திங்கள், 16 மார்ச், 2020

கரோனா வைரஸ் காற்றின்மூலம் பரவ வாய்ப்புண்டு: ஆய்வில் தகவல்


coronavirus-may-survive-for-many-hours-in-air-researchers

.hindutamil.in : 
ஏரோசோல்கள் எனப்படும் நுண்ணிய துகள்களில் தங்கியபடியே கரோனா வைரஸ் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும் என்றும், சார்ஸ் வைரஸ் போல விரைவாக காற்றின்மூலமாக இந்த வைரஸ் பரவக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உருவாகி உலகளவில் 150,000 க்கும் அதிகமான மக்களை பாதித்து 5,700 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற கரோனா வைரஸினால் உலகளவில் பாதிப்படைந்த 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளதும் நடந்துள்ளது.
சீனாவில் உருவான கொடிய கரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு வேறுபட்ட கருத்துக்கள் கரோனா வைரஸ் போலவே காற்றில் உலவி வருகின்றன. தற்போது கரோனா வைரஸ் குறித்து மெட்ரெக்ஸிவ் தரவுத்தளத்தில் ஓர் ஆய்வறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மேற்பரப்பில் இருந்து மட்டுமே பரவுகிறது, குறிப்பாக சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகிலிருந்து பரவுகிறது, காற்றில் பரவவில்லை என்றெல்லாம் உலவிவந்த கருத்துக்களை இந்தப் புதிய ஆய்வு மறுத்துள்ளது.
இது ஆரம்பநிலை ஆய்வு என்பதால் விரிவான சக மதிப்பாய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை என்றாலும் புதிய தேடல்களுக்கு உதவக்கூடியது என்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இணை எழுத்தாளர் டிலான் மோரிஸ் லைவ் சயின்ஸிடம் கூறினார்.
கரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ்வது குறித்து டிலான் மோரிஸ் லைவ் சயின்ஸிடம் கூறியதாவது:
காற்றில் கரோனா பரவவில்லை என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏரோ செல்கள் அதிக தூரம் பயணிக்கக் கூடியவை, ஆனால் எவ்வளவு தூரம் காற்றில் பயணிக்க முடியும் கணிக்க முடியவில்லை.
ஏரோசோல்கள் எனப்படும் நுண்ணிய துகள்களில் தங்கியபடியே கரோனா வைரஸ் பல மணி நேரம் காற்றில் உயிர்வாழ முடியும். வெட்டவெளியில் பல மணிநேரங்களில் அப்படியே மிதக்கும் சக்தி கொண்ட கரோனா வைரஸ் பல மணி நேரங்கள், பல நாட்கள் என நீடித்து வாழக்கூடியது.
மனிதர்களை குறிவைத்து தாக்கும், கோவிட் 19 ஐ ஏரோசலைசேஷன் செய்த 3 மணிநேரம் வரை இதைக் கண்டறிய முடியும். அந்தக் காலம் முழுவதும் செல்களைப் பாதிக்கலாம். மிக முக்கியமானது, ஏரோசல் பரவுதல் ஏற்படக்கூடும் என்றாலும், தற்போதைய தொற்றுநோயை இயக்கும் முதன்மை சக்தியாக இது இருக்க வாய்ப்பில்லை.
தற்போதைய விஞ்ஞான ஒருமித்த கருத்து என்னவென்றால், பெரும்பாலான கரோனா வைரஸ் பரவுதல் சுவாச சுரப்பு வழியாக மேற்பரப்பில் பெரிய சுவாச நீர்த்துளிகள் வடிவில் உள்ளது என்பதுதான்.
இவ்வாறு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் இணை இணை எழுத்தாளர் டிலான் மோரிஸ் லைவ் சயின்ஸிடம் கூறினார்

கருத்துகள் இல்லை: