ஞாயிறு, 1 ஜனவரி, 2023

தமிழகம் இலங்கைக்கு வழங்கிய அரிசியில் (1272 கிலோ) பதுக்கிய மூட்டை பழுதாகியது ..வவுனியாவில் விசாரணை ஆரம்பம்

எழுகதிர் : தமிழக அரசினால் இலங்கைக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டு பழுதாகி போனது .வவுனியாவில் விசாரணை ஆரம்பம்
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவின் மதுராநகர் பகுதியில் பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்ட இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண அரிசி தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தில் அரச கட்டிடமொன்றின் அறையினுள் இந்தியாவின் தமிழ்நாடு அரசினால் வழங்கப்பட்ட 1272 கிலோ நிவாரண அரிசிகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் குறித்த பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதேவேளை குறித்த அரிசியின் நிலை குறித்தும் அது பாவனைக்கேற்றதா என்பதனை ஆராயவும் பொது சுகாதார பரிசோதகர்களும் அங்கு பிரசன்னமாகி பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை: