மாலைமலர் :
கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா
சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என சார்க் நாட்டு தலைவர்களுடன்
நடத்திய ஆலோசனையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் தலைநகர் டெல்லியின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க இணைந்துள்ள உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த நிலையில் நம்முடன் இணைந்துள்ள நண்பர், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
இந்த சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், வைரஸ் பரவலை எதிர்கொள்ள இதுவரை இந்தியா மேற்கொண்ட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தயாராகுங்கள். ஆனால் அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம் ஆகும்.
மேலும், கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், வைரஸ் பரவலை எதிர்கொள்ள இதுவரை இந்தியா மேற்கொண்ட அனுபவம் பற்றி விரிவாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தயாராகுங்கள். ஆனால் அச்சம் கொள்ளாதீர்கள் என்பது எங்களுடைய வழிகாட்டி மந்திரம் ஆகும்.
எங்களது
மக்களுக்கு இடையேயான பிணைப்பு என்பது மிக பழமையானது. எங்களுடைய சமூகங்கள்
ஆழ்ந்த பிணைப்பு கொண்டவை. ஆகையால், நாம் அனைவரும் ஒன்றாக தயாராக வேண்டும்.
ஒன்றிணைந்து செயல்பட்டு ஒன்றாக வெற்றி பெற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக