சனி, 8 அக்டோபர், 2022

திமுக துணைப்பொது செயலாளர் ஆவாரா திருமதி கனிமொழி?

May be an image of 2 people, people standing and text that says 'BURHAN MRL MRLAUDIO AUDIO சுடரொளி- 10 உடன்பிறப்பே... எங்கள் உயிர்ச்சொல்! கலைஞர்- அன்பின் அரங்கம்'

மின்னம்பலம் : திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அக்கட்சியின் தற்போதைய மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி நாளை (அக்டோபர் 9) நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் நியமிக்கப்பட இருக்கிறார்.
தற்போதைய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இருக்கிறார்கள்.
துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் சர்ச்சைகளில் சிக்கி தனது கட்சிப் பதவியை கடந்த ஆகஸ்டு மாதமே ராஜினாமா செய்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடந்த முப்பெரும் விழாவிலும் அவர்  மேடையில் இல்லை. இந்த நிலையில்தான் அடுத்த சில தினங்களில் தனது ராஜினாமாவையும் அரசியலில் இருந்தே ஓய்வு  பெறும் முடிவையும் அறிவித்தார் சுப்புலட்சுமி.

பாகிஸ்தான் Ex PM இம்ரான் கான் வீட்டுக்காவலில்

 மாலைமலர் : பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
இதற்கு இம்ரான்கானின் மோசமான நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பொதுகூட்டத்தில் இம்ரான் கான் நீதிபதி, மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வடலூர் ராமலிங்க வள்ளலாரின் உண்மையான படம் .. vadaloor Ramalinga vallalar's original photo

 Thulakol Soma Natarajan :  திரு. Sundar_P அவர்களின் பதிவில்
உள்ள வள்ளலார் படம் இது
இப்படம் குறித்து என்னுடைய கருத்துரை:
வள்ளலாரின் ஓவியம் சற்றே மாறுபட்டுக் காணப்படுகிறது.
வள்ளலார் உருவம் குறித்து,
தொழுவூர் வேலாயுத முதலியார்
குறிப்பிட்டவை இவை:
1.உருவத்தில் சாதாரண உயரமுள்ளவர்
மெலிந்த சரீரமுள்ளவர்.
2.எலும்புகள் தெரியும்.
3.ஆயினும் வீரிய பலமுள்ளவர்.
நிமிர்ந்த தேகம்.
4.தெளிந்த மாநிற (சாதாரண சிவப்பு ) மேனியர்.
5.நீண்ட மெல்லிய நாசியுடையவர்.
6.பறந்த பொறி பறக்குங் கண்களை உடையவர்
7.இவருடைய முகத்தில் சதா சற்று விசனக் குறிகாணப்பட்டிருந்தது.
8.இவர் யோகிகளுக்கு வழக்கமில்லாத பாதரட்சையைத் (ஆர்காட்டு சோடு) தரித்திருந்தார்.
9.இவருடைய உடை, இரண்டு வெள்ளையாடையைத் தவிர வேறில்லை
(ஒரே ஆடையை உடுத்தியிருந்ததாகவும் கேள்வி)
10.இவர் கடும் நிராகாரத் தபசி போலிருந்தார்.
11.இவர் இளைப்பாறியதாக எவரும் அறியமாட்டார்.

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்

tamil.samayam.com  :  இலங்கையில் கடந்த 2009 ஆண் ஆண்டு அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.
சர்வதேச போர் விிதிமுறைகளை மீறி நடைபெற்ற போரில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக உலக நாடுகள் இலங்கை மீது குற்றம்சாட்டின இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் 2012 -21 வரை இலங்கை எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அதனை இலங்கை பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் கடுப்பான சர்வதேச நாடுகள், ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

அமெரிக்க உல்லாச பயணிகளுக்கு திடீர் உத்தரவு: இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! U.S issues new India travel advisory;

tamil.samayam.com :அமெரிக்கா திடீர் உத்தரவு; ஆடிப்போய் கிடக்கும் இந்திய அரசு!
பணி நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா பயணமாகவோ வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு, அமெரிக்க அரசு அவ்வப்போது பயண ஆலோசனைகள் வழங்கி வருவது வழக்கமான ஒன்று தான்.
அவ்வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டு இருக்கும் புதிய பயண ஆலோசனையில் இந்தியாவுக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த எச்சரிக்கை அறிக்கையில் குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாதம் காரணமாக இந்த ஆலோசனை நாட்டு மக்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அடித்த திருமா; இந்து அமைப்புகள் ஷாக்!
அதேப்போல் கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகர் லே தவிர ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் மற்ற பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் யாருமே செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா அரசு அறிவுறுத்தி உள்ளது.

விருதுநகரில் காதலியை செங்கல்சூளையில் வைத்து அடித்துக்கொன்றவர் கைது!

கொலை

News18 Tamil  :   ராஜபாளையத்தில் கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபரை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே அயன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கள்ளக்காதலியை அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கள்ளக்காதலனை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு பேரில் ஒருவர் காவல் துறையிலும் மற்றொருவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் உள்ளார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2022

6 நாளில் சுக்குநூறாக உடைந்த வந்தே பாரத் ரயில், உண்மையில் வெறும் சோப்பு டப்பா தானா? உண்மை என்ன?

tamil.drivespark.com - Balasubramanian Thirumalaiappan  : மும்பை- காந்தி நகர் இடையே இயக்கப்பட்டு வந்த வந்தே பாரத் ரயில், சேவை துவங்கப்பட்டு 6 நாளில் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த ரயில் விபத்தில் சிக்கிய காரணம் என்ன? இதனால் ரயிலுக்கு என்ன பாதிப்பு? உண்மையில் வந்தே பாரத் ரயில் தரமானது தானா? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
மும்பை சென்ட்ரலில் இருந்து குஜராத் காந்தி நகர் வரை சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் நேற்று காலை 11.15 மணிக்கு வாத்வா - மணி நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்துக்கொண்டிருந்த போது எருமை மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ரயில் முன் பகுதி சேதமடைந்தது. இந்த விபத்து குறித்த புகைப்படங்களும் செய்திகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஸ்ரீ ல ஸ்ரீ ஆறுமுக நாவலரின் ஒரிஜினல் போட்டோ வெளியானது

 வரலாற்றை திரிக்காதீர் .. அமரர் ஆறுமுக நாவலரின் உண்மையான புகைப்படம் இதுதான்.
நாவலரின் படம் என்று கற்பனையில் ஒரு ஓவியத்தை வரைந்து உலாவ விட்டுளார்கள் சில அதிமேதாவிகள்
இந்த ஓவியத்தை ஒட்டியே சிலையும் செய்து வழக்கம் போல வழிபடுகிறார்கள்
ஒரு வரலாற்று ஆவணம் ஏன் மறைக்கப்படுகிறது?
ஒருவேளை அந்த அசல் புகைப்படம் அவரின் மேன்மையை குறைப்பதாக கருதுகிறார்களோ?
நாவலரின் ஓவியம்  வழக்கமான சைவப்பெரியார்கள் போன்ற மேக்கப்களோடு இருக்கிறது
உண்மைக்கு மேக்கப் தேவை இல்லை
உண்மையை உண்மையாகவே பொதுவெளிக்கு முன்வைக்க வேண்டும்
அது எந்த செய்தியை சொல்கிறது என்பதை மக்களிடமும் காலத்திடமும் விட்டுவிடுவோம்

இறந்த பெண்ணின் வங்கிக்கணக்கில் இருந்து 40 கோடி ரூபா திருட்டு! புலி இயக்க தொடர்பு .. பிணை மறுப்பு!

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+40+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%21+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

hirunews.lk:   இந்தியாவில் இறந்த பெண்ணின் 40 கோடி ரூபா திருட்டு! முன்னாள் புலி இயக்க தொடர்புடையவர்களுக்கு பிணை மறுப்பு!
மும்பையில் போலி ஆவணங்களைத் தயாரித்து இறந்த பெண் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து 40 கோடி ரூபாவை கையாடிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள,
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள கெனிஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கே பாஸ்கரன் ஆகியோர் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தங்களுக்கு விதிக்கப்பட்ட 180 நாள் காவல் உத்தரவு தடையை ஆட்சேபித்தே இந்த பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டின்படி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில் ஹமீதா ஏ லால்ஜி என்ற இறந்த பெண்ணின் கணக்கில் இருந்து 40 கோடி ரூபா மீளப்பெற்றப்பட்டுள்ளது.

இலவச பேருந்து வேண்டாம் என்பவர்கள் டிக்கெட் வாங்க அனுமதி.. திட்டத்தை முடக்க சதி?

மாலைமலர் : சென்னை:  தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 8-ந்தேதி முதல் சாதாரண பஸ்களில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் அரசு டவுன் பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர் எனக்கு இலவச டிக்கெட் வேண்டாம். நான் ஓசியில் பஸ்சில் பயணம் செய்ய விரும்பவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுக்குமாறு கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் கண்டக்டர் வேறு வழியின்றி அந்த மூதாட்டியிடம் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு டிக்கெட் கொடுத்தார்.
இந்த சம்பவத்தை அந்த பஸ்சில் இருந்த சகபயணிகள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ பரபரப்பாக வைரலானது.
இதையடுத்து பஸ்சில் டிக்கெட் கேட்டு கண்டக்டரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் பஸ் கண்டக்டர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவித்தனர்.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

நக்கீரன் : ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. \
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1- ஆம் தேதி அன்று அவசரச் சட்ட முன்வரைவு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 1- ஆம் தேதியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு

 தினத்தந்தி : தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!
தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு -அமெரிக்கா கடும் கண்டனம்!
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது.
இங்கு பள்ளி செல்வதற்கு முந்தைய பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர் சேர்த்து, அவர்கள் பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த மையத்திற்குள் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்.

நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பதவியை தட்டிய கனிமொழி! ஒன்றிய அரசின் ஊரக - பஞ்சாயத்து ராஜ்

 tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  :  சென்னை : திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி இன்று சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக எம்.பி கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்.. காங்-க்கு திமுக கனிமொழி மூலம் பாஜக வேட்டு.. டெல்லியில் உள்குத்து அனல் நாடாளுமன்ற நிலைக்குழுக்கள்..
பஞ்சாயத்து ராஜ் திட்டம்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிட்டி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள கிராமங்களை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொண்டு முன்னேற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகாபலிபுரம் தாஜ்மஹாலை பின்தள்ளியது! உலக மக்களை அதிகம் கவர்ந்த மகாபலிபுரம் – தமிழ்நாட்டிற்கு பெருமை

tamil.nativeplanet.com  - Yogalakshmy Ponnan  :  உலக அதிசயங்களில் ஒன்றான, இந்தியாவின் மிக முக்கிய நினைவுச்சின்னமான தாஜ்மஹால் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் என்பது உலகறிந்த விஷயமாகும்!
இந்திய தொல்லியல் துறையின் 'இந்திய சுற்றுலா புள்ளிவிவரங்கள் 2022' என்ற தலைப்பில் உலக சுற்றுலா தினத்தன்று துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்ட அறிக்கையின் படி, நம் நாட்டில் வெளிநாட்டினரால் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளி தமிழ்நாட்டின் மகாபலிபுரம் முதலிடம் பிடித்துள்ளது! அதனைப் பற்றிய ருசிகரமான தகவல்கள் இதோ!
மகேந்திரவர்மனின் காலம் கடந்த படைப்புகள்

சவுக்கு சங்கர் பட்டினி போராட்டத்தை சிறை அதிகாரிகளின் உறுதி மொழியை அடுத்து கைவிட்டார்

Rajkumar R   -  e Oneindia : கடலூர் : கடலூர் மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதிய நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சிறை நிர்வாகம் உறுதியளித்ததன் பேரில்
கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பத்திரியாளரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார்.
இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் கொல்லப்படும் இளம்பெண்கள் .. நிகா ஷாக்காராமியின் கதை Iran: Teen protester Nika Shakarami's body stolen,

ஜென்னி ஏ வென்ஹம்மர்  :  நிகா ஷகராமி.என்ற இந்த சிறுமி இப்போது உயிருடன் இல்லை.
ஒரு சுதந்திர பெண்ணாக ஏராளமான கனவுகளோடு வளர்ந்த இந்த சிறுமி ஈரான் கடும்போக்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களால் சித்திரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டு விட்டார்
இவரது உடலை கூட ஈரானின் கலாசார காவலர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை
ஒரு சுதந்திர பெண்ணாக தான் வாழவேண்டும் என்று விரும்பியதை தவிர வேறெந்த இவர் குற்றத்தையும் செய்யவில்லை.
ஈரான் இஸ்லாமிய குடியரசு இந்த சிறுமியின்  வாழ்வை கொடூரமாக முடித்துக் கொண்டது.
ஆட்சியின் அடக்குமுறை அநீதிகளின் சின்னமான ஹிஜாபை எரித்தபோது இவர் தனது  உயிரைப் பணயம் வைப்பதை அறிந்தே இருந்தார்  . ஆனாலும் சுதந்திரத்திற்கான வேட்கை இந்த கடும் தீர்மானத்தை மேற்கொள்ள இந்த சிறுமியை உந்தியது.
மெஹ்சா ஆமினி  MahsaAmini கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் நடந்த முதல் போராட்டங்களில் ஒன்றின் இரவில் நிக்கா ஷாக்கராமி  காணாமல் போனார்.
பல இளம் உயிர்கள் பறிக்கப்பட்ட  அந்த இரவில் நிக்கா ஷாகாரமியும் காணாமல் போனார்.

வடகொரியாவுக்கு தென்கொரியா பதிலடி... எல்லைப் பகுதிக்கு 30 போர் விமானங்களை அனுப்பி மிரட்டியது

மாலை மலர்  :  சியோல்:  அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது.
ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.
இன்று கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பியதால் பதற்றம் உருவானது.

