திங்கள், 23 ஜனவரி, 2023

ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு ! இது “கேவலமான செயல்” என்று துருக்கி குறிப்பிட்டுள்ளது.

 bbc.com  :  ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று துருக்கி தெரிவித்துள்ளது.
ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வருகிறது.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் இப்போது அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறுகிறது.

திருச்சி அருகே தொழிலதிபர் வீட்டில் 300 சவரன் நகைகள் கொள்ளை

 maalaimalar.com : திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரில் வசித்து வருபவர் தொழிலதிபர் நேதாஜி. இவரது தம்பி தேவேந்திரன். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
தேவேந்திரனின் மகன் நிச்சயதார்த்த விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதற்காக குடும்பத்தினர் அனைவரும் திருச்சிக்கு வந்துவிட்டனர்.
இந்நிலையில், நேதாஜியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்,
300 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.

ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக

 tamil.oneindia.com  -  Vigneshkumar  : பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு நடந்து வரும் நிலையில், சில மாதங்களில் அங்குத் தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள நிலையில், அங்கு இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும் இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.
கர்நாடக தேர்தல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ FBI அதிரடி சோதனை...!

தினத்தந்தி  : வாஷிங்டன், அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.
அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து கோரவிபத்து-3 பேர் உயிரிழப்பு அரக்கோணம் கீழவீதி திரௌபதி அம்மன் கோயில்

 நக்கீரன் : அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரக்கோணம் கீழ்வீதியில் திரௌபதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ராட்சத கிரேன் மூலம் சாமிக்கு மாலை செலுத்து முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், பலத்த காயமடைந்த முத்து, பூபாலன், ஜோதிபாபு ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் வென்றார் அசீம்

 மாலைமலர் : சென்னை: பிக்பாஸ் சீசன் 6 போட்டி மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
இந்த சீசனில் 3 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தேர்வாகினர்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோருக்கு இடையே போட்டி தீவிரமானது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி 6-வது சீசனின் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது.
இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடம் விக்ரமனுக்கும், மூன்றாவது இடம் ஷிவினுக்கு வழங்கப்பட்டது.

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி- காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி .. இடைத்தேர்தல்..

maalaimalar :  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு பதிலாக எனது இளைய மகன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் இருந்தது.

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் - வாதாட 15 நிமிடம்தான் கொடுக்கப்படுகிறது

BBC :  எனக்கு மரண தண்டனை அளித்துவிட்டார்கள், ஆனால் இது அம்மாவுக்கு தெரிய வேண்டாம்"
 இரானில் அரசுக்கு எதிரானவர்கள் என்று குற்றம்சாட்டப்படுபவர்கள்  தங்களது தரப்பு நியாயங்களை முன்வைப்பதற்காக  சொந்த வழக்கறிஞர்களை பெறுவதற்கு உரிமை இருக்கிறது.
ஆனால் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோர்களுக்கு இந்த உரிமை வழங்க படுவதில்லை.
ஏற்கனவே அதிகாரிகள் தயார் செய்த பட்டியலில் இருந்துதான் அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் பத்திரிகையாளர்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே உண்மையிலேயே நீதிமன்றத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை, நீதிமன்றம் சார்பில் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட காட்சிகளின் மூலமே நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

கடவுள் நம்பிக்கையோடு பொருத்தப்பட்ட எக்ஸ்ட்ரா கோட்பாடுகள் God With Extra Fittings.. வாழ்வியல் சிந்தனைகள்

ராதா மனோகர் : எமது அடிமனதில் பல பல ஆண்டுகளாக விதைக்கப்பட்டு எம்மோடு பிரிக்கவே முடியாத வாறு உருவாகிய எண்ணங்களில் முக்கியமானது கடவுள் நம்பிக்கை.
இந்த கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனியாக ஒரே ஒரு எண்ணமாக இல்லை .
இதனோடு கூடவே ஏராளமான இதர எக்ஸ்ட்ரா நம்பிக்கைகளும் பின்னி பிணைந்தே வளர்ந்து விட்டிருக்கிறது.
இவற்றில் பல நம்பிக்கைகள் ஒன்றோடு ஒன்று மிகவும் முரண்பட்ட எண்ணங்களாக உள்ளது.
பல முரண்பாடுகள் நிறைந்த பல விதமான நம்பிக்கைகளின் கூட்டு சாம்பாராக ஒட்டு மொத்த கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் எமது தலையில் சுமக்கின்றோம்.
அனேகமாக எமது வாழ்வின் குழப்பங்களுக்கு இந்த சாம்பார்தனமான நம்பிக்கை கோட்பாடுகள்தான் காரணம்,
இதை விளங்கி கொள்வது இலகுவல்ல. கடவுள் என்று நாம் கருதிக்கொண்டு இருக்கும் கடவுள் ஏழைகளில் மிகவும் விருப்பம் கொண்டவர்.,

தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணம்!

 bbc.com- பிரமிளா கிருஷ்ணன் :  தமிழ்நாடு அரசின் கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் - அதிகாரிகளின் 'அட்மிசன் அடி' காரணமா? - BBC News தமிழ்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிறுவன் கொலையானதாகச் சொல்லப்படும் சம்பவத்தை அடுத்து, அந்த இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பணிபுரிந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
சிறுவனின் மரணத்திற்குக் காரணமான அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த கூர்நோக்கு இல்லம் குறித்து அங்கு முன்னர் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பிபிசி பேசியது.

