திங்கள், 16 மார்ச், 2020

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்... இத்தாலி இருண்ட யுத்தநாடு போல மாற்றப்பட்டுள்ளது!

இத்தாலியிலிருந்து ஒரு கடிதம்.
அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்
நாங்கள் இத்தாலியில் மிலன் பகுதியில் வசிக்கிறோம். இந்த கடினமான நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மிலனில் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் இங்கு விட்ட தவறுகளிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். நாங்கள் வீதிகளில் இறங்கத் தடை! காவல்துறையினர் தொடர்ந்து நடந்துகொண்டு, வீட்டிற்கு வெளியே வரும் யாரையும் கைது செய்கிறார்கள். எல்லாம் மூடப்பட்டுள்ளது!... வணிகம், மால்கள், கடைகள், இயக்கம் இல்லாத அனைத்து தெருக்களும். உலக முடிவின் உணர்வை எமக்கு தருகிறது!!
நான் வாழும் நாடான இத்தாலி இருண்ட யுத்தநாடு போல மாற்றப்பட்டுள்ளது! இப்படி ஒரு சூழலில் நான் ஒருபோதும் வாழ்வேன் என்று நினைத்ததில்லை!மக்கள் குழப்பமாகவும், சோகமாகவும், ஆர்வமற்றவர்களாகவும், உதவியற்ற வர்களாகவும் உள்ளனர். மேலும் இந்த யதார்த்தம் அவர்கள் மீது எவ்வாறு திணிக்கப்பட்டது என்பதையும், இந்த கொடிய நிலை எப்போது முடிவடையும் என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஜெர்மனி.. பூண்டு இஞ்சி வெங்காயம், மஞ்சள் .. எலுமிச்சம் பழத்தையும் தினமும் சாப்பிட சொல்லி இருக்கின்றேன். .. Subashini Thf

Subashini Thf : ஜெர்மனி நேற்று இரவு 8 மணிக்கு அதன் எல்லையை மூடும் ளது.
அறிவிப்பை வெளியிட்டது. இதன் அடிப்படையில் எல்லை நாடுகளான பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய ஐந்து நாடுகளுக்கான எல்லைகள் நேற்று இரவிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்பட்டுள்ளன. ஆயினும், வர்த்தகம் தொடர்பில் இந்த நாடுகளிலிருந்து வருகின்ற பெரிய வாகனங்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட நாட்டில் இருந்துகொண்டு ஜெர்மனியில் பணியாற்றும் நபர்கள் ஆகியோருக்குத் தனி சலுகையாக வழிகள் திறக்கப்படும் என்றும் ஜெர்மனி கூறியுள்
வார இறுதி கடுமையான பீதியுடன் இங்கு தொடங்கினாலும் படிப்படியாக மக்களின் கட்டுப்பாடு நிறைந்த செயல்பாடுகளினால் அமைதி ஏற்பட்டிருக்கின்றது. என்னைப் போன்று வீட்டிலிருந்து பணியாற்றும் பலருக்கும் கொரோனா பிரச்சனை தீரும்வரை வீட்டிலிருந்து பணியாற்ற அலுவலகங்கள் வாய்ப்பினை வழங்கி இருக்கின்றன.
சாலைகளில் அதிக வாகனங்கள் இல்லை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. பேருந்துகள் செல்கின்றன. ஆயினும் மிகக் குறைவான பயணிகளுடன்.
ஐரோப்பாவில் வசந்த காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்தல் என்பது கூடுதலாக நன்மை தரும்.
அதோடு ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டிருக்கும் அவசரநிலை கட்டுப்பாடுகள் மக்களிடையே நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் என்பதாலும் ஓரளவு இம்மாத இறுதிக்குள் நிலைமை ஐரோப்பாவை பொறுத்தவரை பாதிப்பிலிருந்து குறைந்துவிடும் என்று கருத தூண்டுகிறது.

எம் . ஏ.சுமந்திரன் ... புலிகளின் தவறுகளில் இருந்து ஈழத்தமிழ் அரசியலை மீட்டுள்ளார்?

M.A.Sumanthiran MP
Theneeweb – கருணாகரன் : இரண்டு  ஆண்டுகளுக்கு முன்பு புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் அமர்க்களமாக நடந்தன. ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்கு உள்ளிருக்கும் அபாயத்தைப்பற்றிய கடுமையான – சர்ச்சைக்குரிய விவாதங்கள் அவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களே தடுமாறும் அளவுக்கு அந்த விவகாரம் அதிக சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஏனென்றால் அந்த அரசியலமைப்பு விவகாரம் நிறைவேற்றப்படாத ஒரு சரக்கு என்பதை மறைப்பதற்கு இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உண்மைபோலாக்குவதற்காக ஒரு சீரியஸ் தன்மையைக் கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது.
இதற்காக நடந்த விவாதங்களில் சுமந்திரன் கலந்து கொண்டு கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதலளித்தார். சுமந்திரனுடைய அந்தப் பதில்கள் பலருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. அதிகம் ஏன், அவருடைய தமிழரசுக் கட்சியினருக்கே திருப்தியளிக்கவில்லை. எதிர்த்தரப்புகள் வேறு கடுமையாகச் சாடிக் கொண்டிருந்தன.

பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தினகரன் :சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுச் செயலாளருக்கு போட்டியிட இருப்பதால் திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக பொதுக்குழு 29-ம் தேதி நடைபெறும்போது பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செல்வன்-இளமதி காதலும், முற்போக்கு நயவஞ்சக நாடக அரசியலும்:

முக்கிய தலித் தலைவர்கள் இது பற்றி ஊடகங்களில் பெரிதாக  வாய் திறக்கவில்லை, பல முற்போக்கு தலைவர்கள் களத்திற்கு நேரடியாகவும் செல்லவில்லை, காரணம் காதலன் செல்வன் சக்கிலியர் சமூகம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது?
உடுமலை இரவி. : செல்வன்-இளமதி காதலும்,
முற்போக்கு நயவஞ்சக நாடக அரசியலும்:
பவானி-கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூக இளைஞன் செல்வனும் வன்னியர் சமூக இளம் பெண் இளமதியும் ஒரே தொழில் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததால் நட்பு பழக்கமாகி பழக்கம் காதலாகி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொளத்தூர் பகுதியில் திராவிடர் விடுதலை கழக தோழர்கள் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். அன்று இரவே காதலனையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தபெதிக தோழர்களையும் பெண்ணின் தரப்பு சமூக சாதி வெறியர்கள் சுற்றி வளைத்து சுமார் நாற்பது பேர் கொண்ட கும்பல் தாக்கி காதலியை மட்டும் கடத்திச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து .. வட இந்தியாவின் அபத்தம்

adkld  கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து! adkldகொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து!HEALTH-CORONAVIRUS-INDIA-COW-URINE-PARTY-6  கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து! HEALTH CORONAVIRUS INDIA COW URINE PARTY 6Akhil-Bharat-Hindu-Mahasabha-555  கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து! Akhil Bharat Hindu Mahasabha 555வீரகேசரி : கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மாட்டின் சிறுநீர் (கோமியம்) அருந்தும் ‘விருந்து’  நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
Akhil-Bharat-Hindu-Mahasabha  கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து! Akhil Bharat Hindu Mahasabha2020-03-14T085418Z_43502270_RC2KJF91AMGW_RTRMADP_3_HEALTHCORONAVIRUS-INDIA-COW-URINE-PARTY  கொரோனாவை தடுப்பதற்காக மாட்டின் சிறுநீர் விருந்து! 2020 03 14T085418Z 43502270 RC2KJF91AMGW RTRMADP 3 HEALTHCORONAVIRUS INDIA COW URINE PARTYஅகில இந்திய இந்து மகாசபா (அகில் பாரத் இந்து மகாசபா) எனும் அமைப்பினால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இவ்வமைப்பின் தலைவர் சக்ரபாணி மஹராஜ் உட்பட  சுமார் 200 பேர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் மாட்டின் சிறுநீர் கலந்த பானமொன்று  பரிமாறப்பட்டது.
மாட்டின் சிறுநீரை அருந்துவது கொரோனாவை தடுக்கும் என இவர்கள் நம்புகின்றனர். “நாம் 21 வருடங்களாக மாட்டின் சிறுநீர் அருந்துகிறோம். மாட்டின் சாணத்தினால் குளிக்கிறோம்” என இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓம் பிரகாஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

முடங்கிய நியூயார்க் நகரம், அமெரிக்காவில் 69 பேர் உயிரிழப்பு , மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates

BBC : ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக மாறி உள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images சரி கொரோனா தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் நடந்த தகவல்களைப் பார்ப்போம்.
  • மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
  • பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட திட்டமிட்டுள்ளது ஜெர்மனி.
  • ஆஸ்திரியாவில் ஐந்து பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இப்போது வரை 6,065 பேர் இறந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 3,085 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்

டாஸ்மாக் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவு

தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம்.டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவுமாலைமலர் : சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தியது. இதில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் வரும் 31ந்தேதி வரை உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பற்றி வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ந்தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ம.பியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; 5 நாட்களுக்கு பிறகு போபால் வந்தனர் பாஜக எம்.எல்.ஏக்கள்!

ம.பியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு; 5 நாட்களுக்கு பிறகு போபால் வந்தனர் பாஜக எம்.எல்.ஏக்கள்! தினத்தந்தி : மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு தப்புமா? என்பது இன்று தெரிந்துவிடும் போபால், மத்திய பிரதேச மாநில அரசியலில் ஏற்பட்டு வந்த பரபரப்பு இன்று (திங்கட்கிழமை) உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.முதல்-மந்திரி கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிற அந்த மாநிலத்தில், அந்த கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த 10-ந் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவர் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்தக் கட்சியில் சேர்ந்து, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரது ஆதரவாளர்களாக இருந்து வந்த 6 மந்திரிகள் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக அவர்கள் கவர்னருக்கும், சபாநாயகருக்கும் கடிதங்கள் அனுப்பி வந்தனர். 230 இடங்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ., பகுஜன் சமாஜ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் என 121 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருந்தது.22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவைத் தொடர்ந்து அங்கு காங்கிரஸ் அரசு, சிறுபான்மை அரசாக மாறியது. காங்கிரஸ் அரசு, சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் சூழல் உருவானது.

உலகளவில் 6,515 பேர் கொரோனாவால் இதுவரை உயிரிழப்பு

.sathiyam.tv  : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ், சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய் 140-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் இதுவரை உயிரிழப்பு 3 ஆயிரத்து 213  ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு பிறகு அதிக உயிரிழப்புகளை ஈரான், இத்தாலி நாடுகள் சந்தித்துள்ளது. இத்தாலியில் ஆயிரத்து 809 பேரும், ஈரானில் 724 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் உரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனாவால் சுமார் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இஸ்கான் அட்சய பாத்ராவும் மாட்டு மூத்திரமும் .. ஈகோலா கிருமிக்கு நல்வரவு

Jose Kissinger L ISKCON மும்பையில் நடத்தும் உணவகத்தில் சாப்பிட
செல்வோரின் கைகளில் மாட்டு மூத்திரம் தெளிக்கப்படுகிறதாம். இந்த இஸ்கானின் துணை அமைப்புதான் 'அக்‌ஷய பாத்ரா'.
மாண்புமிகு Edapadi K Palaniswami தலைமையில் இயங்கும் புரட்சித்தலைவி அம்மா அரசு, பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவளிக்க இந்த அமைப்பிற்குத்தான் அனுமதி அளித்திருக்கிறது. குழந்தைகளுக்கான காலை உணவில் இவர்கள் எதைத் தெளிக்கிறார்களோ? தெரியவில்லை!

கரோனா வைரஸ் காற்றின்மூலம் பரவ வாய்ப்புண்டு: ஆய்வில் தகவல்


coronavirus-may-survive-for-many-hours-in-air-researchers

.hindutamil.in : 
ஏரோசோல்கள் எனப்படும் நுண்ணிய துகள்களில் தங்கியபடியே கரோனா வைரஸ் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்றும், சார்ஸ் வைரஸ் போல விரைவாக காற்றின்மூலமாக இந்த வைரஸ் பரவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உருவாகி உலகளவில் 150,000 க்கும் அதிகமான மக்களை பாதித்து 5,700 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற கரோனா வைரஸினால் உலகளவில் பாதிப்படைந்த 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளதும் நடந்துள்ளது.
சீனாவில் உருவான கொடிய கரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு வேறுபட்ட கருத்துக்கள் கரோனா வைரஸ் போலவே காற்றில் உலவி வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் குறித்து மெட்ரெக்ஸிவ் தரவுத்தளத்தில் ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மேற்பரப்பில் இருந்து மட்டுமே பரவுகிறது, குறிப்பாக சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலிருந்து பரவுகிறது, காற்றில் பரவவில்லை என்றெல்லாம் உலவிவந்த கருத்துக்களை இந்தப் புதிய ஆய்வு மறுத்துள்ளது.

என்னை விட்டுடுப்பா.." கெஞ்சிய தாயை கட்டையால் அடித்தே கொன்ற மகன்.. .. கிருஷ்ணகிரி!!

mavandhana  - /tamil.oneindia.com :  கிருஷ்ணகிரி: "என்னை விட்டுடுப்பா.." என்று
கெஞ்சியும் பெற்ற தாயை அடித்தே கொன்றுள்ளார் 24 வயது மகன்!
சொத்துக்காக நடந்த இந்த கொலையால் கிருஷ்ணகிரியே அதிர்ச்சியில் உள்ளது. கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவிலை சேர்ந்தவர் செல்வம்... இவர் லாரி டிரைவர்.. 4 வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பாக்கியலட்சுமி.. 43 வயதாகிறது! இவர்களது மகன் சதீஷ்குமார்... 24 வயதான இவர் கேரளாவில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.... ஆனால் இவருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது< பாக்கியலட்சுமிக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது... கடன் பிரச்சனை காரணமாக அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். இதனால் தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு அடிக்கடி வந்துள்ளது... சொத்தை தன் பெயருக்கு எழுதி வைக்குமாறும் அம்மாவை மகன் துன்புறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் இரவும் இதே சொத்து தகராறு நடந்துள்ளது

இத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் உயிரிழப்பு ...கொரொனோ வைரஸ்


 தினத்தந்தி : இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 368 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோம், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இத்தாலியில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 368 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,747 ஆக உயர்ந்துள்ளது.

மாநில எல்லையில் சினிமா தியேட்டர்கள் மூடப்படும், ‘வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்’ - தமிழக அரசு முக்கிய அறிவிப்புக்கள்.. உத்தரவு

கொரோனா நோய் தடுப்பு: அண்டை மாநில எல்லையில் சினிமா தியேட்டர்கள் மூடப்படும், ‘வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம்’ - தமிழக அரசு உத்தரவு  தினத்தந்தி :  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. அத்துடன், அண்டை மாநில எல்லையோர பகுதிகளில் உள்ள சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களை மூட உத்தரவிட்டுள்ள அரசு, வெளிமாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளது.
சென்ன சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் ஒருவரும், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய்க் கிருமி மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்காளம், கோவா ஆகிய மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டு உள்ளன. மராட்டிய மாநிலத்தில் நகர்ப்புற பகுதிகளில் மட்டும் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் முதல் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன.

விஜய் சேதுபதி அதிரடி : கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது .. மனிதம் ஒன்றே ...வீடியோ

“கடவுளெல்லாம் நம்மை காப்பாற்றாது, மனிதம் ஒன்றே மனிதனைக் காப்பாற்றும்” என மாஸ்டர் பட விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
விஜய்யின் 64வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச் 15) சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது.
விஜய்க்கு முன்பாக பேச வந்த நடிகர் விஜய் சேதுபதி, “லேட்டா வந்தேன்னு கோவிச்சுக்காதீங்க. இதுக்கு யாராவது ஏதாவது வதந்திய கெளப்பி விட்டுடுவாங்க. திருநெல்வேலி ஷூட்டிங்ல இருந்து அடிச்சுப் புடிச்சி ஓடிவந்தேன். அதனாலதான் லேட்டு. காலைல மறுபடியும் ஷூட்டிங் போகனும்” என்றவர், “இந்த படத்துல நான் தான் ஹீரோ. அது எப்படினா, விஜய்க்கு நான் வில்லன்னா, எனக்கு விஜய் வில்லன். அப்போ நான் தான ஹீரோ” என்றும் கலகலப்பாக பேசினார்.

கனடாவில் ஈழத்தமிழ் பெண் சுட்டுக்கொலை

   வீரகேசரி :  கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் அஜின்கோட்( Agincourt) பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்னொரு பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிறேம்ப்ளே(Brimley Rd) மற்றும் ஷெப்பர்ட்(Sheppard Ave.E) சந்திப்புக்கு அன்மித்த முராய் (Murray Ave) பகுதியிலிருந்து துப்பாக்கிச்சூடு தொடர்பான தகவல் பொலிசாருக்கு கிடைத்ததையடுத்து, அங்குள்ள வீடொன்றுக்கு சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அந்த அழைப்பு வந்ததாக காவல்த்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது, வீட்டில் இரண்டு பெண்கள் உயிராபத்தான் நிலைமையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் தீபா சீவரத்தினம் உயிரிழந்தார். மற்றைய பெண் ஆபத்தான நிலைமையை கடந்து விட்டார்.

ஞாயிறு, 15 மார்ச், 2020

இளமதியை ஈரோடு அரசு காப்பகத்தில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு

தந்தி டிவி : மேட்டூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு பிறகு, பவானி காவல் நிலையத்தில், இளமதி ஆஜரானார். அங்கிருந்து நீதிமன்றம் அழைத்துச் சென்ற நிலையில், தம்மை யாரும் கடத்தவில்லை என்றும், தாமாக சென்று, தானே திரும்பி விட்டதாக இளமதி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, இளமதியை அரசு காப்பகத்தில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஈரோடு அரசு காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.

திமுகவில் எ.வ.வேலுவுக்கு புதிய பதவியா?

திமுகவில் எ.வ.வேலுவுக்கு புதிய பதவியா?மின்னம்பலம் : திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைந்ததை ஒட்டி ஒரு வாரம் கட்சி அதிகார பூர்வ துக்கம் அனுசரித்து முடித்தது. திமுக கொடிகள் இன்று (மார்ச் 15) முதல் முழுக் கம்பத்தில் வேகமாக பறக்கின்றன. அந்தக் கொடிகளைப் போலவே அடுத்த பொதுச் செயலாளர் யார், அதை ஒட்டி தலைமைக் கழக நிர்வாகிகளும் மாற்றப்படுவார்களா என்ற விவாதங்களும் கட்சிக்குள் படபடப்பாக பறந்துகொண்டிருக்கின்றன.
மார்ச் 29 ஆம் தேதி அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு என அறிவிக்கப்பட்டிருக்க ... தலைமைக் கழகப் பதவிகளைப் பெற வேண்டும் என்கிற நோக்கில் சில தலைவர்கள் தங்களின் முழு பலத்தையும் தலைமைக்குத் தெரியப்படுத்த முனைந்துகொண்டிருக்கிறார்கள்.

பள்ளிகளுக்கு விடுமுறை; திரையரங்குகளை மூட உத்தரவு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

edappadi-cmதினமணி : கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய பேரிடர் நிதியில் இருந்து 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் மற்றும் (எல்.கே.ஜி, யு.கே.ஜி)  தொடக்கப்பள்ளிகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் முதல் 5 ஆம் வகுப்பு வரை) மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
மாநில எல்லைகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தருமபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், வணிக வளாகங்கள், போன்ற மக்கள் கூடும் இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் - பிரதமர் மோடி

கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் - பிரதமர் மோடி
மாலைமலர் : கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என சார்க் நாட்டு தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

மொத்த இந்தியாவையும் முட்டாளாக்கிக் கொணடிருக்கும் குஜராத்

ச. நா. இராமசாமி : தம்மாதுண்டு குஜராத் மொத்த இந்தியாவையும் முட்டாளாக்கிக் கொண்டுள்ளது!
மருள் சோக்ஷி
நீரவ் மோடி
நியான் மோடி
புஷ்பேஸ் பைடியா
ஆஷிஷ் ஹோபனபுத்ரா
சன்னி காய்ரா&கோ
வினெய் மிட்டால்
லலீத்மோடி
ரித்தேஷ் ஜெயின்
ஹித்தேஷ் நாகேந்திர பாய் படேல்
மயூரிபென் படேல்
ஆஷிஸ்‌ சுரேஷ்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம்₹8ட்ரில்லியன்(8போட்டு 12சைபர
ஒருவரும் வெளிநாட்டார் இல்லை!
ஒருவரும் பாக்கிஸ்தானி அல்ல!
ஒருவரும் உள்நாட்டு தீவிரவாதி அமைப்புகளில் இல்லை.
வேறு இந்த கூட்டம்?
விஜய்மல்யாவைத் தவிர அனைத்து திருடர்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள்!
இந்த 8ட்ரில்லியன் பணமும் மக்களிடம் நடமாட வேண்டிய பணம்! நம் குடும்பங்களில் புரள வேண்டிய பணம்!
உன் சந்ததி தொழில் செய்ய/வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழ்நாட்டு அரசுக்கு வரி வேண்டிய பணம்!
ஆனால், தமிழ்நாடு அரசு கடனுக்கு வாங்கி வட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றது!

இளமதியை கடத்தியதாக கொளத்தூர் மணி மீது எடப்பாடியின் காவல்துறையினர் வழக்கு.. BBC : என்னை யாரும் கடத்தவில்லை" - இளமதி


  தினகரன் : ஈரோடு: சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
BBC : சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளமதி இன்று காவல்நிலையத்தில் ஆஜரானதை தொடர்ந்து தன் தாயுடன் அவரது வீட்டிற்கு சென்றார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரில், கடந்த 9ஆம் தேதி, செல்வன், இளமதி என்ற காதல் ஜோடியினர் சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டனர். அந்த காதல் ஜோடிகளையும், திருமணத்தை நடத்திவைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தினரையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு, பெண்ணையும் கடத்திச்சென்றது.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கி இருக்கும் நிலையில், 4 நாட்கள் கடந்தும் இன்னும் அந்தப் பெண் மீட்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மதுரை ஸௌராஷ்டிரா மக்களிடையே பாஜக செல்வாக்கு ஓங்குகிறதா?


Elangovan Muthiah : மதுரை வாழ் சௌராஷ்ட்ரா சமூக மக்கள் இன்றைய குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இணையும் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து அவர்களது நெசவுத் தொழிலுக்காக நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரைக்கும், தஞ்சைக்கும் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்பட்டவர்கள். ஒப்பீட்டளவில் மதுரையில் இவர்களது எண்ணிக்கை மிக அதிகம்.
மதுரையில் ஒரு சௌராஷ்ட்ரா இன மனிதரைப் பார்த்தவுடன் இனம் கண்டுவிட முடியும். காரணம் அவர்களது நிறம், உடைத்தேர்வுகள் மற்றும் மொழி. மதுரையோடு இரண்டறக் கலந்த வாழ்வை வாழ்பவர்கள் என்றாலும் தங்களுக்கெனத் தனித்த ஒரு பண்பாட்டைத் தொடர்ச்சியாகப் பேணி வருபவர்கள் இவர்கள்.
அந்த சௌராஷ்ட்ர நில அடையாளத்தின் பெருமித அடிப்படையில்தான் மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே அவரை மதுரையில் உள்ள, சௌராஷ்டிர மக்களால் நடத்தப்படும் கே.எல்.என் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். அப்போது ஆரம்பித்த மோடி பைத்தியம் இப்போது வரை இவர்களில் பெரும்பாலானோரைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்களில் பலர் இப்போது தீவிர மோடி ஆதரவாளர்கள், பாஜக விசுவாசிகளாக மாறிப் போயிருக்கிறார்கள். தீவிர இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு பேசுபவர்களாகவும்...

கொள்ளையடிக்கப்படும் தென்னகம் ... அண்ணாவின் ஆரிய மாயை படிக்கவேண்டிய நேரம் வந்து விட்டது .

சுதந்திர இந்தியாவின் ஒவ்வொரு முற்போக்கு நடவடிக்கைகளுக்கும் தென்னகத்து நீதிக்கட்சி திராவிட பாரம்பரியமே மிகபெரிய காரணமாக இருந்திருக்கிறது 
இந்திய தேசிய இனங்களின் முடிவுரையை சத்தம் போடாமல் எழுதிகொண்டிருந்த ஆரிய ஆதிக்கவாதிகளுக்கு இந்திய பெருநிலப்பரப்பில் விழுந்த முதல் அடி . 67 இல் திமுக பெற்ற வெற்றி. 
அதன் பின் வடவர்களின் ஆதிக்க மனகோட்டை மீது அடுத்தடுத்து விழுந்துகொண்டே இருந்த அடிகள் அத்தனையும் வரலாறு இடிகள் ஆகும்.
ஒற்றை இந்தியாவின் கோட்பாட்டில் விழுந்த மரண அடிதான் இந்திக்கு எதிரான திராவிட எழுச்சி முழக்கம் .
வங்காளம் பஞ்சாப் கர்நாடகம் தெலுங்கு மலையாளம்  போன்ற மாநில மொழிகள் எல்லாம் இன்றுவரை மூச்சு விட்டு கொண்டிருப்பதற்கு ஒரே காரணம் இந்தி பேசாத  மாநிலங்களில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிப்பதால்தான்.
இந்த உரிமையை போராடி பெற்று இந்திய மாநில மொழிகளின் காவாலனாக இருப்பது சந்தேகமே இல்லாமல் திராவிட முன்னேற்ற கழகமும் திராவிட இயக்கங்களும்தான் ..இந்த உரிமை சும்மா கிடைத்து விடவில்ல.
அடியும் இடியும் தாங்கி உயிரையும் இரத்தத்தையும் சேற்றிலும் தெருவிலும் ஆறாக இறைத்து பெற்ற சீதனம் அது .
திராவிடம் வளர்த்த தீயின் வெளிச்சத்தை வெறுமனே எழுதவிட்டு போக முடியாது . சாதாரண முக நூல் பதிவுகளுக்குள் அது அடங்காது.
வடஇந்தியாவின் ஒவ்வொரு இருள் சூழ்ந்த சமுக அவலங்களையும் நன்றாக உணரந்தவர்களுக்கு மட்டுமே புரியும் திராவிடம் என்ன சாதித்தது .. என்னன்ன சாதித்து கொண்டிருக்கிறது என்பது.