ஞாயிறு, 5 ஜூன், 2022

பாஜக அண்ணாமலைக்கு அமைச்சர் மா சுப்பிரமணியம் விரிவான பதிலடி

 மின்னம்பலம் : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மதுரையில் ஜூன் 5ஆம் தேதி வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மா.சுப்பிரமணியன் மற்றும் முத்துசாமி ஆகிய இரு அமைச்சர்களின் துறை மீது குற்றசாட்டை முன்வைத்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்களுடன் வழங்கப்படும் தொகுப்பில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறிய அண்ணாமலை, “கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா நியூட்ரிசியன் கிட் அரசு கொடுத்து வருகிறது. திமுக ஆட்சியில் அம்மா என்ற வார்த்தையை நீக்கிவிட்டனர்.

திருமாவளவன் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்

 மாலைமலர் : தி.மு.க. அரசு மீது அண்ணாமலை விளம்பரத்துக்காக குற்றம் சாட்டுகிறார்-
நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று காட்டிக் கொள்ளுவதற்காக அண்ணாமலை இதுபோன்று செயல்படுகிறார் என திருமாவளவன் கூறியுள்ளார்.
தி.மு.க.வுக்கு மாற்று பா.ஜனதா தான் என்கிற பிம்பத்தை உருவாக்க அக்கட்சியின் மேலிட திட்டத்தை அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
சென்னையில் இன்று காயிதே மில்லத் நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் கட்சி நிர்வாகிகள் பால சிங்கம், தமிழேந்தி, செல்லத்துரை, இரா.செல்வம், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  கெடிலம்  ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று (05/06/2022) மதியம் 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18), பிரியா (வயது 19), மோனிஷா (வயது 16), நவநீதம் (வயது 20), சுமிதா (வயது 18), காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), பிரியதர்ஷிணி (வயது 15) ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் கைதைத் தவிர்க்க தீவிரம்.... தீவிரம்!

 மின்னம்பலம் :: சிவகங்கை மக்களவை காங்கிரஸ் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (ஜூன் 4) மனு தாக்கல் செய்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் மீது பஞ்சாப் மின்சார நிறுவனத்துக்கு சீன பணியாளர்கள் கொண்டுவர படுவதற்கு விசா கொடுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் முதல் குற்றம்சாட்டப்பட்டவராக பதிவு செய்யப்பட்டிருந்த கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரும் கூட்டாளியுமான பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்தப் பின்னணியில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பள்ளி திறப்பில் மாற்றம்?: அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை .. அறிவிப்பு!

கலைஞர் செய்திகள் : கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ் பொய்யாமொழி, கல்வித்துறை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு எப்பொழுதும் கடைசி நேரத்தில் தான் நம்மை அழைக்கின்றனர். குஜராத்தில் நடந்த கல்வி மாநாட்டிற்கும் அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வித்றை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நடத்தி வருகிறோம்.

திமுக ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

  News18 Tamil : :  ஜி ஸ்கொயர் முன்னேற்ற கழகமாக தற்போது CMDA மாறியிருக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் கார்த்தி ஆகியோர் அரசில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.
23,8800 ஊட்டச்சத்து தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் தனியார் ஹெல்த் மிக்ஸ் பொருளுக்கு பதிலாக ஆவின் பொருளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், இந்த முடிவு மாற்றப்பட்டது.

மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்

ராதா மனோகர்: :   1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய
வம்சாவளியினரின் குடியுரிமையை  பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின்  பின்னணி பற்றிய   பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை  செய்திகளும்  நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல  உண்மைகளை  வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக  நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது

சனி, 4 ஜூன், 2022

கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு! தேன்மொழி சௌந்தரராஜன் (அமெரிக்க தலித் செயற்பாட்டாளர்) உரை ரத்து – நடந்தது என்ன?

BBC Tamil  : கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து – அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் சமத்துவத்துக்கான ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத்தை ஒட்டி கடந்த மாதம் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை பெண் ஊழியர் எரித்துக்கொலை- தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

 மாலைமலர் : கோவை இளம்பெண் மரண வழக்கில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால் நவநீதனை காவலில் எடுத்து விசாரிக்க கோவை ஆர்.எஸ்.புரம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மட்டுமல்லாமல் ஈரோட்டிலும் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்த அந்த பெண், நீண்ட நாட்களாக நவநீதனின் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார்.
அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு; தீட்சிதர்கள் எடுத்த அதிரடி முடிவு!

tamil.samayam.com : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் அரசின் உத்தரவும், அவற்றை எதிர்க்கும் தீட்சிதர்களும் என பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் மற்றும் துணை ஆணையர் சி.ஜோதி ஆகியோருக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ஹெமசபேச தீட்சிதர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

அதில், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் தன்னிச்சையாக கோயில் ஆவணங்களை கோர இயலாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட 19-9-2014 தேதியிட்ட அரசாணை எண் 236-ல் இந்து அறநிலையத்துறை 6-1-2014 தீர்ப்பின் படி தீட்சிதர்கள் தனி சமய பிரிவினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்கால வழக்குகளிலும், மேற்சொன்ன தீர்ப்பின்படி முன்வழக்கு தடையாக செயல்படும்.               எனவே மேற்கண்ட தீர்ப்பின் முடிவு இறுதியாக உள்ளது என ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 107-ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகமானது இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது.

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும் தொழிற்சங்கங்கள்!

டாஸ்மாக் செந்தில் பாலாஜியின் வசூல் அரசாங்கம்: முதல்வரை சந்திக்க தேதி கேட்கும்  தொழிற்சங்கங்கள்!

மின்னம்பலம் : தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக சிஐடியு தொழிற்சங்கம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் டாஸ்மாக் நிர்வாகத்தில் முழுமையாக தலையிட்டு வசூல் வேட்டை நடத்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் சிஐடியு தொழிற்சங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கள் நிர்வாகத்தை கைப்பற்றுவதை எதிர்த்து போராட்ட அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றன.
சிஐடியு, ஏஐசிசிசிடியு, டியுசிசி, டிடிபிடிஎஸ், டிஜிடிஇயு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் கடந்த மே 31ஆம் தேதி சென்னையில் உள்ள சிஐடியு மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.

வெள்ளி, 3 ஜூன், 2022

கலைஞர் பிறந்தநாள்: விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞர் பிறந்தநாள்:  விருது, குடியிருப்பு ஆணை வழங்கிய முதல்வர்!

கலைஞரின் 99ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதன்முறையாக அரசு விழாவாக கலைஞர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத் துறை வித்தகர்' விருதைச் சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று வழங்கி கவுரவித்தார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறை தரப்பில் மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதனுக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து 'கலைஞர் எழுதுகோல் விருதையும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

கலைஞர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாட்டம்- சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

 கலைஞர் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலைஞரின்  படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

இளையராஜா : எனக்கு கலைஞர் தந்தைக்கு சமம்''

 நக்கீரன் : இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் 'ராஜா லைவ் இன் கான்செர்ட்' நிகழ்ச்சி கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் கலந்து கொண்டார்.
மேடையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ''உங்களைப் பார்த்ததும் மிகவும் சந்தோசமா இருக்கு சார், என்ன பேசுவதென்று தெரியவில்லை உங்களைப் பார்த்ததும். தேங்க்யூ சார்'' என்றார். அதன்பிறகு மைக்கை வாங்கிய இளையராஜா 'உங்க ஊரிலேயே நான் 16 வயதாக இருக்கும்போது என் அண்ணனோட வந்து இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். எனக்கு கலைஞர் தந்தைக்கு சமம்'' என்றார். 

வியாழன், 2 ஜூன், 2022

செந்தில் தொண்டமான் பேட்டி : இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கிடைக்க கலைஞரும் சோனியாவும் காரணமா இருந்தாங்க!

 அன்று கனிமொழி டி ஆர் பாலு திருமாவளவன் அழகிரி சுதர்ஷன் நாச்சியப்பன் இளங்கோவன் சித்தன் எம்பி ..நெறைய பேர் வந்திருந்தாங்க  நானும் நின்றிருந்தேன்  அன்னைக்கு மகிந்த ராஜபக்ஸவுக்கு இவங்க கை கொடுத்ததாலதான் மகிந்த அந்த ஐம்பதாயிரம் வீடு திட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்  அன்னைக்கு அவங்க அப்படி கைகொடுக்காமல் விட்டிருந்தால்,
இன்னைக்கு அந்த ஐம்பதாயிரம் விதவைகளுக்கு  வாழறதுக்கு இடமில்லாம  இருந்திருப்பாங்க   
ஏனென்னா மூணு வருஷமா இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கல
இந்த பத்து எம்பிக்களும் வந்து ஜனாதிபதி பார்த்து .. பேசி நட்பு ஏற்படுத்திய பின்புதான் அவரு அனுமதியை கொடுத்தாரு ......  
மறைந்த கலைஞர் அய்யா அவர்களும்  அம்மையார் சோனியா காந்தி அம்மையாரும் இந்த ஐம்பதாயிரம் வீடுகள் எங்க மக்களுக்கு கிடைக்கிறதுக்கு காரணமா இருந்தாங்க ...
இன்னைக்கு விமர்சனம் பண்றவங்க எவராலும் அங்கு ஒரு செங்கல் கூட எடுத்து வைச்சிருக்க முடியாது
 முழு பேட்டியையும்  பாருங்கள் பல முக்கிய செய்திகளை திரு செந்தில் தொண்டமான் இங்கே கூறுகிறார்

சிங்கள மக்களின் மரபணுக்கள் தமிழ்நாட்டோடு நெருங்கி இருப்பதேன்?

 ராதா மனோகர்   : இலங்கை தமிழர்களின் மரபணு   சிங்கள மக்களின் மரபணுவோடு     55.20% +/- 9.47 வீதம் பொருந்தி உள்ளது  
இலங்கையில் உள்ள சிங்கள  மக்களின் மரபணு  69.86% +/- 0.61 தென்னிந்திய தமிழர்களிடம் பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள தமிழர்களின் மரபணு 16.63% +/- 8.73 தென்னிந்திய தமிழர்களோடு பொருந்தி உள்ளது
ஆச்சரியமான ஒரு விடயம்  இலங்கை தமிழர்களை விட சிங்கள மக்களின் மரபணு  தமிழ்நாடு தமிழர்களோடு அதிக அளவில் பொருந்தி உள்ளது
மேலும் சிங்கள மக்களின் மரபணு   25.41% +/- 0.51 வீதம் வங்காள மக்களோடு பொருந்தி உள்ளது
இலங்கையில் உள்ள சிங்கள மக்களும் தமிழ் மக்களும் 55%. மரபணு  பொருந்தி உள்ளது
 The  Sinhalese had the greatest contribution from South Indian Tamils (69.86% +/- 0.61),
Sri Lankan Tamils to have a greater contribution from the Sinhalese of Sri Lanka (55.20% +/- 9.47)
While the Sri Lankan Tamil are closely related to the Sinhalese who are closely related to Indian
followed by Bengalis from the East India (25.41% +/- 0.51). With both the Sri Lankan Tamils and Sinhalese in the island sharing a common gene pool of 55%.
They are farthest from the indigenous Veddahs.[1] This close relationship between the Sri Lankan Tamils and Sinhalese makes sense, as the two populations have been close to each other historically, linguistically, and culturally for over 2000 years.

சோனியா காந்திக்கு கொரோனா!

மின்னம்பலம் : காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று பாதிப்பு 100ஐ கடந்தது. நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், சோனியா காந்தி கடந்த வாரத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.

kalaignarseithigal. : செங்குன்றம் தனியார் லாரி பார்க்கிங் யார்டில் மதுபோதையில் தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கண்டெய்னர் நிறுத்துவதில் தகராறு.. இளைஞரை லாரி ஏற்றிக் கொன்ற வடமாநில டிரைவர் - பகீர் சம்பவம்!
சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் தனியாருக்கு சொந்தமாக லாரி பார்க்கிங் யார்டு உள்ளது.
 இங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன் (36) வடகரை பகுதியை சேர்ந்த குமரன் (34) மற்றும் நண்பர்கள் அங்கு அமர்ந்து மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார். இது சம்பந்தமாக அவர்களுக்கும் வடமாநில லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த வடமாநில லாரி டிரைவர் லாரியை அவர்கள் மீது வேகமாக ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே கமலக்கண்ணன் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார்.

அமெரிக்காவில் கர்ப்பிணிப்பெண்ணை ஐந்து முறை சரமாரியாக சுட்ட பொலிசார்!

 மாலைமலர் : அமெரிக்காவில், பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தும், பொலிசார் அவரை ஐந்து முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ஒன்று வெளியாகி மனதை பதறவைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியளவில், அமெரிக்காவிலுள்ள Kansas நகரில், கார் ஒன்றை ஆயுதங்களுடன் சிலர் கடத்திச் செல்வதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் கார் ஒன்றைத் துரத்திச் சென்றுள்ளார்கள்.
ஒரு கட்டத்தில் அந்தக் கார் நிற்க, அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி ஓட்டம் பிடித்துள்ளார்.
அதே நேரத்தில், மற்றொரு பெண் காரிலிருந்து இறங்கியுள்ளார். அவர், காரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.
அவரை பொலிசார் தரையில் படுக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய அந்தப் பெண், தன்னால் தரையில் குப்புறப் படுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்பத்திரியில் இருந்து துண்டான கையை கவ்விக்கொண்டு போன நாய் விபத்தில் துண்டான கையை... மேற்கு வங்காளம்

West Bengal: Dog found chewing severed hand of man at Siliguri hospital

தினத்தந்தி : ஆஸ்பத்திரியில் விபத்தில் துண்டான வாலிபரின் கையை நாய் கவ்வி எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்பத்திரியில் சுற்றி திரிந்த நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
நாய் வாயில் விபத்தில் துண்டான வாலிபரின் கை
மேற்கு வங்காள மாநிலம் சிலிகிரி துர்காராம் காலணி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் சர்க்கார். வாலிபரான இவர் சம்பவத்தன்று ஒரு சாலை விபத்தில் சிக்கினார்.

செங்கல்பட்டு யோகா உயர்வு மையத்திற்கு திருமூலர் பெயர் .. முதல்வர் ஸ்டாலினுக்கு அறிஞர்கள் வேண்டுகோள்

May be an image of text that says 'தமிழக அரசே..! செங்கல்பட்டு யோகா உயராய்வு மையத்திற்கு திருமூலர் பெயரைச் சூட்டுக..!'

Sundaravadivel Balasubramanian :  My letter to the Honorable Chief Minister of Tamil Nadu regarding the naming of the International Yoga and Naturopathy Medical Science Centre in Chengalpattu, Tamil Nadu.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு என் பணிவான வணக்கம்!
என் பெயர் சுந்தரவடிவேல். நான் தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைத் துறையில் பணிபுரிகிறேன்.
எனது ஆராய்ச்சி உயிரணுக்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றியது.
அதனோடுகூடவே மூச்சுப்பயிற்சி முறைகளையும் ஆராய்ச்சி செய்துவருகிறேன். எங்களது ஆராய்ச்சியானது, முதன்முதலாக தமிழ்ச் சித்தர்களில் ஒருவரான திருமூலர் அவர்களின் திருமந்திர நூலில் இருக்கும் மூச்சுப்பயிற்சி முறைகளை ஆராய்ந்து அதன் விளைவாக உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களை எடுத்துக் கூறியது.
குறிப்பாக நரம்புகளை வளர்க்கும் புரதங்களும், உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கும் புரதங்களும், மன அழுத்தத்தைக் குறைக்கும் புரதங்களும் மாறுபடுவதைக் கண்டறிந்தோம்.

புதன், 1 ஜூன், 2022

PFRDAவில் ‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ நிதியமைச்சர் PTR!

 கலைஞர் செய்திகள் : ‘1 ரூபாய் கூட வரலாற்றில் யாரும் டெபாசிட் செய்ததேயில்லை’ : அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த நிதியமைச்சர் PTR!
புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கூறிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாட்டில், நிதிச்சுமையைக் காரணம் காட்டி அ.தி.மு.க அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தது.
இதற்கு புதில் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநாடு பட வசூல் 117 கோடி .. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்

 மின்னம்பலம் : நடிகர் சிலம்பரசனின் ‘மாநாடு’ திரைப்படத்தின் உலகளாவிய வசூலை அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மாநாடு’. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகும் நிலையில் உலகம் முழுவதுமே இந்தப் படம் 117 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாநாடு திரைப்படம் உலகம் முழுவதுமே கிட்டத்தட்ட 117 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. 

தோழிகளின் காதலை பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்... கேரளா

கலைஞர் செய்திகள்   : ஓரினச் சேர்க்கை காதலர்களுக்கு ஒன்றாகச் சேர்ந்து வாழக் கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர் - சேர்த்து வைத்த நீதிமன்றம்: நடந்தது என்ன?
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்துவைத்துள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர்.

உக்கிரேனில் பிரித்தானியர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்?

 Thesam Jeyabalan  :  பிரித்தானிய வீரர்கள் உட்பட தினமும் 250 படையினர் கொல்லப்படுகின்றனர்!! உக்ரைன் இன்னுமொரு வன்னி!!!
பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், உக்ரெய்ன்னுக்கு சென்று யுத்தத்தில் ஈடுபடுபவதை தான் ஆதரிப்பதாக அறிவித்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உக்ரெய்ன் யுத்தத்திற்குச் சென்றுள்ளனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தினமும் உக்ரெயினில் நடைபெறும் யுத்தத்தில் இரு தரப்பிலும் 250 படையினர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சர் லிஸ் ரஸ், யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட சில தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளிளிட்டார். இதுவரை மரணித்துள்ள 20 பிரித்தானியர்கள் பற்றி பிரித்தானிய பிரதமரோ அமைச்சர்களோ எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.