புதன், 28 டிசம்பர், 2022

சேது சமுத்திரத் திட்டம்.. அத்வானி & ஜெயலலிதா ஆட்சியின் இரட்டை வேடம்!

Kalaignar Seithigal - Prem Kumar  :  முரசொலி தலையங்கம்
சேது சமுத்திரத் திட்டத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் நிறைவேற்றித் தர பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு முனைப்பு காட்ட வேண்டும்!
சேதுபாலமும் இரட்டை வேடமும் – 2
எல்லாவற்றிலும் மதவாத காவிச் சாயம் பூசும் சக்திகள், சேது சமுத்திரத் திட்டத்திலும் அதே காரியத்தைச் செய்தார்கள். இந்தியக் கடல் எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை அமைவதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘‘நாம் இருக்கும் வரை ராமர் சேதுவை யாராலும் தொட முடியாது” என்று எல்லாக் கூட்டங்களிலும் அத்வானி சொல்லி வந்தார்.
பா.ஜ.க.வை விட ஜெயலலிதாதான் அதிகமாகக் குதித்தார். ‘‘ராமர் பாலம் ஒரு புராதனச் சின்னம். நடுக்கடலில் இவ்வளவு தொடர்ச்சியாக இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் பாலம் ஏற்படக் காரணம் என்ன? இயற்கையாக இது தோன்றியது என்றால் வேறு எங்கும் ஏன் தோன்றவில்லை?” என்று பெரும்புத்திசாலியைப் போல கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தார் ஜெயலலிதா.

புதுக்கோட்டையில் குடிநீரில் மலம் கலப்பு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

மின்னம்பலம் - Prakash :   குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத் தரப்பில், “இரட்டைக்குவளை, தாழ்த்தப்பட்டோரை கோயிலில் அனுமதிக்காதது மற்றும் நீர்த்தேக்க தொட்டியில் மலத்தை கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!

 hirunews.lk : திருச்சியில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்து CID விசாரணை!
தமிழகத்தின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கை தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குறித்து இலங்கையின் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையின் குழு ஒன்று விரைவில் இந்தியா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த 9 பேர் தொடர்பிலும், நாட்டின் அனைத்து காவல்துறை நிலையங்களில் இருந்தும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்- 23 அணிகளுடனான ஆலோசனையின் போது மு.க.ஸ்டாலின் உத்தரவு

Maalaimalar  :  சென்னை  :  தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் பொதுக்குழுவும் அண்மையில் கூட்டப்பட்டது.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்திய அரசியலில் தி.மு.க. முக்கியமான சக்தியாக திகழ வேண்டும்" என்று பேசி இருந்தார். அதற்கேற்ப கட்சியில் ஒவ்வொரு வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.
இதற்கேற்ப தி.மு.க.வில் உள்ள அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டன.
அதன்படி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக நியமிக்கப்பட்டார். அது மட்டுமின்றி இளைஞரணியின் மற்ற பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

சொத்துக்கணக்கை காட்ட மறுக்கும் மலையக தலைவர்கள் .. இலங்கை தேர்தல் ஆணையம் கோரிக்கை

tamilmirror.lk - பா.நிரோஸ்:  திகாம்பரம், ஜீவனின் சொத்துக்கள் எவ்வளவு?
நுவரெலியா மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான்,  இராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு எதிர்ப்புத் ​தெரிவித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பம் ஒன்றுக்கு, நுவரெலியா மாவட்ட ​உதவித் தேர்தல் ஆணையாளர் கே.ஏ.எல்.எஸ்.கலுகம்பிடிய கையெழுத்திட்டு 25.10.2022 என திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்ட பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மறுக்கப்படும் மடிக் கணினிகள்! ஏக்கத்தில் மாணவர்கள்!

aramonline.in : அதிமுக ஆட்சியில் பிளஸ் 2, மற்றும் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, இலவசமாக லேப் – டாப்கள் வழங்கப்பட்டன! திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், புதிய லேப்டாப்களும் தரவில்லை, அதிமுக ஆட்சியில் தேங்கிய 56,000 லேப்டாப்களையும் தரவில்லை. இவற்றை முடக்கி வைத்துள்ளதன் பின்னணி என்ன?
தமிழக அரசின் சார்பில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் செப்டம்பர்  2011 முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. அதிமுக ஆட்சியில் 38 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்போதைய கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

ஆண்டுக்கு 16,000 உயிரினங்கள் ரயில் மோதி பலி.. முதலிடத்தில் உத்தர பிரதேசம்! ஆக குறைந்த இடத்தில் தென் மாநிலங்கள்

ஒட்டுமொத்தமாக

tamil.oneindia.com - Halley Karthik  :    டெல்லி: சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மோதி சில கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நாடு முழுவதும் ஆண்டு தோறும் ரயில் விபத்தில் சிக்கி சுமார் 16,000 உயிரினங்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியன் ரயில்வே கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தது. அதன்படி ரயில் பயணங்களை வேகமாக்க திட்டமிடப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் வந்தே பாரத் ரயில். இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் என்ற அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்கா -பனிப்புயலுக்கு 60 பேர் பலி - 15 ஆயிரம் விமானங்கள் ரத்து

 தினத்தந்தி  :   அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
வாஷிங்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும்.
அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அளவு உச்சத்தை ஏட்டியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு பண்டிகைகளுக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. பனிப்பொழிவுடன் சேர்ந்து பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் நியூயார்க் மாகாணம் பப்பலோ நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒன்றிய அரசு பணி நியமனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்.

கலைஞர் செய்திகள் - KL Reshma :  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை, ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் உறுதி செய்திட வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய பொதுத் துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்திட வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

முன்பதிவு பெட்டியை ஆக்கிரமித்த வடமாநிலத்தவர் - 1000 பேரை இறக்கிவிட்ட போலீஸ்

மாலை மலர் : சென்னை  கவுகாத்தி செல்லும் பெங்களூரு விரைவு ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநிலத்தவர் முன்பதிவு செய்திருந்த பெட்டிகளில் மூட்டையை கட்டிக்கொண்டு ஏறினர். உள்ளே ஏறிய அவர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து அடாவடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிகள் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருவொற்றியூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனே அனைத்து முன்பதிவு பெட்டிகளில் ஆய்வு மேற்கொண்டு டிக்கெட் எடுக்காமல் இருந்த சுமார் 1000 வடமாநிலத்தவர்களைக் கண்டித்து வெளியேற்றினர்.

வாழ்வாதாரத்திற்காக போராடும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் – பட்டதாரிகள்! பாராமுகம் காட்டிவரும் அரசு!

vinavu.com  :  ஒப்பந்த அடிப்படையில் பணி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 26.12.2022 அன்று காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகம் முன்பு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தலைமையேற்று நடத்திவரும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் சிங்காரவேலன் கூறுகையில், “நாங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வகையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
எந்த அரசும் தற்போது வரை எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற துளியும் முயற்சி எடுக்கவில்லை. இந்த சமூகநீதி பேசும் ஆட்சியில், ஏதாவது நடக்குமா என்பதும் சந்தேகத்திற்கு உரியதுதான்.
ஏன் என்றால், அமைச்சரை பார்த்து எங்கள் பிரச்சினையை முன்வைக்கலாம் என வந்தோம்.

பிரிட்டனில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மை இல்லை.. நாத்திகர்களுக்கு இரண்டாவது இடம்

 tamil.oneindia.com  - Vigneshkumar  ; லண்டன்: பிரிட்டன் நாட்டில் மக்கள்தொகை கணக்கீட்டில் முதல் முறையாக 50% குறைவானார்கள் மட்டுமே கிறிஸ்துவர்களாக தங்கள் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். இது அந்நாட்டின் கலவையான கலாச்சாரத்தைக் காட்டுவதாக உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் பிரிட்டனின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
இதைப் பலரும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் மக்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த சமீபத்திய டேட்டா வெளியாகியுள்ளது. இதில் பிரிட்டன் வரலாற்றில் முதல்முறையாகக் கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

(கோவை தென் சென்னை) கமல் ஹாசன் 2 தொகுதிகளில் களம் இறங்குகிறார் கை சின்னத்தில் போட்டியா? அப்போ மநீம!

 tamil.oneindia.com  -  Vishnupriya R  : சென்னை: 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸுடன் கூட்டணிக்கு செல்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய மிகப் பெரிய ஆளுமைகளுடன் நன்கு பழக்கம் கொண்டவர் கமல்ஹாசன். அரசியல் ரீதியில் இல்லாவிட்டாலும் திரைத்துறையில் இவர்களுடன் பயணம் செய்தவர். ஜெயலலிதா இறந்தபிறகு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
2018 ஆம் ஆண்டு கட்சித் தொடங்கிய நிலையில் இதுவரை நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட மக்கள் நீதி மய்யம் வெல்லவில்லை. இந்த கட்சி அவ்வப்போது கரைந்து வருகிறது. ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் , ஆண்ட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற கொள்கையுடன் கமல்ஹாசன் பயணித்து வருகிறார்.

திங்கள், 26 டிசம்பர், 2022

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 ஊழியர்கள் கைது

 மாலை மலர் :   புதுடெல்லி: இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், குஜராத் மாநிலத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து மேற்கோண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது என பதிவிட்டுள்ளது.

கமல் ஹசன் தி.மு.க. கூட்டணியில் .. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டி

Maalaimalar  :  சென்னை:  மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய கமல்ஹாசன் தேர்தல் களத்தில் இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்காமலேயே உள்ளார்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்த போதிலும் கணிசமான வாக்குகளை பெற்றது.
பாரதிய ஜனதா எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட ப.வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தார்.
தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு கமல்ஹாசனால் வெற்றி பெற முடியவில்லை. இது அக்கட்சியினர் மத்தியிலும் சோர்வை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவன் : பாஜக சமத்துவத்தை பேசினால் கூட்டணி வைக்கத் தயார்!

 tamil.samayam.com :  பாஜகவுடன் கூட்டணி வைக்கத் தயார் ஆனால்.? திருமாவளவன் கண்டிஷன்.!
விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பேசிவரும் சனாதன தர்மம் குறித்து, அதன் உண்மையான அர்தத்தை மிக விளக்கமாக பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.
மனு தர்மத்தை தமிழில் மொழி பெயர்த்து பொதுமக்களிடம் வழங்கிவருகிறார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தவுடனே,
அதேநாளில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என அறிவித்தார். திருமாவளவனின் இந்த அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சமூக நல்லிணக்க பேரணியில் கலந்து கொள்வதாக அறிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் : ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்துக்கு எதிராக இருந்தவர் நேரு"

மின்னம்பலம் - christopher  :  “ராகுல் காந்தியின் பேச்சு ஜவஹர்லால் நேரு பேசுவது போலவே உள்ளது. நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 25) மாலை வெளியிட்டார். இதனை இந்து நாளிதழ் முன்னாள் ஆசிரியர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கமிட்டியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கற்றனர்.

இஸ்லாமாபாத்தில் உள்ள மேரியட் ஹோட்டலுக்கு செல்ல வேண்டாம்- எச்சரிக்கை விடுத்தது அமெரிக்க தூதரகம்

மாலை மலர் :  இஸ்லாமாபாத்  பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ஊழியர்கள் உள்பட அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் இஸ்லாமாபாத்தின் மேரியட் ஹோட்டலில் அமெரிக்கர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும்,

ஆடைகளை கிழித்து.. ஆபாசமாக பேசி! இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை! ஹைகோர்ட் வழக்கறிஞர் கைது

Bar Council issues notice to Patna high court advocate who sought sexual favour as 'guru dakshina' from intern

tamil.oneindia.com  - Halley Karthik  : பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஒருவர் தன்னிடம் இன்டர்ன்ஷிப்புக்காக வந்த 22 வயது சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அம்மாணவி அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாட்னா உயர்நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருபவர்தான் நிரஞ்சன் குமார்.
இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் அவரிடம் இன்டர்ன்ஷிப்புக்காக 22 வயது சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சேர்ந்திருக்கிறார்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கம்: 27-ந்தேதி முதல் வீடு வீடாக டோக்கன் வினியோகம்

மாலை மலர் : சென்னை - தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏழை-எளிய மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்த வருடம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் : வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர்டிபிசிஆர் பரிசோதனை

மாலை மலர்  :  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்

அமெரிக்கா கனடாவில் கடும் குளிர் பனிப்பொழிவு : வாகன விபத்தில் 16 பேர் உயிரிழப்பு; 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

தினத்தந்தி :  அமெரிக்காவில் வானிலை தொடர்பான வாகன விபத்துகளில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், அந்நாட்டில் வீசி வரும் கடுமையான பனிப்புயலால் ஒட்டுமொத்த நாடும் உறைந்து போயுள்ளது.
குளிர்கால சூறாவளியால் நாடு முழுவதும் பனிபடர்ந்து சாலைகள் மூடப்பட்டு உள்ளன. விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ பகுதிகளில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று முன்தினம் 15 லட்சம் பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு அவர்கள் இருளில் மூழ்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலை நேற்றும் தொடர்ந்தது. இதனால், 7 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி காணப்பட்டன. மற்ற இடங்களில் நிலைமை சீரமைந்து இருந்தது.

ஆப்கானிஸ்தான்: தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபான் அரசு தடை

தினமணி : ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து தொண்டு நிறுவனங்களும் பெண்களைப் பணியமா்த்துவதற்கு தலிபான் அரசு சனிக்கிழமை தடை விதித்தது.
நிதிஅமைச்சா் காரி தின் முகமது ஹனீஃப் அனுப்பியுள்ள கடிதத்தின் வாயிலாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வுத்தரவைத் தொண்டு நிறுவனங்கள் பின்பற்றவில்லையெனில், ஆப்கானிஸ்தானில் அவை செயல்படுவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும் என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், ‘தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் முறைபடி ‘ஹிஜாப்’ அணிவதில்லை என ஏராளமான புகாா்கள் பெறப்பட்டுள்ளன ’ எனத் தெரிவித்தது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்: சினிமா துறைக்கு நல்லதா கெட்டதா?

Red Giant in the eyes of producers

மின்னம்பலம் - Kavi : திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சிறுபட தயாரிப்பாளர்கள் என்று விசயங்களைச் சேகரித்தபின் கிடைத்த தகவல் இது’ என தயாரிப்பாளர் கஸாலி தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர், “பத்து வருடங்களாக அமைதி காத்த ரெட் ஜெயண்ட் நிறுவனம் அதிகாரத்திற்கு வந்தபின் கடந்த ஒன்றரை வருடங்களாக பெரும்பாலான படங்களை காசு கொடுத்து வாங்காமல் கமிஷன் பேஸிஸ் வகையில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கின்றது.   பொதுவான கணக்குப்படி இதுவரை 1300 கோடியைத் தாண்டி ரெட் ஜெயண்ட் மூலம் மட்டும் விநியோக வியாபாரம் நடந்திருப்பதாகவும், அதன்மூலம் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு கிடைத்த கமிஷன் தொகை மட்டும் 120 கோடி வரை தேறும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனா சிகிச்சைக்கு 72 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன!

 மாலை மலர் :  சென்னை:  சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தற்போது உலகம் முழுவதிலும், 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் பி.எஃப்-7 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. தமிழகத்தில் முதல்-அமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட மரபணு பரிசோதனைக் கூடத்தில், தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.