புதன், 4 ஜனவரி, 2023
'மக்கள் ஐ.டி.' தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் 12 இலக்க எண்ணுடன் ...
ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட 'மக்கள் ஐ.டி.' வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.
இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் அடையான எண் ஒதுக்கி அரசே பராமரிக்கும்.
இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆந்திரா பிரிவினைக்கு காரணமாக இருந்த சந்திரசேகர ராவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்- அமைச்சர் ரோஜா
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திரசேகர ராவ் தனது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தற்போது பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி என தேசிய கட்சியாக மாற்றி உள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி ஆந்திராவில் 150 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சியை ஆந்திராவிற்குள் அனுமதிக்க கூடாது. மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திராவை 2-ஆக பிரித்து அநீதி இழைத்து விட்டார்.
காங்கிரஸ் எம் எல் ஏ திருமகன் ஈ வெ ரா மாரடைப்பால் உயிரிழப்பு! ஈரோடு கிழக்கு ஈ வி கே சம்பத்தின் மகன்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ வெ ரா சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களாக அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் ஆவார். இவரின் திடீர் மறைவு காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏசி பெட்டிக்குள் 60 லட்சம், 200 ஏக்கர்: மாஜி அமைச்சர் சம்பத் தலைமறைவு?
மின்னம்பலம் - Aara : அதிமுக முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்திடம் கடந்த ஆட்சியில் உதவியாளராக இருந்து வந்த குமார் குடும்பத்தினருக்கும், அமைச்சர் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சினை நேற்று (ஜனவரி 2) மோதலாக மாறியது.
பிரச்சினை பண்ருட்டி காவல் துறைக்கு போனதால், அமைச்சர் எம்.சி. சம்பத்தின் அண்ணன் தங்கமணி மற்றும் உறவினர் பால்காரர் பழனி, கள்ளிப்பட்டு ராஜேந்திரன் மற்றும் பத்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ராஜேந்திரன் மற்றும் ராதா இருவரை நேற்று இரவு கைது செய்த பண்ருட்டி போலீஸார் மற்றவர்களையும் தனி டீம் போட்டுத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் 10 பேர் என்ற அடிப்படையில் 2 ஆவதாக முன்னாள்
அமைச்சர் சம்பத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் போலீசார். ஏ2வாக சம்பத்
பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.
உங்களை உள்ளே விட்டால் ஊரே நாசமாயிடும்' : பா.ஜ.க-வை அடித்து விரட்டிய கிராமம்: கோவையில் நடந்தது என்ன?
கோவை மாவட்டம் அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது காந்தி காலனி பகுதி. இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இப்பகுதியைச் சேர்ந்த சிலர் பா.ஜ.க கட்சியில் அண்மையில் இணைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் பகுதியில் பா.ஜ.க கட்சியின் கொடிக் கம்பத்தை வைக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கொடிக் கம்பம் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் இரவு நேரத்தில் கொடிக் கம்பத்தை வைத்துள்ளனர்.
செவ்வாய், 3 ஜனவரி, 2023
ரகுநாதன்( பாண்டே) காலமானார்! (பிகார் ரங்கராஜன் தந்தை) கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பாஜகவிற்கு பரிணாம வளர்ச்சி
![]() |
![]() |
Surya Xavier : திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் இந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த வீடே ரகுநாதன் வீடு.
இதன் அருகில் உள்ள வீட்டுக்காரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் கே.கே.பெருமாள் ராஜா.அந்த வீட்டின் மேலே அரிவாள் சுத்தியல் பொறிக்கப்பட்ட அடையாளம் உள்ளது.
ரகுநாதனின் மகன் ரங்கராஜ். இளைஞராக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
அவர் திருவில்லிப்புத்தூர் நகராட்சியின் வார்டு உறுப்பினருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டார்.
அது சரி யார் அந்த ரங்கராஜ் என்பது தானே உங்கள் கேள்வி?
திருவில்லிப்புத்தூரில் ரங்கராஜ் என்று இருந்து
இன்று யூடியூப்பராக இருக்கும் ரங்கராஜ் பாண்டே தான்.
தொங்கிய உறுப்புகள்.. காரில் தரதரவென இழுத்துச்செல்லப்பட்ட பெண்! தெரிந்தே செய்த கயவர்கள்! ஷாக் பின்னணி
tamil.oneindia.com - Shyamsundar : டெல்லி: டெல்லியில் கார் ஏற்றி தரதரவென இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவரை கார் ஒன்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு தர தரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டு அன்று அதிகாலை வேலை முடித்துவிட்டு 2 மணிக்கு திரும்பிய அஞ்சலி என்ற பெண்தான் டெல்லியில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கஞ்சவாலா என்ற சாலையில் கடை வைத்து இருக்கும் தீபக் டாஹியா என்ற நபர்தான் இந்த சம்பவத்தை நேரில் பார்த்து இருக்கிறார். புத்தாண்டு தினத்தின் அதிகாலை என்பதை அவர் கடையில்தான் தூங்கி இருக்கிறார்.
காயத்ரி ரகுராம் : படுக்கை அறையில் கேமரா வைப்பது கேவலமான விஷயம்" - அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!
மின்னம்பலம் - கலை : வீடியோ, ஆடியோ இருப்பதாக அண்ணாமலை மிரட்டுகிறார், ஒருவரின் படுக்கை அறையில் கேமராவை வைப்பது எவ்வளவு கேவலமான ஒரு விஷயம் என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் காட்டமாக பேசியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம்22ம் தேதி பாஜகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து காயத்ரி ரகுராம் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக கூறி 6 மாதம் அவர் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் இன்று(ஜனவரி 3) காலை காயத்ரி ரகுராம், பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன் என்று அறிவித்தார்.
உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து நேற்றுடன் 313-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
கஞ்சிபாணி இம்ரான் & கூட்டாளிகளை உடனே கைது செய்து நாடு கடத்துங்கள்.. முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
![]() |
![]() |
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளைப் பார்த்து, சட்ட விரோதச் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழ்நாடுதான் என்று சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களும், தீவிரவாதிகளும் முடிவெடுத்து விட்டார்களோ என்ற ஐயம் மக்களிடையே நிலவுகிறது எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் ஓபிஎஸ்.
டெல்லியில் காரில் இளம்பெண்ணை நிர்வாண நிலையில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம்
தினத்தந்தி : டெல்லியில் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்ணை நிர்வாண நிலையில் காரில் 13 கிலோமீட்டர் இழுத்து சென்ற கொடூரம் நடந்து உள்ளது. குடி போதையில் கார் ஓடியதாக 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
டெல்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டெல்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது.
அந்த பெண்ணின் உடைகள் காரின் சக்கரம் ஒன்றில் சிக்கியதால் விபத்து நடந்துள்ளது.
ஐந்து பேர் காரை நிறுத்துவதற்குப் பதிலாக, உடலை 13 கிமீ வரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது
பிரிட்டிஷ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் என்னென்ன? - பட்டியலிட்டு மோடிக்கு முரசொலி பதிலடி !
![]() |
பாரம்பர்யம் என்ற பெயரால் பெண்களும், ஏழைகளும், எளிய மக்களும், ஒடுக்கப்பட்ட கிடந்தார்கள், அதில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியில் சட்டபூர்வமான விடுதலைக்கு வழி அமைக்கப்பட்டது என்பதை அறியலாம்.
'குறுகிய கண்ணோட்டத்தில் வரலாற்றை அணுகக் கூடாது' என்று சொல்லி இருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், அதே குறுகிய கண்ணோட்டத்தையே தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சீக்கிய குருவான குருகோவிந்த சிங்கின் நினைவைப் போற்றும் வகையில், பேசிய பிரதமர் அவர்களது உரையில், அவர் எதைச் சொல்ல முன்வந்தாரோ, அதனையே அவர் எதிரொலித்தும் இருக்கிறார்.
திங்கள், 2 ஜனவரி, 2023
பணமதிப்பழிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் முழு விபரம்!
![]() |
![]() |
| Justice Nagarathna |
minnambalam.com - christopher : பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை இன்று (ஜனவரி 2) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இந்த நடவடிக்கை செல்லும் என்று உத்தரவிட்டது.
இந்தியாவின் பிரதமராக கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்ற மோடி 2016ம் ஆண்டு பணமதிப்பழிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ஒரே இரவில் அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது.
கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நடவடிக்கையால் சுமார் 85 சதவிகித நோட்டுகள் ஒரே நேரத்தில் செல்லாதவையாகின. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரே இரவில் ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை தடை செய்த மத்திய அரசின்
முடிவால், புழக்கத்தில் இருந்த ரூ.10 லட்சம் கோடி அழிக்கப்பட்டன. இந்த
நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டன.
இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச்சில் தொடக்கம்- ரூட் எது என்பதில் விவாதம்!
tamil.oneindia.com - Mathivanan Maran ; யாழ்ப்பாணம்: இந்தியா- இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் தமிழகம் மற்றும் இலங்கை இடையே ரயில், கப்பல் மற்றும் விமான சேவை நீண்டகாலமாக இருந்து வந்தது. ரயில் மற்றும் கப்பல் சேவைகள் இப்போது நடைமுறையில் இல்லை. விமான சேவையும் கொழும்பு வழியாகத்தான் இருந்து வருகிறது.
இதனால் தமிழகத்தின் தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகங்களில் இருந்து இலங்கையில் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வட மாகாணத்துக்கு கப்பல் மற்றும் படகுப் போக்குவரத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கோவை ஜக்கி வாசுதேவ் இன் ஈஷா யோகாஈஷாவில் இது முதல் முறையல்ல” - இளம்பெண் மரணம் குறித்து ஜோதிமணி எம்.பி
நக்கீரன் : கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீயைக் காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், நேற்று ஈஷா யோகா மையத்தில் இருந்து காணாமல் போன சுபஸ்ரீ, கோவை செம்மேடு பகுதியில் விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது கையில் இருந்த ஈஷா யோகா மையத்தின் மோதிரத்தை வைத்து மீட்கப்பட்ட உடல் சுபஸ்ரீ தான் என்று அவரது கணவர் பழனிகுமார் உறுதி செய்தார். அதன் பின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னையில் வாகன நெரிசலை குறைக்க 300 சாலைகளில் போக்குவரத்தை லைவாக கண்காணிக்கும் கருவி
மாலைமலர் : சென்னை: சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் மணிக்கணக்கில் அணி வகுத்து நிற்கின்றன.
இந்த நெரிசலை குறைக்க நவீன யுக்தியை சென்னை போக்குவரத்து போலீசார் செயல்படுத்த உள்ளனர். அதன்படி போக்குவரத்து நெரிசலை நேரடியாக லைவாக கண்காணிக்கும் கருவிகளை முக்கியமான 300 சாலைகளில் பொருத்தி உள்ளார்கள்.
இதன் மூலம் 900 முதல் 1000 சாலைகளில் நிலவும் போக்குவரத்து நேரிசலை அறிய முடியும்.
ஆன்லைன் மூலம் இந்த கருவிகள் வழியாக டேட்பிக்கள் சேகரிக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டம்.. விதிகளை மீறியதாக 932 வாகனங்கள் பறிமுதல்.. தமிழ்நாடு காவல்துறை
கலைஞர் செய்திகள் - KL Reshm : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக காவல்துறையினர் 932 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக தமிழ்நாடு அரசு சில விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது,
ஓவர் ஸ்பீடாக வண்டி ஓட்டக்கூடாது என்று பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த 1,500 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 368 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. பைக் ரேஸைத் தடுக்க 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
சந்திரபாபு நாயுடு கூட்ட நெரிசலில் மீண்டும் உயிரிழப்பு .. ஆந்திரா
நக்கீரன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற விழாவில் மீண்டும் நேர்ந்த துயரம்
அண்மையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று கந்துகுருவில் நடைபெற்றது.
இந்தப் பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி கால்வாயில் விழுந்து 8 பேர் உயிரிழந்தனர்.
இந்நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு கைத்தறி புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்திருந்தனர்.
காபூல் ராணுவ விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு- 10 பேர் பலி
maalaimalar : காபூல்:ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ விமான நிலையத்திற்கு வெளியே இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. விமான நிலையத்தின் பிரதான வாயில் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 10 பேர் பலியானதாகவும், 8 பேர் பலத்த காயமடைந்ததாகவும், தலிபான் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியிருக்கிறார். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே தக்கார் மாகாண தலைநகர் தலுக்கான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களாக குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
ஞாயிறு, 1 ஜனவரி, 2023
இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
மின்னம்பலம் - செல்வம் : இலங்கை நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான்: தமிழகத்தில் பதுங்கலா?
பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமது நஜிம் முகமது இம்ரான் என்ற கஞ்சிபானி இம்ரான் கடந்த வாரம் இலங்கை நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் ராமேஸ்வரத்தில் பதுங்கி இருப்பதாக காவல்துறை வட்டாரங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி ராமநாதபுரம் கடற்கரையில்
இறங்கிய கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடுமாறு தமிழக
உளவுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈஷா யோகா மையத்திலிருந்து தப்பி ஓடிய சுபஸ்ரீ சடலமாக மீட்பு.. ஜாக்கியின் தொடர் கொலைகள்..
நக்கீரன் : ஈஷா யோகா மையத்திலிருந்து காணாமல் போன பெண் சடலமாக மீட்பு
கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்ற தனது மனைவி சுபஸ்ரீ(34) காணவில்லை என திருப்பூரைச் சேர்ந்த அவரது கணவர் பழனிகுமார்(40) போலீசில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், “கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி காலை 6 மணிக்கு எனது மனைவி ஒரு வார யோகா பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஈஷா யோகா மையத்தில் விட்டுவிட்டுச் சென்றேன்.
அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சம்பவத்தன்று (18.12.2022) எனது மனைவியைக் கூட்டிச் செல்வதற்காக சென்றபோது, பயிற்சி முடிந்து அனைவரும் காலையிலேயே சென்றுவிட்டனர் என்று ஈஷா யோகா மையத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், சுபஸ்ரீ சர்ப்ப வாசல் வழியாக ஒரு டாக்சியில் ஏறிச் செல்வது தெரியவந்தது.
தமிழகம் இலங்கைக்கு வழங்கிய அரிசியில் (1272 கிலோ) பதுக்கிய மூட்டை பழுதாகியது ..வவுனியாவில் விசாரணை ஆரம்பம்
எழுகதிர் : தமிழக அரசினால் இலங்கைக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டு பழுதாகி போனது .வவுனியாவில் விசாரணை ஆரம்பம்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவின் மதுராநகர் பகுதியில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1272 கிலோ நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அரசு ஊழியர்கள் அப்செட்..!
tamil.samayam.com : சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு மீது அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., அவர்களுக்கு ஆதரவு அளித்தது.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதை நம்பிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவும் நடைபெறவில்லை.
முதியவர்கள் ஓய்வூதியத்தை நிறுத்தும் முடிவினை திமுக அரசு கைவிட வேண்டும்... சீமான் வலியுறுத்தல்!!
தரப்படுத்துதல் என்ற பெயரில் முதியோர் ஓய்வூதிய திட்டத்தை முற்றாக சீர்குலைக்க முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
சமூக நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக நிறுத்தும் முயற்சியை தொடர்ச்சியாக செய்து வருவது திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கையே வெளிக்காட்டுகிறது.
நாமக்கல் பட்டாசு விபத்து: புத்தாண்டு விற்பனைக்கு வீட்டில் வைத்த பட்டாசு குடும்பத்தை பலி கொண்ட சோகம்
bbc.com : நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வீட்டில் இருப்பு வைத்த பட்டாசுகள் சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் பட்டாசு வியாபாரி, அவரது மனைவி, அவரது தாய் மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன.
மோகனூர் மேட்டுத் தெருவில் குடியிருக்கும் தில்லைகுமார் (35) பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தார். அவருக்கு அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் பட்டாசுக் கிடங்கு உள்ளது.
ஆனால், புத்தாண்டு விற்பனைக்காக வீட்டிலேயே அனுமதியின்றி பட்டாசுகளை அவர் இருப்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் சனிக்கிழமை அதிகாலை பட்டாசுகள் தீப்பற்றி வெடித்துச் சிதறத் தொடங்கின என்று போலீசார் கூறுகின்றனர்.






