வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதா, தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என,

சென்னை : "உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: போலி ஜாதி சான்றிதழை கொடுத்து, அரசு பணியில் சேர்ந்து விட்டார் என்ற காரணத்தை காட்டி, ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது தி.மு.க., அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது. அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. ஐ.ஏ.எஸ்., பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்து சான்றிதழ்களை சரிபார்ப்பதும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பு. அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். பின் பழி வாங்கப்பட்டு அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது. அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றுள்ளனர்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட 400 கோடி ரூபாய் என்னவாயிற்று? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழி வாங்கப்படுகிறார்? இதை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? இதற்கு கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

சதீஷ் - chennai,இந்தியா
2010-08-05 21:11:31 IST
இவர் இரும்பு மனிதர். வருங்கால இளைய தலைமுறைகளுக்கு வழிகாட்டி...... நேர்மை நியாயம் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை அறிய அனைத்து அரசு அதிகாரிகளும் இவரிடம் பயிற்சி எடுத்துகொள்ளவேண்டும்....
குமார் - Chennai,இந்தியா
2010-08-05 21:05:28 IST
உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும் மஞ்சத்துண்டு பற்றியும் மக்களுக்கு தெரியும். இது எல்லாம் நம் தலை எழுத்து......
maru - thanjavur,இந்தியா
2010-08-05 19:10:02 IST
world is round, selva ganapathy become rajya sabha MP of DMK, uma shankar suspended by dmk, Supported by Jaya. now ppl tell who is supporting corruption KK or Amma,....
kumar - hyderabad,இந்தியா
2010-08-05 18:03:42 IST
திரு உமா சங்கர் அவர்களே தங்கள் நேர்மை பற்றி அனைவற்றுக்கும் தெரியும். நேர்ருக்கடி வரும் போது முதலில் பலிகடா ஆவது நேர்மைதான். ஆனால் இறுதி வெற்றி நேர்மைக்கே. கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார். கவலை வேண்டாம். உங்கள் பணி மீண்டும் விரைவில் துவங்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெய் ஹிந்த். குமார்...
prabakar - singapore,ஸ்லேவாக்கியா
2010-08-05 17:45:44 IST
அம்மாவை முன்பு வருமான வரிதுரைனால் மாட்டிவிட்டதும் இவர்தான் அம்மாவுக்கு நினைப்பு இல்லை...
கர GOPALKRISHNAN - Tambaram,இந்தியா
2010-08-05 17:40:29 IST
ஆயிரத்து தொள்ளயிறது தொன்னுராம் வருடம் நான் ஹோசூரில் இருந்தேன் .. அப்போது உமாசங்கர் அவர்கள் அங்கு போஸ்டிங்கில் இருந்தார் .. ரேஷியன் கடைகளில் திடீர் சோதனை நடத்தி கையும் களவுமாக தவறுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன் .. இது ஒரு நல்ல வாய்ப்பு உமாசங்கர் .. உடனடியாக மத்திய அரசுக்கு சென்று மக்களுக்கு நேரடியாக பயன் அள்ளிக்ககூடிய ஒரு துறை தேர்ந்து எடுத்து அதில் உமது நேர்மையான பணியை தொடருங்கள் .....
Tamizhan - UAE,இந்தியா
2010-08-05 17:40:22 IST
அம்மா நீங்க கொஞ்சம் நிறுத்துங்க உங்களுக்கு பதிலடி நாளைக்கு கிடைக்கும் எங்க தலைவர்கிட்ட இருந்து. 4வருசமா எங்கம்மா போயிருந்தீங்க? நீங்க என்ன சொன்னாலும் தமிழ்மக்கள் நம்புவதற்கு இது பழங்கால பர்கூர் தொகுதி இல்லை....
A.Thirumalai - bahrain,இந்தியா
2010-08-05 16:38:09 IST
Mr. Public that is the v.good decition taken by j.j. compare with any other politicion. she is the only cheif minister teach the lesson to the govt. workers....
பப்ளிக் - Bangalore,இந்தியா
2010-08-05 15:56:18 IST
ஆமா.. உன்னோட ஆட்சியில மூணு லட்சம் பெற டிஸ்மிஸ் பண்ணினியே.. உன்ன என்ன சொல்றது?...
தி .எஸ் .பிரகாசம் - Camp......Singapore,இந்தியா
2010-08-05 14:49:37 IST
IAS/IPS அதிகாரிகளை அடிக்கடி இடம் மாற்றி பந்தாடுவதில் மு.கவும் , ஜேயும் ஒன்றுதான். இதில் மாயாவதி இன்னும் மோசம் . எனவே IAS/IPS அதிகாரிகளின் பனி நியமனம் மற்றும் மாறுதல் இனங்களுக்கு அந்தஅந்த மாநில கவர்னரிடம் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது....
revathi - madurai,இந்தியா
2010-08-05 14:38:27 IST
ஜாதியை ஒழிக்க பாடுபடும் அரசு சான்றிதழுக்கு முக்கியத்துவம் தருவதா?...
பைஜி bangkok - bangkok,இந்தியா
2010-08-05 14:05:28 IST
உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும் மஞ்சத்துண்டு பற்றியும் மக்களுக்கு தெரியும். இது எல்லாம் நம் தலை எழுத்து...
சக்தி - seoul,தென் கொரியா
2010-08-05 14:02:29 IST
வழக்கம் போல் கருணாநிதி அவர்கள் .. நீண்டடடடட பதில் எழுதுவார். ஆனால் இது சம்மந்தமாக ஒன்றும் சொல்லமாட்டார்.....
வாசன் - Khobar,செனகல்
2010-08-05 13:51:33 IST
ஒரு நேர்மையான அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, பணி நீக்கம் செய்தது, தி. மு. க அரசின் பழிவாங்கும் செயல் மற்றும் உள்நோக்கம் உடையது. போலி சான்றிதல் எல்லாம் கட்டு கதை என்பது உலகறிந்த உண்மை. இதன் முலம் தி.மு.க தன் சொந்த செலவில் தனக்கு தானே சூனியம் வைத்துள்ளது....
தஞ்சை.ஞான.ஜெயராஜ் - DubaiUAE.,இந்தியா
2010-08-05 12:22:39 IST
அந்தம்மா ஆட்சிகாலத்தில் அவருடைய அமைச்சர்மீதே இதே உமாசங்கர்தான் ஊழல் குற்றச்சாட்டு கண்டுபிடித்தார் !ஆனால் அந்தம்மா அவரை பழி வாங்கவில்லையே ? இதிலிருந்து தெரியவில்லையா யார் தலித்துகளுக்கு விரோதிஎன்று? மக்கள் அணைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்,இந்தமவுனம் தேர்தல் சமயத்தில் வெடிக்கும் ஆளும்கட்சிக்கு ஆப்பாக!!! தஞ்சை.ஞான.ஜெயராஜ்....
s.swaminathan - coimbatore,இந்தியா
2010-08-05 11:27:39 IST
Dear Madam, You know very well about Mr.Karunanidi. Regarding Mr. Umashankar I.A.S issue, it is common as for as Mr. Karunanidhi is in rulling. To put an end to all his atrocity, you are the only leader to pull him down from politcal as well as from ruling....
வி.கணபதி - Dubai,இந்தியா
2010-08-05 11:13:00 IST
தப்புதான் தாயே அவங்களா நீங்க மனிசுடுங்க ...சரி நீங்க இதுமாதரி யாரையும் இப்படி பன்னலைய...? நீங்க ஒழுங்க இருங்க மத்தவங்கள அப்புறம் குற்றம் சொல்லலாம் .....
THE BEST PERSON - ALLOVERWORLD,இந்தியா
2010-08-05 10:52:07 IST
Respected I.A.S. sirs, please come forward you need lead the people. How many years un-educated people rules in our motherland (i haven't mention the perfect persons)?. please please you do some best. I expect coming soon in our country politician all HONOURABLE I.A.S. equvalent studied persons. MY VOTE FOR YOU. jai hindh....
விட்டப் - chennai,இந்தியா
2010-08-05 10:44:33 IST
starting up three industries!!!!!! howmany crores they are getting ???? will it really going to help people?...
Michael - Singapore,ஸ்லேவாக்கியா
2010-08-05 10:39:40 IST
ரொம்ப பேசாதீங்க மேடம், உங்க ஆட்சி சுடுகாட்டு ஊழலை வெளிய கொண்டு வந்ததே இவர்தான்னு நெனைக்கிறேன்!!! உங்களுக்கே ஆபத்தா போய்டப் போறது......
மு அமானுல்லா - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-05 10:31:19 IST
அரசு கேபிள் டிவி எந்த நோக்கத்திற்க்காக தொடங்கப்பட்டது?. அதன் தற்போதைய செயல்பாடுகள் என்ன என்பதனை நம் முதல்வர் விளக்குவாரா?. நண்பர் சீனிவாசன் சொன்னது போல் உமாசங்கர் விஷயத்தில் அரசு ஊழியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். இந்த பகுதியில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக குரல் எழுப்பும் அரசு ஊழியர் வாசகர்கள் தங்கள் கருத்துகளை இதற்கும் பதிவு செய்யவேண்டும்....
vaithianathan - Muscat,பாகிஸ்தான்
2010-08-05 10:25:15 IST
தவறு யார் செய்தாலும் அதை விமர்சனம் செய்து கருத்து சொல்லவேண்டும். அதை விட்டு விட்டு சிலர் அறிவு கேட்டவர்கள் அம்மையார் அதை செய்தார்கள், இதை செய்தார்கள் என்று கருத்து சொல்வது முட்டாள்தனம். அம்மையாரை ஒப்பிட்டு பேசுவது அதைவிட முட்டாள்தனம். அம்மையார் தவறு செய்தார்கள் என்று இந்த கொல்லைக்கரர்களை ஆட்சியில் அமர்த்தினீர்கள்.இவர்களும் அதே தவறை எப்படி செய்ய முடியும்....
ezhil - thanjai,இந்தியா
2010-08-05 10:18:22 IST
இதற்க்கு உமாசங்கர் மட்டுமல்ல இந்திய மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய பணியாளர்களையும் பனி நீக்கம் செய்யப்படவேண்டும். ௨௦ வருடம் கண்டுபிடிக்காமல் என்ன செய்தார்கள்? ஏன் அவர் திருவாரூர் கலெக்டராக வைக்கும்போது கலைஞருக்கு தெரியாதா? இதற்கு கலைஞரும் பதில் அளிக்கவேண்டும். அரசு அலுவலர்களை பழிவாங்கும் போக்கு இந்தியாவின் நேர்மையான போக்கை மாற்றும் தமிழ்நாட்டிலும் மாவோயிஸ்டுகள் உருவாகும் நிலை கலைஞரால் ஏற்படும்....
siva - tirupur,இந்தியா
2010-08-05 10:16:41 IST
ஐ.எ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளே கொஞ்சம் உங்கள் தன்மான உணர்வை தட்டி எழுப்புங்கள். நீங்கள் ஒன்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் வேலைக்கு வரவில்லை. இன்றைய நிலையிலும் நம் நாட்டில் மிக உயரிய தேர்வில் வெற்றி பெற்று வந்துல்லிர்கள். உங்களைப்பற்றி உங்களுக்கே ஒரு உயரிய எண்ணம் வேண்டும். எதற்காக நம் நாட்டில் கேவலமானவர்களாக கருதப்படும் அரசியல் வியாதிகளுக்கு பயப்படவேண்டும்? இவ்வளவு படித்த நீங்களே பயபட்டால் படிக்காத சாமானியர்களின் நிலை? முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் தி.என்.சேசன் அவர்களை என்ன செய்ய முடிந்தது? திரு . உமாசங்கர் அவர்களே நீங்கள் பளிவாங்கபடுகிரிர்களா அல்லது நிஜமாலுமே தவறு செய்தீர்களா என்று தெரியாது. நீங்கள் நேர்மையானவர் என்று கேள்விபட்டிரிருக்கிறேன். உங்கள் நேர்மைக்கு நீதி கிடைக்கட்டும். சிவா. திருப்பூர்...
குமார் - coimbatore,இந்தியா
2010-08-05 10:07:14 IST
மக்கள் மேல அக்கறை இருக்கோ இல்லையோ. அவர எதிர்த்து கேள்வி கேட்க நீங்க ஒருத்தராவது இவளவு நாலா தாக்குபுடிச்சு இருக்கீங்களே..சந்தோசம். இளங்கோவன் வேற எக்கசக்கமா பேசிட்டாரு. நாளைக்கு இருக்கு தமிழ் கச்சேரி....
Jeeva - Chennai,இந்தியா
2010-08-05 10:02:34 IST
How come this lady assumes that people are having short memory? The same Mr.Umasankar I.A.S officer found the corruption of Mr.Selvaganapathi the then minister during ADMK's rule. No doubt Mr.Uma Sankar is one of the honest IAS officers. But, this lady kicked him during er tenure and now sheddding crocodile tears for him. The biggest joke is that Selva ganapathy is in DMK now. What is really happening? These dirty politicians expect all the well educated and qualified officers to keep quite which is always not possible! DMK is dirty and ADMK is the dirtiest. These people do not have any right to talk about Mr.Uma Sankar....
பிரேம்குமார் - Surat,இந்தியா
2010-08-05 09:19:55 IST
அம்மா அது நடந்து ஆச்சு ஒரு வாரம் ! திடீர்னு தலித்துகள் மேல் கரிசனமோ ?...
லியோ - paramakudi,இந்தியா
2010-08-05 07:57:32 IST
ர்ரொம்ப நடிக்காதே அம்மையாரே. நீ ஆட்சியில் இருந்தபோது எத்தனை பேரை பலி வாங்கின. நீ பண்ணாத எல்லாம் நாங்கள் மறந்துவிட்டோம் என்று நினைப்பா.ஆளை பாரு.நீ நன்றாக தான் கபட நாடகம் ஆடுற....
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-05 07:57:30 IST
இப்படி கொள்ளை அடிக்கத்தான் நாங்கள் வரி செலுத்தவேண்டுமா? மஞ்சத்துண்டாரே, ஜெயாவைக் குற்றம் காண்பதைவிட்டு ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உருப்படியாக பதில் சொல்லுங்கள்.? ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது? தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்? இப்படி கொள்ளை அடிக்கத்தான் நாங்கள் வரி செலுத்தவேண்டுமா? எவனோ திருடிஎடுத்துபோவான் எனத் தெரிந்தால் எவன் உருப்படியாக வரி கட்டுவான் ?...
saran - singapore,இந்தியா
2010-08-05 07:52:22 IST
உங்க ஆட்சில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த ஒரு அதிகாரிக்கு நீங்க ஆதரவு அறிக்கை விடுகிறீர்களா? என்ன ஆச்சர்யம்? சைடு மாறிட்டதா சிக்னல் வந்துடுச்சா? இல்ல நெஜமாவே திருந்திட்டீங்களா மேடம்?...
ரா.ப.குமார் - dindigul,இந்தியா
2010-08-05 07:46:02 IST
அறுபதாயிரம் கோடி ஊழல் பேர்வழியை பற்றி பேசினால் ஐயோ, தலித் என்பதால் குறை சொல்கிறார்களே என்று நீலிகண்ணீர் வடிப்பது, நேர்மையான தலித் அதிகாரி தன குடும்பம் சம்பாதிப்பதற்கு இடைஞ்சலாக இருந்தால் நடவடிக்கை, வழக்கு...யோவ் உனக்கு ...........
seenivasan - chennai,இந்தியா
2010-08-05 07:44:00 IST
இதற்க்கு அரசு ஊழியர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்...
மணி.வி - Chennai,இந்தியா
2010-08-05 07:42:36 IST
மஞ்சத்துண்டு காலத்தில்தான் ஐ ஏ எஸ் அதிகாரிகளைக் கொடுமைப்படுத்துவது தொடங்கியது. முதன் முதலில் பதவிக்குவந்த உடனே தலைமைச் செயலாளர் ராயப்பாவை அவர் படுத்தியபாடும், அவர் நீதிமன்றத்துக்குச் சென்றதும் முதல் அசிங்கம்.பிறகு படிக்காத அதிகரிகளைப் பழிவாங்குவது, 'வசூல்' பண்ணித் தருபவர்களுக்கு முன்னுரிமை என ஆரம்பித்து, இப்போது ஒரு நல்ல அதிகாரியான உமாசங்கரை 'ஊழல் சொந்த'ங்களின் நெருக்குதலுக்காக பந்தாடி வெளியேற்ற முயற்சிப்பதும் நாடறிந்த வரலாறு.ஜெயாவும் தவறு செய்தார்.ஆனால் தன் மந்திரிமீதே உமாசங்கர் புகார் சொன்னபோது கூட அவரை ஒன்றும் செய்யவில்லை.ஜால்ரா அதிகாரிகளும், கடைந்தெடுத்த அயோக்கிய திராவிடக் கட்சிகளும் உள்ளவரை இந்த அவலம் தொடரும்!...
ஆனந்த குமார் - திருச்சி,இந்தியா
2010-08-05 07:04:21 IST
அரசு கேபிள் டிவி நிறுவனம் என்பது ,அரசு பணத்தில்,குடும்பம் ஒற்றுமை கண்டது .இது மிக பெரிய சாதனை அல்லவா .இதை ஒரு பெரிய விசயமாக விளம்பரம் செய்கிறார இந்த அம்மையார் . இதை மலை போட்டு எனக்கு பாராட்டு விழா எடுத்த என் உடன்பிறப்புகள் ஆகிய கேபிள் டிவி ஒபெரடோர்கள் ஒன்றும் சொல்லாத பொது இந்த அம்மையாருக்கு என் இந்த பொறமை .எதை பற்றி நான் அன்னை சோனியா ,பிரதமற்கும் கடிதம் ஏழுதி ,இலங்கை தமிழர் பிரச்சனை திறத்தார் போல் திர்கபடும்...
சாமி - bangkok,டோகோ
2010-08-05 06:56:49 IST
சரியா சொன்னிங்கம்மா. நீங்க சொன்னதில எந்த குறைபாடும் இல்ல. ஆனா அந்த நானூறு கோடி வேணா முன்ன பின்ன இருக்கலாம். நாளைக்கு தலைவரே சொல்வாரு. சொந்த குடும்ப சண்டையை கூட பயன் படுத்தி மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு தானை தலைவர் மஞ்ச துண்டு உதாரணம். உமா சங்கர் எவ்வளவு நேர்மையானவர் என்று எல்லா மக்களுக்கும் தெரியும். அதே நேரத்தில் தானை தலைவரை பற்றியும் தமிழ் நாடு மக்களுக்கு தெரியும். இதை பற்றி பேசியதற்கு நன்றி....
லிங்கம் - Chennai,இந்தியா
2010-08-05 06:27:09 IST
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு ஜெயலலிதா அரசாங்கம் விளம்பரம் கொடுத்ததன் மூலம் பல லட்சங்களை விரயம் செய்ததாகச் சென்ற ஆட்சியைப் பற்றி கருணாநிதி கூறினாரே இன்று அரசு கேபிள் மூலம் மக்கள் வரிப்பணம் 400 கோடி விரையமாக்கப்பட்டிருக்கிறதே... ஏதாவது ’உருப்படியான’ பதில் இருக்கிறதா? கருணாநிதியைக், கருணாநிதி என்று கூறுகிறார்கள்.. புத்தர், ஏசு என்றெல்லாம் கூறமாட்டேன் என்கிறார்கள்...என் மகன்களை ‘அஞ்சா நெஞ்சன்’ என்றோ, ‘தளபதி’ என்றோ கூற மாட்டேன் என்கிறார்கள்... போன்ற ‘உளறல்கள்’தானா?...
உள்ளூர்வாசி - india,இந்தியா
2010-08-05 00:59:12 IST
ஐயோ..எப்ப பாத்தாலும் இதே மாதிரி தேவையில்லாத அறிக்கை தானா? சீக்கிரம் தேர்தல் வரபோகுது..இந்த ஊசிப்போன அறிக்கையால எதுவுமே ஆகாது.. மக்களெல்லாம் ரொம்ப விழிப்பா வேற இருக்காங்க..அந்த பக்கம் பாத்திங்களா? 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள்...மக்களோட உண்மையான ஆதரவு வேணுமுன்னா,மக்களுக்காக உண்மையா போராடுங்க.....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-05 00:52:27 IST
ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமைதான் தமிழ் நாட்டு மக்களின் தற்போதைய நிலைமை.கருணாநிதியின் குடும்ப சண்டை காரணமாக உருவான அரசு கேபிள் டீ வி,அந்த குடும்பங்கள் ஒன்றான பிறகு மூடப்பட்டுவிட்டது.இதற்கு செலவு நானூறு கோடி ரூபாய்.இது யாருடைய பணம்? இளிச்சவாயன் தமிழனுடையது.ஒரு குடும்பத்தை வாழ வைக்க ஏழு கோடி பேர் செத்து கொண்டு இருக்கிறார்கள். இது தான் தமிழகத்தின் நிலைமை. 2006 -இல் ஜெயலலிதா ஆட்சியே தொடர்ந்து இருந்தால் இந்த ஆப்பு அசைத்த குரங்கின் நிலைமை வந்திருக்காது....

சமூர்த்தி உத்தியோகத்தர் தனக்கு தானே தண்டனை வழங்கியுள்ளார்- மேர்வின்

பாம்பினால் கடியுண்டவரே அமைதியாக இருக்கும்போது சில கூத்தாடிகள் இங்கு களனி சம்பவம் தொடர்பில் கூத்தாடுகின்றனர்.  குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டியது நான் அல்ல.
அவர் தன்னைத்தானே கட்டிக் கொண்டதாக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை    நடைபெற்ற நீதித்துறை திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதியமைச்சர் மேர்வின் சில்வா இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், டெங்கு நுளம்புகளால் இந்நாட்டில் 200 க்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டுள்ள அதேவேளை 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நுளம்புகளின் தாக்கத்தினால் எனது உறவினரையும் இழந்துள்ளேன். அதனால் டெங்கு அபாயத்தை உணர்ந்தவனாகவும் இருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரையில் சிறுபிள்ளைகள் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன்.    அதனால் தான் இதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று துடிக்கிறேன்.
சமூர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டப்பட்டது. தொடர்பில் என் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் நான் அந்த அதிகாரியை மரத்தில் கட்டவில்லை.     டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் வேலைத் திட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அது தவறு என்பதை உணர்ந்ததாலேயே அவர் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்டதுடன் ஏனையவர்களுக்கும் முன்மாதிரியாக நடந்து கொண்டுள்ளார்.

தெலுங்கில் பெரியார் படம்:( இந்தி, மலையாளம் )சிறப்பு காட்சியில் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் வாழ்க்கை வரலாறு மூன்று வருடங்களுக்கு முன்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. பெரியார் வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக குஷ்புவும் நடித்து இருந்தனர். ஞானராஜ சேகரன் இயக்கிய இந்த படத்தை தயாரிக்க, தமிழக அரசு நிதி உதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.

பெரியார் படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கு பதிப்புக்கு கவிஞர் கதிபத்மராவ் வசனம் எழுதியுள்ளார். இந்தி, மலையாளம் மொழிகளிலும் டப்பிங் ஆகி வருகிறது.

தெலுங்கில் பெரியார் படம் வருகிற 9ஆம் தேதி ஆந்திரா முழுவதும் திரையிடப்படுகிறது. அன்றைய தினம் ஐதராபாத்தில் முக்கிய பிரமுகர்களுக்காக இப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

சத்யராஜ், குஷ்பு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, ஆந்திர முதல்வர் ரோசையா, கல்வி மாணிக்க வரபிரசாத் ஆகியோரும் சிறப்பு காட்சியில் பங்கேற்கிறார்கள்.

பெரியார் படத்துக்கான தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் பி.சுனில் வாங்கியுள்ளார். இவர் ஏற்கனவே மம்முட்டி நடித்த அம்பேத்கார் படத்தையும் வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறியதாவது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய பெரியாரின் வாழ்க்கையை ஆந்திர மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறேன். ஆந்திராவில் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்குமென நம்புகிறேன் என்றார்.

தலித்துகளுக்கு எதிரான போக்கை திமுக கடைப்பிடித்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்

உத்தப்புரம் முதல் உமாசங்கர் வரையிலான விவகாரம்:
டி.கே.ரங்கராஜன் கவலை


தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான போக்கை திமுக கடைப்பிடித்து வருவதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையில் இன்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது டி.கே.ரங்கராஜன்,  ‘’எல்காட் நிறுவன ஊழலை வெளிக்கொண்டு வந்தவரும், அரசு கேபிள் டிவியை தொடர்ந்து நடத்த முயற்சித்தவருமான
தலித் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை இடைநீக்கம் செய்தது நீதிக்கு புறம்பானது ’’என்றார்.
  மேலும்,  உத்தப்புரம் முதல் உமாசங்கர் வரையிலான விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் கவலை அளிக்கிறது.

தலித்துகள் விவகாரத்தில் தொடர்ந்து தமிழக அரசு விரோத போக்கை கடைபிடித்து வருவது கவலை அளிக்கிறது’’ என்றும்  
தெரிவித்தார் டி.கே.ரங்கராஜன்.

இளங்கோவன் பேச்சு கூட்டணியை வலுப்படுத்தாது-கருணாநிதி

தமிழகத்தில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்டம்', மாநில அரசின் திட்டம் தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திரா வீட்டு வசதி திட்டத்திற்கும், தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் வீட்டு வசதி திட்டத்திற்கும் இடையே உள்ள வி்த்தியாசம் கூடத் தெரியாமல், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவ்வாறு தவறான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, காங்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதி ரூ.45 ஆயிரம், மாநில அரசு வழங்குவது ரூ.15 ஆயிரம் தான். ஆனால் இத்திட்டத்துக்கு கருணாநிதியின் பெயரைச் சூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்று கேட்டிருக்கிறாரே?

பதில்: அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும் இருந்தவர். அவர் சொல்லுகின்ற திட்டம் வேறு, தமிழக அரசு அறிவித்துள்ள திட்டம் வேறு. இரண்டையும் புரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார். காங்கிரீட் வீடுகட்டித் தரும் திட்டம் என்று அவர் கூறுவது ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இருந்த இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டம் 1997-98ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும், வீடில்லாத ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஆதிதிராவிடர்கள் அல்லாத ஊரக ஏழை மக்கள் ஆகியோருக்கு இலவச வீடுகள் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்திற்கு 75:25 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் இந்திராகாந்தி அம்மையாரின் பெயரால் உள்ளத்திட்டம். இதற்கும் இப்போது இந்த ஆண்டு தமிழகஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

தற்போது இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் பற்றி ஆளுநர் உரையிலே கூறும்போது, இந்திரா வீடு வசதித் திட்டத்தின் கீழ் மட்டும் குடிசைகளை நமது மாநில அளவில் நிரந்தர இல்லங்களாக மாற்ற வேண்டும் என்றால், அதற்கும் இன்னும் 30 ஆண்டுகள் ஆகும்.

இந்த நிலையை நெஞ்சில் நிறுத்தி, முதல் கட்டமாக ஊரகப்பகுதிகளில் 21 லட்சம் வீடுகளில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் கூரை கொண்ட நிரந்தர இல்லங்களாக தமிழக அரசின் நிதியைக் கொண்டே மாற்றி அமைத்து, அவற்றை இலவசமாக அளிக்கும் மாபெரும் திட்டம் ஒன்றை இந்த அரசு வகுத்துள்ளது.

2010-2011ம் ஆண்டு தொடங்கி, இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு ஆண்டு காலத்தில் மண்சுவர்களால் ஆன 21 லட்சம் கூரை வீடுகளுக்குப் பதிலாக, நிரந்தர வீடுகள் இந்த அரசால் கட்டித் தரப்படும்.

இத்திட்டத்தின் முதல் ஆண்டான வரும் நிதி ஆண்டில், 3 லட்சம் நிரந்தர வீடுகள் ரூபாய் 1,800 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் கூரை வீடுகளே இல்லாத நிலையை உருவாக்கும் இந்த உன்னதத் திட்டம் கலைஞர் வீட்டு வசதித்திட்டம் என்று அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அது அறிவிப்போடு இல்லாமல் நிதிநிலை அறிக்கையிலும் கூறப்பட்டு நடைமுறைக்கும் வந்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செய்யப்படும் திட்டத்திற்கு கலைஞர் பெயரா? அது என்ன நியாயம்? என்றெல்லாம் இளங்கோவன் கேட்பது, கூட்டணியை வலுப்படுத்துகின்ற செயல் அல்ல, வலிப்படுத்துகின்ற காரியமாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஸ்டாலின ்பிரார்த்தனை தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில்

தூத்துக்குடி : துணைமுதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இன்று, தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பிரார்த்தனை நடத்தினார். தூத்துக்குடியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற துணைமுதல்வர் ஸ்டாலின், திருவிழாவையொட்டி இன்று புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்திற்கு வந்தார். அவரை பேராலய பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் வரவேற்றார். தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ், ஸ்டாலினுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்து அவர் மீது புனிதநீர் தெளித்து, அவருக்கு பனிமய மாதா உருவப்படத்தை வழங்கினார். அப்போது, ஸ்டாலினும் பிரார்த்தனை செய்தார். பேராலயத்தில் இருந்து பத்து நிமிடத்திற்குப்பின், வெளியே வந்த ஸ்டாலினுக்கு, அங்கிருந்த பக்தர்கள் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பதிலுக்கு ஸ்டாலினும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

நித்தியானந்தாவை வீட்டுக்கு அழைத்த எஸ்.வி. சேகர்!scoundrels

சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டு, போலீஸில் சிக்கி, 50 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவை பெங்களூரில் உள்ள பிடுதி ஆசிரமத்தில் நடிகரும் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் சந்தித்துப் பேசினார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா செக்ஸ் உறவு கொள்ளும் காட்சி வெளியானது. அந்தக் காட்சிகள் உண்மை என்றும் நிரூபணமாகின.இதைத் தொடர்ந்து போலீஸுக்குப் பயந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை இமாசல பிரதேசத்தில் போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்தார். பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் வழக்கம் போல தனது உபதேசத்தையும் ஆரம்பித்துவிட்டார். அவரை நடிகை மாளவிகா உள்பட ஏராளமான பெண்கள் இப்போது பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆசிரமம் மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.இந்நிலையில் நடிகர் எஸ்.வி. சேகர் எம்.எல்.ஏ. பெங்களூர் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்யானந்தாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது தனது ஆதரவை அவருக்கு தெரிவித்தார். மேலும் தொண்டை வலியால் அவதிப்பட்ட எஸ்.வி. சேகருக்கு நித்தியானந்தா ஹீலிங் தெரபி சிகிச்சை அளித்தாராம். இதில் அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகரிடம் கூறியதாவது:

நித்யானந்தா சாமிகளை கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு தெரியும். எனது நண்பர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களை விட அவர்கள் மனவருத்தத்தில் இருக்கும் சமயங்களில் சென்று பார்த்து ஆறுதல் கூறுவது எனது வழக்கம். அந்த அடிப்படையில் நித்யானந்தாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள் என்று அவரிடம் கூறினேன். லெனின் போன்றவர்களை உங்கள் சீடர்களாக எற்றுக்கொண்டதுதான் நீங்கள் செய்த தவறு என்ற அவரிடம் கூறினேன். எல்லாவற்றையும், சிரித்த முகத்துடன் பொறுமையாக கேட்டுக் கொண்ட நித்யானந்தா, 'சுமார் 200 நாடுகளில் ஆசிரமம் கிளைகள் உள்ளன. எந்தவொரு சீடரும் என்னை விட்டு விலகிச் செல்லவில்லை. கடந்த வாரம் நான் நடத்திய பூஜையில் 1 1/2 லட்சம் பேர் பங்கேற்றனர். வழக்கமாக வரும் கூட்டத்தைவிட இது 2 மடங்கு அதிகமாகும்'என்றார்.

நித்யானந்தாவால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. எனவே வழக்கில் இருந்து நித்யானந்தா மீண்டும் வருவார்..." என்றார்.'ரஞ்சிதாவுடன் உள்ள தொடர்பு குறித்து நித்யானந்தாவுடன் பேசினீர்களா?', என்று கேட்டதற்கு, "கேட்டேன். அதற்கு அவர், 'அந்த பெண்ணே மீது புகார் கொடுக்கவில்லை. இதற்கு மேல் அதில் சொல்ல என்ன இருக்கிறது' என்று கூறிவிட்டார்" என்றார் எஸ்வி சேகர்.

'சரி... ஆன்மீகவாதியான நித்யானந்தா ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்தது சரியா? இதை ஆதரிக்கிறீர்களா?" என்றதற்கு, "இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. முன்பு ரிஷிகளாக இருந்த பலரும் இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் ஆன் மீக பணிகளையும் செய்து வந்துள்ளனர். இதற்கு மேல் இந்த விஷயத்தில் நான் ஆழமாக சென்று கருத்து கூற விரும்பவில்லை.

அதே நேரத்தில் தனி அறையில் நடந்த ஒரு சம்பவத்தை ஆபாசமாக படம் பிடித்து வெளியிட்ட லெனின் செய்தது குற்றமில்லையா? சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை செல்போனில் படம் பிடித்தாலே ஜெயிலில் தள்ளுகிறார்கள். ஆனால் லெனின் செய்தது மிகப்பெரிய தவறு. அவரை போலீசார் கைது செய்யாதது ஏன்?" என்றார்.

நித்தியானந்தா சென்னைக்கு வராமல் தவிர்ப்பது ஏன்? இங்கு வருவதற்கு பயப்படுகிறாரா?, என்று கேட்டபோது, "தமிழ்நாட்டுக்கு அவர் வரவில்லை என்று கூற முடியாது.

சென்னையில் உள்ள பக்தர்கள் வீடுகளுக்கு வந்து தற்போது ஆசி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார். வெளிப்படையாக விழாக்களில் பங்கேற்பதை மட்டும் தவிர்த்து வருகிறார். விரைவில் அதுவும் நடக்கும். எனது வீட்டுக்கு வருமாறு அவரை அழைத்துள்ளேன். நித்யானந்தாவும் வருவதாக உறுதி அளித்துள்ளார்.பொதுவாக தமிழ்நாட்டில் கடவுள் எதிர்ப்பு என்பது ஆன்மீகவாதிகளின் மீதான தாக்குதலாக உள்ளது. நித்யானந்தா மீதான கோபத்தில் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு தங்கி இருந்து படித்து வந்த 50 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது..." என்ரார் எஸ்வி சேகர்.
 
பதிவு செய்தவர்: சிந்திக்கவும்
avaal started their white washing.s.v.segar says, fifty thousands students are living in nithya's ashram, what a huge lie? this lier is a member of state assembly too. sankarachchariyaar and nithy are same type of scoundrels.
பதிவு செய்தது: 05 Aug 2010 7:20 pm
நீ உன் மதத்தையோ கடவுள்ளை கை விடு படி சொல்ல வில்லை மதம் மாறவும் சொல்லவில்லை எங்கும் இரு சாமியாரை நம்பாதே அறிவு உடன் நடத்து கொள் .

பதிவு செய்தவர்: மனோ
பதிவு செய்தது: 05 Aug 2010 7:16 pm
சேகர் அவனா நீ

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைவு: பிரபா கணேசன் ஆளும் கட்சியில

திகாம்பரம், பிரபா கணேசன் ஆகியோர் அரசாங்கத்தில் இணைவு: பிரபா கணேசன் ஆளும் கட்சியில் இணையவில்லை: ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக்கட்சியின் நுவரெலிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆகியோர் இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.ஜனாதிபதியை இன்று முற்பகல் அவர்கள் சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்காக தாம் வாக்குகளை பெற்றுக்கொடுத்த போதும் அந்த கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதன் காரணமாகவே தாம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாக திகாம்பரமும் தெரிவித்துள்ளனர்தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் : பிரபா கணேசன்">
தமிழ் மக்களின் நலனினை கருத்திற் கொண்டே அரசாங்கத்துடன் இணைந்துள்ளேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரி வித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுங்கட்சியுடன் இணைந்ததன் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது

அஞ்சலியை நம்பி கருங்காலி ஆன களஞ்சியம்!

சுந்தரி எனும் பெயரில் அங்காடித்தெரு அஞ்சலியை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் மு.களஞ்சியம் தான்! தேவயானியின் மற்றொரு சகோதரர் மயூர் (நகுல் அல்ல) கதாநாயகராக நடிக்க களஞ்சியம் இயக்குவதாக இருந்த "சத்தமின்றி முத்தமிடு" படத்தில் சுந்தரியாக அறிமுகம் ஆக இருந்த அஞ்சலி, அந்தப்பட தி்ட்டம் ஆரம்பநிலையிலேயே கைவிடப்பட்டதால் "கற்றது தமிழ்" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், களஞ்சியத்தின் மீது உள்ள நம்பிக்கையில் "சத்தமின்றி முத்தமிடு" படத்தை அடுத்து அவர் இயக்குவதாக அறிந்த "வாலிபதேசம்", "என் கனவுந்தானடி" ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பூஜை போட்டிருக்கும் "கருங்காலி" படத்திலும் அஞ்சலியே நாயகி ஆகி இருக்கிறார். அஞ்சலியின் மார்க்கெட் உச்ச‌த்தை கணக்கில் கொண்டு கருங்காலியையாவது உடனடியாக இயக்கி தயாரித்து கல்லா கட்டிவிட வேண்டுமென ஜரூராக களம் இறங்கி இருக்கிறாராம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள களஞ்சியம்! அடடே!

நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவ காலங்களின் கடமைகளை

நல்லூர் கந்தசாமி கோயிலின் வருடாந்த உற்சவ காலங்களின் போது யாழ்.மாநகர சபைச் சமூகம் உள்ளிட்ட அனைவரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் கடமைகளை ஆற்ற வேண்டுமென பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண நல்லூர் கந்தசாமி கோயில் வருடாந்த உற்சவம் இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது. உற்சவ காலப்பகுதியில் யாழ்.மாநகர சபை மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய கடப்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ்.மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
vivek - chennai,இந்தியா
2010-08-05 08:38:05 IST
இதை நாங்கள் புகர் செய்ய எந்த நம்பர் போன் பண்ணுவது...
தஞ்சை தமிழன் - chennai,இந்தியா
2010-08-05 08:37:49 IST
நல்ல செய்திதான் ஆனால் வீடு உரிமையாளர் பற்றி யாரிடம் ( சம்பந்தப்பட்ட அதிகாரி) புகார் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்க வேண்டும். அப்படியே தெரிவித்தால் எத்தணை நாட்களில் விசாரணை செய்வார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும்....
ulagalanthan - chennai,இந்தியா
2010-08-05 08:31:04 IST
intha chattam mamoolukku illaiya...
iindian - dubai,யூ.எஸ்.ஏ
2010-08-05 08:29:17 IST
WHAT LAW? FIRST ARREST THE CORRUPTIVE EB OFFICIALS! ARREST THE CORPORATION OFFICIALS WHO GIVE TORTURE TO THE RESIDENTS AND HOUSE OWNERS. ARREST THE CORRUPTIVE POLITICIANS WHO IS RESPONSIBLE FOR THE PRICE HIKE AND POWER CUT! 1,00,000 CRORE RUPEES HAVE BEEN SWEALLOWED AND NO ACTION ! LAW TO PUNISH FOR CHARGING 100 RUPEES MORE ON ALMOST LEGIMATE THINGS?...
Sundar - Sydney,ஆஸ்திரேலியா
2010-08-05 08:17:23 IST
I agree with Lingam. Which landlord is giving receipt (or details) for the money they receive. Another useless law. These people can't enforce existing laws, or can't even fix existing loop-holes....
ராஜு - Maliya,குவைத்
2010-08-05 07:53:20 IST
நல்ல செய்தி, சொந்த வீடு உள்ளவங்க கொஞ்சம் பயபடுவங்கே, நேரயபேறு இப்படி அதிக மகதான் வசூல் பண்ணறாங்க...
binu - tirupur,இந்தியா
2010-08-05 07:52:07 IST
ஒரு வீட்க் ஒரு கனக்சன் எண்ட முறையில சாப்ள கொடுக்கணும் காமவுன்ட்ல 10 வீடு கட்டி ஒரு 3 ஸ்பைஸ் கனக்சன் வாங்கி எல்லா வீட்டுக்கும் கொடுகுதத் தான் திருப்பூர் வீட் உரிமையாளர்களின் வழக்கம் இதை அரஸ் கவனிக்கும...
குரு - Chennai,இந்தியா
2010-08-05 07:39:28 IST
சட்டம் எழுத்து அளவில் மட்டுமா?...
chandrasekaran - adambakkam,இந்தியா
2010-08-05 06:55:12 IST
நல்ல விஷயம் ,யாரெல்லாம் வாடகை வீட்டில் இருகிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் நல்ல விடிவு காலம். வரவேற்க வேண்டியவிஷயம்....
R .SREENIVASAN - CHENNAI,இந்தியா
2010-08-05 06:48:23 IST
முதலில் பவர் கட் இல்லாமல் செய்யட்டும் . பிறகு ஊழல் ஒழிக்கட்டும் அரசியல் அராஜகம் இல்லாமல் நல்ல ஆட்சி கொடுக்க முயற்சி செய்யவும் . பின் மக்களிடம் வரலாம்....
லிங்கம் - Chennai,இந்தியா
2010-08-05 06:38:37 IST
எந்த ஆதாரத்தோடு வீட்டுக்காரன் மேல் புகார் கொடுப்பது? அவன் என்ன ரசீது கொடுத்தா மின் கட்டணத்தை வசூல் செய்கிறான்? கண் துடைப்புக்கான அறிக்கை.. திமுக அரசின் வழக்கமான ஏமாற்றுத்தனம்... நம்புற அப்பாவிங்க நம்புங்கப்பா.......
சாமி - bangkok,டோகோ
2010-08-05 06:36:52 IST
அற்புதமான சட்டம். இதை முன்னாடியே செய்திருந்தால் நாங்கள் சந்தோஷ பட்டிருப்போம். ஆறு வருடத்திற்கு முன்பே நாங்கள் யூனிட்டிற்கு 7 ரூபாய் கொடுத்தோம், நாங்க சென்னையில் வாடகைக்கு குடியிருந்த போது. ஆனா மின்சார வாரியம் யூனிட்டிற்கு 2 .50 தான் ஒரிஜினல் கட்டணம் என்று சொல்கிறபோது எனக்கு என்ன சொல்வது என்றே தெரிய வில்லை. இந்த சட்டத்தை கண்டிப்பாக வரவேற்கிறோம். ஆனா இப்ப இருக்கிற நிலையில் வீடு ஓனர்கிட்ட எதாவது கேட்டா கிடைக்கிற கொஞ்ச கரண்டும் கிடைக்குமானு தெரியலையே....
raman - Ottawa,கனடா
2010-08-05 06:36:10 IST
only solution to this problem is, if a person rention say two units, then he should get seperate meter and connection for these two units. So that, tenant could directly pay the electricity bill....
குருநாதன் - Singapore,இந்தியா
2010-08-05 06:14:02 IST
இது எல்லாம் நடக்கிற காரியமா? அப்புறம் விட்ட காலி பண்ண சொல்லுவிங்க..., எல்லாம் எங்கள் தலை எழுத்து.......
ராஜன் குருநாதன் - Melbourne,ஆஸ்திரேலியா
2010-08-05 05:22:14 IST
This is a real fact, I have seen landlords claiming more than what they should on the Electricity Tariff. On the other note, Electricity board should also give their update "if you loose power for more than this much time - then you can claim this much from government"...
vaidya - sydneynsw2212,இந்தியா
2010-08-05 04:31:37 IST
வாடகையை நம்பி வாழ்வோருக்கு இந்த தண்டனை மிஹவும் கடுமையை இர்ருக்கிருது தமிழாண்டு மின் வாரியம் இதை ஆணுதப்பதுடன் ஆணுகவும்...
guna - Atlanta,ஜார்ஜியா
2010-08-05 03:48:15 IST
Good ... but அவுங்க திரும்ப வாடகைய அதிகம் பண்ணிடு வாங்க, இதுக்கு first "ஆப்பு" வைங்க.. அப்புறம் E B பில் வரலாம்..!!...
viki - Bangalore,இந்தியா
2010-08-05 02:39:46 IST
This is good that goverment take necessary actions against the house owners who are charging extra charges for electricity. But public should be bold enough to raise their voices against the house owners if they are charging extra for electricity.. Govt should also handle the cases seriously once it is reported .....
பாலாஜி - Chennai,இந்தியா
2010-08-05 02:38:17 IST
filing a complaint in court is impractical these days. may be the Electricity board should maintain a cell where public can report thew via phone, email sms and if possible online....
ram - singapore,இந்தியா
2010-08-05 02:10:57 IST
நல்லா காமெடி பண்றீங்க போங்க, குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிட்ட மாதிரி இருக்கு!!!...
R Gopalakrishnan - Aruppukottai,இந்தியா
2010-08-05 01:43:56 IST
95% of the owner in chennai are charging upto Rs 5 per unit............. God only will have to save us....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-08-05 01:28:35 IST
இது போல் எத்தனையோ டுபாக்கூர் சட்டங்கள் நம் நாட்டில் இருக்கிறதே? அதையெல்லாம் குப்பை தொட்டியில் தான் தேடவேண்டும்....
Satish Kumar - AdayarCHENNAI,இந்தியா
2010-08-05 01:15:43 IST
House owners wont give any receipt for anything, then how can we register the case??...
velmurugan - Chennai,இந்தியா
2010-08-05 01:12:12 IST
இது போன்ற பொதுமக்களுக்கு உபயோகமான செய்திகளை தினமலர் மட்டும்தான் கொடுக்க முடியும் ......செய்தி அளித்த மின்வாரியதிற்க்கும் பாராட்டுக்கள் ........
சரவணன் - delhi,இந்தியா
2010-08-05 00:40:43 IST
தமிழ் நாட்டுல மட்டும் தான் இந்த ரூல் உண்டா. டெல்லி ல கிடையாதா................
John Rose - Jeddah,செனகல்
2010-08-05 00:40:13 IST
First Reduce the price 1 Rs/ Unit up to 2000 Units. Then catch the power thieves. In Saudu arabia 60 Paise (Indian Paisa) per unit up to 2000 units. 2000 to 4000 units 1.20 Rs....
சரவணன் - USA,இந்தியா
2010-08-05 00:37:23 IST
ரொம்ப சந்தோஷமான செய்தி. எல்லா நேரமும் அரசியல்வாதிங்களையும்...சாமியாருகளையும் குட்ற்றம் சொல்லிக்கிட்டு இறுக்க முடியாது...நாமும் கொஞ்சம் திருந்தனும் ......

கொழும்பு ஆமர் வீதியில் நவீன ரக கமரா பொறுத்தப்பட்டுள்ளது

 
கொழும்பு ஆமர் வீதியில் வீதிச் சமிக்ஞைக்கு அருகாமையில் இன்று முதல் கமரா பொறுத்தப்பட்டு இயங்குகிறது.நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட இக் கமராவில் தொலைதூர கண்காணிப்புக் கருவிகளும் குறுந்தூர கண்காணிப்புக் கருவிகளும் 24 மணிநேரமும் செயற்பாட்டில் உள்ளன.

வீதி நடைமுறைகளை மீறுவோரை அவதானிப்பதற்காகவும் குற்றச் செயல்களைக் குறைப்பதற்காகவும் கொழும்பின் பிரதான வீதிகளில் கமரா பொறுத்தப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸ் தலைமையக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

திரையில் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டப் போகிறார்களாம். படம்: இரண்டு முகம்

முதல் முறையாக திரையில் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டப் போகிறார்களாம். படம்: இரண்டு முகம்.

ஊமை விழிகள், உழவன் மகன் படங்களை இயக்கிய ஆர் அரவிந்தராஜ் இயக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ் மற்றும் கரண் நாயகர்களாக நடிக்கின்றனர்.
சமீபத்தில் சென்னை ஆந்திரா கிளப்பில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு ரசிகர்களைக் கூட்டி வைத்திருந்தார்கள். பரத்வாஜின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் மற்றும் இயக்குநர் பாக்யராஜ் வெளியிட, விசி குகநாதன், பார்த்திபன், அனு ஹாஸன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் பேசிய கரண், "இந்தப் படத்தில்தான் ஒரு நிஜ அரசியல்வாதியின் கதையைக் காட்டியிருக்கிறார்கள். இதுவரை வேறு எந்தப் படத்திலும் இப்படி ஒரு கதையைப் பார்த்திருக்க முடியாது" என்றார்.
விழாவில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் பிரபலமாக இருந்த இரண்டு தலைவர்கள் மற்றும் கலைஞர்களின் படங்களை வைத்து பேனர்களை வைத்திருந்தார்கள். அவற்றில் ஒன்றில் விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும் இருப்பது போன்ற பேனர் இருந்தது.
இரண்டு முகம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடந்தது. பாடல்கள் அடங்கிய குறுந்தகடை நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் வெளியிட, நடிகர் டைரக்டர் பார்த்திபன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய பார்த்திபன்,

தப்பி தவறி ஒரு தயாரிப்பாளர் வந்தால், அவரை பூ போட்டு வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் தமிழ் பட உலகம் இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் வைத்தியலிங்க உடையார் படம் தயாரிக்க வரும்போது, அவரை வரவேண்டாம் என்று ஏ.எல்.அழகப்பன் தடுத்திருக்கிறார். அவர் தடுத்தும், தனது 40 வருட கனவை நிஜமாக்க வேண்டும் என்று இவர் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார்.
கஷ்டமோ, நஷ்டமோ சினிமாவில் இவை இரண்டையும் மீறிய சந்தோஷம் ஒன்று இருக்கிறது. அதனால் யாரும் யாரையும் தடுக்காதீர்கள்.

சத்யராஜபுக்கு இரண்டு முகம். ஒன்று, நடிப்பு முகம். இன்னொன்று நிஜ முகம். உலகம் முழுவதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன். அந்த லொள்ளு, அவருடைய வசன உச்சரிப்பு இதெல்லாம் இன்னொரு நடிகனுக்கு வருமா என்று தெரியவில்லை. இவர் ஒரு ஆண்டனி கிங். அவருடைய நிஜ முகத்தில் ஒரு சின்ன மழுப்பல் கூட இருக்காது.

தைரியம்தான் புருஷலட்சணம் என்று சொல்வார்கள். இந்த மனிதரின் லட்சணமும் அந்த தைரியம்தான். உலக தமிழர்கள் இடையே  புரட்சி தமிழன்' என்கிற பெயருக்கு ஒரு அர்த்தத்துடன் இருப்பவர் அவர். நடிப்பு இல்லாத அந்த நிஜ முகத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

ஒரு சில படங்களுக்கு மட்டும் திருட்டு சி.டி. வெளிவருவதில்லை என்ற தகவலை அறிந்த முதல் அமைச்சர், அதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். அந்த மாதிரியான தகவலை முதல் அமைச்சருக்கு கொண்டு சென்றவர்களுக்கும், அதற்காக நடவடிக்கை எடுத்த முதல் அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


இதுபற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், தன்னையும் ராமதாஸையும் எப்படி ஒப்பிடலாம் என கடுப்பாகிவிட்டது தனிக்கதை!
பதிவு செய்தவர்: இ வி ராமசாமி நாயக்கன்
பதிவு செய்தது: 04 Aug 2010 8:10 pm
அது வேற யாருமில்லை. நம்ம மரவெட்டி ராமதாஸ் தான் !!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: சத்யராஜ் ரசிகன்
பதிவு செய்தது: 04 Aug 2010 4:24 pm
என்னது விஜயகாந்தும் ராமதாஸைம் நண்பர்களா! அப்படின்னா எவர்கள பத்திய கதைதானா?
பதில் | அவதூறு குறித்து தகவல் தர

பத்மப்ரியா, எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பாருங்களேன்

உருகி உருகி காதலிப்பது போன்ற வேடத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக இருக்கிறது என்று கூறுகிறார் பத்மப்ரியா.

அழகு, நடிப்பு என சகலமும் நிறைந்த நல்ல நடிகை பத்மப்ரியா. ஆனாலும், இவரை தொடர்ந்தார் போல நான்கு படங்களில் கூட பார்க்க முடியாது. ஒரு படம் நடிப்பார். அடுத்து மலையாளத்திற்குப் போய் விடுவார். இல்லாவிட்டால் எங்குமே காண முடியாத நிலை ஏற்படும்.

இருந்தாலும் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார் பத்மப்ரியா. ஆச்சரியமாகத்தான் உள்ளது. நமக்கு மட்டுமல்ல, பத்மப்பிரியாவுக்குமே கூட இது ஆச்சரியமாக உள்ளதாம்.

இத்தனைக்கும் நான் கதைகளை பார்த்து பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். காமாசோமாவென்று நடிக்க எனக்குப் பிடிக்கவில்லை. பழசிராஜா, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படங்களில் நடித்த நல்ல மன நிறைவு இருந்தது. இப்படிப்பட்ட படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார்.

தற்போது பத்மப்ரியாவுக்கு காதல் மோகம் வந்துள்ளதாம். அதாவது காதல் படங்களில் நடிக்கும் மோகம். உருகி உருகி காதலிக்க வேண்டும், நீதான் என் உயிர் என்று காதலனின் காலில் விழுந்து கிடக்கும் காதலியாக நடிக்க வேண்டும். மரங்களைச் சுற்றி வந்து ஆடிப் பாட வேண்டும். இப்படிப்பட்ட ரோல்களில் நிறைய நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி சிரிக்கிறார்.

சரி தமன்னா போட்டியை சமாளிக்க தயாரா என்று கேட்டால், அதெல்லாம் கிடையாது. இன்று தமன்னா முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அது நிரந்தரமில்லையே, நாளை இன்னொருவர் வந்து உட்காரலாம். எனவே யாரும் டாப் என்று கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவரவருக்குரிய படம் அவர்களுக்குக் கிடைக்கும். இதில் போட்டியே கிடையாது என்று டபாய்த்தார்.

கிளாமர் போட்டியையாவது சமாளிக்க ரெடியா என்று கேட்டால், எனது உடல் வாகுக்கெல்லாம் கிளாமர் சரிப்பட்டு வராது சார். இதனாலேயே எனக்கு பல பட வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அதுகுறித்து நானும் கவலைப்படவில்லை. அதேசமயம், கிளாமருக்கு நான் எதிரியும் கிடையாது. பட விழாக்கள், பட புரமோஷன்களுக்கு கிளாமராக நான் வருகிறேனே.

எனது பலம் நடிப்புதான். அதை மட்டும் பாருங்களேன் என்கிறார் சினுங்கியபடி..!

ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைரெட் ஜெயண்டுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

படங்களை விநியோகம் செய்வது ஆர்யாவுக்கு புதிதல்ல. இப்போது அவர் படங்களை தயா‌ரிக்கவும் செய்கிறார். அவரது தி ஷோ பீப்பிள் படித்துறை படத்தை தயா‌ரித்து வருகிறது.

ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை சீனிவாசன் தயா‌ரித்து வந்தார். படம் சிறப்பாக வந்ததால் அப்படத்தை ஆர்யா வாங்கினார். இப்போது அந்தப் படத்தின் உ‌ரிமையை ரெட் ஜெயண்டுக்கு கைமாற்றப்பட்டுள்ளது.

இந்த அதிரடி வியாபாரம் காரணமாக படம் முடியும் முன்பே லாபம் பார்த்துவிட்டார் சீனிவாசன். அதேபோல் ரெட் ஜெயண்டுக்கு படத்தை விற்றதன் மூலம் ஆர்யாவுக்கும் கணிசமான லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் வீடுபுகுந்து பெண்ணை கற்பழி்க்க முயன்ற போலீச ஏட்டு கைது

நெல்லை: குடிபோதையில் வீடு புகுந்து பெண்ணைக் கற்பழிக்க முயன்ற ஏட்டு கைது [^] செய்யப்பட்டார்.

வீரவநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் நெல்லை [^] தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு பணி முடிந்து ஊருக்கு சென்ற இவர் அங்கு மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சந்தானம் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தார்.

சந்தானம் தச்சநல்லூரில் உள்ள ஒரு புரோட்டா கடையில் வேலை செய்து வருகிறார். அவரை நவநீதகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவர் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நவநீதகிருஷ்ணன் சந்தானம் மனைவி [^] பேச்சியம்மாளிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அவர் மறுக்கவே அவர் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தார்.

இதையடுத்து பேச்சியம்மாள் கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தப்பியோட முயன்ற நவநீதகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். அவருக்கு திருமண வயதில் மகளும், 2 மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: manithan
பதிவு செய்தது: 05 Aug 2010 1:20 am
கலைஞர் பதவி விலக வேண்டும்! காவல் துறை அவரது கையில் தானே உள்ளது! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது! அப்படி என்று நான் சொல்லவில்லை, ஜெயலலிதா தான் சொல்கிறார்! கயல் விழி அழ்கான பெயர்! தி.மு.க-வில் வாரிசு தொல்லை அதிகம் உள்ளது, கட்சியில் பாடுபடுபவனுக்கு ஒரு மயிரும் இல்லை!

பதிவு செய்தவர்: ஆச்சர்யம்
பதிவு செய்தது: 04 Aug 2010 11:31 pm
ஏட்டு அம்மாம் பெரிய தொப்பைய தூக்கிட்டு அதுக்கு மேல பஜனை செய்ய துணிந்ஜான்னா அவனை கூப்பிட்டு மாலை போட்டு ஒரு பாராட்டு விழவில்ல நடத்தனும்.

தி.மு.க., ஆட்சி மீது இளங்கோவன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' என, ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் பேசினார்.

அவர் பேசியதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்., தான்.

எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.

குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

கடத்தப்பட்டதன் பின்பு விடுவிக்கப்பட்டுள்ள இரண்டு மாணவிகள்



இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்டதன் பின்பு விடுவிக்கப்பட்டுள்ள ஹட்டனைச் சேர்ந்த  இரண்டு மாணவிகள் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி ஹட்டன் நகரில் வான் ஒன்றில் கடத்தப்பட்ட இந்த இரண்டு மாணவிகளும் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் கம்பளை சிங்கஹபிட்டிய பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கண்ட பிரதேசவாசி ஒருவர் 119 அவசர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கம்பளை பொலிஸார் இவர்களை மீட்டு விசாரணைக்கு உட்படுத்தியதோடு கம்பளை வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளனர்.
வர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய கம்பளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி முஹித்த அப்பு ஆராய்ச்சி, இந்த மாணவிகளின் உடல்களில் ஆயுதங்களால் தாக்கப்பட்டமையால் ஏற்பட்ட  சிறு காயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்கள் ஹட்டனிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்கின்ற  மாணவிகள் ஆவார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டதாக கருதப்படுகின்ற இரண்டு மாணவிகளும்  பொலிஸாருக்கு தெரிவித்துள்ள தகவல்களின்படி,
கடந்த 2ஆம் திகதி காலை வேளையில் பாடசாலைக்கு ஹட்டன் நகரூடாக வந்து  கொண்டிருந்தபோது அவர்களிடத்தில் நெருங்கி வந்த வயோதிப பெண்ணொருவர் ஏதோ முகவரி ஒன்றினைக் கேட்டுள்ளார். அதன்போது திடீரென அந்த வயோதிப மாது மயக்கமுற்றதுபோல  கீழே விழ எத்தனித்துள்ளார்.
இதன்போது அந்த வயோதிபப் பெண்ணை இந்த மாணவிகள்  கைகளால் தாங்கி கொண்டிருந்தபோது அவ்விடத்தில் திடீரென வான் ஒன்று வந்துள்ளது. வானில் உள்ளே இருந்தவர்கள் உடனடியாக அந்த வயோதிபப் பெண்ணை வானினுள் ஏற்றுமாறு கூறியுள்ளனர்.
அப்போது வானுக்குள் அந்தப் பெண்ணை ஏற்றும்போது குறிப்பிட்ட மாணவிகளை வானில் இருந்தவர்கள் உள்ளே இழுத்து மூக்குக்கருகில் திரவமொன்றினை நுகரச்செய்ததாகவும் அதன் பிறகு தாம் மயக்கமுற்றதாகவும் மயக்கம் தெளிந்தபோது புரியாத இடமொன்றில் தாம் இருந்ததாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக கம்பளை மற்றும் ஹ்ட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.www.tamil.dailly.lk

வருகிறது 'சோலார் சுனாமி'! சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு


லண்டன்: சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.

'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

(போட்டானுடன் கூடவே வெளியேறும் இன்னொரு சூரிய துகள் நியூட்ரினோ. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)

சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். (super heated gases தான் பிளாஸ்மா).

இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.

இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.

இந் நிலையில் சூரியனின் வட பகுதியில் இன்னொரு மகா வெடிப்பு நடந்திருக்கிறது. சூரியனில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் அகலமே நமது பூமியின் அளவைவிட பெரியது என்கிறார்கள்.

பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் கடந்த ஜூலை 31ம் தேதி பதிவு செய்துள்ளன.

இதனால் கிளம்பிய கதிர்வீ்ச்சுக்களும் மின் காந்த அலைகளும் சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பரவியுள்ளன.

இதற்கு சோலார் சுனாமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  Read:  In English 
நமது காற்று மண்டலத்தின் உபயத்தால் இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதி்ப்பு ஏதும் இருக்காது என்றாலும் சில செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே நேரத்தில் இன்று இரவு இந்த மின்காந்த கதி்ர்வீச்சுக்கள் பூமியை அடையும்போது அதன் துருவப் பகுதிகளில் (ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள்) Auroa Borealis எனப்படும் மாபெரும் பல நிற வெளிச்சம் உருவாகும். வானில் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நீளும் இந்த வெளிச்சம், பூமியை மின் காந்த அலைகள் தாக்குவதின் எதிரொலி தான்.
பதிவு செய்தவர்: நித்தியானந்தா
பதிவு செய்தது: 05 Aug 2010 1:45 am
சுனாமி எல்லாம் என்னை ஒன்னும் செய்யாது... என்னோட பாதுகாப்புக்குத் தான் 'காண்டம்' இருக்கே...!!! ஐ மீன் 'கோஹினூர்' காண்டம்...!!!

பதிவு செய்தவர்: மக்களே உஷார்
பதிவு செய்தது: 05 Aug 2010 12:32 am
நம் தலைக்கு மேல் வினாடிக்கு கோடி அணுகுண்டுகளை வெடித்து கொண்டிருக்கும் சூரியனிலிருந்து என்று வேண்டுமாளாலும் ஒரு சிறு நெருப்பு கோலம் நம் பூமியும் மீது வந்து விழலாம் . நம் வாழ்க்கை மட்டும் இல்லை நாம் வாழும் பூமியின் வாழ்கையும் நிரந்தரமற்றது. இவளோ அறிவு வளர்ந்த இந்த மனித இனம் ஒரு வினாடியில் அழிந்து விடும். மனித இனத்தை இன்னொரு இடத்தில பாதுகாக்க வேண்டும்.

பாரதிராஜா மீது அமீர் கடும் தாக்கு

இயக்குனர்கள் சங்கத்தின் 40வது ஆண்டு விழா அறிவிப்பு பாரதிராஜமற்றும் சங்க நிர்வாகிகளால் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்டது.அப்போது நிருபர் ஒருவர் சீமான் கைது குறித்து அவர்களிடம் கேட்டார். சீமான் தனது அரசியல் கட்சிக்காக பேசி சிறை சென்றிருக்கிறார். இதற்கும் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பதிலளிக்கப்பட்டது.பாரதிராஜதலைவராக இருக்கும் ஒரு சங்கத்திடமிருந்து இப்படியொரு பதில் வந்தது உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் பாரதிராஜாவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக தாக்கியிருக்கிறார் அமீர்.பிரபல அரசியல் இதழுக்கு பேட்டியளித்த அவர், தேர்தல் நேரத்தில் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என இயக்குனர்கள் மேடையில் முழங்குவதற்கு எந்த எதிர்ப்பும் தெ‌ரிவிக்காதவர், இப்போது மட்டும் சீமானின் பேச்சை கட்சி அரசியலாகப் பார்ப்பது ஏன் என்று கே‌ள்கி எழுப்பியுள்ளார்.மேலும், ஒரு வருடத்துக்கு மௌனம் காப்பதாகக் கூறிவிட்டு கருணாநிதி கலந்து கொண்ட விழாவில் அவருக்காக மௌனத்தை கலைப்பதாக பாரதிராஜ கூறியதையும் மறைமுகமாக தாக்கியுள்ளார். பாரதிராஜாவை சந்தர்ப்பவாதி என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.இறுதியாக, ஈழத் தமிழர்களுக்காக போராடும் தலைவர்களை இனியும் திரைத்துறையில் தேடாதீர்கள் என அவர் அறிவுரையும் கூறியுள்ளார

TNA னர் அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் பேசிவருகின்றனர் : முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்!

அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவருகின்றனர் : முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்!

 
அறுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவருகின்றனர். இது காலத்தினையுணர்ந்த செயற்பாடல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
”நிலம் பறிபோவது பற்றியும், குடியேற்றம் பற்றியும் சிலர் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவதால் ஏதாவது நடந்திருக்கிறதா? அதற்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனவா?” என்று கேள்வி எழுப்பினார்.
“மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதே அரசியல்வாதிகளது கடமையாக இருக்க வேண்டிய சூழலில், தேசியம் பேசுவதும் வீண் பேச்சுப் பேசுவதும் எதனையும் தந்துவிடப் போவதில்லை.
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்திடமிருந்து பெறக் கூடியவற்றைப் பெற்றுக்கொள்வதுதான் இப்போது தேவையாகும். பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவருவதைப்போல் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தலைகீழாக நின்றாலும் இணைக்கப்படப் போவதில்லை. அவ்வாறு இணைப்பதாக இருந்தாலும் கிழக்கு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடந்தால் முஸ்லிம்களும் சிங்களவர்களும் எதிர்த்துத்தான் வாக்களிப்பார்கள்.
முஸ்லிம்களுடன் பேசிவருகிறோம் என்று கூட்டமைப்பு கூறுகிறது. கல்முனை நகர சபையில் பெரும்பான்மையான ஆதிக்கம் முஸ்லிம் காங்கிரஸிடமும் கூட்டமைப்பிடமும் உள்ளன.
அங்கு ஏற்பட்ட வர்த்தக நிலையத் தகராறைக்கூட அவர்களால் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் எவ்வாறு முஸ்லிம்கள் உதவுவார்கள் என நம்பமுடியும். எம்மால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிகள் செய்வோம்” என்றார்.

கவுண்டர் சம்மதித்தால் தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான புதிய வில்லன்

கவுண்டமணி பழையபடி சென்னை தி.நகர் அலுவலகத்திற்கு தினமும் விசிட் அடிக்க ஆரம்பித்து விட்டார். மாலை‌நேர மொட்டை மாடி வாக்கிங்கும் உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன தன்னை இறந்து விட்டதாக செய்தி கிளப்பி விட்ட ஆசாமிகள் யார்? யார்? என்பதை சுற்றம் மற்றும் நட்பின் மூலம் ஆராய்ந்து வரும் கவுண்டர், மீண்டும் பழைய பொலிவுடன் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டவராக பளீச் என்று தோற்றமளிக்கிறார். கூடவே, மொட்டைத் தலையுடன் புதிய கெட்-அப் வேறு. கவுண்டர் சம்மதித்தால் தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான புதிய வில்லன் ரெடி! என்கிறது விவரமறிந்த கோலிவுட். 16 வயதினிலே படத்திலேயே வில்லன்தானே காமெடி கவுண்டர்.

தமிழினியை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு

மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவு ;தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு மகளிர் பிரிவு தலைவியான தமிழினி தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்ததன் பின்னர் தமிழினி வவுனியாவில் வைத்து குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக குற்றப்புலனாய்வு காவல்துறையினர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாததில் 723 புலிகள்கைதுமக்களிடம் இருந்தும் தகவல்

723 புலி உறுப்பினர்கள் உட்பட 1562 பேர் ஒரு மாதத்தில் கைது. பிரதமர் ஜயரட்ண

இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 1562 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் டி.எம்.ஜயரட்ண நேற்று செவ்வாய்க்கிழமை சபைக்கு அறிவித்தார்.இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து கைது செய்யப்பட்ட 723 விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழான அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய கைது செய்யப்பட்ட 765 பேரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 74 பேரும் இதில் அடங்குவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கைதில் இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் உள்ள மக்களிடம் இருந்தும் புனர்வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களிடம் இருந்தும் கிடைத்த தகவல்களுக்கு அமைய நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் விடுதலைப்புலிகள் அமைப்புக்குச் சொந்தமான ஆயுதங்களும் நாசகார உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.அதேபோல் கிடைக்கும் இந்த தகவல்களைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களையும் இனங்கண்டு அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கைது செய்யப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களுக்கு அமைய கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்டு வரும் வீடுகள், காணிகள், பல்வேறு வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிடமுள்ள சொத்துகளை அரச உடைமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எந்திரன் விழாவில் மலேசிய அமைச்சர் சுப்ரமணியம் அவமரியாதை அதிர்ச்சி

கோலாலம்பூரில்: நடந்த எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் மலேசிய நாட்டு அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக மலேசியத் தமிழர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது தமிழக அரசு டாக்டர் சுப்ரமணியத்திற்கு உரிய கெளரவத்தையும், மரியாதையையும் கொடுத்திருந்த நிலையில், ஒரு சினிமாப் பட விழாவில் அமைச்சர் சுப்ரமணியம் அவமரியாதை செய்யப்பட்ட செயல் கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக மலேசிய தமிழர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

கோலாலம்பூரில் எந்திரன் பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது. தமிழகத்தில் நடத்தாமல் இதை மலேசியாவில் நடத்தப் போவதாக செய்திகள் வெளியானதால், தமிழகத்திலேயே கூட திரையுலகினர் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த நிலையில் புத்ரஜெயா மாநாட்டுக் கூடத்தில் நடந்த பிரமாண்டமான ஆடியோ விழாவில் மலேசிய நாட்டு தமிழர் தலைவரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு விழாவில் அவமரியாதை நடந்துள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அவரை மேடையில் அமர வைக்கவில்லை. மாறாக பார்வையாளர் வரிசையில் உட்கார வைத்து விட்டனர். அது போக, விழாவின்போது பலரும் பேசினர். ஆனால் சுப்ரமணியம் மட்டும் பேச அழைக்கப்படவில்லை.

தங்கள் நாட்டுக்கு வந்து விழாவை நடத்தி விட்டு, தங்களது அமைச்சரையே அவமதிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடந்து கொண்டிருப்பதாக மலேசியத் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

comments:
subra சொன்னது…    நான்தான் ஏற்கனவே சொன்னேன் மலேசியா
    தமிழனுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும்
    இவர்களின் வரவால் கீறல் விழ போகிறது என்று
    அது நடந்து விட்டது ,வாழ்த்துக்கள் தமிழர்களே .
    எபோதான் திருந்த போகிறிர்களோ ??????????
    4 ஆகஸ்ட், 2010 5:25 pm