வெள்ளி, 20 ஜனவரி, 2023

ஈரான் பெண்ணுரிமைக்கு ஆதரவான இளைஞர்களு தூக்கு! வாதாட 15 நிமிடம்தான் - பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படுகிறார்கள்

BBC :  ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள  மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனமான  HRANA - வின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொகமத் மெஹ்தி கராமி என்னும் 22வயது கராத்தே வீரர் கடந்த ஜனவரி 7ஆம் தேதி தூக்கிலிடப்பட்டுள்ளார். பிபிசியின் பாரசீக  மொழி சேவையிடம் பேசிய சிலர், மரண தண்டனை விதிக்கப்பட்டது
தொடர்பாக தன் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்கு அவருக்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
அவர் கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து சரியாக 65-ஆவது நாளில் மொகமத் மெஹ்தி கராமி தூக்கிலிடப்பட்டார்.


தங்களது சுதந்திரத்திற்காகவும், ஈரானின் மதகுரு ஆட்சியிலிருந்து விடுபடுவதற்காகவும் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இரானின் அதிகார மையங்கள் எப்படி செயல்படுகிறது என்பதற்கு  மொகமத் மெஹ்தி கராமின் கதை ஓர் உதாரணம்.

கருத்துகள் இல்லை: