செவ்வாய், 10 ஏப்ரல், 2012

செல்வராகவன்: பிசியான ஸ்டார்களை தேடிப்போக மாட்டேன்

மயக்கம் என்ன? படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம். ஆர்யா, அனுஷ்கா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கோவாவில் 15 நாட்கள் நடந்தது.



ஒரு மாதத்துக்குமேல் திட்டமிடப்பட்டிருந்த ஷூட்டிங் திரையுலக ஸ்டிரைக்கால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பட குழுவினர் சென்னை திரும்பினர். இதில் ஆர்யா, அனுஷ்கா இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். ராதிகா, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். இதுபற்றி செல்வராகவன் கூறும்போது, ‘Ôஆர்யா, அனுஷ்கா இருவருமே தொழில் ரீதியான நடிகர்கள் என்பதால் காட்சிகள் படமாக்குவதில் சிரமம் இல்லை. இருவரும் எந்த தலையீடும் செய்யவில்லை. 35 சதவீத ஷூட்டிங் முடிந்திருக்கிறது. இரண்டு முன்னணி ஸ்டார்கள் தவிர பிஸியாக இருக்கும் வேறு யாரையும் இப்படத்திற்கு தேர்வு செய்யவில்லை. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு சிவகார்த்திகேயன் பிஸி கிடையாது. இப்போது அவரும் பிஸி என்பதால் அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. ஹீரோ, ஹீரோயின் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள்தான். நான் எப்போதுமே பிசியான ஸ்டார்களை தேடிப்போவதில்லைÕÕ என்றார்.

உதயநிதி இனியும் நடிக்க போகிறார் ஜாக்கிரதை

தயாரிப்பாளராக இருந்து நடிகர் அரிதாரம் பூசிய உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம்  புத்தாண்டுக்கு வெளிவர உள்ளது. இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்  உதயநிதி. இதற்காக அவர் தற்போது கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன்

திங்கள், 9 ஏப்ரல், 2012

108 ஆம்புலன்ஸ் இரண்டு ஷிப்டுகளில் கொத்தடிமைகளாக ஊழியர்கள்

பறக்கும் காரின் விலை அறிவிப்பு: இதுவரை 100 பேர் புக்கிங்


அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் உலகின் முதல் பறக்கும் காரான டிரான்சிஷனுக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா வடிவமைத்துள்ளது. ஏற்கனவே பறக்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் முதல் பறக்கும் காராக டிரான்சிஷன் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் டிரான்சிஷன் காருக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெர்ராபியூஜியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

லஞ்சம் கொடுக்க பணம் இல்லை! ஜீப்பில் குழந்தை பெற்ற பெண்!


உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க மறுத்ததையடுத்து பெண் ஒருவர் ஜீப் ஒன்றில் குழந்தை பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை (08.04.2012) இந்த சம்பவம் நடந்தது. விக்ரம் என்பவர் தனது மனைவி நீலத்தை பாக்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தார். அவரைச் சேர்க்க அவரது சுகாதார மையத்தினர் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இவரிடம் பணம் இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு ஜீப்பில் அழைத்துச் செல்ல தீர்மானித்தார். அப்போது நீலத்துக்கு ஜீப்பிலேயே குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி ஜே.பி.ஷர்மா தெரிவித்தார்.

உயிருக்குத் தவிக்கும் 3 மாத சிசு: கொடூர தந்தை கைது!

Infant
 பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் தந்தையால் கொடூரமாகத் தாக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தையான அப்ரீன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் அரசு மருத்துவமனையில் கழுத்து எலும்பு முறிவு, நெற்றி மற்றும் உடலில் சிகரெட் சூடு, உடல் முழுவதும் காயத்துடன் 3 மாத குழந்தை அப்ரீன் கடந்த வியாழக்கிழமை சேர்க்கப்பட்டது. செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதன் மூளையில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

ஓவியா-அஞ்சலி! கிளர்ச்சியில் ரசிகர்கள்!

களவானி, மெரினா ஆகிய படங்களில் தாவணி உடையில் வந்த ஓவியாவிற்கும் அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் படங்களில் சுடிதாரில் வந்து கலக்கிய அஞ்சலிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் அந்த உடைகள் இல்லாமல் இருந்தால்(அதாவது வேறு உடையில்) அவர்கள் எப்படி இருப்பார்கள்?  சுந்தர்.சி இயக்கத்தில் விமல், சிவா(மிர்ச்சி), அஞ்சலி, ஓவியோ ஆகியோர் நடிக்கும் படம் மசாலா கஃபே. இந்த படத்தில் தான் அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சியான உடையில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள்.

தாத்தா இறந்த தீட்டு கழிக்காமல் பேரன் தேர்வு எழுதக்கூடாதாம்!

போபால், ஏப். 8- தாத்தா இறந்து போனதால், பேரனான மாணவன் தேர்வு எழுதக்கூடாது என்று ஓர் ஆசிரியர் அவனைத் திருப்பி அனுப்பியிருக் கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாதோல் மாவட்டத்தின் பனியான் டோலா என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பயிலும் நவீன் பர்மன் என்ற 7 வயதுள்ள  2 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப் பட்டுள்ளான்.
ஏப்ரல் 2 ஆம் தேதியன்று தேர்வு எழுதப் பள்ளிக்குச் சென்றபோது, ஒரு ஆசிரியர் உனது வீட்டில் சாவு விழுந்துவிட்டது. அதனால் நீ தூய்மையாக இல்லை. அதனால் நீ தேர்வு எழுத முடியாது என்று கூறி அவனை திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை ராகேஷ் குமார் புகார் அளித்ததன் பேரில் ஆசிரியரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இது போல் தீட்டு, தோஷம் என்று பேசிக் கொண்டிருக்கும்  மூடர்கள் எவ்வாறு ஆசிரியர்களாக இருக்கின்றனர் என்பது விளங்கவில்லை.

குஜராத்தில் 23 பேர் எரிக்கப்பட்ட வழக்கு: 23 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 23 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 23 பேரை குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு 2002-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று ஆனந்த் மாவட்டத்தின் ஓதே கிராமத்தில் 23 பேர் பதுங்கியிருந்தனர். 23 பேரும் பதுங்கி இருந்த இடத்துக்கு தீவைத்த ஒரு கும்பல் அனைவரையும் எரித்துக் கொன்றது.
இப்படுகொலை சம்பவம் தொடர்பாக 47 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கில் இன்னும் 2 பேர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஆஜர் சங்கரராமன் கொலை வழக்கு


Jeyandrar
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு சம்பந்தமாக புதுச்சேரி நீதிமன்றத்தில் இன்று சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் இன்று நேரில் ஆஜராயினர்.
இந்தக் கொலை வழக்கு புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இங்கு நீதிபதியாக இருந்த ராமசாமி முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்நிலையில், நீதிபதி ராமசாமி வழக்கில் தொடர்புடைய ஜெயேந்திரருடன் டெலிபோனில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஒரு ஆடியோ கேசட்டும் வெளியானது. இதையடுத்து, டேப் விவகாரத்தில் நீதிபதி ராமசாமி மாற்றப்பட்டு வழக்கை நீதிபதி சி.எஸ்.முருகன் வழக்கை விசாரித்து வருகிறார்.

Chennai IIT மாணவன் குல்தீப் தற்கொலை..நெஞ்சுக்குள் ஏன் புகுந்தாய்

சென்னை: ஐஐடி மாணவன் குல்தீப் தற்கொலை செய்வதற்குமுன் காதலிக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட குல்தீபின் அறையை போலீசார் சோதனை செய்தனர் அப்போது குல்தீப் இறப்பதற்கு முன் தனது காதலிக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் உருக்கமான, நெஞ்சை நெகிழ வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உருக்கமான கடிதம்
நெஞ்சுக்குள் ஏன் புகுந்தாய் என்ற தலைப்பில் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா!

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.
ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

மாவோயிஸ்டுகள் பழங்குடியினருக்கு தடையாக நிற்பது நியாயமா?

மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகள் பலவற்றை ஒடிசா மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், கடத்தப்பட்டு இன்னும் மாவோயிஸ்ட் பிடியில் பிணைக் கைதியாக உள்ள இத்தாலியர் விடுவிக்கப்படவுள்ளார்.  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் தங்கள் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களை விடுவிக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை அரசு விலக்கிக் கொள்ளவும், அரசு அதிகாரிகளைக் கடத்திச் செல்வதுதான் இதுநாள் வரை நடைபெற்று வந்தது. இப்போதுதான் வெளிநாட்டவரைக் கடத்திச் சென்று பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் புதிய உத்தியைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மக்கள் புதுமை படைப்பார்கள???

புதுக்கோட்டை தொகுதிக்கு நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, இங்கு வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனான உறவு, உள்ளாட்சித் தேர்தலுடன் முறிந்த பிறகு, புதுக்கோட்டையை வளைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், "கோட்டை' புதுக்கோட்டைக்கு இடம்பெயர்வதில் ஆச்சர்யம் இருக்காது.
ஓரணியில் எதிராளிகள்:

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

தமன்னாவோட போஸ்டர் செலவு மட்டுமே 70 லட்ச ரூபாயாம்



மாவீரன்ல பட்டைய கிளப்புனாருல்ல ராம்சரண்.. ஆமா..  சிரஞ்சீவியோட புள்ள..  அவரு நடிச்சு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிச்சிருக்கிற படம் ரகளை..  அப்படின்னா ஒரு எதிர்பார்ப்பு  இருக்கத்தானே செய்யும்..நாமும் எதிர்பார்ப்போடுதான் ரகளைய பார்க்கப் போனோம்.. 
தூங்கி எந்திரிச்சவுடனயே ஒரு ஃப்ரஷ்னஸ் இருக்கும்ல.. அப்படி ஒரு ஃப்ரஷ்னஸ் எப்பவும் இருக்கு ராம்சரண் முகத்துல.. ஆனா.. வீரதீர காட்சிகளிலும்  கூட சோகம் அப்பியிருக்கிற மாதிரியே முகபாவனை காட்டுறாரு.. சுறுசுறுப்புலயோ ஆட்டபாட்டத்துலயோ அவரு குறை வைக்கல. யூத்துகளுக்கு பிடிக்கிற மாதிரி ரொம்பவும் ஸ்டைலிஷாகத்தான் படம் முழுக்க வர்றாரு.. சண்டைக் காட்சிகள்லயும் தூள் கிளப்புறாரு.
தமன்னாவோட இயல்பான அழகை ஒரே ஒரு அருவிக் குளியல் காட்சியில மட்டும்தான் பார்க்க முடியுது.. மத்தபடி படம் முழுக்க ஒப்பனை முகம்தான். ஒரு பாடல் காட்சியில  இடுப்புக்கு மேல அம்புட்டும் பளிச்சுன்னு தெரியற மாதிரி வர்றாரு.. இடுப்பை மட்டுமல்ல உடம்பயும் வில்லா வளைச்சு அந்த ஆட்டம் போடறாரு. 

ராமஜெயம் கொலை: காரணம், பின்னணி என்ன?

திருச்சியில் முன்னால் அமைச்சர் K.N.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.!
கடந்த தி.மு.க ஆட்சியில் தனது அண்ணன் K.N.நேருவின் அனைத்து அரசுத்துறை, கட்சி சம்பந்தமான எல்லா பேரங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்தான் இந்த ராமஜயம். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பண்பான ரியல்எஸ்டேட், கல்குவாரி கான்ட்ராக்ட் , கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சகல வழிகளிலும் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தும் இந்த வகையில்தான்.
நிலபேரங்கள், வீடு, ஹோட்டல்கள் இவரால் வளைக்கப் பட்டபோதும், கட்சியில் உள்ள      பிணக்குகள்கூட இவர் தலையீடு இல்லாமல் முடிவது கிடையாது. தி.மு.க தலைவரின் வாரிசுகள் வரும் போதும் போகும் போதும் தி.மு.கவின் தலைமையின் தனி கவனத்தை ஈக்கும்படி செயல்பட்டதுடன் தனது உறவுக்காரர் நெப்போலியனையே ஓரங்கட்டியதும் இந்த வகையில்தான்.

அரசின் ஆகாஷ் டேப்லெட்ஸால் மாணவர்கள் அப்செட்

சண்டிகர்: மத்திய அரசு அறிமுகப்படுத்தும் ஆகாஷ் கையடக்க கணிணிகளை சண்டிகர் மாநில மாணவர்கள் திரும்பவும் அரசிடம் ஒப்படைத்துவிட்டனர்.
மிகக் குறைந்த விலையில் மாணவர்களுக்கு பயன்படக் கூடிய கையடக்க கணிணிகளை அரசு உருவாக்கி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சோதனை முயற்சியாக ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சண்டிகர்மாநிலத்தில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த 10 மாணவர்கள்தான் இக்கணிணிகளை வாங்கினர். இப்பொழுது அவர்களும் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைத்துவிட்டனர்.
என்ன காரணம்? ஒருமுறை ஹேங்ஆகிவிட்டால் முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்த பிறகே சிஸ்டம் ரீ ஸ்டார்ட் ஆகிறது என்பது முதல் புகார். 2-வதாக கணிணியின் வேகம் மிகக் குறைவாக இருப்பதால் பயன்படுத்தவே முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ராஜா மனு?ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் ரத்து

ஸ்பெக்ட்ரம் வழக்கில் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை, சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. இதனால், ராஜா சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் குறைதீர் மனு (கியூரேட்டிவ் பெட்டிசன்) தாக்கல் செய்யப்படவுள்ளது என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008 ஜனவரியிலிருந்து, தொலைத் தொடர்பு அமைச்சகம் வழங்கிய, 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களையும் ரத்து செய்து, கடந்த பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ராஜா சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிக்கு புறம்பானது: அந்த மனுவில், "தன்னிடம் விளக்கம் கேட்காமலே, இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் லைசென்ஸ்களை ரத்து செய்துள்ளது.

ஆர் சுந்தரராஜன், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர்


'பயணங்கள் முடிவதில்லை’, ‘மெல்ல திறந்தது கதவு’, ’வைதேகி காத்திருந்தாள்’, ‘ராஜாதி ராஜா’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’, ‘குங்குமச் சிமிழ்’, ‘என் ஆசை மச்சான்’ என வெள்ளி விழா படங்களைத் தந்தவர்.
இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயக்குநராக அவர் ரீ-எண்ட்ரியாகும் படம் ‘உயிர் எழுத்து’.
"நட்பையும், அதன் தியாகங்களையும் சொல்லும் ஒரு யதார்த்தமான படைப்பு ‘உயிர் எழுத்து’ என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் கதை இது:

ஏ.கே.அந்தோணியை வெளியேற்ற 'ஆயுத புரோக்கர்கள்' சதி?

AK Antony

ராணுவம் பற்றிய சர்ச்சைகளின் பின்னணியில் தளவாட கொள்முதல் தரகர்கள்?
டெல்லி: நாட்டின் ராணுவம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் வெளிவருவதில் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் தரகர்களின் "லாபி"களின் சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்தில் வேவு பார்ப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள், பாதுகாப்பு அமைச்சக அனுமதி இன்றி ராணுவம் நகர்த்தப்பட்டது போன்ற தொடர் சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

பாரதிராஜா, டி ராஜேந்தர், செல்வமணி தலைமையில் போட்டி தொழிலாளர் சங்கம்

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு போட்டியாக, புதிய சங்கத்தை இன்று தொடங்கினர் தயாரிப்பாளர்கள்.
இந்த புதிய சங்கத்துக்கு இயக்குநர்கள் பாரதிராஜா, டி ராஜேந்தர் மற்றும் ஆர்கே செல்வமணி நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புது சங்கத்திற்கு 'தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் நலச்சங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. யூனியன் என்று இருந்தால் பிரச்சினை என்பதற்காக சங்கம் என்று இதனை அறிவித்துள்ளனர்.
பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, டி.ராஜேந்திரர் ஆகியோர்தான் இந்த புதிய சங்கத்தின் பொறுப்பாளர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சங்கத்தின் அடையாள அட்டையுடன் ஊழியர்கள் படப்பிடிப்புகளில் இன்று பங்கேற்றனர்.
இந்த புதுசங்கத்தால் ஃபெப்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே உள்ள மோதல் வலுக்கிறது.
இதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தயாராகிறது பெப்சி.

சனி, 7 ஏப்ரல், 2012

சி.பி.ஐ., அமைப்பை மூட இதுவே சரியான நேரம்: ராஜஸ்தான் ஐகோர்ட் பாய்ச்சல்

ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சிலருக்கு சாதகமாகவும், மற்ற சிலருக்கு பாதகமாகவும், சி.பி.ஐ., நடந்து கொண்டது, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை பாழ்படுத்திவிட்டது. சி.பி.ஐ., அமைப்பை மூட, இதுவே சரியான நேரம் என, ராஜஸ்தான் ஐகோர்ட் காட்டமாகக் கூறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், சாராய கடத்தல்காரர் தாராசிங் என்பவர், கடந்த 2006 அக்டோபரில், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில அப்போதைய டி.ஜி.பி., ஜெயின், பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜேந்திர ரத்தோர் ஆகியோரும், இதில் அடங்குவர்.

ராமஜெயம் கொலை மர்மம் விலகுகிறது… இதோ அந்த தங்க முடிச்சு!

Viruvirupu
திருச்சி காவல்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, ராமஜெயம் கொலை மர்மத்தை போலீஸ் உடைத்து விட்டனர் என்று தெரியவருகிறது. தமக்கு கிடைத்த எல்லா தடயங்களும், அதற்குரிய இடங்களில் சரியாக பொருந்துவதாக காவல்துறையில் எமக்கு தகவல் தரும் ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் ஒரு விஷயத்தை முதலில் எஸ்டாபிளிஷ் பண்ணியிருக்கிறது. அது, ராமஜெயம் திருச்சி தில்லைநகர் ஏரியாவில் வைத்துதான் கொலைகாரர்களின் கைகளில் சிக்கியுள்ளார்.
ராமஜெயத்தின் வேறு சில தொடர்புகள் இந்த ஏரியாவுக்கு வெளியே இருப்பதால், அந்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அவர் சென்று, அங்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்பதாவவும் ஆரம்பத்தில் போலீஸ் ஒரு தியரி வைத்திருந்தது. இப்போது, அந்த தியரி ட்ராப் பண்ணப்பட்டு விட்டதாக தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம், சாம் பிட்ரோடா போட்டி?Sam pitroda

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் என்று இப்போது பரபரப்பாக பேசப்படும் சாம் பிட்ரோடாவுக்கு போட்டியாக கலாம் நிறுத்தப்படக் கூடும் என்கிறார்கள்.

ஆனால் கலாம் இதற்கு ஒப்புக் கொள்வாரா தெரியவில்லை.
தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதில் தங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

பார்வதி மேனன்!தனுஷுக்கு ஜோடியாக. இந்தியில்.

சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது.
அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன்.

இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தனுஷுக்கு ஜோடியாக. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்.
வந்தேமாதரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆல்பங்களைப் படமாக்கிய பரத் பாலா இயக்கும் புதிய இந்திப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, பார்வதிதான் அவருக்கு ஜோடி.