India: A Modi Question (Documentary) மோடியை பற்றி பி பி சி தயாரித்த ஆவணப்படம் .. தேடி தேடி முடக்கப்படுகிறது ..

 மோடியை பற்றி பி  பி சி தயாரித்த India: A Modi Question (Documentary) என்ற ஆவணப்படம் சங்கிகளால் தேடி தேடி முடக்கப்படுகிறது .. இதுதான் அந்த ஆவணப்படம்  மோடியின் முகபாவங்களை பாருங்கள்   குரூரம் வெளிச்சமாகிறது

சனி, 21 ஜனவரி, 2023

EVKS இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத்திற்கு ஈரோடு கிழக்கில் வாய்ப்பு கிடைக்குமா?

 மின்னம்பலம் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் வாய்ப்பு கேட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி, மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட கோரி அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

தேனீர் குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் வங்காள பெண்

தேனீர் குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்

மாலை மலர் :  மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி. 76 வயதான இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார்.
இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலைசெய்து அந்த வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார். அப்போது வேலை செய்யும் இடங்களில் தரப்படும் மீந்துபோன உணவை, வீட்டுக்கு எடுத்துவந்து பிள்ளைகளுக்கு கொடுத்துவந்துள்ளார்.

பாஜக வழங்கிய அதிமுகவின் பன்னீர்செல்வம்

ஆலஞ்சி மு மன்சூர் :  கேவலம் ..30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது ..
சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் ..
சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் .. ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை..
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை
அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்..
மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார்  அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது ‍..
இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது

மல்லிகார்ஜுன கார்கே : 6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக!

hindutamil.in  6 காங்கிரஸ் அரசுகளை திருடிவிட்டது பாஜக - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
பதான்கோட்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. இந்த யாத்திரை நேற்று முன்தினம் பஞ்சாபில் நடைபெற்றபோது பதான்கோட் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே பாஜகவின் குறிக்கோளாக உள்ளது. மக்கள் நலனுக்காக எதையும் சிந்திக்கவோ செயல்படுத்தவோ இல்லை.
ஆறு காங்கிரஸ் அரசுகளை அவர்கள் திருடிவிட்டனர். எங் களுக்கு உத்தரவு வழங்கிய 6 மாநிலங்களை அவர்கள் திருடினார்கள். அவர்களிடம் அதிகாரம் உள்ளது, மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் சதி செய்து எங்கள் கட்சியினரை அழைத்துச் சென்றனர். இந்திய ஒற்றுமை யாத்திரையில் பல்வேறு தரப்பை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இணைகின்றனர். யாத்திரையின் வெற்றியை கண்டு பாஜக அஞ்சி நடுங்குகிறது.

நடனமாட மறுத்த சிறுமி; பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியபீகார் இளைஞர்கள்

 நக்கீரன்  : நடனமாட மறுத்த சிறுமி மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி மாவட்டத்தில் பகுவரா என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அப்பகுதி இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர். மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அங்கிருந்த 10 வயது சிறுமியை தங்களுடன் நடனமாட வற்புறுத்தியுள்ளனர்.
சிறுமி மற்றும் அவரது தோழிகள் இதற்கு மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறுநாள் காலை அச்சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் பொழுது, அவரை சாலையில் இழுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டி? தகவல் பரவி வருகிறது.

 மாலைமலர் : ஈரோடு  கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மலையகத்தில் நுவரெலியா நானுஓயாவில் பேருந்து விபத்து: 7 பேர் மாணவர்கள் உயிரிழப்பு - 51 பேர் காயம்!

hirunews.lk  :   நுவரெலியாவில் கோர விபத்து: 7 பேர் பலி - 51 பேர் காயம்!
நுவரெலியா - நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு பேரூந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பு தேஸ்டன் பாடசாலையின் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேரூந்து, நுவரெலியாவில் இருந்து நானுஓயாவுக்கான ரதெல்ல குறுக்கு வழியில் கொழும்பை நோக்கி பயணித்துள்ளது.
இந்த பேரூந்து நானுஓயா குறுக்கு வீதியில் கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள வளைவு ஒன்றில் பயணித்த போது, அதன் தடையாளி உரிய வகையில் இயங்காமையால் டிக்கோயா பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்றுடன் மோதியதுடன், அதற்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடனும் மோதி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு இடைத்தேர்தல்- காங்கிரஸ் மேலிட முடிவுக்காக காத்திருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மாலைமலர் : இளங்கோவன் மிக மூத்த காங்கிரஸ் தலைவர். மத்திய மந்திரி, எம்.பி., மாநில தலைவர் என்று பல பதவிகளையும் வகித்தவர் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 8 ஆயிரம்தான்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளரை இறுதி செய்யும் பணிகளை தமிழக காங்கிரஸ் மேலிடம் தொடங்கி உள்ளது.
கட்சி நடைமுறைப்படி வேட்பாளர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்ப வேண்டும். டெல்லி மேலிடம் வேட்பாளர் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
 மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை களம் இறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார்.. அதுவும் முதல்வராக இருந்த காலத்தில் . அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன்

Narayanaperumal Jayaraman 
: முதல்வராக இருந்த காலத்தில்...
அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் கஷ்டப்பட்டார் என அவரோடு இருந்த அதிகாரி சுவாமிநாதன் எழுதி இருக்கிறார்!
அண்ணா இறந்த பொழுது,
நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் ரூபாய் 5000 மட்டும்  கையிருப்பு இருந்ததாக தகவல்!
எழுத்தாளர் ஜெயகாந்தன், அண்ணா நீங்கள் எழுதுவது சிறுகதையே அல்ல என்று விமர்சித்தது கூட, ஆம் என்று ஒப்புக் கொண்ட பெருந்தகை மனிதர்!
நேரு ஒரு முறை நான்சென்ஸ் என்று சொன்னபோது..  
"அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம், நாங்கள் கொட்டிக்கிடக்கிற செங்கல்!
என நாகரிக வார்த்தை மட்டுமே பயன்படுத்தினார்.
19 வருட பிரிவில், பெரியாரை விமர்சித்தது கிடையாது!
இவர்களின் விரல்களை நருக்குவேன் என்று சொன்ன காமராஜரை கூட... குணாளா குலக்கொழுந்தே என்றுதான் கூறியிருக்கிறார்!
ஈவிகே சம்பத், தோழர் அண்ணாதுரை என்று கூறிய போது கூட, "வைரக் கடுக்கன்" காது புண்ணாகி விடும் என்று கழட்டி வைத்திருக்கிறேன் என்றவர்!

ஈரான் பெண்ணுரிமைக்கு ஆதரவான இளைஞர்களு தூக்கு! வாதாட 15 நிமிடம்தான் - பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்

BBC :  ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள  மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான  HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக  மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது
தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65-ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார்.

நடிகை வன்னிதா : பிக்பாஸில் ஜெயிக்கிறதுக்கே வி சி க இவ்வளவு அராஜகம்னா, தேர்தல் வரும் போது என்னலாம் செய்வாங்க?

 மின்னம்பலம் christopher :  : திருமாவளவனுக்கு எதிராக கேள்வி எழுப்பிய நடிகைக்கு மிரட்டல்?
விக்ரமனுக்கு ஆதரவாக ட்விட்டரில் வாக்கு கேட்ட விசிக தலைவர் தொல் திருமாவளவனை, நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து இருந்தார்.
இதனையடுத்து குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த சிலர் தன்னை மிரட்டுவதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது.
21 நட்சத்திர போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அசீம், அமுதவாணன், நந்தினி, விக்ரமன், ஷிவின் ஆகியோர் என 5 பேர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வந்தடைந்தது

 மாலைமலர் : ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.
இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.
காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.

வியாழன், 19 ஜனவரி, 2023

வசூலை குவிக்கும் தென்னிந்திய சினிமா - வசூலில் தள்ளாடுகிறதா பாலிவுட்?

வாரிசு, துணிவு

bbc.com : புத்தாண்டு தென்னிந்திய சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக தொடங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் வெளியான வாரிசு, துணிவு, வால்டர் வீரய்யா, வீர சிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வசூலை வாரிக் குவித்து வருவதால் இந்தி திரையுலகம் திகைத்துப் போய் நிற்கிறதா? சமீபத்திய வெற்றியைக் கொண்டு பாலிவுட் திரையுலகத்தை தென்னிந்திய திரையுலகத்துடன் ஒப்பிட முடியுமா?
இந்திய எல்லை தாண்டி, சர்வதேச அளவில் இந்திய சினிமா என்றாலே இந்தி  சினிமா என்று அடையாளப்படுத்தப்பட்ட காலம் மாறி வருகிறது. குறிப்பாக, பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகம் மீதான உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றிவிட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டி

 மாலைமலர் : முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து இந்த தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.