வியாழன், 6 அக்டோபர், 2022

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் சடலங்கள் மீட்பு

மாலை மலர்  :  அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை... பழத்தோட்டத்தில் சடலங்கள் மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36), இவரது மனைவி ஜஸ்லீன் கவுர், இவர்களின் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை மெர்சிட் கவுன்டியில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவந்தனர்.
இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது.

விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு! 2

nakkheeran.in  :  திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு அருகே உள்ள விவேகானந்தா ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 11 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் சில குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பூர் அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி அருகில் உள்ளது விவேகானந்தா ஆசிரமம். இந்த ஆசிரமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலையில் உணவு சாப்பிட்ட சிறுவர்கள் திடீரென உடல் உபாதைகள் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் 11 வயது கொண்ட 2 சிறுவர்களும், 14  வயதுகொண்ட ஒரு சிறுவனும் என மூன்று சிறுவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 10 க்கும் மேற்பட்ட  சிறுவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியத் தயாரிப்பு இருமல் மருந்து: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; புதுடெல்லி விசாரணை

இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மரணங்களுக்கும் மருந்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிக்கையை தன்னிடம் தாக்கல் செய்யும்படி உலக சுகாதார நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம்

tamilmurasu.com.sg : இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. மரணங்களுக்கும் மருந்திற்கும் உள்ள தொடர்பைக் காட்டும் அறிக்கையை தன்னிடம் தாக்கல் செய்யும்படி உலக சுகாதார நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. படம்: உலக சுகாதார நிறுவனம்
இந்தியாவின் மெய்டன் பார்மசியூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த இருமல் மருந்துகள் சிறார் உடலில் சிறுநீரகத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்

hindutamil.in தெலங்கானா முதல்வர் கேசிஆர் தலைமையில் தேசிய கட்சி ‘பாரத் ராஷ்டிர சமிதி உதயம்
ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி, ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என தேசிய கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவால் தோற்றுவிக்கப்பட்டது தெலங்கானா ராஷ்டிர சமிதி. ஹைதராபாத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாகியது. இதையடுத்து, 2014-ல் தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவி ஏற்ற சந்திரசேகர ராவ், 2018-ல் மீண்டும் முதல்வராக தேர்வானார். தெலங்கானா சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில்- 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினர்கடத்தல்

அமெரிக்காவில் துணிகரம் - 8 மாத குழந்தை உள்பட 4 இந்திய வம்சாவளியினர்கடத்தல்

மாலை மலர்  :  வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். இவர்களை கடத்தியது யார், எதற்காக கடத்தப்பட்டனர் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் கடத்திய நபர் பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும், அவரை கண்டால் மக்கள் நெருங்கி செல்லாமல் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட இந்திய வம்சாவளியினர் 4 பேர் கடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இரு மீனவ குழுக்களிடையே மோதல் -பதற்றம் - பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29



முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்! அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.  முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை  03 ஆம் திகதி காலை  முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்  வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.  இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

புதன், 5 அக்டோபர், 2022

பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது - சென்னை -

  zeenews.india.com - .Karthikeyan   :  சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி,
அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது.
இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் உள்ள ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண் காவலர்கள் வீட்டில் சோதனைகள் மேற்கொண்டனர்.
அதில் அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய மதுரையை சேர்ந்த கார்த்திக்கேயன்(46),திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன்(53) ஆகிய இருவரை கைது செய்தனர்.

சீன பொருளாதாரம் சரிவை சந்திப்பது ஏன்? ஐந்து காரணங்கள்

BBC தமிழ் :   சுரஞ்சனா திவாரி  -      ஆசிய வணிகத் துறை செய்தியாளர்   :  கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உலகச் சந்தைத் தேவையில் ஏற்பட்ட நலிவு ஆகியவற்றால், சீன பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சீனாவின் அதிகாரபூர்வ காலாண்டு வளர்ச்சி தரவுகள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனா இன்னும் சரிவை சந்தித்தால், அந்நாடு பொருளாதார மந்தநிலையை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சீனா நிர்ணயித்துள்ள 5.5% என்ற ஆண்டு வளர்ச்சி விகித இலக்கை எட்ட முடியாத நிலையில், அரசு அதிகாரிகள் இந்த இலக்கை அடைவதற்கான தேவையை குறைத்து மதிப்பிட்டுள்ளனர். ஏப்ரல் - ஜூன் காலாண்டு வளர்ச்சியில் சீனா மயிரிழையில் சரிவிலிருந்து தப்பித்தது. ஆனால், இந்த ஆண்டு சில பொருளாதார நிபுணர்கள் எவ்வித வளர்ச்சியையும் எதிர்பார்க்கவில்லை.