சனி, 8 அக்டோபர், 2022

இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்

tamil.samayam.com  :  இலங்கையில் கடந்த 2009 ஆண் ஆண்டு அந்நாட்டு ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.
சர்வதேச போர் விிதிமுறைகளை மீறி நடைபெற்ற போரில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக உலக நாடுகள் இலங்கை மீது குற்றம்சாட்டின இதுதொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் 2012 -21 வரை இலங்கை எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனாலும் அதனை இலங்கை பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் கடுப்பான சர்வதேச நாடுகள், ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
அமெரிக்கா திடீர் உத்தரவு; ஆடிப்போய் கிடக்கும் இந்திய அரசு!
இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்குவது, தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது, ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது வழக்கு தொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் சபையில் கொண்டு வரப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 ந நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.

ஆனால் இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்து சர்வதேச நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. புறக்கணிப்புக்கான காரணத்தை சொல்லும்படியாக , ஐநாவுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே சபையில் ஒரு அறிக்கை படித்தார்.

அதில், ' - இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு, 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசின் முனைப்பு போதுமானதாக இல்லை. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

ராஜபக்சே சகோதரர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர்... சர்வதேச அரசியலில் பரபரப்பு!
இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரிப்பது என்ற கொள்கைப்படி இந்தியா தொடர்ந்து செயலாற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அண்டை நாடு என்ற முறையில் இலங்கைக்கு இந்தியா உதவி செய்து வருகிறது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை போலவே நேபாளம், ஜப்பான் உள்ளிட்ட 20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால் தீர்மானம் பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை: