Velmurugan P - Oneindia Tamil : திருவள்ளூர் : ஏரிக்கரை ஓரத்தில் கருவேலமரத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சாவுக்கு காரணமாக .காதலனை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
முக்கிய பகுதியில் 2/3 பிஎச்கே பிளாட்கள் வெறும் ரூ.45 லட்சத்தில் இருந்து. இங்கே கிளிக் செய்யவும்
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே நரசமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி,
இவரது மகள் ஜெயஸ்ரீ இவரும் அதேபகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த ஏழுமலையின் மகன் இளவரசன் என்பவரும் ஒன்றரை ஆண்டு காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜெயஸ்ரீ பிபிஏ படிப்பு முடித்து மப்பேடு பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ இரவு வீடு திரும்பவில்லை, இந்த நிலையில் இரவு நீண்ட நேரம் ஆகியும் ஜெயஸ்ரீ வராததால் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டுள்ளனர் ஆனால் மொபைல் போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஜெயஸ்ரீயை காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏரிக்கரை பகுதியில் தேடியபோது கருவேல மரத்தில் தனது துப்பாட்டாவில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
தமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம் தமிழகத்தில் பாசிட்டிவ் மாற்றம்.. குறைந்தது கொரோனா.. இன்றைய மாநில நிலவரம்
இதனிடையே இருவரும் வேறுவேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால், ஊரில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் எழுந்தது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். புகாரை ஏற்று காதலனை போலீசார் கைது செய்யாததால் உறவினர்கள் மப்பேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. கத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. "பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா".. கொந்தளித்த சரத்குமார்
இதையடுத்து அங்கு வந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் எனவும் சடலத்தை பெற்றுக் கொண்டு இறுதிச்சடங்கு காரியத்தை முடியுங்கள். அதற்குள்ளாக நாங்கள் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என உறுதியளித்தார்.
ஓ மை காட்.. மனைவியின் வீடியோ.. தூக்கில் தொங்கி துடிதுடித்து தற்கொலை.. பார்த்து பார்த்து ரசித்த கணவன்ஓ மை காட்.. மனைவியின் வீடியோ.. தூக்கில் தொங்கி துடிதுடித்து தற்கொலை.. பார்த்து பார்த்து ரசித்த கணவன்
அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளம் பெண்ணின் சாவிற்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்படும் காதலனை போலீசார் தேடி வருகிறார்கள். ஜெயஸ்ரீ நடந்தது கொலையா தற்கொலை என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் மப்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக