புதன், 12 மே, 2021

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

நகைக்கடை ஊழியரை கொன்று 1½ கிலோ நகை கொள்ளை கார் டிரைவர் உள்பட 7 பேர் கைது

தினத்தந்தி :திருச்சி புத்தூர் மதுரைவீரன் சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் ஜெயராஜ் (வயது 42).
இவர் திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்முதல் பிரிவில் கடந்த 6 வருடங்களாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜெயராஜ் நகைகள் வாங்குவதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வாடகை காரில் புறப்பட்டு சென்றார்.
1½ கிலோ நகை
அந்த காரை திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டனை சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த் (26) என்பவர் ஓட்டினார்.
சென்னை வந்ததும் மார்ட்டின் ஜெயராஜ் நகைக்கடையில் இருந்து 1 கிலோ 598 கிராம் நகைகளை வாங்கி கொண்டு காரில் திருச்சிக்கு புறப்பட்டார்.
ஆனால் அவர் திருச்சி செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

Nellai siva
BBC :பிரபல நகைச்சுவை நடிகரான நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு வயது 69.கொரோனா பெருந்தொற்று காரணமாக சமீப காலங்களில் தமிழ்த்திரையுலகில் பிரபலங்களின் இறப்பு செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் விவேக், பாண்டு, இயக்குநர் கே.வி. ஆனந்த் என அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனா தொற்றாலும், உடல்நலக்குறைவு காரணமாகவும் காலமாகினர்.

ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்” - தமிழக முதல்வர் அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் :கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
1. சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியானஅனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது.

CFL சி எப் எல் பல்புகள் உடைந்துவிட்டால் அவ்விடத்தை விட்டு தூர விலகவேண்டும்

No photo description available.

N.K. Kajarooban  :    சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது .
இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரோன் தலைவலி , மூளை பாதிப்பு  உடல்அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் .
அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
01. உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

செவ்வாய், 11 மே, 2021

தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன?

 BBC :தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் தலைவராக மு. அப்பாவு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவையின் மிக முக்கியமான இந்தப் பதவியின் அதிகாரங்களும் பொறுப்புகளும் என்னென்ன?
இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசின் சட்டமன்றத்திற்கும் பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார்.
பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, சட்டப்பேரவை, அதன் அலுவலகம் ஆகியவற்றின் மீது முழு அதிகாரம் இருக்கும். பேரவைத் தலைவர்தான் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பார் என்பதோடு, அவையில் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் கொண்டவர்.

அதேபோல, உறுப்பினர்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களைத் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு உண்டு.

தமிழ்நாடு சட்டமன்ற எம் எல் ஏக்கள் பதவி ஏற்பு

 zeenews.india.com :தமிழக சட்டமன்ற  (TN Assembly) முதல் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர்.
அவர்கள் பதவியேற்றுக்கொள்வதற்கு வசதியாக தற்காலிக  அவைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கீழ்ப்பெண்ணாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit) நியமித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் சட்டமன்ற  கூட்டத்தில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொள்கின்றனர். நாளை (புதன்கிழமை) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்

மருத்துவமனைகளில் மூன்று வேளையும் இலவச உணவு!

minnambalm : தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொண்டதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு, சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதையும் அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

சட்டமன்ற அவைத் தலைவராக அப்பாவு போட்டியின்றி தேர்வு

May be an image of one or more people and text

மாலைமலர் :சட்டமன்ற  பொதுத்தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு போட்டியிட்டார். இதில் அவர் அமோகமாக வெற்றி பெற்றார்.
சென்னை:     தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை கலைவாணர் அரங்கில் கூடியது. தற்காலிக அவைத் தலைவர்  கு.பிச்சாண்டி சட்டசபையை நடத்தினார்.
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற அனைத்து கட்சிகளை சேர்ந்த புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வெற்றிச் சான்றிதழ்களுடன் வந்திருந்தனர்.
முதலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பின்னர் அமைச்சர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதன்பிறகு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உறுதிமொழி ஏற்றனர். அகர வரிசைப்படி புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய்கள் வரை அபராதம்! 25 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது

May be an image of text that says 'அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள்: உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து திமுக அரசு அதிரடி! 09:02:45 am- May 10, 2021 TRAYSLI ×××ב NKV Sharocsh'

tamilminutes.com :  பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய்கள் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 25 பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இப்படி ஒரு செய்தி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
அதே அதிகாரிகள்தான், அதே சட்டங்கள்தான். அமுல்படுத்தும் முறை மட்டும் இரண்டே நாட்களில் அதிரடியாகிவிட்டது. ஏனெனில் மக்களின் அவசரத் தேவையைப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பது இழவு வீட்டில் பணம் பிடுங்குவதற்குச் சமம். ஆம்னி பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றால் அதுவும் இல்லை. நீங்கள் மதுரை மாட்டுத் தாவணி பஸ் ஸ்டாண்டில் வெறும் கையுடன் சென்று இறங்கினாலும் ஐந்தாறு பேர் வரை 'ஸார், சென்னையா?' என்று உங்களை அணுகுவார்கள். லாபம் கொழிக்காமல் இத்தனை ஏஜெண்ட்கள் சாத்தியமில்லை.

கங்கை ஆற்றில் மிதந்து வரும் கொரோனா பிணங்கள்! பிகார் - உத்தர பிரதேச அவலங்கள்

 Aazhi Senthil Nathan  : கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம்...
அந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பிஹாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன.
ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.
இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பிஹாரும், அவை பிஹாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.
ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, "இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்" என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன.  மனிதத்தன்மையற்று நடந்துகொள்வதுதானே நமது வழக்கம் என்கிற பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக்கூடும். இல்லையா பின்னே!

லஞ்ச ஒழிப்புத்துறை டி ஜி பி -கந்தசாமி - அமித் ஷாவையே கைது செய்தவர் ! 16 ஆண்டுகள் காத்திருந்து கன்னியாஸ்திரி வழக்கை தூசி தட்டியவர்! . முன்னாள் மாண்புகளே கேட்கிறதா?

May be an image of 2 people and text that says 'THIS IS CALLED REAL "MASTERSTROKE" P. Kandasamy, The Then IG In CBI Who Arrested Amit Shah In Sohrabuddin Fake Encounter Case Has Now Been Appointed As New Director General Of Vigilanct & Anti Corruption In Tamilnadu By MK Stalin Govt. INQUILAB INDIA BURNOL MOMENT FOR BJP & BHAKTS'

tamil.samayam.com/ : கந்தசாமி ஐபிஎஸ்  :   வலுவான ஆதரங்களை திரட்டி அமித்ஷாவை கைது செய்தவர்
கன்னியாஸ்திரி வழக்கை 16 ஆண்டுகள் கழித்து கையில் எடுத்து கண்டுபிடித்தவர்
கந்தசாமி ஐபிஎஸ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.
முதல்வரின் முதன்மை செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்டவர்கள் நியமனம் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) இருந்த கந்தசாமி ஐபிஎஸ், காலியாக இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தற்போது உற்று நோக்கப்படுகிறது.

புதுசேரியில் ரங்கசாமி அரசுக்கு எந்நேரமும் ஆபத்து ! பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு

 Mathivanan Maran  - /tamil.oneindia.com :  புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்தது மூலம் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து காத்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
30 இடங்களைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களிலும் வென்றது.
திமுக 6 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த முறை புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
இதனடிப்படையில் புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக அணிக்கு 16 எம்.எல்.ஏக்களும், திமுக அணிக்கு 8 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
அத்துடன் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இருப்பதால் புதுவை அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நிகழலாம் என்கிற நிலைமைதான்.

பாஜக அடாவடி இப்படியான அரசியல் நிலையற்ற தன்மைக்கு மத்தியில்தான் புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அதேநேரத்தில் 6 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜக, துணை முதல்வர் பதவி மற்றும் 2 அமைச்சர்கள் பதவி எனவும் தன்னிச்சையாகவே முடிவு செய்து கொண்டது. இது என்.ஆர். காங்கிரஸை அதிருப்தி அடைய செய்தது. இதுதான் ரங்கசாமி அரசுக்கான பாஜகவின் முதல் நெருக்கடி.

அண்ணா பல்கலைக் கழகத்தில் மீண்டும் தேர்வு'' - அமைச்சர் பொன்முடி தகவல்!!

nakkeeran :கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பி.இ அரியர் தேர்வு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். அதேபோல், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். பி.இ அரியர் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டது.

மாநில உரிமை - சமூகநீதிக்கு கரோனாவைவிட பேராபத்து வருகிறது! அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து காத்திடுவோம்!

May be an image of 2 people and people standing

Asiriyar K Veeramani :     சமூகநீதி - இடஒதுக்கீட்டுக்குப் பேராபத்து! பேராபத்து!!
தமிழ்நாடு முதல் அமைச்சர் மற்றும்  அனைத்துக் கட்சித் தலைவர்கள் கவனத்துக்கு,.
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட சமூகநீதி சம்பந்தமான வழக்கு - மராத்திய மக்களுக்கான இடஒதுக்கீடு (மராத்திய அரசு நிறைவேற்றிய சட்டம்  சம்பந்தமானது) வழக்கில், 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்டப் பிரிவு அமர்வு மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி மராத்திய இடஒதுக்கீடு சட்டம் 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதாலும், மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட் டிருந்தபடி, 50  விழுக்காட்டிற்கு மேற்பட்டு இடஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உகந்ததாக மராத்திய ஒதுக்கீடு அமையவில்லை என்று கூறி, அது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.
மாநில அரசுக்கு உரிமை இல்லையாம்

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு... தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை” - அரசு அதிரடி அறிவிப்பு!

kalaignarseithigal.com : அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு குளறுபடி குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.இதற்கு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வை எழுதலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் முடிவு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020 க்கான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக (Proctored Online Exam) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது.   இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

புதுச்சேரிக்கு 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது பாஜக!

BBC :புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகள், பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 6 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தலைவர் ரங்கசாமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல்வராக பதவியேற்றார்.

இதையடுத்து ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி 16 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதைத் தவிர்த்து புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது‌.

பிரான்ஸ்- மதரஸாக்களுக்கு தடை (இஸ்லாமிய கல்விக்கூடங்கள்) மீறினால் குடியுரிமை ரத்து உட்பட கடுமையான தண்டனை

 Sivakumar Shivas  : பிரான்சு நாட்டில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத ஊற்றுக் கண்களாகிய இஸ்லாமிய மார்க்க கல்வி கூடங்கள்(மதராசாக்கள்) நிரந்தரமாக தடை செய்யப்பட்டன!
மேலும்...
புதிய சட்டங்கள் மூலம் இஸ்லாமிய முரட்டு முட்டாள் அடிப்படைவாதிகளை கசக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோன்
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மார்க்கோன். புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மாக்ரோன்..  புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள்
அதிபர் மார்க்கோன் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்
1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே, பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும், இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது

திங்கள், 10 மே, 2021

சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு..!

dinakaran : சென்னை: சட்டப்பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை துணைத் தலைவராக கு.பிச்சாண்டி போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தனியார் மருத்துவ மனை கைவிட்டது அரசு மருத்துவ மனை காப்பாற்றியது! தோழர் த. ஜீவலட்சுமி!

அம்பேத்கர் ஜாதி ஒழிப்பு, சில சிந்தனைகள் & திராவிடம், மார்க்சியம், தமிழ்  தேசியம் - த.ஜீவலட்சுமி உரை - YouTube
தோழர் த. ஜீவலட்சுமி :  இரவு எட்டு மணி. கட்டிலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். லேசாக மிக லேசாக ஒரு இருமல். குபுக்கென்று வாயிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. கையை வாய்க்குக் கொண்டு போய் கையில் படிவது இரத்தம் என உணர்ந்து கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்து லேசாக இருமல் குபுக்குபுக்கென்று அறையில் இரத்தம் கொட்ட டாய்லெட் பேசன், தரை என ஏழெட்டு நிமிடங்கள் இடைவெளியின்றி சிறு இருமலோடு இரத்தம் கொட்டிப் பெருகுகிறது ஆடு அறுத்த இடமென. என்ன செய்கிறதென சொல்லவோ குடிப்பாட்டும் தண்ணீரை விழுங்கவோ இடைவெளியே இல்லை. உள்ளே என்னவோ நடந்து உயிர் போய்க் கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் அவரின் கைகளைப் பற்றிக் கொண்டு மூச்சை நன்றாக இழுத்து விட முயற்சிக்கிறேன். முடியவில்லை.
என் உயிரைத் தன் கைகளால் பற்றியது போல் கையை இறுகப் பிடித்துக் கொண்டே ஆட்டோ, தோழர்கள் என அழைக்கிறார். யாரும் வரும் வரை பிழைத்திருப்பேனா என்ற அச்சம் எனக்கு. பிழைத்து விட வேண்டும் என்ற ஆக்ரோசமும். கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் வாயிலிருந்து இரத்தம் கொட்டுவது நின்று விட்டது. ஆனால் மூச்சு விட முடியவில்லை. மேல் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.

அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலினின் முக்கிய ஒழுக்க விதிகள்

 மின்னம்பலம் :மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று (மே 9) காலை 11.30 மணிக்குத் தொடங்கி ஒரு மணி வரை நீடித்தது.
அமைச்சரவைக் கூட்டம் தொடங்கும்போதே தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் இருப்பது வழக்கம். அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள், நிதி விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன,
மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய துறைகள் கொரோனா தடுப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு வழங்கினார்.

முள்ளிவாய்க்கால் வீடுகளில் நினைவு கூர தடையில்லை! பொதுவெளியில் கூடுவோர்கள் கைது செய்யபடுவார்கள்

Army Commander Lieutenant General Shavendra Silva appointed as new Chief of  Defence Staff!

jaffnazone.com : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வீடுகளில் இருந்து நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக
முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச மற்றும் தனியார் நிகழ்வுகள் மற்றும் நயினாதீவில் இடம்பெறவிருந்த வெசாக் நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள்! தமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலகத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கிய அயோக்கியர்கள்

May be an image of text that says 'This Covid-19 hospital was set up by chance CARE CENTRE Tamil Nadu overnment Multi Super Hospital nowa Covid hospital STALIN HOSPTINUE TRACING THE CHANGE 2,2007 CMM In The Second Report On Projects That Await New Chief Minister MK Stalin's Attention, We Highlight Hospital That's Doing Well More Care hospital made expand in Experts convertingh Corid George. only etter retain'

LR Jagadheesan : கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களின் கயவாளித்தனத்தை. கழுத்தறுப்பு வேலையை. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்யும் எத்துவாளித்தனத்தை.
அற்புதமாய் வடிவமைத்து அழகாய் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புதியதலைமைச்செயலகத்தை ஒரு அகங்காரி கொடுங்கோலி அப்பட்டமான அரசியல் அசூயையால் சிதைத்து சின்னாபின்னமாக்கினார்.
தன் அரசியல் எதிரி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என்று சபதம் போட்டு சாதித்துக்காட்டினார் அந்த சேலைகட்டிய சர்வாதிகாரி.
அதற்கு ஒத்து ஊதினர் ஊடக அயோக்கியர்கள்.
இதோ அதே அயோக்கியர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் தங்களின் அடுத்துக்கெடுக்கும் அயோக்கியத்தனத்தை. தலைப்பே அயோக்கியத்தனமானது.
தலைமைச்செயலகமாக மட்டுமே திட்டமிட்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தை சட்டவிரோதமாக மக்களின் பணம் நூறுகோடியை கொட்டி மருத்துவமனையாக மாற்றியதை மறைத்து “by chance” என்கிற வார்த்தைகளால் பூசி மெழுகுவதில் ஆரம்பிக்கும் அயோக்கியத்தனம் செய்தி முழுக்க தொடர்கிறது.

அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா! திமுகவுக்கு மேலும் இரு எம்பிக்கள் கிடைக்கிறது

K.P.Munusamy and Vaithilingam resigns their Rajyasabha MP post

Vishnupriya R  - tamil.oneindia.com : சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்களாக தேர்வாகியுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவியை கே பி முனுசாமியும் வைத்திலிங்கமும் ராஜினாமா செய்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின. இதில் திமுக மற்றும் அதிமுக தலா 3 இடங்களுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்.
அந்த வகையில் அதிமுக சார்பில் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கூட்டணி கட்சியான தமாகாவின் ஜி கே வாசன் ஆகியோருக்கு
இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட முனுசாமியும் வைத்திலிங்கமும் விருப்பமனு தாக்கல் செய்து அவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்! 7,000 போதுமானதாக இல்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“7,000 போதுமானதாக இல்லை; 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
kalaignarseithigal.com : மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசியில் வாயிலாக தொடர்புகொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்துக்கு ஒதுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை:சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவர் பதவி ஏற்றதும் முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். கொரோனா பாதிப்பால் மக்கள் சிரமப்படும் இந்த சூழலில் ரூ.4 ஆயிரத்தில் இந்த மாதமே முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் வகையில் ஆணை பிறப்பித்தார்.