வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தங்கம் விலை சரிவு ! கடன்கொடுத்த வங்கிகள் அப்செட்

 தங்கம் விலை தொடர் சரிவால், வாடிக்கையாளர்களின் நகைகளின் மீது, 95 இதன்படி தங்க நகை கடன் வழங்குகிறோம். தங்கத்தின் விலைக்கும், கடன் வழங்கும் தொகைக்கும் இடைப்பட்ட அளவீடு, 70 முதல், 75 சதவீதமாக உள்ளன. 15 முதல், 20 சதவீதம் வாடிக்கையாளரின் தங்கம், நகையாக வங்கியில் உள்ளதால், அரசு வங்கிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.இழப்பு: வெளிமார்க்கெட் தங்கத்தின் விலையில், 95 சதவீதம் கடனாக வழங்கிய, தமிழக, கேரளா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள், அடகு கடைகளுக்கு, 5 முதல், 7 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை, சவரனுக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரையிலும் சரியக்கூடும் என்பதால், நிதி நெருக்கடியில் மூழ்குவதில் இருந்து தப்பிக்க, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, தங்கத்தை திரும்ப பெறும்படியும், இழப்பீட்டு தொகையை செலுத்தும் படியும், நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இழப்பீட்டு தொகை செலுத்தாவிட்டால், நகை உடனடியாக ஏலத்துக்கு கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள், இந்த தனியார் நிறுவனங்கள் வராததால், நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.


சவரனுக்கு ரூ.112 உயர்வு
: சில நாட்களாக குறைந்திருந்த, தங்கத்தின் விலை, நேற்று, சவரனுக்கு, 112 ரூபாயாக சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,425 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,400 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 25,935 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, தங்கம் கிராமுக்கு, 14 ரூபாய் என சற்று உயர்ந்து, 2,439 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன், 112 ரூபாய் அதிகரித்து, 19,512 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 150 ரூபாய் உயர்ந்து, 26,085 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி, கிராமுக்கு, 30 காசு உயர்ந்து, 48.30 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி, 290 ரூபாய் அதிகரித்து, 45,105 ரூபாயாக உயர்ந்தது. தங்க நகை வர்த்தகர் ஒருவர் கூறுகையில், "தங்கம் விலை இனி குறைந்தால், கிராமிற்கு 100-200 ரூபாய் என்ற அளவில் தான் குறையும். விலை உயர்ந்தாலும், இதே அளவிற்கு தான் உயரும்' என்றார்.
சதவீதம் கடன் வழங்கிய, தனியார் நிதி நிறுவனங்கள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளன. நகைகளை திருப்பும்படி வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க பொருளாதார எழுச்சி, தங்க முதலீட்டாளர்கள் பங்கு சந்தை பக்கம் திரும்புவது போன்ற காரணங்களால், தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த வாரம், 22 காரட், ஒரு பவுன் ஆபரணத் தங்கம், 22,240 ரூபாய்க்கு விற்கப்பட்டு, ஏப்ரல், 15ம் தேதி, 20,640 ரூபாய், நேற்று முன்தினம் 19,520 ரூபாயாக குறைந்தது. விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என, தகவல் பரவுவதால், உடனடியாக தங்கத்தை வாங்கவும், காத்திருந்து வாங்கவும் பலர் திட்டமிட்டு வருகின்றனர். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், ரிசர்வ் பாங்க் ஆலோசனைப்படி, வாடிக்கையாளர் நகை மீது வழங்கப்படும் கடன் தொகை, கிராமிற்கு 1,200 ரூபாய் வரை குறைத்துள்ளனர். அரசு வங்கிகளை தொடர்ந்து, தனியார் வங்கிகளும், இதே முடிவை கையாண்டுள்ளன. ஆனால், தனியார் நகை கடன் வழங்கும், நிதி நிறுவனங்கள், அடகு கடைகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளன. வாடிக்கையாளர் தங்க நகை மீது, 95 சதவீதம் வரை கடன் வழங்கியதால், தங்கத்தின் விலை சரிவால் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுபற்றி தேசியமயமாக்கப்பட்ட அரசு வங்கியின் மேலாளர் ஒருவர் கூறியதாவது: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயம் மற்றும் தனிநபர் பிரிவில், தங்க நகை கடன் வழங்குகிறது. விவசாயிகளுக்கு, 9 சதவீத வட்டியில், இரண்டு லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்குகிறது. சரியான காலக்கெடுவுக்குள் திருப்பி செலுத்தினால், 5 சதவீத வட்டிக்கு, ரிசர்வ் வங்கி விலக்கு அளிக்கிறது. தனி நபருக்கு தங்க நகை கடனாக, இரண்டு லட்சம் ரூபாய், 10.5 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு, கடந்த வாரம் வரையில், 2,100 ரூபாய் வழங்கப்பட்டது. தங்கம் விலை சரிவால், கிராமுக்கு, 1,700 ரூபாய் கடன் வழங்கும் அளவை ரிசர்வ் வங்கி அறிவித்தது.dinamalara.com

கருத்துகள் இல்லை: