கலைஞர் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்.
இதையொட்டி பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.
மின்னம்பலம் : கலைஞர் பிறந்தநாள்: தூய்மை, ரத்ததானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!
முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன் 3), தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகரம் மற்றும் மாநகரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர் திமுக நிர்வாகிகள்.
அரியலூர் மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமையில் மாவட்ட தலைமை கழகத்தில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது கலைஞரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் 99பேர் ரத்த தானம் செய்தனர். ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கி அனைத்து கிளைகள் மற்றும் வார்டுகளில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக கொடியை ஏற்றிக் கொண்டாடினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி, பழைய கொடிக் கம்பங்களில் வண்ணங்களை பூசாமல் புதிய கழக கொடிகளையேற்றி ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தூய்மை விழிப்புணர்வு பணியை மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் எம்.எல்.ஏ சபா ராசேந்திரன் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு திமுக கரை வேட்டி மற்றும் கழக கொடி, கலைஞர் உருவப்படம் கொடுக்கப்பட்டது. கட்சி பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் இனிப்பு வழங்கி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதுபோன்று தொகுதியில் உள்ள முதியோர் இல்லம் சென்று உணவு மற்றும் இனிப்புகள் வழங்கினார் சபா ராசேந்திரன்.
இதுபோல் தமிழகம் முழுவதும் கருணாநிதி பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் காலை 7.30 மணிக்குத் தனது வீட்டில் உள்ள கலைஞர் உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார். கோபாலபுரம் சென்று கலைஞர் வாழ்ந்த வீட்டில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து, தாயாரை வணங்கினார். ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தலைமைச் செயலகம் சென்ற பின் வீட்டுக்குத் திரும்பும்போது சில இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
-வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக