வெள்ளி, 7 அக்டோபர், 2022

சவுக்கு சங்கர் பட்டினி போராட்டத்தை சிறை அதிகாரிகளின் உறுதி மொழியை அடுத்து கைவிட்டார்

Rajkumar R   -  e Oneindia : கடலூர் : கடலூர் மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதிய நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சிறை நிர்வாகம் உறுதியளித்ததன் பேரில்
கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பத்திரியாளரும், சவுக்கு இணையதள ஆசிரியருமான சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதோடு, இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார்.
இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. சவுக்கு சங்கர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது விசாரணைக்கு ஆஜரான சவுக்கு சங்கர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறியதோடு, தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனை அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

பார்வையாளர்களுக்கு தடை
இந்நிலையில் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை கடந்த 24ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் சவுக்கு சங்கரை பார்க்க அதிக பார்வையாளர்கள் வருகின்றனர். இதனால் பார்வையாளர்கள் சவுக்கு சங்கரை பார்க்க ஒரு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளத ர்ன சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது.

உண்ணாவிரதப் போராட்டம்
இதனை கண்டித்தும் தடையை நீக்க கோரியும் சிறையிலிருந்தபடியே சவுக்கு சங்கர் 4வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். உண்ணாவிரதம் குறித்து சிறை அதிகாரிகளுக்கு அவர் அளித்த கடிதத்தை அவர்கள் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சிறை வளாகத்தில் உள்ள உள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நேற்று தகவல் வெளியானது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

போராட்டம் வாபஸ்
இதனிடையே கடலூர் மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுப்பை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சிறை நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வ கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்டுஹ் சவுக்கு சங்கரின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக சிறை நிர்வாகம் உறுதியளித்ததுள்ளதாகவும், இதனையடுத்து கடந்த 4 நாட்களாக சவுக்கு சங்கர் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: