க்கும் பெண்களின் மார்புகளில் எல்லாம் தன் விழிகளை பதிக்காமல் இருக்க அவனால் முடியவில்லை.
ஆனால் அதன் பின்னால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பற்றி எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மாதவிலக்கு, மென்ஸஸ, மெநோபாஷ் போன்ற விஷ்யங்கள் பற்றி கூட கொஞ்சம் விழிப்புணர்ச்சி வந்தாற்போல இருக்கிறது......
ஆனால் இந்த மார்பினால் வரும் துன்பத்தைப் பற்றி மிகக் குறைந்த விழிப்புணர்வே இருக்கிறது.

ஆளுநர் கோவிந்தை சந்தித்தாராம்! இந்து பத்திரிகையின் ஜாதி திமிர் குடியரசு தலைவர் வெறும் கோவிந்த்தாம்

Sivasankaran Saravanan · தி இந்து வின் அகராதிப்படி மாநில கவர்னர் என்பது இந்திய குடியரசுத்தலைவரை விட உயர்ந்த பதவி. எனவேதான் Governor meets Kovind என தலைப்பு போட்டுள்ளார்கள். இப்பலாம் யார் சார் சாதி பார்க்குறாங்க என்று கேட்கும் அப்பாவி ஆட்களுக்கு இது சமர்ப்பணம்..!

Devi Somasundaram :சாதி எத்தனை கேவலமான விஷம் என்பதை திரும்ப திரும்ப சொல்ல தான் வேண்டி இருக்கு....இப்பலாம் யார் சாதி பாக்குறான்னு பம்மாத்து பேசும் நம் மன நிலை அப்ப அப்ப தோலுரிக்க பட வேண்டி இருக்கு ..ப்ரஸிடெண்ட் என்ற பதவி நாட்டின் முதல் குடி மகன்....அரசியலமைப்பு சட்டத்தின் உச்ச அதிகாரம் கொண்ட பதவி..இந்த தேர்ந்தெடுக்க பட்ட கவர்மெண்டை கலைக்க கூட அதிகாரம் கொண்டவர் ப்ரெஸிடெண்ட் ...கவர்னரையே ப்ரெஸிடெண்ட் தான் நியமிக்கிறார்... த ஹிந்து பத்திரிக்கை கவர்னர் மீட்ஸ் கோவிந்த் என்ற தலைப்பை எந்த மன நிலையில் எழுதியது என்பதை புரிந்து கொள்ள பெரிய ஞானம் தேவை இல்லை.. ராவ் கள் கவர்னரா இல்லாவிட்டாலும் மதிக்க படுவார்கள் ...ராம் நாத்கள் ப்ரெஸிடெண்டாக இருந்தாலும் அவ மதிக்க படுவார்கள்.....புறையோடி போன சாதிய சமுகம்...ஹிந்து பத்திரிக்கைக்கு கண்டனங்கள்../thehindu?

கேரளத்து ஈழவர்கள் ஒரு நோக்கு.


eelavar4எஸ். இராமச்சந்திரன், “கி.பி. 10-12ஆம் நூற்றாண்டைய தமிழ்க் கல்வெட்டுகளில் ‘தீயமாள்வான்‘ என்ற அடைமொழியுடன் சில வீரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். தீயம் என்பது த்வீபம் (தீவு) என்ற சொல்லின் தமிழ்த் திரிபாகக் கருதப்படுகிறது. ஈழத் தீவுக்கும் இக்குலப் பெயருக்கும் (தீயர்) தொடர்பிருக்கக்கூடும். ஈழவர் சமூகத்தவர் ஈழத்தீவிலிருந்து குடியேறியவர்களா என்பது தனித்த ஆய்வுக்குரியது. இப்போதைய நிலையில் தீயர் என்போர் ஈழவர் குலப்பிரிவினர் எனக் கொள்வதில் தவறில்லை.”எனக்குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளப்படவேண்டியதொன்று.
ஈழவர் சமூகத்தில் களப்பணியாற்றியவரும் தற்பொழுது பிரான்ஸில் வசித்துவருபவருமான சிவா சின்னப்பொடி  என்னும் ஈழப்போராளி தரும் தகவல்கள் முக்கியமானவையாக அமைகின்றன.
” 1980 களின் ஆரம்பத்தில் நான் கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம், நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை, காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. இந்த கிராமங்களின் அமைப்பு முறை, குறிப்பாக ஒழுங்கைகள், வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை, தோட்டம், கிணற்றடி அமைப்பு முறை, மா, பலா, தென்னை, கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு, கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி (மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.

போலீசார் அலட்சியத்தால் கூலி தொழிலாளி தற்கொலை

kathir.vincentraj: போலீசார் அலட்சியத்தால் கூலி தொழிலாளி தற்கொலை
தன் தற்கொலைக்கு போலீசார் தான் காரணம் என்று நீதிமன்ற நடுவரிடம் வாக்குமூலம்
உண்மையை மறைத்து மனைவியை குற்றவாளி ஆக்கி சிறையில் தள்ளிய போலீஸ்
பத்திரிக்கைச் செய்தி
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் வசித்து வந்தவர் அன்பு (42). தலித் சமூகத்தைச் சேர்ந்த அன்பு கடந்த 08.09.2017 அன்று வாணியம்பாடி நகர் காவல்நிலையத்திற்கு முன்பு தன்னுடைய உடலில் தீ வைத்து ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வந்தவர் 11.09.2017 அன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வாணியம்பாடி நகர் போலீசாரின் அலட்சியத்தினால் தன் மீது தீ வைத்து கொண்ட அன்பு நடந்த உண்மையை மாவட்ட முதன்மை உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் தந்திரமாக அன்புவின் தற்கொலைக்கு அவரது மனைவி நளினி தான் காரணம் என்று கூறி பொய்யாக வழக்கினை பதிவு செய்து நளினியை சிறையில் அடைத்துள்ளனர். இரண்டு நாட்கள் காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த நளினி, தனது கணவர் இறப்பு சடங்கிற்கு சென்று வர ஒரு மணி நேரம் அனுமதி கொடுங்கள் என்று கெஞ்சியும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஒரு தற்கொலைக்கு காரணமான போலீசார் இத்தகைய கொடூரமான அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

10th வகுப்பு முடிந்தவுடன் எஞ்சினீர் அல்லது டாக்டர் . உபயம் MGR

Venkat Ramanujam :இப்போது நீட் போலவே நாங்கள் படிக்கும் காலத்தில் ஒரு முட்டாத்தனமா சட்டத்தை கொண்டு வந்தார் #MGR அதாவது 10th வகுப்பு முடிந்தவுடன் எஞ்சினீர் அல்லது டாக்டர் என்ற முடிவு எடுத்த விட வேண்டும் .
டாக்டர் படிக்கும் ஆசைப்பட்டால் கணக்கு கிடையாது ..Physics Chemistry Zoology botony மட்டுமே எடுக்க முடியும் . இதன் பாதிப்பு என்ன என்றால் ஒரு வேலை டாக்டர் ஆக முடியாவிட்டால் B.Sc zoology , B.Sc botany மட்டுமே எடுக்க முடியும் .அப்போது எல்லாம் வேலை வாய்ப்பு அந்த ஏரியாவில் குதிரை கொம்பு .
எனது அக்கா மற்றும் எங்கள் குடும்பத்தில் எல்லாரும் அதுவரை maths physics chemisty bilogy எடுத்து விட்டு மதிப்பெண் படி எஞ்சினீர் அல்லது மருத்துவம் படித்து வந்தனர் .
சரியாக நான் 10th எழுதியவுடன் நீட் க்கு சற்றும் குறையில்லாத இப்படி பட்ட லூசு சட்டத்தை இடியாக அன்று+1 செல்லும் சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் தலையில் இறக்கினர் அறிவின் சிகரம் எம்ஜியார் . பின்னர் எதிர்ப்பு காரணமாக அடுத்த ஆண்டு அதை கைவிட்டார் எம்ஜிஆர் என்பது வேறு கதை .
1986- 10th படித்த காலத்தில் Maths scince 88% மார்க் எடுத்த எனக்கு இது பேரிடியாக இருந்தது . அது எப்படி நமது படிப்பை ., படிப்பின் வலியை அறியாத ஒருவர் முடிவு பண்ணலாம் என்ற ஆதங்கம் மேலிட அன்றில் இருந்து ஸ்போர்ட்ஸ் சினிமா செய்திகள் பக்கம் மட்டுமே மேய்ந்த கண்கள் முதல் பக்கம் அரசியல் பக்கமும் பார்க்க ஆரம்பித்தது ..

கீழடி ,,,, பி.ஜே.பி-யின் எடுபிடி இந்த அ.தி.மு.க. அரசு!’’ - கொதிக்கிறார் சுப.வீரபாண்டியன்

விகடன்   : "ஈ.ஜெ.நந்தகுமார் : மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசின் எடுபிடியாகச் செயல்படுகிறது, தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவைச் செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், சரஸ்வதி நதியை தேடும் மத்திய அரசு, தமிழகத்தின் கீழடியில் மண்ணைப் போட்டு மூடுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பள்ளிச்சந்தையில் உள்ள கீழடி மந்தை திடலில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பில் கீழடி அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து விரைவாக நடத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மகளிர் தொண்டரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் சேங்கை மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கீழடியில் நடைபெறும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட சுப. வீரபாண்டியனிடம் பேசினோம்.

காஞ்சி சங்கராச்சாரி குருப்பை அம்பானி குருப் கைவிட்டது ஏன்? காஞ்சி ஜெயேந்திரர் மீண்டும் கைது ?

நக்கீரன் : கண்களில் நீர்வழிய அந்த டி.வி. சேனலை பார்த்துக்கொண்டிருந்தார் ஜெயேந்திரர். 13 ஆண்டுகளுக்கு முன்பாகவே நக்கீரன் புட்டு புட்டு வைத்ததைத்தான் கடந்த 13-ந் தேதியன்று ஆங்கிலச் சேனலான ரிபப்ளிக் டி.வி. ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி, போலீஸ் கஸ்டடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து படுத்தபடி ஜெயேந்திரர் அளித்த அதிர்ச்சி வாக்குமூல காட்சியைத்தான் ஆங்கில சேனல் ஒளிபரப்பியது. செப்டம்பர் 13 அன்று ஜெயேந்திரர் மயிலாடுதுறையில் நடந்த காவிரி புஷ்கர விழாவிற்குப் பிறகு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். காஞ்சி மட மேலாளர் சுந்தரேசன்தான், ஆங்கில சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் காட்சிகளின் முன்னோட்டம் பற்றி ஜெயேந்திரரிடம் தெரிவித்தார். ஜெயேந்திரருக்கு சட்டெனப் புரியவில்லை. காரணம், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச்சு குழறிய நிலையில், மறதி நோய்க்கும் ஆட்பட்டிருக்கிறார்.

Why NEET ? இந்தியாவின் மொத்த மருத்துவ இடங்களில் 46% தென் மாநிலங்களில் மட்டும் . இதில் வடமாநில மாணவர்களுக்கும் 15% (3620) இடங்கள்.. பட்டியல் இதோ !

இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ இடங்கள் (MBBS SEATS)
அந்தமான் & நிக்கோபர் தீவுகள் : 1 – 100
ஆந்திர பிரதேசம்: 27 – 3800
அஸ்ஸாம்: 6 – 726
பீகார்: 13 – 1250
சண்டிகர்: 1 – 100
சட்டீஷ்கர்: 6 – 700
டெல்லி: 8 – 1050
கோவா 1 -150
குஜராத்: 21 – 3230
ஹரியானா: 8 – 800
இமாச்சல பிரதேசம்: 3 – 350
ஜம்மு & காஷ்மீர்: 4 – 500
ஜார்கண்ட்: 3 – 290
கர்நாடகா: 50 – 7095
கேரளா: 30 – 3550
மத்திய பிரதேசம்: 14 – 1800
மகாராஷ்டிரா: 48 – 6245
மணிப்பூர்: 2 – 200
மேகலயா: 1 – 50
ஒடிசா: 8 -1050
புதுச்சேரி: 9 – 1275
பஞ்சாப்: 10 – 1145
ராஜஸ்தான்: 13 – 2100
சிக்கிம் 1 – 100
தமிழ்நாடு: 45 – 5660
தெலுங்கானா: 20 – 2750
திரிபுரா: 2 – 200
உத்திர பிரதேசம் 36 – 3749
உத்ரகாண்ட்: 4 – 500
மேற்கு வங்காளம்: 17 – 2450
மொத்தம் : 412 – 52965
இப்போது புரியும் NEET தேர்வு ஏன் தென்மாநிலங்கள் மீது திணிக்கப்படுகிறது என்று..

அரசியல் 420-யும், ஆன்மீக 420-யும் – மோடி, ராம் ரகீம்சிங்

வினவு : சோப்புக்குமிழிகளைப் போல பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே அன்றாடம் ஊதிவிடும் ஒரு மனிதனை, பிரதமர் என்று ஏற்கக்கூடிய நாட்டில், ராம்ரகீம் கடவுளாவது சாத்தியமே என்றும் தோன்றுகிறது.
டப்பாடியும் தினகரனும் ஒருவரையொருவர் 420 எனக் குற்றஞ்சுமத்திக் கொண்டனர். சமீபத்தில் அமைச்சர் காமராஜ் மீது இ.த.ச. பிரிவு 420 -இல் மோசடிக் குற்றத்துக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு மேலும் 420 என்பதற்கு விளக்கம் தேவையில்லை.
தேரா சச்சா சவுதாவின் புனித பூமியை வணங்குவதாக 2014 தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார் மோடி. அவ்வாறு பேசியபோதும், சுவச் பாரத் இயக்கத்தை பாபா வெகு சிறப்பாகக் கொண்டு செல்கிறாரென்று டுவிட்டரில் பாராட்டியபோதும், ராம் ரகீம் ஒரு வல்லுறவுக் குற்றவாளி, கொலைகாரன் என்பது மோடிக்குத் தெரியும். அந்தப் பாராட்டு என்பது ராம் ரகீமுடைய பக்தர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்கான ஜூம்லா – மோசடி.

அப்பல்லோ வீடியோக்கள் அம்பலம்! 2 கோடி பேரம் ! உங்களிடம் காசு இருந்தால் நீங்கள் குளோஸ்?


வினவு :நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!
சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்த உண்மைச் சம்பவம் இது! இப்படியெல்லாம் நடக்குமா என்று எவரையும் அதிர்ச்சியடைய வைக்கும் அநீதியும் கூட!
நோய்வாய்ப்பட்ட தனது தாயாரை அப்பல்லோவில் சேர்க்கிறார் திரு.ஹேமநாதன். சேர்க்கும் போது அந்த தாயாருக்கு மூக்கில் இருந்து கொஞ்சம் ரத்தம் வந்தது, அவ்வளவே. பிறகு தலைக்கு எம்.ஆர்.ஐ-ஸ்கேன், இலட்ச ரூபாய்களில் நடந்த பல்வேறு சோதனைகள், அந்த தாயாரின் கபால ஓட்டை பிரிக்கும் அறுவை சிகிச்சை, நினைவு தவறுதல், வீட்டுக்கு அனுப்பி மீண்டும் சேர்த்தல், அதில் 150 நாட்கள் சிகிச்சை அனைத்தையும் விவரிக்கிறார் ஹேமநாதன்.

செத்தும் கெடுத்த ஜெயா ! – அழுகி நாறும் அதிமுக !

வினவு :பொதுச்சொத்தைத் திருடுவதும் அரசு சன்மானங்களைப் பங்கு போடுவதும் தவிர, வேறு கொள்கை எதையும் அறியாத கிரிமினல்கள், எம்.எல்.ஏ.- க்களாக அமர்ந்திருக்கும் அரசாங்கம் இது. இந்த இழிநிலைக்குத் தமிழக அரசியலைத் தள்ளிய குற்றவாளிகளான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இது.
புதைக்கப்படாமல் அழுகி நாறும் பிணம் போல முடைநாற்றத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. செத்தும் கெடுத்த ஜெயாவின் சாதனை இது. ஜெயலலிதா அப்போலோவில் கிடந்தபோது உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதையே யாரும் அறிய முடியாமல், செயற்கை சுவாசம் உள்ளிட்ட வழிமுறைகளால் அவரை உயிருடன் வைத்திருந்ததைப் போலவே, இப்போது அ.தி.மு.க. -வை, ஐ.சி.யு. -வில் வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
அ.தி.மு.க. -வின் அழிவு தமிழகத்துக்கு நல்லதல்ல என்று கூறி, மோதிக்கொள்ளும் அ.தி.மு.க. கொள்ளையர்களிடையே பஞ்சாயத்து செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் துக்ளக் குருமூர்த்தி. ஆளுநர், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட எந்த நிறுவனத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துவதற்கும், மிரட்டுவதற்கும், பொய் வழக்குப் போடுவதற்கும் எள்ளளவும் கூச்சப்படாமல், அதிகார துஷ்பிரயோகத்தை நிர்வாண நடனமாக நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

புதன், 20 செப்டம்பர், 2017

கீழடியில் நீதிபதிகள் .. கீழடியை மண்போட்டு மூட புதிய கண்காணிப்பாளர் ஸ்ரீ ராம் தயார் நிலையில் . அக்கிரமம் தொடர்கிறது

கீழடியில் இதுக்கு மேல் ஒன்றும் இல்லை மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்று என்று சொல்லி மூட தயாராகி விட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.
பாலமுருகன். தெ ,வி.சதிஷ்குமார் சிவகங்கை மாவட்டம் .கீழடியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு பணி இந்த மாதம் 30 -ம் தேதியோடு முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் கீழடி குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் இருக்கின்றது. முந்தைய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது குறித்தும் கீழடியில் இருந்து எடுக்கப்பட்ட பொருகளை இங்கேயே வைத்து மியூசியம் அமைக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு மீண்டும் 21 -ம் தேதி வர இருக்கிறது. இந்த நிலையில் நீதிபதிகள் திடீரென இன்று மாலை கீழடிக்கு வருவதாக தகவல் கிடைத்தது. கீழடியில் இதுக்கு மேல் ஒன்றும் இல்லை மனிதர்கள் குடும்பமாக வாழ்ந்ததற்கு எந்த அடையாளமும் இல்லை. தொழிற்சாலைகள் இருந்திருக்கலாம் என்று  என்று சொல்லி மூட தயாராகி விட்டார் கீழடி தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஸ்ரீராம்.

ராம் ரஹீம் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடு! எதிர்த்தவர்கள் கொலை .. புதைத்த பிணங்களின் மீது மரங்கள்?

ராம் ரஹீம் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடு!மின்னம்பலம் : சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா தலைமை ஆசிரமத்தில் 600க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பாக தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஹரியானாவின் சிர்சாவில் உள்ள தேரா சச்சா தலைமை ஆசிரமத்தில் 600க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளது. தேரா சச்சாவின் முன்னாள் துணை தலைவர் பி.ஆர். நெயின் இது தொடர்பாக விசாரணைக் குழுவிடம் கூறும்போது, ஜெர்மன் விஞ்ஞானி ஒருவரின் ஆலோசனைப்படி புதைக்கப்பட்ட எலும்புக்கூட்டுக்கு மேல் மரக்கன்று நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அன்று வன்முறையில் ஈடுபடுவதற்காகக் கலவரக்காரர்களுக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.இந்த மரக்கன்றுகளில் சில தற்போது பெரிய மரமாக வளர்ந்துள்ளன.

தீர்ப்பு விபரம் :18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க இயலாது. அவர்கள் ஏன் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதற்கு முதலமைச்சர், அரசு தலைமை கொறடா, சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை: அ.தி.மு.க.வின் 134 எம்.எல்.ஏ.க்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 113 பேரும், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக 21 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இந்த 21 எம்.எல்.ஏ.க்களில் 19 பேர் கடந்த மாதம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் எனவே அவருக்கு கொடுக்கும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் கடிதம்  கொடுத்தனர்.
 இது கட்சிக்கு எதிரான செயல் என்றும் எனவே 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகர் தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். இதை ஏற்று 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீசு அனுப்பி சபாநாயகர் விளக்கம் கேட்டார்.

அப்போது கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் மட்டும் டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி இழப்பு செய்து நேற்று முன்தினம் சபாநாயகர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது தமிழக அரசிதழிலும் அன்றே உடனடியாக வெளியிடப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு கடந்து வந்த பாதை! வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25-ந் தேதி

tamiloneindia Lakshmi Priya": : டெல்லி: நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 25-ந் தேதி வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். அக்டோபர் 25-ல் தீர்ப்பு வழங்க முடியாத நிலையில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி ஓபி ஷைனி தெரிவித்துள்ளார். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கு கடந்து வந்த பாதை:
  • மே 2007- மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக அ.ராசா பொறுப்பேற்பு
  • ஆக. 2007- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான நடைமுறைகள் தொடங்கியது
  • செப்.25- அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதியாக அக்.1, 2007-ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்தது.
  • அக்.1- தொலைத்தொடர்பு துறையில் 46 நிறுவனங்களிடமிருந்து 575 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன
  • நவ. 2- பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்யுமாறு ராசாவுக்கு கடிதம் எழுதினார்

NEET தமிழ் மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கல்லூரிகளில் வெளிநாட்டு NRI வந்து ப்ரீ சீட்டில் படிக்க வசதி

linesmedia.in :
நீட் தேர்வு என்பது குளோபல் என்ட்ரன்ஸ் டெஸ்ட் … இது இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் தேர்வு அல்ல http://bit.ly/2fyJTbq ….


யார் எல்லாம் இந்த தேர்வை எழுதலாம் ??
1) இந்தியர்கள்
2) வெளிநாட்டினர் ( எந்த நாடும் )
3) NRI வெளிநாடு வாழ் இந்தியர்கள்
4) ஓவர்சீஸ் இன்டியன்
5) POI வம்சாவளியினர்
எத்தனை பேர் எழுதினார்கள் ??
1) இந்தியர்கள்
அப்ளிகேஷன் போட்டவர்கள் 1136206 , எழுதியவர்கள் 1087840 ,
பாஸ் செய்தவர்கள் 609000 …
பாஸ் செய்த 6 லட்சம் மாணவர்களுக்கும் சீட் கிடைக்கலியே ஏன் ??? பிறகு எதற்கு இந்த தேர்வு ??
2) வெளிநாட்டினர் ( எந்த நாட்டினரும் எழுதலாம் )
அப்ளிகேஷனை போட்டவர்கள் 612
எழுதியவர்கள் 391
சீட் வாங்கியவர்கள் 245 …. இவங்களுக்கு மட்டும் எப்படி சீட் கிடைத்தது ??
3) NRI
எழுதியவர்கள் 1370
சீட் வாங்கியவர்கள் 1106
இது எப்படி சாத்தியம் ஆச்சு ??
4) overseas Indian
எழுதியவர்கள் 426
சீட் வாங்கியவர்கள் 321
இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ??
5) person of Indian origin பல தலைமுறைகளுக்கு முன்னே இந்தியாவை விட்டு வெளியேறி எந்த தொடர்பும் இல்லாத வெளிநாட்டு குடிமக்கள்
எழுதியவர்கள் 58
சீட் வாங்கியவர்கள் 47

இதுவும் எப்படி சாத்தியம் ஆச்சு ???