சனி, 20 ஏப்ரல், 2013

Kerala மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும்

கேரளாவில் மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது  இதன் காரணமாக தற்போது ஏராளமான பெண்களும் இத்தொழிலை மேற்கொள்கிறார்கள் .
தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டர், செல்போன் வழங்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.கேரள மாநிலம் காசர்கோட்டில் மத்திய தோட்டப் பயிர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பெண்களுக்கு தென்னை மரம் ஏற பயிற்சி
அளிக்கப்படுகிறது. இங்கு ஏராளமான பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவ்வாறு பயிற்சி பெற்ற பெண்கள் தற்போது கேரளாவில் பல பகுதிகளில் தென்னை மரம் ஏறி தேங்காய்களை பறித்து வருகின்றனர்.இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்றார்.அப்போது அவரிடம் தென்னைமரம் ஏறும் பெண்கள் மனு கொடுத்தனர். அதில், ‘‘தென்னை மரம் ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை பஸ்சில் கொண்டு செல்ல சிரமம் இருப்பதால், தங்களுக்கு இருசக்கர வாகன வசதி ஏற்படுத்த வேண்டும்‘‘ என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் உம்மன்சாண்டி, ‘‘தென்னை மரம் ஏறும் பெண்களுக்கு ஸ்கூட்டரும், செல்போனும் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்‘‘ என உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: