ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஏ.கே.அந்தோணியை வெளியேற்ற 'ஆயுத புரோக்கர்கள்' சதி?

AK Antony

ராணுவம் பற்றிய சர்ச்சைகளின் பின்னணியில் தளவாட கொள்முதல் தரகர்கள்?
டெல்லி: நாட்டின் ராணுவம் தொடர்பான சர்ச்சைகள் நாளுக்கு நாள் வெளிவருவதில் ராணுவ தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் தரகர்களின் "லாபி"களின் சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சகத்தில் வேவு பார்ப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள், பாதுகாப்பு அமைச்சக அனுமதி இன்றி ராணுவம் நகர்த்தப்பட்டது போன்ற தொடர் சர்ச்சைகள் கடந்த சில மாதங்களாக வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியும் தமது பொறுப்புகளில் நேர்மையாக செயல்படுகிறவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ராணுவத்தில் புரையோடிப் போயிருந்த ஊழல் முறைகேடுகளை அகற்றுவதில் இருவரும் முனைப்பு காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாகே டாட்ரா லாரிகளை கொள்முதல் செய்வதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த விவகாரத்தையும் வி.கே.சிங் போட்டுடைத்ததாக தெரிகிறது.
ஏற்கெனவே ராணுவத்துக்கு தளவாடங்களை விநியோகித்ததில் முறைகேடு செய்ததாக இஸ்ரேல். சிங்கப்பூர், ஜூரிச் மற்றும் ரசிய நிறுவனங்களுக்கு ஏ.கே. அந்தோணி தடை விதித்திருந்தார்.
அண்மையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஏ.கே. அந்தோணியும்கூட, நமது ராணுவத்தை நவீனமயமாக்குவதே எமது முதல் பணி. ஆனால் ஒருதுளி லஞ்சத்தையும் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலம் மே 31- ந் தேதியுடன் முடிவடைந்துவிடுகிறது. இதனால் கோபத்தில் இருக்கும் ராணுவத்துக்கு தளவாடங்களைக் கொள்முதல் செய்து கொடுக்கக் கூடிய தரகு லாபிகள் அந்தோணியை பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே தொடர்ச்சியாக சர்ச்சைகளை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
வெல்லப் போவது லாபிகளா? அந்தோணியா?

கருத்துகள் இல்லை: