நக்கீரன் " இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை 18 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 224 மையங்களில் எழுதினார்கள். தேர்வுக்கு முந்தைய தினம் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று (15.09.2021) காலை முதல் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
ZEE தமிழ் : தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடைபெறாமலே இருந்து வந்தது. பின்பு முதற்கட்டமாக பாதி மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6
மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்
எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தச் சூழலில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்
தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. மேலும்,
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு
அளிக்கலாம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வளர்ச்சி கருதி
இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில்
அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில்
அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து.
BBC : ஆடை வழி தாலிபன்களை எதிர்க்கும் பஹர் ஜலாலி ஆப்கானிஸ்தானில் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து தாலிபன் அறிவித்த பிறகும், அதை எதிர்க்கும் விதத்தில் சில ஆப்கானிய பெண்கள் இணையத்தில் ஒரு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். DoNotTouchMyClothes, AfghanistanCulture என்கிற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி அவர்கள் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளின் தோன்றும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடங்கிய பஹர் ஜலாலியிடம் பிபிசி செய்தியாளர் சொடாபா ஹைதரே பேசினார். “கூகுளுக்குச் சென்று ‘ஆப்கன் பாரம்பரிய உடை’ என்று தேடிப் பாருங்கள், பல வண்ண பாரம்பரிய உடைகளைக் கண்டு வியந்து போவீர்கள். ஒவ்வொன்றும் மிகுந்த கை வேலைப்பாடுகள், அலங்காரங்கள், சிறு கண்ணாடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஆடைகளாக இருக்கும்,” என்கிறார் அவர்.
tamil.asianetnews.co : நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அந்த மையத்தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவி தேர்வு எழுதச் சென்றிருந்தார்.
விகடன் -நவீன் இளங்கோவன் -க .தனசேகரன் : சேலம் பட்டர்ஃப்ளை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார், நிலைதடுமாறி தலைகுப்புறக் கவிழ்ந்திருக்கிறது. கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் (22). இவர் நேற்றிரவு வானதி சீனிவாசனை ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு, கோவையிலிருந்து சென்னைக்கு மாருதி பலீனோ காரில் கிளம்பியிருக்கிறார். இரவு 11:30 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வந்தபோது, ஆதர்ஷ் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியிருக்கிறது. இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு! ஹார்வர்டு உட்பட 50 மேற்பட்ட உலக புகழ் பெற்ற பல்கலை கழக அறிஞர்கள் கலந்து கொண்ட இந்த காணொளி மாநாடு உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இந்துத்வா என்றால் என்ன என்று உலகுக்கு புரிதல் உண்டாகும் நோக்கத்தில் இம்மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்துத்வாவின் முக்கிய அம்சமே ஜாதீய கொடுமைதான் என்பதை இம்மாநாடு மேற்கு உலகிற்கு தெளிவு படுத்தியள்ளது இதுவரை காலமும் சமூக ஊடங்களிலும் சிறு சிறு கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்ட இந்துவாவின் கொடுமையான தன்மையை இம்மாநாடு பெரிய அளவில் உலக அரங்கில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது வழமை போல இம்மாநாடு இந்துக்களின் நற்பெயரையும் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை தந்துள்ளதாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சங்கிகள் உரத்த குரலில் கூக்குரல் இடுகிறார்கள். உலக அரங்கில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் பெறும் முக்கியத்துவம், ஜாதிக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைப்பதில்லை! இந்துத்வா பற்றிய புரிதல் உலக அரங்கில் இதுவரை ஏற்படவில்லை என்பதே இதன் காரணமாகும் தற்போது நடந்து முடிந்துள்ள உலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு இந்த வகையில் பெரு வெற்றி பெற்றுள்ளதாக கருதப்படுகிறது இம்மாநாடு பற்றி இந்துத்வா சக்திகள் கதறுவதை பார்க்கும்போது இம்மாநாடு அதன் நோக்கத்தை பெருமளவு பூர்த்தி செய்துள்ளதாகவே கருதுகிறேன் கருதுகிறேன்
Al Jazeera. : US academic conference on ‘Hindutva’ targeted by Hindu groups
Dismantling Global Hindutva’ organisers and speakers face harassment and intimidation by Hindu right-wing groups in the US and India. Al Jazeera] - Raqib Hameed Naik : Boston, US – For the first time in the United States, scholars and academics from various American and international universities have come together to organise a major online conference on Hindutva.
இலங்கை தமிழ் பெண் நேற்று நடந்த நோர்வே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் . ஸ்கண்டிநேவியன் நாடுகளின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இவராகும்
Losliya
Sivachandran Sivagnanam : சமூகவியல் படிக்கும் மாணவர்கள் யாரும் Losliya effect என்ற ஒரு தியறியை உருவாக்கி உங்கள் PhD ஆய்வாக செய்யலாம். விளையாட்டு இல்லை உண்மையாகவே சொல்கிறேன். இது எமது சமூகத்தில் இருக்கும் ஒரு அசிங்கமான பக்கம். சிம்பிள் தியரி : எமக்குத் தெரிந்த ஒருத்தன் உருப்படக்கூடாது. அதுவும் பெண் என்றால் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே இதுபற்றி ஒரு தடவை எழுதி இருந்தேன். இப்போது இந்த பெண்ணின் படம் வெளிவரப்போகிறது என்றதும் பழையபடி திரும்பவும், இதெல்லாம் ஒரு மூஞ்சியா, இந்த மூஞ்சிக்கு ஹீரோயின் வேடம் கேட்குதா என மீம்ஸ் போட தொடங்கிவிட்டார்கள். இதில் மிகவும் டேஞ்சரான ஆட்கள், "இனத்துக்காக உயிரையே கொடுத்த வீரப்பெண்கள்" என தொடங்கிற ஆட்கள். ஒரு இனத்தில் பிறந்து விட்டாள் என்பதற்காக எந்தவொரு பெண்ணும் அந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் நினைப்பது போல்தான் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு மோசமான, ஆபத்தான மனநிலை. அண்மையில் சில பெண்கள் பற்றி வெளிவந்துகொண்டிருக்கும் மீம்ஸ்கள் தமிழ் சமூகத்தில் பெண்ணாக பிறப்பது அவ்வளவு பாவமான செயலா என எண்ணத் தோன்றுகின்றது. இதில் ஆச்சரியமான விடயம், ஆண்களுக்கு நிகராக இந்த செயலில் பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் போராட்டம். தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி,
எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது.
BBC : நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் 12ஆம் வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி - கருணாநிதி தம்பதியினர். இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு கனிமொழி, கயல்விழி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அரியலூரில் உள்ள துளாரங்குறிச்சியில் வசித்துவந்தனர். முதல் மகள் கயல்விழி பள்ளிப்படிப்பை முடித்து செவிலியருக்கான படிப்பை படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். அதற்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள க்ரீன் கார்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
dhinalar : ''பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள்
கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க
வாய்ப்பு உள்ளது,'' என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார்.வர் கூறியதாவது:சர்வதேச
கடல் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த மீன்பிடி கப்பல், கொழும்பு
துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டது.
அதில் 290 கிலோ ஹெராயின் இருந்தது. மீன் பிடி கப்பலில் இருந்தவர்கள்,
'பாகிஸ்தான் மக்ரான் துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல், ஹெராயின் ஏற்றிக்
கொண்டு வந்துள்ளது. 'இலங்கையில் இருந்து 1,370 கி.மீ., தொலைவில் சர்வதேச
கடல் எல்லையில் அந்த கப்பல் நிற்கிறது. அந்த கப்பலில் இருந்து தான், 290
கிலோ ஹெராயினை, கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்து செல்கிறோம்' என,
கூறியுள்ளனர்.
மாலைமலர் : மேல்சபை தேர்தலில் வேறு கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது.
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து என்று பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் ஹெச்.ராஜா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ரவி, “சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் மீது எந்தவொரு லஞ்ச புகாரும் வரவில்லை. பிரதமர் மோடி மன் கி பாத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளார். திமுகவின் ஹனிமூன் முடிந்துவிட்டது. அவர்களின் எண்ண ஓட்டம் எப்போதும் ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்படுவதுதான். ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு ஒன்றிய அரசுக்கும், மோடிக்கும் எதிராக செயல்படுகிறது. அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்க தெரியவில்லை. பாஜக எப்போதும் தமிழ்நாடு மக்களுடனும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
tamil.indianexpress.com : திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்க கொள்கைகளை உறத்து முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பெயரும் ராஜ்ய சபா எம்.பி ரேஸில் இடம்பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதால் திமுகவில் முன்னணி நிர்வாகிகல் இடையே ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு உச்ச கட்ட போட்டி நிலவுகிறது. இதில் திமுகவில் இல்லாத ஆனால், திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து உறத்து முழங்கி வரும் சுப.வீரபாண்டியன் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
Asianet Tami : எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி வைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்திருக்கிற கட்சிதான் பாஜக என்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார். தருமபுரியில் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தருமபுரியில் பெண் குழந்தைகள் பருவம் அடைந்த பிறகு பள்ளிக்கு செல்வது நிறுத்தப்படுவது அதிகரிக்க பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணம். எனவே, இதைத் தடுக்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பள்ளிக் கல்வியைத் தொடர இதைச் செய்திருக்கிறோம்.
மின்னம்பலம் : ‘பிளஸ் டூ அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும்’ என்று நீட் தேர்வுக்கு எதிராக இன்று (செப்டம்பர் 13) சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டுமென்ற கனவு நிறைவேறுவதில்லை. இதனால் கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். நேற்றும் கூட சேலத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். ஒன்றிய அரசு நமது குரலுக்கு செவி சாய்க்க வில்லை எனில், அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
விகடன் Vikatan : தமிழகம்
முழுக்க நேற்று (12.9.21) 43,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி
முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம், நேற்று மட்டும்
28 லட்சத்து 36,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோவை, மதுரை,
திருச்சி நகரங்களில் தடுப்பூசி முகாம்களின் நிலை என்ன, இது அரசுக்கு
வெற்றியான முன்னெடுப்பா, மக்களின் பங்கேற்பு எப்படி இருந்தது என்று அறிய
ஒரு வலம் வந்தோம்.
இலக்கை தாண்டிய கோவை!
``மெகா
தடுப்பூசி முகாமில் கோவை மாவட்டத்தில் 1,50,000 பேருக்குத் தடுப்பூசி போட
திட்டமிட்டோம். ஆனால், நேற்று ஒரே நாளில் 1,51,685 பேருக்குத் தடுப்பூசி
செலுத்தி இலக்கை கடந்துவிட்டோம்'' என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்,
`அதுக்கும் மேல...’ என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
மாலைமலர் : சட்டமன்ற கூட்டம் நடந்ததால் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப் போனது. சென்னை: தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
Rayar A - Oneindia Tamil : சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு சென்னை தியாகராயநகரில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துள்ளது. திரையுலகத்தில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை முடித்து வைத்தது தமிழ் குமரன்தான். பாமக ஜி.கே.மணியின் தவப்புதல்வன்தான் இவர்.
Mageshbabu Jayaram | Samayam Tamil : கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசி நாளான நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருகின்றன. அதுமட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : ஆர்.என்.ரவி : நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ` நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்? தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்வாரிவால் புரோஹித் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் கோவை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்தார்.
முரளிதரன் காசி விஸ்வநாதன் - பிபிசி தமிழ் : நடிகர்கள்: கங்கனா ரணாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா, தம்பி ராமைய்யா; சண்முகராஜா, பூர்ணா, ரெஜினா கஸாண்ட்ரா; கதை: கே.வி. விஜயேந்திர பிரசாத்; ஒளிப்பதிவு: விஷால் விட்டல்; இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்; இயக்கம்: ஏ.எல். விஜய். மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்வை திரைப்படங்களாக எடுப்பது மிகச் சவாலான காரியம். அதனால், பெரும்பாலான bio-Pic திரைப்படங்கள், சம்பந்தப்பட்ட ஆளுமைகளை விதந்தோதும் சம்பவக் கோர்வைகளாகவே முடிந்துவிடுகின்றன. தலைவியும் அந்த வரிசையில் வரும் ஒரு திரைப்படம்தான். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் காட்சிப்படுத்துகிறது ‘தலைவி’. குடும்பம் மிக சிரமப்படும் ஒரு காலகட்டத்தில், சினிமாவில் நடிக்கவரும் ஜெயலலிதா, மெல்லமெல்ல எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகிறார். திரைத்துறையின் உச்சத்திற்கு வருகிறார்.
நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார் : தமிழ்நாட்டில் பல மாணவர்களின் உயிர்களைக் குடித்த தேர்வு நீட். எந்த மாணவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அரசு நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது.
Rayar - Oneindia Tamil : சென்னை: 10-ம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்! தமிழ்நாட்டில் கொரோனா தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா படுத்தியபாடை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அந்த நேரத்தில் தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின. கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டன. நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். அதன்பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது. நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்
தினத்தந்தி : வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 50 லட்சத்து 65 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 88 லட்சத்து 26 ஆயிரத்து 768 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 16 லட்சத்து 1 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர்.
வ
ிகடன் - லோகேஸ்வரன்.கோ : ஆரணியில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த சம்பவத்தைத்தொடர்ந்து, நகரிலுள்ள அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துவருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காந்தி ரோட்டில் ‘7 ஸ்டார்’ பெயரில் இரண்டு அசைவ உணவு ஹோட்டல்கள் இயங்கிவருகின்றன. இதன் உரிமையாளர் ஆயத்பாஷா. இந்த ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ ஸ்பெஷல் என்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் எந்த நேரமும் அலைமோதுமாம். பலரும் குடும்பத்துடன் வந்து தந்தூரி சிக்கனை விரும்பிச் சாப்பிட்டுவார்களாம். இந்தநிலையில், கடந்த 8-ம் தேதியிரவு `7 ஸ்டார்’ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட ஆரணி நகரத்திலுள்ள சேத்துப்பட்டு ரோடு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஆனந்தன் என்பவரின் குடும்பத்தினருக்கு தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுப்போக்கு என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.