திங்கள், 2 மார்ச், 2020

பொன்.ராதாகிருஷ்ணன் ; கிருஸ்தவ மத தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர்.. வீடியோ

வளன்பிச்சைவளன் : கிருஸ்தவத மத தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர். நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் அது நடந்தே தீரும் பொன்ராதாவின் கலவரத்தை தூண்டும்பேச்சு அடிமை அதிமுக அரசு வேடிக்கைபார்க்குமா? 
 நாகர்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்தில் பொன்ராதா கிருஸ்தவ மதத்தலைவர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவர். அது நடந்தே தீரும். என சூளுரைக்கின்றார்.
அவர் திட்டமாக சொல்லுவது கிருஸ்தவ சகோதரர்களை வைத்தே இந் நிகழ்வு நடக்கும் என்றும் அறிதி யிட்டு சொல்கிறார்.
1980 களில் நடைபெற்ற மண்டைக்காடு மதக் கலவரம் அன்று கிருஸ்தவ கிராமங்கள் தாக்கப்பட்டன. அன்று தாணுலிங்க நாடாரை முகமாக காட்டி இந்து முன்னணி அன்று கிருஸ்தவ மீனவர்கள் தாக்கப் பட்டனர் கேரளத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் வரவழைக்கப் பட்டு அன்று மதக் கலவரம் அரங்கேறி, மத துவேசத்தை உருவாக்கி அதன் மூலம் அங்கு இந்து மதவெறி ஊட்டப் பட்டு அங்கு அவர்கள் தங்களை நிலைப்படுத்தினர்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கோவையும் கேரள எல்லை பகுதியானதால் அங்கும் கேரள ஆர் எஸ் எஸின் கைவரிசையுடன் அங்கும் கலவரம் நிகழ்த்தப்பட்டது

இந்த இரு கலவரங்கள் மூலம் கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டுமே அவர்களால் கட்சியை சிறிதளவு வளர்க்க முடிந்தது.
இன்று மீண்டும் ஒரு மதக்கலவரம் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என பொன் ராதா வெளிப்படையாக அறிவிக்கிறார். இந்த அடிமை அரசை மிரட்டி தங்கள் எண்ணங்களை செயல் படுத்த திட்டமிடுகின்றனர். இம் முறை வித்தியாசமாக கிருஸ்தவர்களைக் கொண்டே கிருஸ்தவ மதத் தலைவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கப் போகவதாக எக்காளமிடு கிறார்.

பிராமணர் மீது நம்பிக்கை இல்லாட்டி.. செத்தா நடுரோட்டுல போட்ருங்க.. மந்திரம் ஏன்.. எஸ்வி சேகர் பேச்சு

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய
பிராமணர்களாக இருக்கட்டும், ஒன்னே ஒன்னு ஞாபகம் வெச்சுக்குங்க.. ஆர்எஸ் பாரதி வீட்டிலேயோ, அல்லது பிராமணர்களை எதிர்த்து பேசுவர்கள் வீட்டிலேயோ நல்லது கெட்டது நடந்தால் எந்த பிராமணனும் பெண் எடுக்க மாட்டோம்-ன்னு சொல்லுங்க" என்று எஸ்வி சேகர் பரபரப்பான கருத்து ஒன்றினை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
 திமுக, திகவின் பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டித்து நங்கநல்லூரியில் பிராமண சங்கங்கள் சார்பில், பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
சலசலப்பு இந்த கூட்டம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதற்கு காரணம் எஸ்வி சேகரின் பேச்சு மட்டுமே! அதனால்தான் சோஷியல் மீடியாவில் இப்போதுவரை சலசலப்பில் மூழ்கடித்து வருகிறது "இந்துக்களுக்கும், இந்துக்களின் அங்கமாக விளங்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்
இது பெரிய அளவில் பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. ஆனால் எஸ்வி சேகரின் பேச்சுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது.

BBC : விடுதலைப் புலிகள் சகோதரப் படுகொலைகள் மூலமே ஒற்றை இயக்கமாயினர்: தமிழ் எம்.பி. சுமந்திரன்


இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் - பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் இருந்தன என்றும், பின்னர் சகோதரப்படுகொலைகள் மூலமாகவே ஒரே இயக்கம் தலையெடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிராக - இறுதியாகவும் தனித்தும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே இவ்வாறு 'சகோதரப் படுகொலைகளில் ஈடுபட்டதாக' சுமந்திரன் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது, சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு யுத்த காலத்தைக் கடந்து வந்த கட்சியாகும். யுத்த காலத்தில் அடங்கிப் போயிருந்த கட்சி, செயலிழந்திருந்த கட்சி. திடீரென்று ஜனநாயகப் பண்புகள் வந்து விடாது; அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். ஏனென்றால் 30 வருடங்கள் வேறு விடயத்துக்குப் பழகிப் போய்விட்டோம். அது, சொல்வதைச் செய்வதாகும்".

அமித் ஷா பதவி விலக வேண்டும்.. நாடாளுமன்றம் நாள் முழுதும் அமளி .. ஒத்தி வைப்பு


மாலைமலர் :டெல்லி வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி: டெல்லியில் வன்முறை பரவிய சமயத்தில் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலிறுத்தி வருகிறத இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. டெல்லி வன்முறையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறியதாக கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். டெல்லியில் தற்போது அமைதி திரும்புவதற்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும், பின்னர் இதுபற்றி விவாதிப்போம் என்றும் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறி சமாதானப்படுத்தினார். ஆனால் உறுப்பினர்கள் சமாதானம் அடையவில்லை

மார்ச்: ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்குச் சவால்.. India facing diplomatic isolation...


மின்னம்பலம் :  ஐநா பாதுகாப்பு சபையின் வழக்கப்படி ஒவ்வொரு மாதமும் அதன் ஒவ்வோர் உறுப்பினரும் தலைவராகச் செயல்படுவார்கள். இதன்படி ஏற்கனவே போலந்து, வியட்நாம் நாடுகளின் தலைவர்கள் செயல்பட்டபோதுதான், பாகிஸ்தானுக்காக காஷ்மீர் பிரச்னையை ஐநா பாதுகாப்பு சபையில் சீனா எழுப்பியது. அப்போது சர்வதேச அரசியல் பேச்சுகள் மூலமாக அதை முறியடித்தது இந்தியா. இந்த நிலையில் மார்ச் மாதத்துக்காக ஐநா பாதுகாப்பு சபையின் தலைவராக சீனா இருக்கப் போகிறது. இதனால் இந்த மாதம் ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு எதிரான பல நகர்வுகள் இருக்கக் கூடும் என்ற விவாதம் சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பற்றிய முக்கிய செய்திகள் ... இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை

Jeevan Prasad : கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு வேகமாக பரவுகின்றன. அவதானமாக இருங்கள்!
கொரோனா வைரஸ் தென் துருவத்தைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது. ஆனால் இந்த வைரஸ் சீனாவில் பரவியதை விட வேகமாக சீனாவுக்கு வெளியே பரவுகிறது. இதுபோன்ற நிலைமை உலகில் ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிக மக்கள் நெருக்கமாக வசிக்கும் மற்றும் குழுமி வேலை செய்யும் நகரங்களில் உள்ள மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நகரங்களுக்கு இது ஒரு பெரிய சவால். உலகெங்கிலும் உள்ள நகராட்சிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன என விழி பிதுங்கி நிற்கின்றன.
வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழிகளில் பொது போக்குவரத்து ஒன்றாகும்.
இருமல் அல்லது தும்மும்போது, ​​ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் வைரஸ் பரவுகின்றன.
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வைரஸ் ஆறு மடங்கு அதிகமாக பரவ வாய்ப்புள்ளது.
இதனால்தான் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் உள்ள அதிகாரிகள் அனைத்து பேருந்துகள் மற்றும் ரயில்களிலும்,ரயில் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் செயல்முறையைத் தொடங்கினர்.

அமரர் ஏ.டி.பன்னீர்செல்வம்.. 2.3.1940இல் மறைந்தபோது கூடவே மறைந்தது .. தமிழக சுயநிர்ணய வாய்ய்பும் கூட?

வா.சி.ம. ப.த.ம. சரவணகுமார் :
தமிழர்களை தவிக்கவிட்டு பன்னீர் செல்வம் சென்ற நாள் இன்று
தமிழர்களின் பெருஞ்செல்வம்! பன்னீர்செல்வம்!
தம்பி,
அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இரவு நேரங்களில் தனிமையின் போது கத்தி அழத்தோன்றாவிட்டாலும் கூட லேசாக விழிகளில் கண்ணீர் கசைகிறது. அதை நினைக்கும் போது உடல் நடுக்கம் கொள்கிறது. மனம் வேதனை அடைகிறது. இழக்ககூடாததை இழந்துவிட்ட வலி நெஞ்சை அழுத்துகிறது. நான் வாழும் இந்த வாழ்வை இருந்து பார்த்து மகிழ்ந்து இருக்ககூடாதா எனும் ஏக்கம் பிறக்கிறது. அது நடந்தது இயற்கை என்கிறது அறிவியல். எல்லாம் அவன் செயல் என்கிறது வைதீகம்.
தம்பி! அப்போது அண்ணன் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாளை காலை முழு ஆண்டுத் தேர்வின் சமூக
அறிவியல் பாடத் தேர்வு. அதாவது அந்த ஆண்டின் கடைசித் தேர்வு. கட்டிட வேலைப் பார்த்து உழைத்துக் கலைத்து வந்த தாய், பிள்ளைகள் பசியோடு இருக்குமென சோர்வைக் காட்டிக் கொள்ளாமல், அரக்கப்பறக்க வேலை செய்தாள். சமைத்து முடித்து எடுத்து வைத்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்து கதைபேசி மெதுவாக உண்ண எல்லாம் நேரமில்லை. பசி வாட்டி எடுத்தது. தாய் அடுப்படியில் பனியாரம் சுட பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டோம். சுட்டுப் போட சுட்டுப் போட அறக்கப் பறக்க ஆவி பறக்க வாயில் போட்டுக் கொண்டோம். சிரித்துப் பேசி மகிழ்ந்து ஒன்றாகத்தான் உறங்கினோம்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

குமரி மாவட்டத்தில் சங்கிகள் நிறையக்காரணம்.. விரிவான ஆய்வு கட்டுரை

Suresh Kumar Sundaram : குமரிமாவட்டத்தில் சங்கிகள் நிறையக்காரணம்
1. கிறிஸ்தவம் வளர்ந்தது குமரிமாவட்டத்தில், அதேவேகத்தில் படித்த கிறிஸ்தவ நாடார்கள் வளர்சி அதைவிட வேகத்தில் போனது இதை தாங்கிகொள்ளமுடியாத NSS (நாயர் சேவா சங்கம்) மற்றும் RSS முதலில் குமரித்தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் கூட இருந்த தாணுலிங்க நாடாரை பிரித்து கிறிஸ்தவர்கள் மீது பகைய பொறாமை )விதைத்தார்கள். (1980 ல் பீஜேபி உருவானது) தாணுலிங்க நாடார் தான் 1982 ல் இந்துமுன்னணி என்ற அமைப்பை குமரியில் தொடக்கினார். மத/ சாதி கலவரத்தை எம் ஜி ஆர் துணையுடன் நடத்தினார்
(இவர்கள் கலவரத்தை ஏற்படுத்திய பாணியே இன்றும் RSS வட இந்தியாவில் கடைபிடிக்கின்றனர். )
இவர்களின் திட்டப்படி காங்கிரசுக்கு கண்மூடித்தனமாக வாக்களிக்கும் மீனவர்கள் , நாடார்கள் மோதலை உருவாக்குவது (நேரடியாக பெரும்பான்மையான இந்து நாடார் vs கிறிஸ்தவநாடார் மோதலை உருவாக்க முடியாது ஏன் என்றால் அவர்கள் பெண் கொடுத்தும் எடுத்தும் மட்டுமல்ல ஏற்கனவே உறவினர்கள் கூட ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்) ,
கடற்கரையொரங்களில் சைட் அடுப்பது தொடர்பாக இருசமூக இளவட்டங்களிடையே சில்லறை சண்டைகள் நடப்பதுண்டு அதனை பயன்படுத்தி ரகசியமாக NSS , கேரளா RSS மற்றும் குமரியில் பின் தங்கிய ஒரு சமூகத்தினர் சேர்ந்து ஒரு மீனவ கிராமத்து குருசடியில் (கிறிஸ்தவர்கள் சிலுவைய வழிபடும் இடம்) பெட்ரோல் குண்டை இரவில் வீசி பதட்டத்தை ஏற்படுத்தினார்கள் ,
பின்னர் அதிகாலையில் இந்து நாடார்களுக்கு சொந்தமான தென்னம் தோப்பில் புகுந்து தென்னைமரங்களை வெட்டி வீழ்த்திய பிறகு அந்த பழிய அப்பாவி மீனவ கிராம மக்கள் மீது போட்டனர்...அது கலவரமாக மாறியது. கிறிஷ்தவ நாடார்கள் வலிமையாக இருக்கும் சூரங்குடி, மறவன்குடியிருப்பு மற்றும் கிறிஸ்தவர்கள் அடர்ந்த ஊர்களில் இது இந்து , கிறிஸ்தவ பிரச்சனையல்ல இந்து நாடார், மீனவர் பிரச்சனை என்று கூறி கிறிஸ்தவ நாடார்களை மௌனம் காக்க செய்தனர்...( இன்று NRC பிரச்சனை இந்து முஸ்லீம் பிரச்சனை மற்றவர்கள் ஒதுங்கி இருங்கள் என்பதை போன்ற பார்பன தந்திரம் இது) கலவரம் ஓய்த பிறகு இந்து-கிறிஸ்தவ கலவரமாக விளம்பரபடுத்தினார்கள் பெருமைக்காக.

திமுக மாநிலங்கள் அவைக்கு திருச்சி சிவா , அந்தியூர் செல்வராஜ் , என் ஆர் இளங்கோ வேட்பாளர்களாக திமுக

NR இளங்கோ
அந்தியூர் செல்வ்றாஜ்
திருச்சி சிவா
By Shyamsundar - tamil.oneindia.com : சென்னை: மாநிலங்களவை எம்பி தேர்தலில்
போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்கலாம் முடிகிறது. தமிழகத்தில் திருச்சி சிவா, முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் முடிகிறது. இவர்களின் உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப். 2 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
இதையடுத்து மார்ச் 26ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது திமுக வேட்பாளர் திமுக வேட்பாளர் இதையடுத்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். இவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான்கானும், ஸ்டாலினும் அண்ணன் தம்பியா? : முரளிதர் ராவ்

இம்ரான்கானும், ஸ்டாலினும் அண்ணன் தம்பியா? : முரளிதர் ராவ்  மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் எங்கும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பாஜக சார்பில் கடந்த 28 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களை நோக்கி குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவுப் பேரணி நடந்தது. அந்தப் பேரணி கன்னியாகுமரியில் இன்று மாலை (மார்ச் 1) நடந்தது.
குமரியில் எப்போதுமே பாஜக பலமான சக்தியாக இருக்கும் நிலையில் இந்த பேரணியிலும் அது வெளிப்பட்டது. இப்பேரணியில் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர் ராவின் பேச்சில், ‘பாகிஸ்தான், ஸ்டாலின்’ என்ற வார்த்தைகளே பெரும்பாலும் ஆக்கிரமித்திருந்தன.
பாஜகவின் மாவட்டத் தலைவர் தர்மராஜ், “இனிமேல் குமரி மாவட்டத்தில் யாரும் சிஏஏவுக்கு எதிராக போராடக் கூடாது. அப்படி போராடினால் அங்கேயே நாங்களும் ஆதரவாகப் போராடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஸ்டாலின் பிறந்தநாள் காணும் இதே மார்ச் 1 இல்தான் பொன். ராதாகிருஷ்ணனும் பிறந்தநாள் காண்கிறார். அவர் தன் பேச்சில் சிஏஏ குறித்து விளக்கினார்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி- பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றி

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி-  பிரதமர் மோடிக்கு முதல்வர் நன்றிமாலைமலர் : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி தந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்த காட்சி.
மதுரை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசுத்துறைகளை பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?
 என்பிஆர் கொண்டு வந்தது காங்கிரஸ். தமிழகத்தில் அமல்படுத்தியது திமுகதான். என்பிஆரில் எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என தெளிவுபடுத்தி விட்டார்கள்.

விக்கிப்பீடியா: இந்தி, சமஸ்கிருதத்தை வீழ்த்தி தமிழ் முதலிடம்

பாலசுப்ரமணியன் - வசந்த லட்சுமி
BBC :விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய
இந்திய மொழிகளுக்கிடையிலான கட்டுரைகள் எழுதும் போட்டியில் தமிழ் மொழி முதல் இடத்தை பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வேங்கைத் திட்டம் 2.0 என்றழைக்கப்படும் இந்த போட்டியில் தமிழ், இந்தி, பஞ்சாபி, மராத்தி, உருது உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது
இந்நிலையில், போட்டிக்கான காலகட்டத்தில் அதிகபட்ச கட்டுரைகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ் மொழி முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாவது முறையாக நடத்தப்பட்டுள்ள இந்த போட்டியின் முக்கியத்துவம் என்ன? இது மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவும்? இந்த போட்டியில் தமிழ்மொழி முதலிடம் பெறுவதற்கு வித்திட்டவர்கள் யார், யார்? என்று இந்த கட்டுரை அலசுகிறது.

வேலூர் ..வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு.. காவல்துறை மிக முக்கிய அறிவிப்பு

Mahalaxmi ; வேலூர் மாவட்ட காவல்துறை மிக முக்கிய அறிவிப்ப.
வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு!
வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட செல்போன் கடைகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அதில், ரூ.15 லட்சம் மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
அதற்கேற்ப சம்பவ பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவம் நடைபெற்ற அந்த நேரத்தில்
சந்தேகத்துக்குரிய வட மாநிலத்தவர்கள் சுற்றித்திரிவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. படத்தில் உள்ளவர்களைப் பார்க்கும்போது பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய நபர்களை வேலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் யாரேனும் பார்த்திருந்தாலோ, இப்போது பார்த்தாலோ உடனடியாக கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளின் எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தியன்-2 விபத்து... கமலஹாசனுக்கு அழைப்பாணை .. மதிய குற்ற பிரிவு ..

 Indian-2 accident... Summon to Kamal Haasan
 நக்கீரன் : மத்திய  குற்றப்பிரிவு அலுவலகத்தில் நாளை மறுநாள் ஆஜராகும் படி திரைப்பட நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்.19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 150 அடி உயரத்தில் லைட் அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட போது அதை தாங்கி நின்ற கிரேன் எதிர்பாராத விதமாக சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் அந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்கள்

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக லைக்கா நிறுவனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் மீது 4 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்குகள் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மத்திய குற்றப்பிரிவு இது தொடர்பாக விசாரித்து வருகிறது.

ஸ்டாலின் எனும் பரிணாம வளர்ச்சி .. அசாத்தியமானது !. We stand we fight we ...no retreat no surrender

Devi Somasundaram : ஸ்டாலின் எனும் பரிணாம வளர்ச்சி .
கிராமத்துல இருந்த வரை பேப்பர்ல அரசியல்வாதியா தான் இவரை அறிந்திருந்தேன்..சென்னை வந்து ஓவர் ப்ரிட்ஜ் , மெட்ரோ, ஐடி கம்பெனிகள் , அகன்ற சாலைகள் , மக்கள் கூட்டம் பெருக பெருக அதன் தேவைகான வசதிகள் தொடர்ந்து கிடைக்க வைத்ததில் ஸ்டாலின் பங்கு அறிய வந்த போது அவரது நிர்வாக திறன் மீதான பிரமிப்பு அதிகமானது ..
பாம்பே போன்ற வர்த்தக தலை நகர் குப்பை காடா காட்சி யளிக்கும் போது சென்னை போன்ற சாதாரண பெரும் நகரின் வளர்ச்சி அசாத்தியம்...
அதற்கான உழைப்பு தன் வசதி குறித்து மட்டும் யோசிக்க தெரிந்த சுய நலவாதிகளுக்கு புரியாமல் போகலாம்..மற்றவர்க்கு கண்டிப்பா புரியும் .
அது ஒரு அசகாய பணி, அதன் பின் நிறைய திட்ட மிடல் இருக்கு. மக்கள் நலன் சார் சிந்தனை இருக்கு, இந்த நாட்டு வளர்ச்சி குறித்த அக்கறை இருக்கு..
இவை ஸ்டாலினோட செயல்பாடுன்னு புரிந்த போது அவர் மேல எழுந்த மதிப்பு . அது கலைஞர் மகன் என்ற உணர்வு கடந்த மக்கள் தலைவர் மீதானது .
திமுக, மீதான வெறுப்பை தள்ளி வைத்து யோசிக்க முடிந்தால் நான் சொல்வதை உண்மைன்னு எதிரியும் ஒத்து கொள்வர்கள்

டெல்லி வன்முறை வழக்குகள்: உச்ச நீதிமன்றம் கண்காணிக்க கோரிக்கை!

மின்னம்பலம் : டெல்லியில் நடந்த வன்முறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் டெல்லி போலீஸார் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவில்லை என்றும், எனவே இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒவ்வொரு வழக்கையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த சர்மா நேற்று (பிப்ரவரி 29) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டெல்லியில் நடந்த வன்முறைகள் நாட்டுக்கே தலைகுனிவாக அமைந்துள்ளன. இந்த வன்முறை பற்றி நாம் எப்படி விசாரணை நடத்துகிறோம் என்று உலகமே நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் டெல்லி போலீஸ் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைக் கைது செய்கிறது, வழக்கு போடுகிறது. ஒருதலைபட்சமான விசாரணையே இப்போது டெல்லி போலீஸாரால் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் அரசியலமைப்பின் பாதுகாவலராக உச்ச நீதிமன்றம் இருப்பதால் இதில் தலையிட வேண்டும்.

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல் தினத்தந்தி : சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றி நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இந்த வைரசின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் அரசு திணறுகிறது. ஒட்டுமொத்த சீனா முழுவதும் மேலும் 47 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்து விட்டது. இதைப்போல வைரசின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் 79,251 ஆக உயர்ந்துள்ளது.

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல்

50 நாடுகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் தகவல் தினத்தந்தி :  சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்துள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. பீஜிங், சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றி நாடு முழுவதும் தொடர்ந்து பரவி வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இந்த வைரசின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால், அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் அரசு திணறுகிறது. ஒட்டுமொத்த சீனா முழுவதும் மேலும் 47 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,900 ஆக உயர்ந்து விட்டது. இதைப்போல வைரசின் பிடியில் சிக்கியுள்ளவர்களின் எண்ணிக்கையும் 79,251 ஆக உயர்ந்துள்ளது.

300 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ .. தமிழகம் முழுவதும், உரிமம் இல்லாமல் செயல்பட்ட

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை  300 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்’ வைப்பு  தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிரம் தினத்தந்தி :  சென்னை, தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்றும் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வேலைநிறுத்தம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், பெருநகர சென்னை அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் கடந்த 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நடத்தி வருகிறார்கள்.

தேசிய கீதம் பாடச் சொல்லி தாக்கிய டெல்லி போலிஸ்” : வைரலான வீடியோ.. இளைஞர் உயிரிழப்பு


“தேசிய கீதம் பாடச் சொல்லி தாக்கிய டெல்லி போலிஸ்” : வைரலான வீடியோவில் இருந்த இஸ்லாமிய இளைஞர் உயிரிழப்பு!kalaignarseithigal - Premkuma : டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறை உலக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது டெல்லி போலிஸார் துணையுடன் இந்துத்வா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது.
இந்த கொடூரத் தாக்குதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். அதில் 9 பேர் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களில் இருந்து நாட்டுமக்கள் மீளாத நிலையில் வன்முறையின் போது போராட்டக்காரர்களும், அப்பாவி பொதுமக்களும் சித்திரவதைக்கு உள்ளானது தொடர்பான செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
அப்படி கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று நடைபெற்ற வன்முறையின் போது சாலைகளின் ஓரத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த 5 இஸ்லாமிய இளைஞர்களை டெல்லி போலிஸார் சுற்றி வளைத்து தாக்கும் வீடியோ வெளியானது.

Yes ..He is my man .. பெரியார்... தேவி சோமசுந்தரம்

Devi Somasundaram : YES, HE IS MY MAN
கருத்தியலாளர்௧ள்,தத்துவவாதிகள் இந்த சமூகத்தை வழி நடத்திகொண்டே இருக்கிறார்கள்.சாக்ரடிஸ்,ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில்,புத்தர், வள்ளுவர், போன்ற தத்துவவாதிகளாகட்டும்.மார்க்ஸ், ஏங்கல்ஸ், டிராட்ஸ்கி, புருனோ போன்ற கொள்கைவாதிகளாகட்டும் அவர்கள் இந்த மண்ணின் அறியாமை நீக்க அறிவு தந்தவர்கள்.கம்யூனிஸமோ, சோஷலிஸமோ அது மக்களின் நலன் சார்ந்து என்ற அடிப்படையில் உருவான கொள்கைகள்.அப்படி. மக்களின் நலன் கருதி பேசும் கருத்தியலாளர்கள் தாங்கள் நம்பிய வழியினை தான் சரி என்று ஏற்றனர். ஒரு வகையில் அதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.
கடவுள் இருக்கார்ன்னு நம்புவதும்,என் கொள்கை தான் சரியான தீர்வுன்னு நம்புவதும் ஒரே மாதிரியான நிலை தான்.
அந்த நம்பிக்கை நிலை கொண்டவர்கள் தங்கள் கருத்துக்கு முரண் படுவதை எதிர்ப்பது மட்டுமில்லாமல் மாற்று வழியையும் சேர்த்தே முரண்படுவார்கள். பிரச்சனைக்கு தீர்வை எதிர்பார்ப்பவர் கிடைக்கின்ற எல்லா வாய்ப்பையும் பயன்படுத்துவார்கள். தன் கருத்தை மட்டும் சரின்னு வாதிடுபவர் பிரச்சனையை தீர்ப்பதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்றே அர்த்தம்.
அந்த இடத்தில் தான் பெரியார் எல்லாரையும் விட உயர்ந்து நிற்கிறார்.. அவர் தனக்கு தெரிந்த ஒரு வழியை கூறினார்.ஆனா அது மட்டுமே போதும்னு அவர் நினைக்கல.தன் வழி தான் 100% சரின்ற அடமெண்ட் மனநிலை அவர் கிட்ட இல்ல.

லக்ஸ்ம்பர்க் அனைத்து பொது போக்குவரத்தும் இலவசம்.... திராவிட பாதையில்?


Devi Somasundaram : லக்ஸ்ம்பர்க் ....
..கிழக்கில் ஜெர்மனியும், வடக்கிலும் மேற்கிலும் பெல்ஜியமும், தெற்கில் பிரான்ஸுமாய் நில வழியாய் வெளி உலகோடு எல்லைகள் தடுக்கப்பட்ட நாடு .
வெறும் 6 லட்சத்தி சொச்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய ஐரோப்பிய நாடு..ஆனால் உலகின் அதிக வளர்ச்சியடைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது ( highest per capita income ) ..
மக்களின் அதிக வாங்கும் சக்தி கொண்ட உலகின் இரண்டாவது பணக்கார நாடு.
இப்ப எதுக்கு இதுன்னு கேக்றிங்களா ? .
அந்த நாடு தன் பொது போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளது.. சில உயர்வகுப்பு மற்றும் இரவு நேர போக்குவரத்து தவிர அனைத்து பயணமும் இலவசம் ..
அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ,பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை தூண்ட இலவச போக்குவரத்தை அறிமுகம் செய்த முதல் நாடு லக்ஸ்ம்பர்க் .
உலகின் பணக்கார வளர்ந்த நாடே இலவசம் தருகின்றது...நம்ம ஊர்ல உணவுக்கே வழி இல்லைன்னு ரேஷன்ல பத்து கிலோ அரிசி குடுத்தா திராவிட ஆட்சிகள் இலவசம் தந்து நாட்டை கெடுத்துடுச்சுன்னு பேசும் ஐடி தொழில் அரைகுறைகள் இப்ப மூஞ்ச எங்க வச்சிக்கும்..

நாடு ஆபத்தான பாதையில் எதுவும் பெரிய ஊடகங்களில் வராது ...!

Kuttimani Guna : நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது ...!! இதோ சற்று
படியுங்கள் ...
இதோ சற்று படியுங்கள் ...
1- ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது ..
2- ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் ...
3-BSNL's ன் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் ...
4- HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை ...
5- தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி ..
6- வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிவு ...
7- டாடா டொகாமோ நசுக்கப்பட்டது ..
8- ஏர்டெல் நசுக்கப்பட்டது..
9-JP குரூப் கதை முடிந்தது ..
10- ONGC ன் மிக மோசமான நிலை ...
11- அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை ...
12- 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் காத்திருக்கும் பலர் ..
13- PNB அதோகதி ...
14- மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ...
15- நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர் ..
16- விற்பனையில் ரெயில்வே ...
17- செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு ...
18 - பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர் ..
19 - 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை ..

தமிழ்நாட்டு வியாபாரங்களை கைப்பற்ற மார்வாடிகள் தயார்? அன்று கோவையில் நடந்தது ..இன்று சென்னை..

Image may contain: 18 people, people smiling, people standing, crowd, text and outdoorகோவை மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரோட்டி..
பாஜகவின் கோவை மாவட்ட இளைஞரணி பொருளாளர் யார் என்று பார்த்தீங்கனா குஜராத்தை சேர்ந்த நம்ம ஹரீஸ் பட்டேல். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யார் என்று பாத்தீங்கனா நம்ம பஜன்லால் சேட்டோட ஒன்னுவிட்ட ரிலேசன் சோஹன்லால்...!
இது ஒன்னும் ஏதேச்சையா நடந்தது அல்ல, அப்படியே ஒரு 20 வருசம் பின்னாடி வாங்க..
1997 கோவை கலவரம். பெரிய வணிக நிறுவனங்கள் துவங்கி, சிறு கடைகள் வரை அனைத்து இஸ்லாமியர் கடைகளும் #இந்துத்துவ_தீவிரவாதிகளால் வேட்டையாடப் பட்டது.
யாரோ ஓரு டிராபிக் போலீஸை சில இளைஞர்கள் கொன்றதற்கு, எதற்காக எல்லா இஸ்லாமியர்களும் இலக்கு ஆக்கப்பட்டாங்க???
ஏன்னா அந்த ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கும், பஜன்லால் சேட்டுகளுக்கும் ஒரே தொழில் தான், வணிகம் செய்வது....
ஆக பஜன்லால் சேட்டுகளுக்கு கோயம்புத்தூர் உள்ளே வணிகம் செய்ய நுழையனும்னா, முதல் தொழில் எதிரிக நம்ம இஸ்லாமியர்கள் தான்
ஆக அந்த இஸ்லாமியர்களின் வணிகத்தை அழிக்க வேண்டிய தேவை பஜன்லால் கும்பலுக்கு இருந்தது...
கரக்டா அந்த நேரம் பார்த்து, இப்படி ஒரு கொலை நடக்க, அது நம்ம பணியா,மார்வாடி கும்பலுக்கு வசதியா போச்சு...

அமெரிக்கா-தலிபான் இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமானது; 18 ஆண்டு போர் முடிவுக்கு வருகிறது- முக்கிய அம்சங்கள் என்ன?

us-taliban-sign-historic-deal-on-afghanistan-s-futureபிடிஐ - static.hindutamil.in : ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச்சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் தோஹாவில் இன்று கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 18 ஆண்டுகளாக இருதரப்பினருக்கும் இடையே நீடித்து வந்த போர் முடிக்கு வருகிறது. அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைப்பிரிவுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும். கடந்த 18 ஆண்டுக்கால போருக்காக இதுவரை அமெரிக்கா ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் தலிபான் தீவிரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் இருக்கும் இடையே பேச்சு வார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும்பட்சத்தில் 18 ஆண்டுக்கால போர் முடிவுக்கு வரும்.
தலிபான் தீவிரவாதிகள் தரப்பில் கமாண்டர் முல்லா பராதர், அமெரிக்கா தரப்பில் வாஷிங்டன் பேச்சுவார்த்தைக் குழுத்தலைவர் ஜல்மே காலிஜாத் ஆகியோருக்கு இடையே தோஹா ஹோட்டலில் இன்று ஒப்பந்தம் கையொப்பமானது.