சனி, 21 ஜனவரி, 2023

பாஜக வழங்கிய அதிமுகவின் பன்னீர்செல்வம்

ஆலஞ்சி மு மன்சூர் :  கேவலம் ..30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது ..
சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் ..
சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் .. ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை..
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை
அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்..
மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார்  அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது ‍..
இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் தான் போட்டியே .. இனி இவர்களே நினைத்தாலும் பாஜக உத்தரவில்லாமல் இவர்களால் 
கட்சியை நடத்த முடியாது .. ஜெயலலிதா மரணம் அதன் முடிச்சுகள் அவிழும் போது அதன் காரணிகள் வெளிவரும் போது பாஜகவின் சதி விளங்கும் ..
அழிவின் விளிம்பில் அதிமுக இனி தமிழகத்தில் அது செல்லாகாசு ..
பன்னீர் எனும் பரம அயோக்கியரும்,  எட்ப்பாடி பழநிசாமி எனும் துரோகியும் தமிழினத்திற்கு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்கள் .. வேலைவாய்ப்பில், கல்வியில் உரிமையில் என செய்தவை எல்லாம் சரிசெய்ய சிலகாலம் பிடிக்கும் .. மக்கள் மன்னிக்கவே கூடாத வஞ்சகர்கள் இவர்கள்.. சுயநலத்திற்காக அதிகாரத்திற்காக  காட்டிகொடுக்க தயங்காதவர்கள்..காட்டி கொடுத்தவர்கள் நிறைய கருத்து வேறுபாடு இருந்த போதும் அதிமுக கட்சி தமிழ்நாட்டு வரலாற்று மெல்ல அப்புறபடுத்து செயல் வருத்தமளிக்கிறது ..
..
ஒரு இயக்கத்தின் தலைவன்
எப்படி இருக்கவேண்டும் வரும் தலைமுறைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் சரியான தலைவனை இனம்காட்டி முறைபடுத்த வேண்டும் ..அதை திமுக செய்தது.. அதிமுக தலைமை அதை செய்ய தவறியது அடிமைத்தனத்தையும் காலில் விழுந்தால் பதவி என்ற நிலையையும் உருவாக்கி நல்ல தலைவர்களை உருவாக்க தவறிவிட்டது..
கொள்கைக்காக இயங்கும் கட்சிக்கும், கேளிக்கை, சுயநலத்திற்கு நடத்தபடும் கட்சிக்கும் இதுதான் வேறுபாடு ..
நல்ல தலைவனை அடையாளம் காட்டினார் தலைவர் கலைஞர் .. ஆனால் அதிமுக தலைமையோ அடிமைகளை தயாரித்தது ..
விதைத்ததே விளையும் ..

கருத்துகள் இல்லை: