திங்கள், 6 பிப்ரவரி, 2012

காந்தியை அம்பலப்படுத்தியவர்கள் அம்பேத்கரும் ஈ.வெ.ராவும்தான்.


-பேராசிரியர் அரச. முருகுபாண்டியன்
 தோழர். வே. மதிமாறன் எழுதிய காந்தி நண்பரா? துரோகியா என்கிற நூல் அங்குசம் வெளியீடாக வந்துள்ளது. நேற்றுதான் (21.01.2012) அந்நூல் கிடைக்கப் பெற்று வாசித்து முடித்தேன். எழுத்தாளர் மதிமாறன் ஏற்கனவே எழுதிய நூல்களையும் அவைகள் ஏற்படுத்திய அதிர்வுகளையும் நான் அறிவேன்.
குறிப்பாக பார்ப்பன பாரதியை அவர் ஆதாரப்பூர்மாக அம்பலப்படத்திருந்த பாரதி ஜனதா பார்ட்டி என்கிற நூலில் அவர் பாரதி மீது வைத்த விமர்சனங்களுக்கு பாரதி ஆய்வாளர்கள் பாரதிபக்தர்கள் பாரதிதாசர்கள் ஒருவர்கூட மறுப்பேதும் சொல்லவில்லை.
இந்த கள்ள மவுனத்திற்குப் பின்னால், ஒளிந்துகொண்டிருப்பது அப்பட்டமான பிழைப்புவாதம். சாதி வெறியர்களும் மதவெறியர்களும் ஏகாதிபத்திய தாசர்களும் ஒளிந்து கொள்ளும் இடமாக பாரதி இன்றும் இருந்து வருகிறான். அவனை தாங்கிப் பிடிக்கும் பிழைப்புவாத கம்யுனிஸ்டுகளுக்கும் இது பொருந்தும்.
தமிழ் அறிவுலகம் என்பது சூனியங்களால் நிரம்பிக்கிடப்பதை நேர்மையாக சிந்திக்கிற யாரும் உணர முடியும். மகாகவியை தோலுரித்த மதிமாறன் இப்போது மகாத்மா வைத் தோலுரித்திருக்கிறார்.
இந்துத்துவம், சாதியம், முதலாளியம், எப்படி மீண்டும் மீண்டும் புத்துயிர் பெறுகிறதோ அதைப் போலவே காந்தியும் புதுப்பிக்கபடுகிறார். மார்க்சீயம், அம்பேத்கரியம், பெரியாரியம் பேசி ஆளும் வர்க்கத்தை, ஆதிக்க சாதிகளை பகைத்துக் கொள்வதைவிட, காந்தியம் பேசி பொது நீரோடத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவே பெரும்பாலான பிழைப்புவாத அறிவுத் துறையினர் முயற்சிக்கின்றனர். காந்தியம் சர்வரோக நிவாரணியாக முன்னிறுத்தப்படுகிறது.

காவல் நிலையத்தில் தங்கையை வெட்டிய அண்ணன்: கள்ளக்காதலனோடுதான் வாழ்வேன் என்றதால் ஆத்திரம்


ஒரு அருவாளை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்து தனது தங்கை அம்பிகாவின் முடியை பிடித்து இழுத்து கிழே குனிய வைத்து வைத்து நடு முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டார்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி பக்கம் உள்ள ஆனந்தகிரியை சேர்ந்தவர் ஆயயாச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெள்ளியங்கிரி (வயது 21) என்ற மகனும், அம்பிகா (வயது 18) என்ற மகளும் உள்ளார்.

பாரிவேந்தர் பச்சமுத்து ஷங்கருக்கு எச்சரிக்கை . “பாரி,பூரி கக்கூஸ் லாரி”

உச்சகட்ட கோபத்தில் கொந்தளிக்கிறார் ஐ.ஜே.கே.கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பச்சமுத்து.
“பாரி,பூரி கக்கூஸ் லாரி” என்று இயக்குநர் ஷங்கர் ’நண்பனில்’ கொளுத்திப் போட்டிருக்கும் வசன வெடி ரொம்பவே வேலை பார்த்துவிட்டது. இருவருக்குள் என்னதான் பிரச்னை? கேள்வியைப் போடுவதற்கு முன்னாலேயே நம்மைப் பார்த்ததும் தன் ஆதங்கத்தை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்தார் பச்சமுத்து.
“நடிகர்கள்தான் அரசியலுக்கு வர முடியும் என்ற ஒரு எழுதப்படாத சட்டம் தமிழகத்தில் நிலவுகிறது. இது எவ்வளவு பெரிய சாபக்கேடு? படிப்பறிவில் மிகச் சிறந்த ஒருத்தரும் துக்கடா கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகரும் தேர்தல்ல போட்டி போடுறாருன்னு வெச்சுக்குவோம். இறுதியா யாரு ஜெயிப்பாருன்னு நினைக்கிறீங்க? படிச்சவரா? இல்ல.

ஐரோப்பா: 27 ஆண்டுகள் கழித்து ரோமில் பனிப்பொழிவு- குளிருக்கு 300 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவுதால் இதுவரை இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர். ரோம் நகரில் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
எப்படி நம்மூரில் மழை, வெள்ளம் ஆட்டிப் படைக்குமோ அதேபோல மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் கடும் குளிரும், பனிப்பொழிவும் மக்களை வாட்டி வதைக்கும்.
தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. கடந்த வாரம் முழுவதும் ஆட்டிப்படைத்த பனிப்பொழிவு இந்த வாரமும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

பொதுக்குழு 'சக்ஸஸ்': குடும்பதோடு கோலாலம்பூர் போனார் மு.க.அழகிரி!


Azhagiri
சென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மனைவி மற்றும் குடும்பத்தினரோடு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது தனிப்பட்ட முறையிலான பயணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அழகிரி, மனைவி காந்தி மற்றும் குடும்பத்தினர் கிளம்பிச் சென்றனர். சென்னை விமான நிலையத்தில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம், இது தனிப்பட்ட பயணம் என்றார் அழகிரி.சமீபத்தில் நடந்த திமுக பொதுக்குழுவில் பெரும் அமளி ஏற்பட்டது. அழகிரியின் குரல் போல ஒலித்த மூத்த தலைவர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு எதிராக பெரும் குரல்கள் ஒலித்தன. ஸ்டாலின் ஆதரவாளர்களால் எழுந்த இந்த எதிர்ப்பால் வீரபாண்டியார் மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த தலைவர்களும் கூட அதிர்ச்சி அடைந்தனர்.

வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து அடுத்த ஆட்டம்!

வெங்கட் பிரபுவின் மங்காத்தா வெற்றியடைந்ததைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து படம் எடுக்கிறார். சூர்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கும் மாற்றான் படம் முடிந்ததும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார்.
 சூர்யா நடிக்கும் இந்த படத்தை ”முக்தா எண்டர்டெயின்மெண்ட்(பி)லிட்” என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. முக்தா சீனிவாசன் தயாரித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளன. முக்தா சீனிவாசனின் உறவினரான முக்தா கோவிந்தனுடன் இணைந்து உருவானது தான் முக்தா 
எண்டர்டெயின்மெண்ட்ஸ். 

சல்மான் ருஷ்டியும் தஸ்லிமா நஸ்ரினும்



1
சல்மான் ருஷ்டியின் The Satanic Verses நாவலைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரினின் புத்தகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியால் கலந்துகொள்ள முடியவில்லை. வீடியோ கான்ஃபரன்ஸிங்கூட சாத்தியப்படவில்லை. அதே போல் தஸ்லிமா நஸ்ரின் எழுதிவரும் தொடர் சுயசரிதையின் ஏழாவது பாகமான Nirbasan (எக்ஸைல் என்று பொருள்) வெளியிடப்படக்கூடாது என்று கொல்கத்தா புத்தகக் கண்காட்சியில் சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். வேறு வழியின்றி அரங்குக்கு வெளியில் புத்தகம் வெளியிடப்பட்டது.
கொலை மிரட்டல்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் வாருங்கள் என்று சல்மான் ருஷ்டிக்கு காவல் துறையால் உத்தரவாதம் அளிக்கமுடியவில்லை (கொலை மிரட்டல்களை உற்பத்தி செய்தவர்களே அவர்கள்தாம் என்று சொல்லப்படுகிறது). தஸ்லிமா நஸ்ரின் புத்தக வெளியீட்டைத் தடுப்பவர்களையும் காவல் துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இறுதிசடங்குக்கு பொருள் வாங்கி வைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி

வறுமையை சமாளிக்க முடியாததால் இறுதிச் சடங்குக்கான பொருட்களை வாங்கி வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.'
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவரது மனைவி ஜோதி(47). 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முருகேசனுக்கு ஒரு கால் ஊனமடைந்தது. இதனால், வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

இலவச மிக்சி, கிரைண்டர், பேன் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் திட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார் என்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரத்தையடுத்த கோலியனூர் ஒன்றியத்தில் திருபாச்சனூர், காவணிப்பாக்கம், கொளத்தூர், வி.அரியலூர், எ.குச்சிப்பாளையம், அத்தியூர்திருவாதி, வேளியம்பாக்கம், சத்திப்பட்டு, வேடப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 3,052 குடும்பங்களுக்கு அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த கிராமங்களில் நடைபெற்றது.

2G உயர் கமிட்டி மீது மாதவன் நாயர் பாய்ச்சல்

புதுடில்லி: இஸ்ரோவின் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில், மாதவன் நாயர் உட்பட நான்கு மூத்த விஞ்ஞானிகள் மீது நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், "மத்திய அரசு உயர்மட்ட குழுவின் அறிக்கை நியாயமானதல்ல; கோழைத்தனமானது' என, மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) வர்த்தக அங்கமான ஆன்டிரிக்ஸ் நிறுவனம், தன்னிடம் உள்ள இரு செயற்கைக் கோள்களின் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைகளை, தேவாஸ் மல்டி மீடியாவுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு ஒதுக்கீடு செய்தது. இந்த ஒப்பந்தம், 2005ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி கையெழுத்தானது.

தி.மு.க. தரப்பில் குழப்பம் விளைவிப்பதற்காக இந்த சர்வே kumudam

தி.மு.க.வின் பொதுக்குழு கூடும் முக்கியமான சூழ்நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் கடந்த இதழில் ஒரு சர்வே எடுத்து, அதன் முடிவுகளை அறிவித்திருந்தோம்...
அதில் தி.மு.க.வின் அடுத்த தலைமைக்கு யார் தகுதியானவர் என்பதில் ஆரம்பித்து, கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுக்கலாமா, இளைஞர் அணிக்குத் தலைமை ஏற்க யார் தகுதியானவர், அரசியலிலிருந்து கருணாநிதி ஓய்வு பெறலாமா... என பல கேள்விகளுக்கான முடிவுகளைத் தெரிவித்திருந்தோம்... சர்வே முடிவுகள் வெளியான பிறகு அது குறித்து தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், அரசியல் ஆர்வலர்களும், வாசகர்களும் தங்களது பாராட்டுக்களையும் ஆதங்கங்களையும் கொட்டித் தீர்த்துவிட்டார்கள்.

ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் அத்துமீறலா...?

நள்ளிரவு பார்ட்டியில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் ஒருவர் அத்துமீறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதனை ப்ரியாமணி மறுத்துள்ளார். சி.சி.எல் எனப்படும் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் கொச்சியில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு அங்குள்ள ஸ்டார் ஹோட்டலில் விடிய விடிய உற்சாக பான விருந்து நடைபெற்றுள்ளது. பார்ட்டியில் பங்கேற்ற ப்ரியாமணி, அதிகாலையில் தனது அறைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி, ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து, கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாகவும், ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு விட்டு தப்பியதாகவும் கேரள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

- பாபா டூ சந்திரமுகி - ரஜினி எழுதிய புத்தகம்!உண்மை இருந்ததால் வெளியிடவில்லை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கனடா நாட்டின் இயல் விருது பெற்றிருக்கிறார். இதற்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ரஜினி அழைக்கப்படிருந்தார்.
எஸ்.ராமகிருஷ்ணன் ரஜினியின் நெருங்கிய நண்பர். பாபா படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய ராமகிருஷ்ணனின் இலக்கிய விருது நிகழ்ச்சிக்கு வருகை தந்து பெருமை சேர்த்தார் ரஜினி. விழாவில் ரஜினி பேசும்போது ”பாபா படத்தில் நடிக்கும் போது சில தகவல்களுக்காக எழுத்தாளர் சுஜாதாவை நாடினேன்.

பிரேமலதாவும், சசிகலாவும் நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?


Sasikala, Jayalalitha and Premalatha Vijayakanth
சென்னை: தேமுதிக மீது முதல்வர் ஜெயலலிதா திடீரென கடும் கோபம் அடைய என்ன காரணம் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பரவலமாக நம்பப்படுவது என்னவென்றால், சசிகலாவும், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நெருங்கிய நட்பு பாராட்டி வருவதுதான் என்கிறார்கள்.
எப்போது அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணி குறித்த செய்திகள் பரவத் தொடங்கியதோ அப்போதே ஏற்பட்டு விட்டதாம் சசிகலா, பிரேமலதா விஜயகாந்த் நட்பு. இருவரும்தான் முதலில் பேசி நட்பை உருவாக்கி, கூட்டணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பியவர்களாம்.

லைசென்ஸ்கள் ரத்து:சட்டப் போராட்டத்திற்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறி, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 122 உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளதை அடுத்து, இதை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன; சட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனாலும், "இதனால் பெரிய அளவில் பயன் எதுவும் கிடைக்காது' என, சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்- அமெரிக்காவில் தீவிர சிகிச்சை!


Yuvraj Singh
டெல்லி: இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நுரையீரல் கட்டி காரணமாக சிகிச்சை பெற ஒரு மாதத்துக்கு முன்பு யுவராஜ் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், யுவராஜ் சிங்கிற்கு இருப்பது நுரையீரல் கட்டி அல்ல புற்றுநோய் என உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து தற்போது போஸ்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

ஜெயலலிதா விஜயகாந்த் மோதல் பின்னணி முற்றிலும் கோணலான முதல் கோணல்

தி.மு.க.,வும் அதன் ஆதரவு வட்டாரமும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே ஆவலுடன் எதிர்பார்த்த, அ.தி.மு.க. - தே.மு.தி.க. உறவு விரிசல், சங்கரன்கோவில் இடைத் தேர்தல் விவகாரத்தில், முச்சந்தியில் வைத்து ஒரேயடியாக உடைக்கப்பட்டு விட்டது.

சட்டசபைத் தேர்தலில், அ.தி. மு.க., கூட்டணியில் தே.மு. தி.க., இடம் பெற்றது, அந்த கூட்டணிக்கு மிகவும் வலு சேர்ப்பதாக இருந்தது. அதனால், அக் கூட்டணியை எப்படியும் உடைத்திட, அ.தி.மு.க.,வில் அதிகார மையமாக செயல்பட்ட ஒரு தரப்பும், தி.மு.க.,விலேயே உட்பகையை, ஊதி வளர்க்கும் ஒரு ஊடகத் தரப்பும் பெருமுயற்சி மேற்கொண்டன. சட்டசபைத் தேர்தலின் போதே, ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒன்றாக சேர்ந்து பிரசாரம் செய்யட்டும் பார்க்கலாம்; அப்படி செய்தாலே அந்த கூட்டணி உடைந்துவிடும் என, தி.மு.க., தரப்பினர் வெளிப்படையாகவே மேடைகளில் பேசினார்கள்.

பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு...தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்

சென்னை: எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன்,
ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சனி, 4 பிப்ரவரி, 2012

சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி சிபிஐ நீதிமன்றத்தில்


Subramanya Swamy
டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.

