வெள்ளி, 7 அக்டோபர், 2022

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் - ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

நக்கீரன் : ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. \
அதைத் தொடர்ந்து, அக்டோபர் 1- ஆம் தேதி அன்று அவசரச் சட்ட முன்வரைவு தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அக்டோபர் 1- ஆம் தேதியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவித்துள்ளது. பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் தடை ஏற்படும். மேலும், அக்டோபர் 17- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: