ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

பிரபு தேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு...தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு ஏமாற்றிவிட்டு ஓடினார்

சென்னை: எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன்,
ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.

பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.

எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.

பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.

எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆநால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறி, கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகு, சமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.

பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும், இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: