வியாழன், 21 செப்டம்பர், 2017

கமலஹாசன் அர்விந்த் கேஜ்ரிவால் சந்திப்பு .. சென்னையில் ....

பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமலஹாசனை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வந்து அவரது வீட்டில் சந்தித்து ஒருமணிநேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், கமலஹாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னை சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நாங்கள் சந்தித்து பேசிக்கொண்ட விஷயங்கள் என்னவாக இருக்கும் என்று உங்களால் ஊகிக்க முடியும். ஊழலை எதிர்க்கும் எவரும் எனக்கு உறவினர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பது உண்மை. அந்த வகையில் இந்த உறவு தொடர்கிறது. என் அப்பா காலத்தில் இது அரசியல் வீடாக இருந்தது. அதில் நான் மட்டும் தனித்திருந்தேன். இன்று ஒரு அரசியல் சந்திப்பில் நான் இருந்திருக்கிறேன். நாங்கள் சந்தித்திருப்பதன் நோக்கம் ஒன்றுதான்.


அரவிந்த் கேஜ்ரிவால் ஊழல் மற்றும் இனவாதத்திற்கு எதிராக போராடுவதில் தேசிய அடையாளம் கொண்டவர். அதேபோல், எனக்கும் அதில் கொஞ்சம் பங்கிருக்கிறது. அவர் என்ன காரணத்திற்காக வேண்டுமானாலும் இங்கு வந்திருக்கலாம். ஆனால், எனக்கு இது அரசியலைக் கற்பதற்கான வாய்ப்பு. நான் ஒரு கல்விச்சுற்றுலாவில் இருந்திருக்கிறேன். இவர்களைப் போன்றவர்களிடம் இனவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் எனது முயற்சிகளுக்கான அறிவுரைகளைப் பெறுகிறேன் என்றார்.

அரவிந்த் கேஜ்ரிவால் நடிகராகவும், தனிமனிதராகவும் சிறந்தவரான கமலஹாசனின் ரசிகன் நான். அவர் தைரியமானவரும், நேர்மையானவரும் கூட. இந்த நாடு ஊழல் மற்றும் இனவாதத்தால் மிகப்பெரிய தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விவகாரத்தில் மக்கள் ஒன்றுகூடிப்பேசி அதைக் களைவதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.

 நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் இனவாதத்திற்கும், இனவாதத் தாக்குதல்களுக்கும் எதிரான எண்ணங்களைக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவற்றிற்கு எதிராக அவர்கள் போராடத்தொடங்கியுள்ளனர். அவர்களில் கமலஹாசனும் ஒருவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும்; வருவார். இதுவொரு நல்ல சந்திப்பு. நாட்டிலும், தமிழகத்திலும் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும், எங்களது அரசியல் பார்வைகள் குறித்தும் எங்களுக்குள் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இதுபோல தொடர்ந்து எங்களுக்குள் சந்திப்புகள் நிகழும் என்று நம்புகிறேன் இவ்வாறு பேசியுள்ளார். படம் - ஸ்டாலின்  nakkeeran

கருத்துகள் இல்லை: