சனி, 20 ஏப்ரல், 2013

ராகுல்: இனி திராவிட கட்சிகளுடன் கூட்டு இல்லை ! கடை விரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம்

சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் நாட்டிய நாடகம் 
சென்னை::தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேருவதில்லை
என்ற தனது அதிரடி தேர்தல் முடிவை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ளார்.பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும். ஆனால் இப்போது உள்ள அரசு பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அநேகமாக இந்த ஆண்டே தேர்தல் நடைபெறும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை மாயாவதியும் அறிவித்துள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் குறைந்தது 200 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு தேர்தல் வியூகங்களை ராகுல் காந்தி வகுத்துள்ளார். மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடனும், கேரளாவில் முஸ்லீம் லீக்குடனும், மணி பிரிவு கேரள காங்கிரசுடனும் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார். பீகாரில் பஸ்வானுடனும், லாலுவுடனும் காங்கிரஸ் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.மேற்குவங்கத்தில் மம்தாவுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இதேபோல தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பவில்லை. திராவிடக்கட்சிகள் அல்லாத மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விரும்புவதாக தெரிகிறது.

வரதராஐப்பெருமாள்: புலிகளை மன்னித்தது போல் ஏனையோரையும் மன்னிப்போம்

புலிகள் செய்த யுத்தக் குற்றங்களையும் மானுட இனத்துக்கு எதிரான குற்றங்களையும் எப்படி மறக்கமுடியும்: முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஐப்பெருமாள்!

இலங்கை::கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன
  ஒரு புறம் படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.

Prakash Raj சினிமாவில் யாருக்கும் வாராத துணிச்சல் ! ஜாதிக்காக கௌரவக் கொலைகள்



கௌரவம் - விமர்சனம்!ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களில் பற்றியெறிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை, இன்னும் சொல்லப்போனால் இதுவரை யாருக்கும் சொல்ல தைரியம் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் குழு துணிச்சலோடு ஜாதி கௌரவத்தால் நடைபெறுகிற கௌரவக் கொலைகளைப் பற்றிய ஒரு சம்பவத்தை ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.முதலில் பிரகாஷ் ராஜ் குழுவுக்கு ஒரு பெரிய சல்யூட்! ’டீ கடையில் இரட்டைக் குவளை, ஊர் நுழைவில் மறைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, தெரியாமல் கால்பட்டதால் ஒரு கலவரமே வெடிப்பது’ என பல விஷயக்களை விவாதிக்கிறது படம். ’காலணி’ என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாகவே பதிவுசெய்கிறது இந்தப்படம். 

ராஜ்யசபா சீட் ! லோக் சபா சீட் ! கனிமொழி, சிதம்பரம், வாசன், வைகோ, கம்யுனிஸ்டு ராஜா, ஜால்ரா பாண்டியன்

தமிழக அரசியல் வித்தியாசமான சதுரங்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. குறிப்பாக தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் கனிமொழி, இந்திய நிதியமைச்சராக இருக்கும் ப சிதம்பரம், ம.தி.மு.க. பொது செயலாளராக இருக்கும் வைகோ, காங்கிரஸ் கட்சிக்குள் (முன்னாள் தமிழ்மாநில காங்கிரஸ் பிரிவு தலைவர்) இருக்கும் இன்னொரு மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளராகவும், ராஜ்ய சபை எம்.பி.யாகவும் இருக்கும் டி.ராஜா ஆகியோரை சூடுபிடிக்கும் ‘டெல்லி அரசியல்’ கண்டபடி மிரட்டிக் கொண்டிருக்கிறது. அடுத்த ரவுண்டில் இந்திய ராஜ்ய சபையிலோ, நாடாளுமன்றத்திலோ தாங்கள் இடம்பெறுவோமா என்ற ‘சங்கடம்’ இந்த ஐவரையும் « வருக வருக » என்று வரவேற்கிறது. இந்த ‘பஞ்சபாண்டவர்களுக்கு’ இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள சோதனை தமிழகத்தில் பரபரப்பான விவாதங்களுக்கு விதை போட்டிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள ராஜ்ய சபை எம்.பி.க்கள் பதவி காலம் முடிவடைவதும், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இந்த திடீர் சோதனையின் பின்னணி விவகாரங்கள். தமிழக சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்கள். ஒரு ராஜ்ய சபை உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், தமிழகத்திலிருந்து 6 ராஜ்ய சபை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

Kerala மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும்

கேரளாவில் மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது  இதன் காரணமாக தற்போது ஏராளமான பெண்களும் இத்தொழிலை மேற்கொள்கிறார்கள் .
தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.கேரள மாநிலம் காசர்கோட்டில் மத்திய தோட்டப் பயிர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பெண்களுக்கு தென்னை மரம் ஏற பயிற்சி
அளிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது கேரளாவில் பல பகுதிகளில் தென்னை மரம் ஏறி தேங்காய்களை பறித்து வருகின்றனர்.இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார்.அப்போது அவரிடம் தென்னைமரம் ஏறும் பெண்கள் மனு கொடுத்தனர். அதில், ‘‘தென்னை மரம் ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பஸ்சில் கொண்டு செல்ல சிரமம் இருப்பதால், தங்களுக்கு இருசக்கர வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உம்மன்சாண்டி, ‘‘தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டரும், செல்போனும் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என உறுதியளித்தார்.

மோடி பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட மாட்டார் ! நிதின் கத்காரி உறுதி

கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ பா ஜ க  விரும்பவில்லை: அருண்ஜெட்லி
கூட்டணி கட்சிகளை இழக்கவோ, கட்சியில் உள்ளவர்களை தியாகம் செய்யவோ, பா.ஜ., விரும்பவில்லை,'' என, பா.ஜ., மூத்த தலைவர் அருண்ஜெட்லி கூறினார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அருண் ஜெட்லி, பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்தப்படமாட்டார் என, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உறுதியளித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி நாங்கள் எவ்வித கருத்து தெரிவிக்கவில்லை. அது தான் சிக்கலுக்கு காரணமானது. நாங்கள் கட்டுப்பாடான கட்சியை நடத்துகிறோம். பிரதமர் வேட்பாளர் தொடர்பாக, கட்சி முடிவு எடுத்தால் மட்டுமே, அது குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.
தே.ஜ., கூட்டணியில், மேலும் கட்சிகள் சேருவதால், பலன் அடைவதை விரும்புகிறோம்; அதற்காக எவ்வித தியாகமும் செய்வோம் என அர்த்தமல்ல. இப்போதைக்கு அதுபற்றி, கருத்து எழவில்லை. எங்கள் வேட்பாளர் குறித்து, நாங்கள் முடிவு செய்யும் போது, அது பற்றி தெரிவிப்போம்.மோடி பெயர் முன்னிறுத்தப்படுவதால், எவ்வித

காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டமை கண்டுபிடிப்பு

சென்னை: காலாவதியான தடுப்பூசிகள் மீது மறு லேபிள் ஒட்டி விற்கப்பட்டது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், மறு உத்தரவு வரும் வரை கடைக்காரர்களோ, டாக்டர்களோ தடுப்பூசிகளை கையாள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.குழந்தை பிறந்த 6, 10, 14வது மாதங்களில் டிப்தீரியா, டெட்டனஸ், ஹெபடைட்டிஸ் உள்ளிட்ட 5 நோய்கள் தாக்காமல் இருக்க ஒரே தடுப்பூசி போடுகின்றனர்.டெல்லியை தலைமையிடமாக கொண்ட ஒரு மருந்து நிறுவனம் தயாரித்து சப்ளை செய்த தடுப்பூசிகள் காலாவதியாகி விட்டன. ஆனால், மறு லேபிள் ஒட்டப்பட்டு அவை கடைகளில் விற்கப்படுவதாக தமிழ்நாடு மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

லஞ்சம்: பள்ளியில் சேர்க்க ஜாதி சான்றுக்காக பெற்றோர் தாசில்தார் அலுவலகத்தில் தவம்

கோவை : பள்ளி சேர்க்கை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஜாதிச்சான்றுக்காகஅத்தாட்சி சான்றில் எழுதியிருக்கும் தேதியன்று, தகவல் மையத்திற்கு சென்றால், "தவறாக நிரப்பப்பட்டுள்ளது, சரி செய்து விண்ணப்பம் கொடுங்கள்' என்கிறார்கள். அல்லது, "இன்னும் சான்றிதழ் தயாராகவில்லை. சான்றிதழ் அட்டை பற்றாக்குறையாக உள்ளது.
மக்கள் அலைமோதுகின்றனர். தாசில் தார் அலுவலகத்திற்கு ஜாதிச் சான்றுக்காக சென்றால், "இன்று போய் நாளை வா...' என அலைக்கழிக்கின்றனர். பணத்துக்கு ஆசைப்பட்டு, ஜாதிச்சான்று அட்டைகளை ஊழியர்களே பதுக்கிக்கொள்வதே அலைக்கழிப்புக்கு காரணம்.குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வேலைவாய்ப்புக்கும் ஜாதிச் சான்றிதழ் கட்டாயம். தாலுகா அலுவலகங்களில் ஜாதிச்சான்று கேட்டு, தினமும் மனுக் கொடுக்கின்றனர். கோவை தாலுகா அலுவலக வளாகத்தில் முகாமிட்டிருக்கும் எழுத்தர்கள் மற்றும் முக்கிய ஜெராக்ஸ் கடைகளில் மட்டுமே இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது.எழுத்தர்கள் மூலம் விண்ணப்பம் பூர்த்தி செய்து, ஆவணங்களுடன் தாலுகா அலுவலக, தகவல் மையத்தில் ஒப்படைத்தால், அத்தாட்சி சான்று கொடுக்கின்றனர். இந்த அலைச்சலை விரும்பாத சிலர், இடைத்தரகர்கள் உதவியை நாடுகின்றனர்.இவர்களிடம் 500 ரூபாய் கொடுத்தால் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

காங்கிரஸ் / கூட்டுக்குழு அறிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம் ! கபில் சிபல்

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்கும், பார்லிமென்ட் கூட்டு குழுவான - ஜே.பி.சி.,யின் அறிக்கை, இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அப்படியிருக்கும்போது, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள், யூகங்களை கிளப்பி விடுவதை கைவிட வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்தியது. இக்குழுவின் அறிக்கை விரைவில், பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இக்குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கை, குழுவின் உறுப்பினர்களுக்கு நேற்று முன் தினம் வினியோகிக்கப்பட்டது. வரும், 25ம் தேதி, ஜே.பி.சி., கூட்டம் நடக்கிறது. அதில், தீர்மானம் ஏற்றுவதற்கு வசதியாக, வரைவு அறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், வரைவு அறிக்கை கசிந்ததைப் பார்த்து, பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சிகள் கொதித்து போய், கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. "இது, ஜே.பி.சி., அறிக்கை இல்லை; காங்கிரஸ் அறிக்கை' என, பாரதிய ஜனதா கடுமையாக சாடியுள்ளது. தி.மு.க., உட்பட பிற எதிர்க்கட்சிகளும் சாடியுள்ளன.

தமிழக மாணவர் போராட்டம் இலங்கை தமிழர்களின் நிம்மதியை மீண்டும் கேள்விக்குறியாக்குகிறது

இலங்கையில் துக்ளக்;இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்
மேலே உள்ள படம் யாழ்பாணத்தில் பிரபலமான வேம்படி மகளிர் கல்லூரியாகும் .
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனேகமாக மற்ற எல்லா அரசியல்
கட்சிகளுமே மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்துகின்றன.இங்கு புத்த பிக்குகள் தாக்கப்படுகின்றார்னள். ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் பக்தர்கள் அடித்துத் தாக்கப்படுகின்றார்கள். இலங்கை அரச அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.
thuglak
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இங்கு நடக்கும் போராட்டங்கள் பற்றி இலங்கையில் உள்ள தமிழர்களும் இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளும் என்ன சொல்கின்றன. நமது நிருபர்கள் நேரடியாக இலங்கை சென்று அங்கு ஆறு நாட்கள் கொழும்பு,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய  நகரங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து வந்துள்ளனர்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

குருவி அயன் படங்களை பார்த்து கொலைகள் செய்த மாணவர்கள்

செங்கலடி இரட்டைக்கொலை: பெற்றோரை பழிதீர்க்க மகளும் காதலனும் வகுத்த திட்டம மட்டக்களப்பு – செங்கலடி நகரில் கடந்த
வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகள் மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். குருவி மற்றும் அயன் போன்ற சினிமா படங்களைப் பார்த்து இந்த கொலைக்கான முன்மாதிரியை அறிந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரகு தம்பதியினரை மர்மமான முறையில் கொலை செய்வதற்கு ஏற்கனவே
இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 27 ஆந் திகதி தூக்க மாத்திரையை உட்கொள்ளச்செய்துவிட்டு தலையணையால் அமுக்கி கொலை செய்த பின்னர் தகப்பனை கிணற்றுக்குள் போட்டு கொலை செய்வதாக திட்டம் ஒன்றை அவர்களது மகள் தக்ஸிகா மேற்கொண்டிருந்தார். அப்போது ரகு தனது மனைவியைக் கொன்றுவிட்டு தான் தற்கொலை செய்துவிட்டார் என தகவல் வெளியாகும் இதன் மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம். தமது காதலும் சிரமமின்றி நிறைவேறும் என இவர்கள் எண்ணியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அத்திட்டம் வெற்றியளிக்காததால் அவர்களை வெட்டி கொலை செய்வதென காதலர்கள் இருவரும் முடிவு செய்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கிறது.< தற்போது இடம்பெற்றுள்ள திட்டங்கள் செங்கலடி மத்திய கல்லூரி மற்றும் பிரைட் ரியுசன் சென்றரிலும் வகுக்கப்பட்டது. கொலை செய்வதற்கான நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்களாதேஷில் இஸ்லாமிய மதவெறியர்களுக்கு எதிராக பெண்கள் போர்க்கொடி

ஷாபாக் ஆர்ப்பாட்டம்முஸ்லிம்கள் என்றால் ஜனநாயக உணர்வற்ற பழைமைவாதிகள், இஸ்லாமிய மதவெறியிலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிக் கிடப்பவர்கள் என்று இந்துத்துவ ஆளும் வர்க்கங்களால் சித்தரிக்கப்படும் தவறான கருத்துதான் நமது நாட்டில் நிலவுகிறது. ஆனால், இது எவ்வளவு பச்சைப்பொய் என்பதை அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் இஸ்லாமிய மதவெறிக் கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள்.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து இஸ்லாமிய மத வெறியர்களுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. இஸ்லாமிய மதவெறிக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் குண்டர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுப் போராடும் மக்களை அச்சுறுத்திய போதிலும், அவற்றைத் துச்சமாக மதித்து வங்கதேச மக்கள் நீதிக்காகவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றனர்.

காவல்நிலைய வளாகத்தில் 2 பேர் வெட்டிக் கொலை! திமுக செயற்குழு உறுப்பினர் கொலைவழக்கில் பிணையில் இருந்தவர்கள்

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கொலை வழக்கில் தற்போது பிணையில் உள்ள இருவர் பூம்புகார் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த போது, காவல்நிலைய வளாகத்திலேயே அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரில் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் கொலை வழக்கில் பிணையில் உள்ள ரவி மற்றும் ராஜேந்திரன் இருவரும் தினமும் பூம்புகார் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை இருவரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பும்போது, ஒரு மர்ம கும்பல் திடீரென அங்கே நுழைந்து காவல்நிலைய வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி ரவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். அதற்கு சற்று நேரம் முன்பாக கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, அவரையும் ஒரு கும்பல் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். இருவர் கொலை தொடர்பாக தகவல் அறிந்த நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே சடலங்களை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்த கொலை சம்பந்தமாக காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறது.

ராசா பதிலடி: மன்மோகன் சிங்கோடு ஆலோசித்த பின்பே முடிவெடுத்தேன்

கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையானது ஏமாற்றத்தை தருவதாகவும், பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை காப்பாற்றும் வகையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
 2ஜி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு இன்று வரைவு அறிக்கை
தாக்கல் செய்தது. கூட்டுக்குழு தலைவர் பி.சி.சாக்கோ தாக்கல் செய்த அந்த அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் பிரதமர் மற்றும் நிதி மந்திரி சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தகுதியற்ற நிறுவனங்களுக்கு நெட்வொர்க் லைசென்சுகள் பெறுவதற்கும் உதவும் வகையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ராசா மாற்றியிருக்கிறார் என்றும், பிரதமரை அவர் தவறாக வழிநடத்தியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆ.ராசா, சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2ஜி வழக்கு தொடர்பாக என்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற பலமுறை கடிதங்கள் அனுப்பியும், நாடாளுமன்ற கூட்டுக் குழுத் தலைவர் என்னை விசாரணைக்கு அழைக்கவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன். ஒவ்வொரு முடிவையும் பிரதமருடன் ஆலோசனை நடத்தியபிறகே எடுத்தேன். இதுதொடர்பாக ஜே.பி.சி.க்கு 100 பக்க கடிதத்தை நாளை அனுப்புவேன். 2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். அமலாக்கத்துறை வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் என்னிடத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? நான் எடுத்த முடிவுகள் அனைத்தும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கூறினார். இதேபோல் பாரதீய ஜனதாவும், இடதுசாரிகளும் இந்த அறிக்கையை ஏற்கவில்லை maalaimalar.com

Malalai Joya தாலிபான்களுக்கும் அந்நிய படைகளுக்கும் இடையில் போராடும் பெண் மலாலாய் ஜோயா

இ.பா.சிந்தன் maattru.com
1978 இல் ஆப்கானிஸ்தானில் பரா;என்கிறஊரில் பிறந்தார்
மலாலாய் சோயா. 4 வயதாக இருக்கும்போதே, போரில் தந்தையை இழந்தார். அதன்பின்னர், ஈரான் மற்றும் பாகிஸ்தானிற்கு சென்று அகதி வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது மலாலாய் சோயாவின் குடும்பம். போர் பரிசளித்த துயர்மிகுந்த அகதி வாழ்க்கை அவருக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. தன்னுடைய 8ஆம் வகுப்பு முதலே, காலையில் கல்வி பயின்றும் மாலையில் மறைமுகமாக ஏராளமான பெண்களுக்கு கல்வி பயிற்றுவித்தும் வந்தார் மலாலாய் சோயா. கல்வியறிவற்ற அரசியலில் நேரடியாக ஈடுபட்டிருக்காத மக்களிடமிருந்தே, மக்களுக்கான அரசியலையே கற்றுக்கொண்டார். அகதி முகாம்களில் வாழ்ந்த மக்களில், ஒவ்வொருவரிடமும் ஆப்கானிஸ்தானின், ஈரானின், ஈராக்கின், பாகிஸ்தானின் அரசியலை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பல ஆண்டுகள் அகதி வாழ்க்கை வாந்தபின்னர், ஆப்கானிஸ்தானில் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்தார் மலாலாய் சோயா. 90களில் பெண்களை வீட்டை விட்டே வெளியே வரவிடாமல் தடுத்துவந்த தாலிபான்களின் ஆட்சிக்காலத்திலேயே தன்னுடைய சொந்த ஊரான பராவில் ஒரு ஆதரவற்றோர் இல்லமும், இலவச மருத்துவமனையும் உருவாக்கி நடத்தினார். பெண்கள் கல்வி கற்பது தடைசெய்யப்பட்டிருந்த போதும், பெண்களுக்கு கல்வி பயிற்றுவிப்பதற்கென மறைமுகமாக கல்விக்கூடங்களை நடத்தினார்.

மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்! மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து கூட்டுறவு
அமைப்புகளுக்கு நடந்த மோசடி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஜனநாயக பூர்வமாக தேர்தலை நடத்த வேண்டும என்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?

பாராளுமன்ற கூட்டு குழுவில் நேரடி விளக்கம் தர ராசா அனுமதி கேட்டார் ஆனால் அது மறுக்கப்பட்டது, அதன் தலைவர் சாக்கோ (மலையாளி) ராசாவை சந்திக்க மறுத்ததன் மூலம் அவர்கள் இந்த விதமான தீர்ப்புக்களை தான் வெளியிடப்போகிறார்கள் என்பது சிறு பாப்பாவுக்கு கூட தெரியுமே
அமைச்சர் ஒருவர் பிரதமரை எப்படி தவறாக வழிநடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர்.
திமுக தலைவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த மத்திய அரசால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் குழு கொடுத்துள்ள வரைவு அறிக்கையில், பிரதமரை மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராஜா தவறாக வழி நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே; அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கலைஞர்: ஒரு பிரதமரை ஒரு அமைச்சர் தவறாக வழி நடத்தினார் என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்?
கேள்வி: ஆ. ராஜா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார். வந்த பிறகு இதைப்பற்றி அவருக்கு ஆலோசனை கூறுவீர்களா?
கலைஞர்: அவர் அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவர். அவருக்குத் தெரியாத ஆலோசனைகளை நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. சரியான வழியில் நீதி வழங்கப்பட வேண்டும், முறையான நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை “சிலப்பதிகாரக்” காலத்திலிருந்து தமிழ் நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கேள்வி: கூட்டுறவு தேர்தல்களை நீங்கள் முன்பே புறக்கணித்து விட்டீர்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் போட்டியிட்டு இப்போது மார்க்சிஸ்ட் கட்சி போன்றவை அந்தத் தேர்தல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே?
கலைஞர்: நாங்கள் முன்பே கூட்டுறவுத் தேர்தல்கள் எப்படி நடக்கும் என்பதை உணர்ந்து, கூட்டுறவுத் தேர்தல்களை புறக்கணித்து விட்டோம். மற்றக் கட்சிக்காரர்கள் இப்போது உண்மையை அனுபவப் பூர்வமாக உணர்ந்து, போராட்டங்களை நடத்துகிறார்கள் என்று கூறினார்.

தூத்துக்குடியில் மனைவிக்கு மொட்டை போட்டு அறையில் பூட்டி வைத்த கணவன்

தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்தவர் மணவாளன் ஏஞ்சலா ஜூடு
(30). இவர் அங்குள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைன் மூலம் பெண் தேடினர். 2 ஆண்டுக்கு முன் மதுரையைச் சேர்ந்த அனிதா ஜெயராணி (27) என்பவர் ஆன்லைனில் அறிமுகமானதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் பேசி திருணம் செய்து வைத்தனர்.மணவாளன், பெற்றோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். திருமணத்தின்போது, தான் டிகிரி முடித்திருப்பதாக பெண் வீட்டாரிடம் மணவாளன் தெரிவித்திருந்தாராம். ஆனால் திருமணத்திற்கு பின் அவர் 10ம் வகுப்பு வரைதான் படித்திருப்பது தெரியவந்ததும்

ஆப்ரிக்க நாடுகளுக்கு இடம்பெயரும் ஓசூர் விவசாயிகள்

indian farmers in africa 300x180 photo
Indian farmer celebrates his harvest in Ethiopia
Multinational corporations are buying enormous tracts of land in Africa to the detriment of local communities. Agazit Abate warns that the land grab puts countries on the path to increased food insecurity, environmental degradation, increased reliance on aid and marginalisation of farming and pastoralist communities.
The recent phenomenon of land grab, as outlined in the extensive research of the Oakland Institute, has resulted in the sale of enormous portions of land throughout Africa. In 2009 alone, nearly 60 million hectares of land were purchased or leased throughout the continent for the production and export of food, cut flowers and agrofuel crops.
 ஓசூர்: ஆப்ரிக்க நாடுகளில், குறைந்த விலைக்கு விவசாய நிலம் கிடைப்பதால், ஓசூர் மலர் பண்ணை விவசாயிகள், அங்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும், 5 ஆயிரம் ஹெக்டேரில் ரோஜா, ஜெர்பரா, கார்னேஷன், ஆஸ்டர் உள்ளிட்ட, 25 வகை கொய்மலர்கள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, 5,000 ஏக்கரில், திறந்தவெளி மற்றும் உயர் தொழில்நுட்ப பசுமை கிடங்கு முறையில், விவசாயிகள், ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.தொழில்நுட்பம்:
ஓசூர், பேரிகை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மலர் பண்ணைகளில், உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி யாகும் ரோஜா மலர்கள், ஐரோப்பா, அரேபியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. பருவ மழை குறைந்துள்ளதால் இந்த பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. ஆழ்துளை கிணறுகள் வறண்டதால், ரோஜா செடிகளுக்கு, சொட்டு நீர் பாசனம் செய்ய முடியவில்லை. சர்வதேச சந்தையில், ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. இந்நிலையில், எத்தியோப்பியா, கென்யா, கானா உள்ளிட்ட, ஆப்ரிக்கா நாடுகளில், மலர் சாகுபடிக்கு ஏற்ற சூழல், மிக குறைந்த விலைக்கு விவசாய நிலம், அதிகமான நீர் ஆதாரம், கட்டமைப்பு வசதி, குறைந்த ஊதியத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதால், அங்கு உலக தரம் வாய்ந்த ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

தங்கம் விலை சரிவு ! கடன்கொடுத்த வங்கிகள் அப்செட்

 தங்கம் விலை தொடர் சரிவால், வாடிக்கையாளர்களின் நகைகளின் மீது, 95 இதன்படி தங்க நகை கடன் வழங்குகிறோம். தங்கத்தின் விலைக்கும், கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீடு, 70 முதல், 75 சதவீதமாக உள்ளன. 15 முதல், 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.இழப்பு: வெளிமார்க்கெட் தங்கத்தின் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய, தமிழக, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு, 5 முதல், 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை, சவரனுக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சரியக்கூடும் என்பதால், நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தங்கத்தை திரும்ப பெறும்படியும், இழப்பீட்டு தொகையை செலுத்தும் படியும், நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாக ஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள், இந்த தனியார் நிறுவனங்கள் வராததால், நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

காரில் தப்பித்து பறந்த பர்வேஸ் முஷாரப்!

கைது செய்ய பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு! காரில் தப்பித்து பறந்த பர்வேஸ்
முஷாரப பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத முஷாரப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், அவரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளத அவரது தனியார் பாதுகாப்பு வீரர்களின் உதவியோடு, அவர் நீதிமன்றத்தில் இருந்து தப்பித்து வெளியே சென்றுவிட்டார். இதனால், அவரை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதபெனாசிர் புட்டோ கொலை வழக்கில் ஜாமினை நீட்டிக்க கோரிய முஷாரப் மனு தள்ளுபடியானது. ஜாமீன் நீட்டிப்பு மனுவை தள்ளுபடி செய்து முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டது.

பஞ்சாபில் கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை இரும்புக் கம்பியால் அடித்த 4 ஆண்கள்!!

பஞ்சாபில் பட்டப்பகலில் பலபேர் கண் முன்பு 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை இரும்பு கம்பிகளால் தாக்கிய கொடூரம் நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பட்டப்பகலில் 4 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பலர் பார்க்க இரும்புக் கம்பியால் அடித்துள்ளனர். இதை வேடிக்கைப் பார்த்தவர்கள் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக சத்தமின்றி நடப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.
அப்பெண்ணை தாக்கிய 4 பேரில் ஒருவர் அதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த 4 பேரில் ஒருவரான மனோஜ் என்பவருக்கு தான் கடனாக கொடுத்த ரூ.20,000 ரொக்கத்தை அப்பெண் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ் மேலும் 3 பேருடன் சேர்ந்து அப்பெண்ணை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாபில் புகார் கொடுக்க வந்த பெண் மற்றும் அவரது தந்தையை போலீசார் அடித்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்க  ilakkiyainfo.com

முலாயம் சிங்: மூன்றாவது அணி மட்டுமே நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரும்

லக்னோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் 17.04.2013 நடைபெற்ற
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முலாயம் சிங், மூன்றாவது அணி குறித்து பேசியதாவது:-மூன்றாவது அணி டெல்லியில் ஆட்சியில் அமரும்பொழுது மட்டுமே நாட்டு மக்களுக்கு நலன் கிட்டும். காங்கிரசோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி அமைக்காது. அதற்கு பதில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும். இனி அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையை பெறப்போவதில்லை.டெல்லி, குற்றச்செயல்கள் அரங்கேறும் மையமாக விளங்குகிறது. ஆனால், அவர்கள் உத்திரப்பிரதேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

அழகாக இருந்த ஒரே காரணத்திற்காக டிபோட் செய்யப்பட்ட முன்று ஆண்கள்

 According to Emirates 24/7, Saudi Arabia recently deported three United Arab Emirates men over concerns their dashing good looks may prove irresistible to Saudi women.
The Emirati men had been attending the Jenadriyah Heritage and Cultural Festival in Riyadh, the Saudi capital, reports the Telegraph, when an officer spotted the dapper delegates and gave them the boot.
A statement in Arabic-language newspaper Elaph, translated by The Telegraph, added, "A festival official said the three Emiratis were taken out on the grounds they are too handsome and that the Commission [for the Promotion of Virtue and Prevention of Vices] members feared female visitors could fall for them."
"Urgent measures" were reportedly taken to escort the men to Abu Dhabi, according to the International Business Times 
  ரியாத்தில் நடந்த கலாச்சார திருவிழாவின்போது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களை மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர்.சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் வருடாந்திர கலாச்சார திருவிழா நடந்தது. அப்போது பல்வேறு கூடாரங்கள் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு பிரதிநிதிகள் நிறுத்தப்பட்டனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் ஐக்கிய அரபு அமீரக கூடாரத்திற்கு வந்து செய்த செயல் சவூதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அழகாக இருப்பது ஒரு குற்றமா? ஐக்கிய அரபு அமீரக கூடாரத்தில் மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசார் வந்து அங்கு நின்று கொண்டிருந்த அமீரக பிரதிநிதிகளில் 3 பேரை அங்கிருந்து வெளியேற்றினர். அவர்கள் 3 பேரும் மிகவும் அழகாக இருப்பதாகவும், அதனால் அங்கு வரும் பெண்கள் அவர்கள் அழகில் மயங்கக்கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்தார்களாம்.
3 பேரை அபுதாபிக்கு அனுப்ப ஏற்பாடு அமீரக பிரதிநிதிகள் 3 பேர் மிகவும் அழகாக இருந்ததால் அவர்களைப் பார்த்து பெண்கள் மயங்கக்கூடும் என்று கமிஷன் உறுப்பினர்கள் அஞ்சினார்கள். இதையடுத்து தான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள் என்று விழா ஏற்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த 3 பேரையும் அபுதாபிக்கு அனுப்பி வைக்க விழா நிர்வாகம் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

புதன், 17 ஏப்ரல், 2013

நீதியற்ற மோடியின் குஜராத்தில் ஒரு குடும்பமே தற்கொலை!

self-immolation-2மிழ்நாட்டில ஜனநாயகமே இல்லை. சாதாரண மக்களுக்கு எந்த நாதியும் இல்லை. இந்த லோக்கல் கட்சிகளை எல்லாம் ஒழிச்சாத்தான் நமக்கு விமோச்சனம். காங்கிரஸ் ஊழலின் உருவம். தேசியக் கட்சியான, தேச பக்த கட்சியான பாரதீய ஜனதா கட்சியை, குஜராத்தில் முன்னுதாரண ஆட்சி நடத்திக் காட்டியிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியில அமர்த்தினாத்தான் நாடு உருப்படும்.” இது நரேந்திர மோடி ரசிகர்களின் அங்கலாய்ப்பு.
குஜராத்தில் என்ன நிலைமை என்று பார்ப்போம்.
35 ஆண்டுகளாக ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வந்த இடத்தை பிடுங்குவதற்காக மேட்டுக்குடி வர்க்கத்தினரும், உள்ளூர் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், நீதிமன்றமும் சேர்ந்து நடத்திய அராஜகங்களை பின் வரும் கட்டுரை விவரிக்கிறது.
காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பா.ஜ.க. ஆண்டாலும் சரி, மாநிலத்தில் அ.தி.மு.க.வோ, தி.மு.க.வோ எந்த ஓட்டுப் பொறுக்கி கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி  ஏழை, எளிய மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக்க வழியில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
35 ஆண்டு காலமாக வாழ்ந்த இருப்பிடம் அநியாயமாக பிடுங்கப்பட்ட அநீதியை எதிர்த்து ஒரு குடும்பமே கூட்டாக தற்கொலை செய்து கொண்டுள்ளது. மனதை நொறுக்கும் இந்த தற்கொலை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராஜ்கோட்டில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி நடந்தது.