![]() |
வெள்ளி, 25 டிசம்பர், 2020
கலைப்புலி தாணுவும் வைகோவும் .. இதுவும் ஒரு பழைய அரசியல் டைரி குறிப்புத்தான்
சுதாகரன் விடுதலையைத் தடுக்கும் சசிகலா .. சுதாகரனுக்கும் சசிக்கும் என்னதான் பிரச்சனை? பழைய கொடுக்கல் வாங்கல் ?
![]() |
கொரோனா தடுப்பூசி ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ... 4 மாநிலங்களில் ஒத்திகை!
திருவனந்தபுரம் மேயராக 21 வயது மாணவி தெரிவு .. நாட்டிலேயே வயதில் குறைந்த மேயர் Kerala
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது - ஐதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனை Rajinikanth Health LIVE Updates
கவிஞர் வைரமுத்து : நல்ல செய்தியோடும் நல்ல தமிழோடும் ஒரு கலைப்படையோடும் உங்களைச் சந்திக்க வருகிறேன்
இதிகாசம் - புராணம் - இலக்கியம் - வரலாறு - சமூகம் - சீர்திருத்தம் - சமயம் - போராட்டம் எல்லாமே பாடல் வழியேதான் பரிமாறப்பட்டன.. தமிழர்களுக்குப் பாட்டு என்பது கலைக்கருவி மட்டுமன்று; கற்பிக்கும் கருவி. தமிழர்களின் காதல், வீரம் - விழுமியம், பண்பாடு - பக்தி - பாரம்பரியம் - பொதுவுடைமை - பகுத்தறிவு - தேசியம் - திராவிடம் - குடும்பம் - தத்துவம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை - நிலையாமை, இறந்தகாலம் - எதிர்காலம் எல்லாவற்றையும் பள்ளி செல்லாமலே கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகமாகப் பாட்டுப் புத்தகம் திகழ்ந்தது. பாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் முளைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பாடலும் தடம்பதித்தே வந்திருக்கிறது என்பதைப் பண்டித உலகம்கூட மறுதலிக்க முடியாது. தொல்லிசை அறிந்த பாவாணர்களும், பழந்தமிழ் அறிந்த பாவலர்களும், தங்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் திரையிசையை உயர்த்தியிருக்கிறார்கள்.
குயிலி வீரமாகாளியாகவும் தீப்பாஞ்ச அம்மனாகவும் வணக்கப்படுகிறாள்

இந்தி நடிகர் சோனு சூட்டின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்..? அவிழும் மர்மங்கள்!
![]() |
ஹிந்து சமூகம் பாழானதற்கு பிராமணன்தான் காரணம்! காஞ்சி (old) பெரியவாள் சந்திர சேகர ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (அப்பாடா)
![]() |
Dhinakaran Chelliah : ·பிராம்மணீயம் “வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி. பிராமணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான்.
அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.”
படகர்கள் நீலகிரிக்கு வந்தவர்கள் பேச்சு ! நீலகிரி தொல்குடியினர் கூட்டமைப்பு PTVG உறுப்பினர்கள் மீது, காவல்துறையில் புகார்
பாமகவினர் மீண்டும் வன்முறையை கையில் ...... வெற்றி அளிக்குமா?
Vijayaragavan Rajasekaran : · பாமகவினர் செந்தில்குமார் தயாநிதி மாறன் போன்றோரை தாக்கியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த கட்சியை விமர்சித்து பேசியதால் வன்முறை என்பது வெறும் மேல்பூச்சு. அவர்களின் வன்முறை வெறி செயலுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அவர்களால் தங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப இன்னமும் கூட்டணியை உறுதி செய்ய முடியவில்லை. காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவாக இருப்பதால் பாமகவின் வாக்கு வங்கியில் ஓட்டை விழுந்துள்ளது. ஒருவேளை கனலரசனுக்கு திமுக சார்பில் சீட் கிடைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் கட்சி பூஜ்யமானால் அது பாமகவுக்கு மிகப் பெரிய பின்னடைவு.
வியாழன், 24 டிசம்பர், 2020
வைக்கம் போராட்டம்தான் தீண்டா மையையும் சாதிக் கொடுமையும் எதிர்த்து முதன்முதலாக நடைபெற்ற அறப்போராட்டம்!
![]() |
திமுகவின் கிராம சபை கூட்டங்களுக்கு தடை ! தமிழக அரசு அறிவிப்பு
அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் . கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும். சட்டத்தால் அதிகாரம் பெற்றவர்களை தவிர தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, கூட்டத்தை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது . அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு . கிராமசபை என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன. சட்ட விதிமுறைகளுக்கு முரணானது மட்டுமன்றி கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. ஊரகப் பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராம முன்னேற்றம் காண வழி வகுக்கிறது கிராமசபை என தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான முனைவர் தொ.பரமசிவன் காலமானார்!!
மத்திய பிரதேசத்தில் 185 கல்லூரிகளில் 51 கல்லூரிகளை பிஜேபி அரசு இழுத்து மூடுகிறது.
![]() |
Velmurugan Balasubramanian : · மத்திய பிரதேசத்தில் 51 அரசு கல்லூரிகளை இழுத்து மூட பிஜேபி அரசு முடிவு தமிழகத்தை விட 3 மடங்கு நிலப்பரப்பு கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம். ஆனால், அங்கு மொத்தமே 185 கல்லூரிகள் தான் உள்ளன. அந்த 185 கல்லூரிகளில் தற்போது 51 கல்லூரிகளை பிஜேபி அரசு இழுத்து மூடுகிறது. தமிழ் நாட்டில் 1100 கல்லூரிகள் உள்ளன. அது தவிர 600 பாலிடெக்னிக்குகள் உள்ளன. வட இந்தியா எந்த அளவு கல்வியில் பின்தங்கியுள்ளது என்பதையும் தமிழ் நாடு எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதையும் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காவிடில் பிஜேபி தமிழ் நாட்டையும் பின்தங்கிய மாநிலமாக்கிவிடும்
.Bhopal: The Shivraj Singh Chauhan government of Madhya Pradesh, facing financial constraints, is now going to close 51 government colleges in the state. At the same time, the colleges that have 80 per cent of students will be merged into other colleges. The government is doing this so that expenses can be cut. 51 government colleges will be closed
காலிஸ்தான் செயல்பாட்டாளர் நிஜ்ஜார் கைது . சைபிரசில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு
கோபாலபுரத்தில் மு.க.அழகிரி . புதிய கட்சி ஆரம்பிக்க முடிவு ?
அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த பிரிட்டன்

அந்தப் பேச்சு பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை நெறிமுறைப்படுத்தும் ஆஃபீஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸின் (ஆஃப் காம்) விதிகளை மீறுவதாக இருப்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது பிரிட்டன்.
அத்துடன், இந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பப்படக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது பிரிட்டனின் ஆஃப் காம். "பாரதம் கேட்கிறது" நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.
தேர்தல் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக வழக்கு... விசாரணை.. தபால் வாக்கு விவகாரம்
dhinkaran :சென்னை: சட்டப் பேரவை தேர்தலில் 80 வயதுக்கு
மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்ற தேர்தல்
ஆணையத்தின் தேர்தல் நடத்தும் விதிகள் திருத்தத்தை எதிர்த்து திமுக
சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்
நீதிமன்றத்தில் திமுக சார்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வாக்காளர்கள்
சுதந்திரமாக எந்த வற்புறுத்தலும் இல்லாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய
வேண்டும். அதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இந்த சட்டப்பிரிவு 60(சி) சட்ட திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமானால்
தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அரசின் ஆலோசனை பெற்று அதன் பிறகுதான்
திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
ஆனால், எந்த முன்னறிவிப்போ
ஆலோசனையோ இல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 60(சி)ல் சட்ட
திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
விவசாயிகள் நிபந்தனை : திருத்தங்களை ஏற்கமாட்டோம்’ - மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க விவசாயிகள் ...
dailythanthi.com வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்து உள்ளனர். புதுடெல்லி,வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு உள்ள பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததால், தீர்வுக்கான முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.இதனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கடுமையான குளிர் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் தங்கள் போர்க்கோலத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் நேற்று 28-வது நாளை எட்டியும் போராட்டம் எவ்வித தொய்வும் இன்றி நடந்து வருகிறது.முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளான நேற்று விவசாயிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி போராட்டக்களத்திலும் சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறின.
யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை... மீண்டும் மீண்டும் துளிர்த்து எழுந்த கதை
எம்ஜியார் உள்ளும் புறமும் 6 கவிஞர் கண்ணதாசன் . ஆட்களை அடையாளம் காட்டுவதே எனது நோக்கம்
கவிஞர் கண்ணதாசன்:
.: ஆக்குவார் அழிப்பார் அவர் ஆட்களை உண்டாக்குவார் அழிப்பார். சொந்த காரணங்களுக்காக யாரையும் பிடிக்கவில்லை என்றால் தனது படங்களில் அவரை போடக்கூடாது என்று தடுப்பார். ஏற்கனவே சில பகுதிகளை எடுத்து விட்டிருந்தாலும் அதை வெட்டி விட்டு வேறொரு நடிகரை போட்டு எடுக்க சொல்வார். தயாரிப்பாளருக்கு ஏற்படும் நஷ்டத்தை பற்றி கவலைப்பட மாட்டார். (தன்வரையில் திறமை இல்லாத ஒருவர் பிறரருக்கு திறமையை உற்பத்தி செய்யும் திறமையை அவரிடம் மட்டும்தான் கண்டேன்)
அப்படி இவரால் பாழ்படுத்த பட்டவர்களில் குலதெய்வம் ராஜகோபால் ஒருவர் ஈவு இரக்கம் இல்லாமல் அவரது பழிவாங்கும் குணத்தால் பலர் வேலை இல்லாமல் அலைந்தார்கள் . சிலர் சிவாஜியோடு ஒட்டிக்கொண்டு பிழைத்தார்கள். சிவாஜியை பொறுத்தவரை அவருக்கு பழிவாங்கும் குணம் எப்போதும் கிடையாது.
இன்னாரை போடு என்று சொல்லமாட்டார் .போடாதே என்று தடுக்கவும் மாட்டார். அவரை வெட்டுவேன் குத்துவேன் என்றவர்களை கூட தன்படத்தில் இருந்து ஒதுக்கவில்லை. ஆனால் எம்ஜியார் பிறருடைய தொழிலாத்தான் முதலில் கெடுப்பார். திமுகவில் இருந்து நான் விலகிய சில ஆண்டுகளில் என்னையும் பழிவாங்க அவர் முயன்றார்.
நாம் தமிழர் ரவுடி செல்லத்துரை வெட்டிகொலை . கொலை முயற்சி கடத்தல் தொடர்புகள் காரணம்?
Hemavandhana -tamil.oneindia.com : சேலம்: சேலத்தில் முன்விரோதம் காரணமாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது சம்பந்தமான பகீர் பின்னணி வெளியாகி உள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை.. 34 வயதாகிறது..
இவர் ஒரு ரவுடி.. கொலை, கொலை முயற்சி, ரேஷன் அரிசி கடத்தல் என ஏகப்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது. இவருக்கு 2 மனைவிகள். செல்லதுரை நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தீவிரமாக களப்பணி ஆற்றி வந்தார். இந்நிலையில், சம்பவத்தன்று, முதல் மனைவியான ஜான்சி என்பவருடைய வீட்டுக்கு வந்தார்.. பிறகு இரவு 7,30 மணிக்கு, அங்கிருந்து காரில் கிளம்பி, அம்மாபேட்டையில் உள்ள 2-வது மனைவியான சுஜி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். எருமாபாளையம் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல் திடீரென செல்லதுரை கார் மீது வேகமாக மோதியது... 2 கார்களில் இருந்து வந்த மர்ம கும்பலானது, செல்லதுரையின் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.. இதனால் சுதாரித்து கொண்ட செல்லதுரை, காரில் இருந்து தப்பித்து இறங்கி ஓட பார்த்தார்.. ஆனால், அந்த கும்பல் விரட்டி சென்று, தலையிலேயே சரமாரியாக வெட்டியது. இதில் செல்லதுரை சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
புதன், 23 டிசம்பர், 2020
இன்சூரன்ஸ் பற்றிய தவறான புரிதல் ! Term Insurance தவிர்ந்த ஏனைய பாலிசிகள் பற்றிய உண்மை... Karthikeyan Fastura
![]() |
Karthikeyan Fastura : · இன்சுரன்ஸ் பற்றி சமீபகாலமாக ஒரு தவறான புரிதல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது. Term Insurance தவிர்த்து மற்ற இன்சுரன்ஸ் பாலிசி எல்லாம் வீண் என்பது போன்ற கருத்தாக்கம் தான் அது. எந்த இன்சுரன்ஸ் பாலிசியும் தவறானது/வீண் என்று சொல்லமுடியாது. நீங்கள் முழுமையாக அந்த பாலிசியை கட்டவேண்டும் . ஒவ்வொன்றும் வெவ்வேறு தேவைகளுக்காக உருவாக்கப்படுகிறது. Term Insurance என்பது குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் ஒரு குடும்ப தலைவர் அல்லது தலைவி, தனக்கு ஒரு ரிஸ்க் ஏற்பட்டால் தனது குடும்பம் எந்தவிதத்திலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தனது ஆண்டு வருமானத்தை காட்டிலும் 20 மடங்கிற்கு மேல் ஒரு பெரும் தொகையை காப்பீடு செய்துகொள்வது. இதனால் அவரது குடும்பம் எளிதாக பாதுகாக்கப்படும். இன்று எல்லாவிதமான இறப்புகளுக்கும் இது பொருந்துகிறது.
ரஜினி, கமலுக்கு விழும் அடியில் விஜய் உட்பட எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரக்கூடாது- சீமான்
Veerakumar -tamil.oneindia.com : சென்னை: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு அரசியலில் விழும் அடியில், விஜய் உட்பட எந்த நடிகரும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் சீமான். அப்போது, ஜனநாயகம் பேசக்கூடிய நீங்கள் ஒருவர் கட்சி ஆரம்பிக்கும் போது எதிர்ப்பது ஏன் என்ற நிருபரின் கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், ரஜினிகாந்த் திரைப்படத்தை யாரும் குறை சொல்லவில்லையே. 71 வயதில் எதற்காக ஹீரோவாக நடிக்கிறீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லையே.
அரசியல் என்பதில் எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. பல நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட இனமாக தமிழ் இனம் உள்ளது. ஒரு இனத்தின் பிள்ளைகள் எழுச்சியுற்று எழும் போது, எங்கிருந்தோ வந்து ஒரு திரை கவர்ச்சியை போட்டு மூடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழர் எழுச்சி பெறுவது மிகவும் அரிதான விஷயம். அது இப்போது நடக்கிறது. எங்களை வழி நடத்துவதற்கு எங்களுக்குள் ஒருவர் இல்லையா? இதற்கு மகாராஷ்டிராவில் இருந்து ஒருவர் வரவேண்டுமா? மானம், வீரம், அறம் ஆகிய மூன்றும் உயிர் என்று வாழ்ந்த தமிழினத்துக்கு இது ஒரு தன்மான இழப்பு. எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரை விட்டுவிட்டு ரஜினிகாந்தை மட்டும் பிடிக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். அவர்களையெல்லாம் விட்டு விட்டதால்தான் இப்போது இவர்களை பிடிக்க வேண்டியதாக இருக்கிறது