கலைஞர்: மதச்சார்பற்ற முற்போக்கு கட்சியோடுதான் கூட்டணி!

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொள்வோம் என கருணாநிதி கூறினார்.
பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு கருணாநிதி அளித்த பதில்:
பொதுக்குழு கூட்டத்தில் திமுகவின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை எழுந்ததா? கலைஞர்

சீனாவின் silk route ஆராய்ச்சியும் இலங்கையும்




உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா.
பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது.

திமுக : யாரும் தோற்கடிக்கவில்லை நாமாக தோற்றோம்

சென்னை: திமுக பொதுக்குழு நேற்று சென்னையில் கூடியது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
திமுக ஒரு பெரும் தோல்வியைச் சந்தித்து, பெற்றிருந்த அரசை இழந்து விட்டு மேலும் நம்முடைய தமிழ் உணர்வையும், தமிழ் கலாசாரத்தையும், தமிழ் பண்பாட்டையும் இழந்து விடுவோமோ என்கிற அச்சத்தின்பாற்பட்டு இயங்குகின்ற இந்தக் கால கட்டத்திலும் இது பொதுக் குழு அல்ல, பொது மாநாடு என்று சொல்கின்ற அளவிற்கு உணர்ச்சிப் பெருக்கோடு  குழுமியிருக்கிறீர்கள்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக நீங்கள் காட்டுகின்ற ஆர்வமும், விறுவிறுப்பும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. ஒருவரையொருவர் சந்திக்கும்போது சோர்வுற்ற நிலையில் சந்திக்காமல், அந்தச் சந்திப்பு அஞ்சாதே, அடுத்து நாம் தான் என்று சொல்கின்ற அளவிற்கு அமைந்திருப்பதை சென்னையில் மாத்திரமல்ல, நான் சென்று வருகின்ற சுற்றுப் பயணத்தில் கூட உணர்ந்திருக்கிறேன்.

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடக்க தயாநிதியே காரணம்:BJP

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்ததற்கு, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதியே மிக முக்கிய காரணம். இந்தியாவின் மிகப்பெரிய "2ஜி' ஊழலுக்கு காரணமான, தயாநிதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவும் பரிந்துரை செய்துள்ளது. ஆனாலும், சி.பி.ஐ., அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என, தெரியவில்லை என்று, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா: தமிழ்நாட்டில் படிக்கும் பிற மொழியினரும் தமிழ் கட்டாயம் படிக்கவேண்டும்

""தமிழகத்தில் படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களும், தமிழ்மொழிப் பாடத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும். கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்பட மாட்டாது,'' என, முதல்வர் ஜெயலலிதா திட்டவட்டமாக கூறினார்.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்
கோபிநாத்-காங்கிரஸ்: ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளை ஒட்டிய தமிழகப் பகுதிகளில், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருதை தாய் மொழியாகக்கொண்ட மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கட்டாயம் தமிழ் படிக்க வேண்டும் என்ற சட்டத்தின் காரணமாக, சிறுபான்மை மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள், படிக்க முடியாமல் திணறுகின்றனர்.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

நெருங்கி பழகிய தோழிகள் தற்கொலை சேலம்


சேலம் நகரில் உள்ள கருங்கல்பட்டி, கலைஞர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் பக்கத்தில் உள்ள ஒரு ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி (வயது 33). இவர்களுக்கு சத்தியா (வயது 15) என்ற மகளும், சதீஸ் (வயது 13) நடேசன் (வயது 8) என்ற இரண்டு மகனும் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஈஸ்வரி சேலம் மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவர்களின் ஒரே மகள் சிந்து (வயது 24) பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
பக்கத்து பக்கத்து வீடுகளில் உள்ள சுந்தரியும் சிந்துவும் மிகவும் நெருங்கி பழகி வந்துள்ளனர். எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வார்கள். எதை வாங்கினாலும் இருவரும் ஒன்று போலவே வாங்குவார்கள்.