வியாழன், 21 செப்டம்பர், 2017

திருமுருகன் காந்தியின் அரசியல்? - திராவிடத்தை எதிர்க்க கிடைக்கும் எதையும் ஆரியம் பயன்படுத்தும்

Devi Somasundaram : திரு முருகன் காந்தி அரசியல்...
அவர் பெரியாரை கொண்டாடுகிறார்...மகிழ்ச்சி ..ஆனா அதுகாக அவர் பேசும் தமிழ் தேசியம் ஏற்பானது தானா? .. இல்லை .ஆரிய அரசியலை புரிந்து கொள்ளாத குழந்தை தன அரசியல் அறிதல் கொண்டவர்கள் தான் காந்தி தமிழ் தேசியத்தை மீட்பார்ன்னு நம்புவார்கள்...
ஆரியம் தன் எதிரியை தானே உருவாக்கும்...வேறு எதிரி உருவாகி விடாமல் தடுக்க ஒரு வழியா இதை பயன் படுத்தும்.. 2000 ஆண்டுகால அரசியலை படித்தவர்களே குழம்பி போகும் இடம் ஆரிய சூது..நாம் எம்மாத்ரம்..? துரோணர் ஏன் கெளரவர் பக்கம் நின்றார்...கிருஷ்ணன் ஏன் பாண்டவர் பக்கம் நிற்க வைக்க பட்டார்.. செத்த வூட்ல பிணமாவும் , கல்யாண வீட்ல மாப்பிள்ளையாவும் ,மணப்பெண்ணாவும் தானே இருக்க முயலும் ஆரிய அரசியல் அது....
கதைல சில கேரக்ட்டர் ஏன் இருக்குன்னே தெரியாது..ஆனா இருக்கும்.. நகுலனும் ,சகாதேவனும் ஏன்னே புரியாது. எங்காவது பலி தர அவர்கள் வளர்க்க படுவார்கள்..
ராஜாஜிக்கு ஒரு மாபொ சி.. மாதிரி தனக்கான எதிரியை மைய படுத்த விடாமல் பிரித்து ஆளும் அரசியல்..
நிதானமா யோசிச்சா சில கேரக்கடர்லாம் ஏன் அரசியல் பேசுதுன்னே தெரியாது..ஆனா பேசிட்டு இருக்கும்..பழ நெடுமாறன் ஒரு வெகு சனம் அறியாத நபர் , தமிழருவி ஒரு சதாரான நபர்..வைகோ ஒரு கவுன்சிலர் போஸ்ட்கூட ஜெயிக்க துப்பில்லாதவர்...இவர்கள் யார் அரசியலை பேசுகிறார்கள்..யார்காக பேசுகிறார்கள் ..

திராவிடத்தை எதிர்க்க கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் ஆரியம் கை விடாது. பெரியாரையும் திட்டி திராவிடத்தை திட்ட ஒரு சீமான்..பெரியாரை ஏற்று திராவிடத்தை ,திமுகவை எதிர்க்க ஒரு காந்தி . .அனைத்தும் ஆரிய அரசியலே....
காந்தி விடுதலை வரவேற்கிறேன்....அவர் அரசியலை எதிர்க்கிறேன்...

1 கருத்து:

Kalai Vanan சொன்னது…

அருமை. மிக சரியான கருத்து.

தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணியின் மீது ஏற்படும் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது...இந்த எதிர்ப்பு அலை ஓரிடத்தில் சேரக்கூடாது என்று காவிகள் கட்சிதமாக திட்டமிடுகிறார்கள்.

ஏற்கனவே ஜக்கி வழியில் நதிகளை இணைப்போம் என்று ஆன்மீக ஏமாளிகள் செல்கிறார்கள்.

கமல் ஹாசனை தென்னாட்டு அண்ணா ஹசாரே என்று நினைத்து சில கோமாளிகள் அவர் பின் செல்கிறார்கள்.

தற்போது, நினைவேந்தல் நடத்தியவரை கைது செய்து, போராளி அளவுக்கு உயர்த்தி பெரியாரின் பேரன் என்று கூறி விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

வாக்குகள் பல விதங்களில் சிதறி மீண்டும் இந்த அதிமுக - பிஜேபி கூட்டணி வரவைப்பதே திட்டம். இதற்கு பலிகடா ஆகி கொண்டிருக்கும் தமிழக மக்கள்