இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
புதன், 29 செப்டம்பர், 2021
மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் உயிர் பெற்றது
இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை (DPR) மூன்று மாதத்தில் நிறைவடைந்த பின், சாலைப்பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சென்னை துறைமுகத்தில் இருந்து கண்டெய்னர் சரக்கு போக்குவரத்து தடையின்றி செல்லவும் ரூ. 1,815 கோடி ரூபாய் செலவில் மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையே கூவம் ஆற்றின் வழியே மேல்மட்ட பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இலங்கையில் பல நூற்றாண்டு பழமையான தமிழ், தெலுங்கு செப்பேடு - யாழ். பல்கலை பேராசிரியர் கண்டுபிடிப்பு
![]() |
இலங்கையின் வடமத்திய மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய தமிழ் பிரதேசமொன்றுக்கான சான்றுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் கண்டுபிடித்துள்ளார்.
பொலநறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும் மன்னம்பிட்டிப் பிரதேசம் ,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடமாகும்.
வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து கிழக்கிலங்கைக்கு உட்பட்டிருந்த இந்த பாரம்பரிய பிரதேசமானது, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பொலநறுவை மாவட்டத்துடன் இணைந்து செயற்பட்டுள்ளது.
இந்த பிரதேச எல்லைக்குள் முக்துக்கல், சமணன்பிட்டி, தம்பன்கடவை, கருப்பளை கண்டக்காடு, சொரிவில், திரிகோணமடு, கல்லூர், பிள்ளையாரடி ஆகிய பழம்பெரும் தமிழ்க் கிராமங்கள் காணப்படுகின்றன.
அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை .. அறக்கட்டளை மோசடி வழக்கு
மாலைமலர் : அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரது கணவர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அலிசியா தீர்ப்பு வழங்கினார்.
சென்னை: ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சி அமைத்த போது 1991 முதல் 1996 வரை அ.தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்து வந்தார்.
அவர் ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. 1992- 96-ம் ஆண்டு அவரது கணவரும், வக்கீலுமான பாபு, “ மெர்சி மதர் இந்தியா” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று தொடங்கினார். மேலும் ‘பரணி சுவாதி’ என்ற பெயரிலும் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இவற்றின் மூலமாக காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளும் தொடங்குவதாக கூறி அரசிடமிருந்து ரூ.15 லட்சத்து 45 ஆயிரம் பெற்றனர். ஆனால் அதன்படி அவர்கள் இந்த பள்ளிகளை தொடங்கவில்லை.
ஆப்கன் பெண் நீதிபதிகளை வேட்டையாடும் தாலிபான் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து பெண் நீதிபதிகள் தலைமறைவு
![]() |
BBC - கிளாயர் ப்ரெஸ் - பிபிசி உலக சேவை : ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
பாலியல் வன்புணர்வு, கொலை, சித்ரவதை போன்ற பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்காக் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு எதிராகக் குற்றத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி மசூமா. ஆனால் அவர் வாழும் நகரம் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே அவருக்குக் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது அலைபேசிக்குக் குறுஞ்செய்திகளும் குரல் செய்திகளும் தெரியாத எண்களிலிருந்து அழைப்புகளும் வந்தபடியே இருந்தன.
"தாலிபன்கள் சிறையில் இருந்த எல்லாரையும் விடுவித்துவிட்டார்கள் என்று ஒரு நள்ளிரவில் கேள்விப்பட்டோம். உடனே வீட்டை விட்டு வெளியேறினோம்" என்கிறார் மசூமா.
கனடா இரு தமிழ் தன்பால் ஈர்ப்பு பெண்கள் தாலி கட்டி திருமணம்
JVP news : Canada (Grafton) இல் நேற்று 26.09.2021 மாலை நடைபெற்ற திருமண நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா உட்பட பல நாடுகளில் இன்று ஒரேபாலின திருமணங்கள் நடைபெற்றுவந்தாலும் தமிழர்கள் மத்தியில் அந்த கலாச்சாரம் இடம் பெற்றது இதுவே முதற் தடவை.
இவ்வாறான நிலையிலேயே குறித்த திருமணமும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடைபெற்ற இரண்டு பெண்களின் திருமணத்தை ஓர் அந்தணரே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.
நவ. 1 முதல் 1 - 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு.. அக். 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு!
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக சற்று முன்பு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
செவ்வாய், 28 செப்டம்பர், 2021
நாடார்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை ... அந்த காலத்தில்!!
Sugumaran Ramasamy : நாடார்கள் தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா? அந்த காலத்தில்!!
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.
1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.
1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.
வறண்டு போன நாகநதி ஆற்றை மீட்டெடுத்த வேலூர் பெண்கள்
![]() |
BBC : பிரமிளா கிருஷ்ணன்/ நடராஜன் சுந்தர் - பிபிசி தமிழ் : வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்
நதி ஓடும் பாதையில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது சமீபத்திய மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது, தமிழகத்தில் வறண்டு போன நாகநதி ஆற்றை அப்பகுதி பெண்கள் மீட்டுள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
உலக ஆறுகள் தினம் செப்டம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில், அந்த நாளின் பெருமை குறித்து மோதி தமது மன் கி பாத் உரையில் பேசியது பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஒவ்வொரு சொட்டு நீரையும் மதித்து, மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்த நரேந்திர மோதி, ஆறுகளைப் போற்றும் வகையில் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு முறை நதி திருவிழாவை கொண்டாட வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார்.
"தமிழகத்தில் கமண்டல நாகநதி வறண்டு போனது, இருப்பினும் அப்பகுதி பெண்கள் எடுத்த முன்னெடுப்பால் மூலம் அந்த நதி மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியுள்ள பல ஆயிரம் மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்கப் பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்" என்று மோதி வலியுறுத்தினார்.
பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!
நக்கீரன் : சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்ற 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா பேரிடர் காலத்தில் 2019ஆம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3485 செவிலியர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது எம்.ஆர்.பி. தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் அறிவிப்பு
![]() |
tamil.indianexpress.com : நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் கூறியிருப்பது விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்களை ஒன்றினைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
கலைஞர் செய்திகள் : Made In Tamilnadu: போயிங் உதிரி பாகங்களை தயாரிக்க சேலம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்!
போயிங் விமான நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை தயாரிக்க சேலத்தை சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
போயிங் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை சப்ளை செய்ய சேலத்தைச் சேர்ந்த ஏரோ ஸ்பேஸ் என்ற எம்.எஸ்.எம்.இ நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம், கடந்த 33 ஆண்டுகளாக தமிழகத்தில் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து தரும் தொழிலை செய்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 600 கிலோ கஞ்சா பறிமுதல்!
![]() |
நக்கீரன் செய்திப்பிரிவு : கடந்த மூன்று நாட்களாகத் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக் கத்திகள், அரிவாள்கள், ஏழுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இப்படி நாடு முழுவதும் ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ரவுடிகளிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று ஒரே நாளில் 600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே காரில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கஞ்சாவை இன்று காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராஜ்யசபா தேர்தல்: திமுகவின் கனிமொழி, ராஜேஷ் குமார், ம.பி.யிலிருந்து எல்.முருகன் போட்டியின்றி தேர்வு
![]() |
Veerakumar - Oneindia Tamil : சென்னை: திமுகவை சேர்ந்த கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் ராஜ்யசபா உறுப்பினர்களாக, தமிழகத்திலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தரப்பும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தரப்பும் வேட்பாளர்களை களம் இறங்காத நிலையில், இவர்கள் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினர்களாகியுள்ளனர்.
திங்கள், 27 செப்டம்பர், 2021
ரூ.5,000 கோடி மோசடி! கோவை வாலிபர் கைது.. பின்னணியில் உள்ள பெருந்தலைகள் தப்பிவிட்டனர்?
![]() |
தினமலர் சேலம்:தமிழகம், கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி, 5,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், ஓராண்டுக்கு பின் கோவையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் கவுதம் ரமேஷ், 40. இவரது தலைமையில் 15 பேர், 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன்' என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கினர். அதில், 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம், 10 சதவீத வட்டி, 10 மாதம் முடியும் நிலையில், முதலீட்டு தொகை இரட்டிப்பு என்பன உள்ளிட்ட கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இதை நம்பி, தமிழகம், கேரள மாநில மக்கள், தொழிலதிபர், அரசியல்வாதிகள் லட்சக்கணக்கில் டிபாசிட் செய்தனர்.
ஆண்கள் தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தாலிபான்கள் தடை .. தாடி புனிதமாம்
கலைஞர் செய்திகள் :தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்!
ஆண்களின் தாடியை வெட்டவோ, ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து பிரதமராக முல்லா முகமது ஹசனும், துணை பிரதமராக அப்துல் கனி பரதரும் பதவி ஏற்று ஆட்சி செய்து வருகின்றனர்.
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, கல்லூரிகளில் பெண்களும், ஆண்களும் தனித்தனியாக அமர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தாலிபான்கள் விதித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பாரத் பந்த் - வடமாநிலங்கள் முடங்கின
மாலைமலர் : விவசாயிகள் போராட்டத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம்ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
புதுடெல்லி: மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது.
இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக கூறி அவற்றை வாபஸ் பெற வற்புறுத்தி விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த தொடர் போராட்டம் ஓராண்டை எட்டியுள்ள நிலையில் இன்று விவசாயிகள் பாரத்பந்த் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தனர். 40 விவசாய சங்கங்களை உள்ளடக்கிய சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தலித்தா ? அப்போ பிளேட் நீயே கழுவு… உ.பி பள்ளியில் மாணவர்களுக்கு Separate Plates for Dalit Muslim Students in UP’s Primary Schoo
tamil.indianexpress.com : உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மாவட்டத்தில் உள்ள தவுதபூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களில் 60 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். ஆனால், இந்தப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளியில் சாப்பிடும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பாத்திரங்கள் தனியாக வைக்கப்படுவதாகவும், அவற்றை அக்குழந்தைகளே கழுவுவதாகப் புகார் வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், புகார் உண்மைதான் என உறுதியானதால், பள்ளியின் தலைமை ஆசிரியர் கரீம் ராஜ்புத் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், எஸ்.சி சமூகத்தினர் உபயோகித்த பாத்திரங்களைத் தொட மாட்டோம் எனக் கூறிய இரண்டு சமையல்காரர்களும் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஞாயிறு, 26 செப்டம்பர், 2021
கேரளா சாமியார் கொடூரம் தாய், தம்பி முன்னிலையிலேயே ஒரு வருடமாகச் ‘சிறார் வதைக்கு’ ஆளான சிறுமி” :
கலைஞர் செய்திகள் : கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் மனநில பாதிக்கப்பட்ட நிலையில், தனது மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாலையில் திரிந்துள்ளார். இதனைக் கவணித்த சமூக ஆர்வலர் ஒருவர், கேரள பெண்கள் பாதுகாப்பு மைத்திற்கு தொடர்புக்கொண்டு உதவி கோரினார்.
இதனையடுத்து கேரள பெண்களுக்கான ஹெல்ப்லைன் ‘வனிதா செல்’லைச் சேர்ந்தவர்கள் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அந்தப் பெண்ணிடம் மனநல மருத்துவர்கள் ஆலோசனை நடத்தியத்தில் சாமியார் ஒருவரால் அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் குறித்து தெரியவந்துள்ளது.
திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் ஆனபிறகு கணவனால் கைவிடப்பட்ட வருத்தத்தில் இருந்த அந்தபெண் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சாமியார் ஒருவர் அந்த பெண்ணிற்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் கொடுப்பதாகக் கூறி, தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அந்தபெண் மற்றும் அந்தப் பெண்ணினுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் முதல் குழந்தையான பள்ளி சிறுமிக்கு சிறார் வதைக் கொடுமையைக் கொடுத்துள்ளார்.
திருவள்ளூர் கருவேலமரத்தில் துப்பட்டாவில் தொங்கிய இளம்பெண்.. கொலையா தற்கொலையா?
![]() |
Velmurugan P - Oneindia Tamil : திருவள்ளூர் : ஏரிக்கரை ஓரத்தில் கருவேலமரத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சாவுக்கு காரணமாக .காதலனை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே நரசமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,
பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!
![]() |
மின்னம்பலம் : கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜக தலைவர் அண்ணாமலைதான் இதை தீவிரமாக எழுப்பினார்.
இதற்கு பிடிஆர் தொடர்ந்து கொடுத்த பதில்களையடுத்து, “தமிழ் நாட்டின் நிதி அமைச்சராக இருக்கக் கூடியவர் தன் தினசரி வேலைகளை திறம்பட செய்வதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் ஒரு தெளிவான மனநிலையில் இருக்க வேண்டும்.
நிதியமைச்சர் உடன் வேலை செய்யும் நபர்களையும் நிதி அமைச்சகத்தையும் ஆபத்தான சூழ்நிலையில் விட்டுவிடாமல் தமிழக முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தார் அண்ணாமலை.
கோவை விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சக அதிகாரி மீது புகார்!
![]() |
நக்கீரன் செய்திப்பிரிவு : கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படைக் கல்லூரியில் பயிற்சிக்கு சென்ற பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சக அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சி பெறும் பொருட்டு கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு வந்துள்ளனர்.
இதில் டெல்லியைச் சேர்ந்த லெப்டினன்ட் பெண் அதிகாரி ஒருவரை சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சக விமானப்படை அதிகாரியான லெப்டினன்ட் அமிர்தேஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, இது தொடர்பாக, பயிற்சி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
மோடிக்கு ஆதரவாக கார்த்தி சிதம்பரம் கருத்து... பாஜகவுக்கு .. ? காங்கிரஸ்காரர்கள் ஷாக்!
Giridharan N | Samayam Tamil : இந்தியாவில் இருக்கும் பிரதமரும், ,மத்திய அமைச்சர்களும் அடிக்கடி வெளிநாடு சென்றால்தான் உலகப் பார்வை வரும். அந்த வகையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை வரவேற்பதாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறி அனைவரையும் வியப்படைய செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
வெளிநாட்டு தலைவர்கள் இந்தியாவை பற்றி கூறும் கசப்பான உண்மைகளையும் பிரதமர் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறிய கார்த்தி சிதம்பரம், மத்திய அரசு எடுத்த தவறான பொருளாதார கொள்கையின் விளைவாக மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும்வரை பெட்ரோல், டீசல் விலை குறையவே குறையாது என்றும் உறுதிபடக் கூறினார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தவர், முதல்வர் நேரடியாக தலையிட்டு, காவல் துறையின் மூலம் இரும்புக்கரம் கொண்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நடிகர் சித்தார்த் மருத்துவ தேவைக்காக லண்டன் சென்றுள்ளார் இயக்குநர் அஜய் பூபதி தெரிவிப்பு
கலைஞர் செய்திகள் நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் லண்டன் சென்றது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில், ‘மகா சமுத்திரம்’ படத்தின் இயக்குனர் அஜய் பூபதி இதுகுறித்து விளக்கியுள்ளார்.
நடிகர் சித்தார்த் நீண்ட இடைவெளிக்குப் பின் தெலுங்கில் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், சர்வானந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். அஜய் பூபதி இயக்கியுள்ளார்.
‘மகா சமுத்திரம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அடுத்த மாதம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் வெளியாகும் எனது படம் என மகா சமுத்திரம் குறித்து பலமுறை சித்தார்த் பெருமிதமாக குறிப்பிட்டிருந்த நிலையில், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது விவாதங்களைக் கிளப்பியது.
தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக 219 ரவுடிகள் கைது
hindutamil.in : சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் நடத்திய சோதனையில் 219 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டி கொலை, கொள்ளை, பலாத்காரம், ரவுடித்தனத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்ய, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாநிலம் முழுவதும் நேற்று இரண்டாவது நாளாக போலீஸார் ரவுடிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி சேலம் மாநகரப் பகுதியில் 44 ரவுடிகளும், மாவட்ட பகுதியில் 139 ரவுடிகள் என மாவட்டம் முழுவதும் 183 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோட்டில் 16 ரவுடிகள் கைது
இலங்கையின் வடமாகாணத்தில் கடந்த 24 நாட்களில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் – 310 கொரோனோ உயிரிழப்புகள்
வீரகேசரி : வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறை இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 30 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 28 தொற்றாளர்களும் மன்னாரில் 10 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.









