திங்கள், 9 ஏப்ரல், 2012

பறக்கும் காரின் விலை அறிவிப்பு: இதுவரை 100 பேர் புக்கிங்


அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் உலகின் முதல் பறக்கும் காரான டிரான்சிஷனுக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்சிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் பறக்கும் காரை அமெரிக்காவை சேர்ந்த டெர்ராபியூஜியா வடிவமைத்துள்ளது. ஏற்கனவே பறக்கும் கார்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வணிக ரீதியில் விற்பனைக்கு வரும் முதல் பறக்கும் காராக டிரான்சிஷன் கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கும் டிரான்சிஷன் காருக்கு ரூ.1.43 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக டெர்ராபியூஜியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை 100 கார்களுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், புக்கிங் செய்துள்ளவர்கள் டிரான்சிஷன் காரை 20 மணிநேரம் ஓட்டி பயற்சி பெற வேண்டும். மேலும், ஓட்டுனர் தேர்விலும் வெற்றி பெற்றால்தான் கார் டெலிவிரி கொடுக்கப்படும்.
டிரான்சிஷன் கார் தரையில் அதிகபட்சமாக 110 கிமீ வேகத்திலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும். இதில், 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க பொருத்தப்பட்டிருக்கிறது.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ச்சியாக 4 மணிநேரம் பறக்க முடியும். ஒரு மணிநேரம் பறப்பதற்கு 19 லிட்டர் எரிபொருள் செலவாகும். தரையில் செல்லும்போது ஒரு லிட்டருக்கு 15 தூரம் வரை செல்லும் என்று டெர்ராபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: