திங்கள், 6 பிப்ரவரி, 2012

இறுதிசடங்குக்கு பொருள் வாங்கி வைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி

வறுமையை சமாளிக்க முடியாததால் இறுதிச் சடங்குக்கான பொருட்களை வாங்கி வைத்துவிட்டு கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.'
ராமநாதபுரம் காட்டுபிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவரது மனைவி ஜோதி(47). 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முருகேசனுக்கு ஒரு கால் ஊனமடைந்தது. இதனால், வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பம் வறுமையில் வாடியது.

இதனால் மனமுடைந்த முருகேசன், அவரது மனைவி ஜோதி இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். இதன்படி இன்று அதிகாலை இருவரும் பூச்சி மருந்தை குடித்தனர்.
காலையில் நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் வந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் முருகேசன், ஜோதி இறந்து கிடந்தனர்.


தகவலறிந்த ராமநாதபுரம் பஜார் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

முருகேசன் இறந்து கிடந்த இடத்தில் ஒரு கடிதம் இருந்தது. அதில், ‘எனக்கு கால் ஊனமானதால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. ஆகவே தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் இன்றி எனது மனைவியும் வாழ மறுத்துவிட்டார். எனவே நாங்கள் இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்து கொண்டோம்’ என எழுதப்பட்டிருந்தது.

மேலும் வீட்டில் இறுதி சடங்குக்கு தேவையான தேங்காய், மண் பானை, ஊதுபத்தி, நெல், ஆப்பிள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துள்ளனர். தம்பதி தற்கொலை சம்பவம் ராமநாதபுரம் மக்களை சோகத் தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: