செவ்வாய், 19 ஜூன், 2018

நாய் செத்ததற்கெல்லாம் பிரதமர் பதில் கூற வேண்டுமா? கெளரி லங்கேஷ் கொலை பற்றி ஸ்ரீ ராம் சேனா கருத்து

Chinniah Kasi : நாய் செத்ததற்கெல்லாம் பிரதமர் பதில் கூற வேண்டுமா?
கவுரி லங்கேஷை இழிவுபடுத்திய ஸ்ரீராம் சேனா முத்தலீக்
(கொலைக் கும்பலின் தலைவனே இவன்தானே?)
பெங்களூரு, ஜூன் 18 -
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை பற்றி, பிரதமர் மோடி இப் போது வரை ஏன் பேச மறுக்கிறார்? என்று எல்லோரும் கேட்பதாகவும், ‘நாய் செத்ததற்கெல்லாமா பிரதமர் பதில் சொல்வார்’ என்று ஸ்ரீராம் சேனாதலைவர் பிரமோத் முத்தாலிக் திமிராகபேசியுள்ளார்.‘கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப் பட்ட விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை; கவுரி லங்கேஷை சுட்டுக்கொலை செய்ததற்கு முகநூலில்பாராட்டுத் தெரிவிக்கும் பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர்’ என்று நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டி இருந்தார். இதேபோல காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு, ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலளித்துப் பேசியுள்ளார்.

120 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரை 1000 கோடி ரூபாய்க்கு வாங்கும் மோடி அரசு .


REDSTONE ARSENAL, Ala., 20 Feb. 2015. Military helicopter designers at the Boeing Co. will provide 35 of the latest-version AH-64 Apache attack helicopters to the U.S. Army under terms of a $591.2 million contract modification announced late Thursday.
Officials of the Boeing Defense, Space & Security segment in Mesa, Ariz., will build 35 new AH-64E Apache Guardian attack helicopters with advanced avionics under terms of the contract modification, awarded by the Army Contracting Command at Redstone Arsenal, Ala.
The deal is the second big Army helicopter contract in as many weeks. On 12 Feb. the Army awarded a $220.6 million contract to Airbus Helicopters Inc. in Herndon Va., to build 41 UH-72A Lakota utility helicopters equipped with the Raytheon AN/ARC-231 Airborne Communication System.
Last April Boeing won a $103.8 million contract for long-lead items in preparation for Thursday's AH-64E production order. Long-lead-item contracts enable defense contractors to buy difficult-to-obtain items well in advance so they can meet contract schedules.

அமெரிக்க தேர்தலில் தமிழ் பெண் கிரிஷாந்தி விக்னராஜா .. மிஷேல் ஒபமாவின் முன்னாள் உதவியாளர்

அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் நடைபெறவுள்ள ஆளுநர் தேர்தலில் தமிழரான கிரிஷாந்தி விக்னராஜா போட்டியிடுகின்றார். கிரிஷாந்தி விக்னராஜா கடந்த ஒபாமா நிர்வாகத்தில் முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியவர்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு – மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்?

எஸ் விமலாvikatan - மலையரசு: டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இல்லை; அவரை மாற்ற வேண்டும் எனக் கூறி டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் அவர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் நீதிமன்றத்தை நாட வழக்கு நடைபெற்று வந்தது. சுமார் ஆறு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கைது.. வன்முறையை தூண்டியதாக சேலத்தில்

BBC  : சேலம் விமான நிலைய விரிவாக்க
பணிக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு
ஆதரவாகவும் கூட்டங்களை நடத்திய 'சேலமே குரல் கொடு' அமைப்பை சேர்ந்த பியூஷ் மானுஷை இன்று தீவட்புபட்டி போலீசார் கைது செய்தனர். நேற்று திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில் பியூஸ் மானூஷூம் குற்றஞ்சாட்டப்பட்டார். இவர் மீது அரசுக்கு எதிராக பேசுதல், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை ஓமலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் காமலாபுரம் பகுதியில் விமானநிலையம் விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நடிகர் மன்சூர் அலிகானை, சேலத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஷ் மானுஷ் கடந்த 3ஆம் தேதி அழைத்து வந்தார். அப்போது காமலாபுரம் பகுதியில் விவசாயிகளை சந்தித்து மன்சூர்அலிகான் ஆதரவு தெரிவித்தார்.

கச்சநத்தம் சாதிவெறி .. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவரை தொடர்கிறது ..

Murugan Kanna : கச்சநத்தம் சாதிவெறியர்களால் படுகாயம் அடைந்தவர்களை
சாதி ரீதியாக வஞ்சிக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம்

கச்சநத்ததில் சாதிவெறியர்களால் மே மாதம் 28 இரவு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 3 இறந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். கச்சநத்தம் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு பின் அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு உடன்பட்டு மே 31 அன்று படுகாயம் அடைந்தவர்களை சிறப்பு சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதித்தது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இருந்து மருத்துமனை நிர்வாகம் அவர்களை டிஸ்ஜார்ஜ் செய்ய தொடர்ந்து வழியுறுத்தி வருகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் தகவல் கொடுத்தும் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இன்றும் வலுகட்டாயமாக வெளிறே்ற முயற்சி நடந்துள்ளது. இதனை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராஜன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ராம்ராஜ் ஆகியோர் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும சிவங்களை எஸ்பி, டிஆர்ஓ (பொறுப்பு ஆட்சியர் )ஆகியோரிடம் பேசி சிகிச்சையை தொடர செய்ய வழியுறுத்தியுள்ளனர்.

திங்கள், 18 ஜூன், 2018

கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள்.. சுற்றிவளைத்து கைது .. சென்னையில் ..

மாணவர்களிடையே மோதல் tamil.oneindia.com- kalai-mathi: கத்தி, அரிவாள் உடன் வலம் வரும் மாணவர்கள்-வீடியோ சென்னை: முதல் நாளே கல்லூரிக்கு கத்தியுடன் வந்த 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களின் ரகளையில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து தினம் கொண்டாடுவது, ரூட் தல யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சகமாணவர்களுடன் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் கத்திய, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நாள் எழுச்சி .. ஆர்.எஸ்.எஸ் சதிமுயற்சி .. ஆதி தமிழர் பேரவை வேண்டுகோள்

அருந்ததியர் சமூக அமைப்புகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் ஆதித்தமிழர்
பேரவை வேண்டுகோள்...
அன்பார்ந்த தோழர்களுக்கு ஆதித்தமிழர் பேரவையின் அன்பான வணக்கங்கள்,
ஆகத்து 20 - மாமன்னர் ஒண்டிவீரனார் வீரவணக்க நிகழ்வினால் ஒவ்வொரு ஆண்டும் அருந்ததியர் மக்களிடத்தில் உருவாகும் எழுச்சியும், அந்த எழுச்சியை அடையாளமாக வைத்து அரசியல் அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் முயற்சியையும் தடுக்கும் வகையில் பார்ப்பனிய பிஜேபியும் அதன் அடிமை அதிமுகவும் நுணுக்கமாக சில திட்டமிட்டு பணியை தொடங்கிவிட்டது.
அந்த ஆபரேசன் பெயர் சுவாமி ஒண்டிவீரன் மகாராஜ்
முழுமையாக தெரிந்துகொள்வோம்:
பட்டியல் சமூக மக்களிடையே ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத சிந்தனையை மிகவும் நுட்பமாக பரப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு பல பட்டியல் சமூக தலைவர்களும் மக்களும் இரையாகியுள்ளனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சூழ்ச்சிக்கு இரையாகாமல் பார்ப்பனிய எதிர்ப்பில், அம்பேத்கர் பெரியார் கருத்துகளை வலுவாக முன்னெடுத்துச் செல்லும் மக்களாக அருந்ததியர் மக்களும், அதன் தலைவர்களும் இருக்கிற காரணத்தினால் அந்த வலுவான கட்டமைப்பை உடைக்கும் பல திட்டத்தை பிஜேபியும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தீட்டியுள்ளது..

உதய் மின் திட்டத்தில் பன்னி செல்வம் போட்ட கையெழுத்து... மனிதர்களுக்கும் இயற்கைக்கும் அழிவை..

Ellaam Samam : உதய் மின் திட்டத்தில் பன்னி செல்வம் கையெழுத்துப் கேபிள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒரு வெளிநாட்டு நிறுவனம் தன் செலவில் போட்டு வாடகை மட்டும் வாங்கத் தயாராக உள்ளது. ஆனால் மின் கோபுரம் அமைப்பதால் கிடைக்கும் ஊழல் பணம் மோடி அரசுக்குத் தேவை. ஈன மோடிக்கு மக்கள் பணம் பற்றியோ மக்கள் வாழ்வாதார அழிவு பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது. மின் கோபுரங்கள் அமைக்க வாங்கும் அத்தனை சேனல்கள் உதிரி பாகங்கள் அத்தனையிலும் கமிஷன் என்பதால் கேபிள் வழிப் பகிர்மான முறை ஏற்கவில்லை (கடல் வழி தவிர்த்து).
போட்டதின் விளைவாக பவர் கிரிட் கார்ப்பரேசன் உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் தமிழகத்திலும் நாடு முழுவதும் அமைக்கப்படுவதோடு இலங்கை பங்களா தேஷ் போன்ற நாடுகளுக்கும் கடல் வழியாகவும் கேபிள் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடுகிறது. மின் கோபுரம் அமைக்காமல் கேபிள் மூலமாகவே நெடுஞ்சாலைகள் வழியாக மின் பகிர்மானம் செய்வதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படாமல் இருப்பதோடு பறவைகள், விலங்கினங்களின் வாழ்விடங்கள் பாதிப்படையாது. மேலும் செலவு பல மடங்கு குறைவு.
இதே போல தேசிய நெடுஞ்சாலைகள் தற்போதைய 8 வழிச்சாலை எல்லாவற்றிலும் ஊழல் பணத்துக்காகவும் விரைந்து முடிக்க மத்திய அரசு மாநிலங்களை கடுமையாக எச்சரிக்கிறது. அனில் அகர்வாலின் அடிவருடி மோடிக்கு அவன் மீதுதான் இரக்கம் வருமேயொழிய நம் மீது வராது, காரணம் நன்கொடை.

சென்னையில் ஆர்ப்பாட்டம் .. காஷ்மீர் நாளிதழ் ஆசிரியர் ஷுஜாத் புகாரி கொலையை கண்டித்து ..

பத்திரிகையாளர் படுகொலை:  இன்று ஆர்பாட்டம்!
மின்னம்பலம்:ரைசிங் காஷ்மீர் நாளிதழின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து இன்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஜூன் 14ஆம் தேதியன்று ஸ்ரீநகரிலுள்ள தனது அலுவலகத்திலிருந்து இப்தார் விருந்துக்குச் செல்வதற்காகக் கிளம்பியபோது, ரைசிங் காஷ்மீர் பத்திரிகையின் தலைமையாசிரியர் ஷுஜாத் புகாரி மூன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், அவருடன் இருந்த இரண்டு பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.
புகாரியின் இறுதிச் சடங்கில் முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா, அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஷுஜாத் புகாரி படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் மெஹபூபா முப்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பத்திரிகையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காலாவை தூத்துக்குடியில் என்கவுண்டர் செய்த ரஜினிகாந்த்!

மின்னம்பலம் : சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா! இராமானுஜம்- மினி தொடர்:
காலாவின் வியாபாரப் பயணம் - 19
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்கிற மக்கள் செல்வாக்கு பெற்ற நடிகருக்குப் பின் சாமானிய மக்களிடமும் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் ரஜினிகாந்த்.
சாதிய அடையாளம், அரசியல் கட்சி சார்பு என இவை இரண்டையும் தன் படங்களில் முன்னிலைப்படுத்தாமல் இருந்தவரையிலும் அனைத்துச் சமூக மக்களும் விரும்பும் கதாநாயகன் என்னும் நாற்காலி ரஜினிகாந்த் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்தாலும் அதனை அதிமுக அனுதாபிகள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.
அரசியல் கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்த பின் ரஜினி படம் பார்க்கும் பார்வையாளர்கள் ஆதரவு தளம் குறைந்தது.
தமிழக மக்கள் சார்ந்த பிரச்சினைகள், மக்கள் போராட்டங்களில் ரஜினிகாந்த் கருத்தை மக்கள் எதிர்பார்க்கத் தொடங்கியபோது அவரிடம் மௌனமே பதிலாக இருந்துவந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல், காவல் துறைக்கு ஆதரவாக, அதிகாரவர்க்க சார்பு நிலையை ரஜினிகாந்த் எடுத்தபோது அவரது இமேஜ் டேமேஜ் ஆனது.

மாயாவதி : மத்திய பிரதேசத்தில் காங்கிரசோடு பகுஜன் சமாஜ் கூட்டணி இல்லை.

காங்கிரஸுடன் கூட்டணியில்லை: பகுஜன் சமாஜ்!மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.
சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அமைச்சரவையின் பதவிக்காலம் மத்தியப் பிரதேசத்தில் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பகுஜன் சமாஜ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகத் தகவல் வெளியானது. நேற்று (ஜூன் 18) மத்தியப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் நர்மதா பிரசாத் அகிர்வார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ம.பி.யிலுள்ள 230 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். அதோடு, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து எவ்விதப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார்.

மேதா பட்கர் தூத்துக்குடியில் நேரடி ஆய்வு ,

மேதா பட்கர் தூத்துக்குடி வருகை!மின்னம்பலம் : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களைச் சந்திக்க சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் இன்று(ஜூன்18) தூத்துக்குடிக்கு வருகைதந்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த மேதா பட்கரை மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகிகளும் பச்சைத்தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரும் அழைத்து வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில்
ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார். மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடுப்பங்களை சந்திக்கஉள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம் ஒன்றில் பேச உள்ளதாகவும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

திருநங்கைகளை அவமதித்த நடிகை கஸ்துரி மன்னிப்பு கேட்டார்

tamilthehindu - போராட்டம் நடத்தும் திருநங்கைகள், மன்னிப்பு கேட்ட கஸ்தூரி- படம்: எல்.சீனிவாசன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து திருநங்கைகளோடு ஒப்பிட்டு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் போராட்டத்தை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி வலைதளங்களில் பிரபலமாக வலம் வருபவர். நடிகைகளில் துணிச்சலாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரச்சினைகளிலும் கஸ்தூரி துணிச்சலாக கருத்து தெரிவிப்பது வரவேற்பைப் பெற்றாலும் சில ட்வீட்கள் அவருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் உள்ளிட்ட 16 மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.. மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்தி சமஸ்கிருதம் ஆங்கிலம் மட்டுமே!


Ellaam Samam : சிபிஎஸ்இ பள்ளியில் சமசுருகிருதம் எதுக்கு?
சமசுருகிருதம் எந்த மாநில மொழி?
சமசுருகிருதம் இந்து மத வெறியின் அடையாளம் இல்லையா?
தமிழ் மொழிக்கு அங்கீகாரம் இல்லாதபோது சமசுருகிருதத்துக்கு இங்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
சனநாயகத்தைக் கேள்விக்குறி ஆக்கும் மோடி அரசு. எல்லாமே அராஜகம் அகங்காரம்
அகங்காரம் அழிவுக்கு இட்டுச் செல்லும்
இந்தியா அழிய வேண்டுமா?

மாவீரன் அய்யன் காளி ! கேரளாவில் வீரம் விதைக்கப்பட்ட நாள் ஜூன் 18 நினைவு நாள்.

Savitha Munuswamy : கேரளாவில் வீரம் விதைக்கப்பட்ட நாள் ஜூன் 18 மாவீரன்
அய்யன் காளி நினைவு நாள்.
கேரளத்து நாயர்களும், நம்பூதிரிகளும் பட்டியல் சமுகத்தார் கல்வி கற்க கூடாது, பொதுதெருவில் நடமாடக் கூடாது, பெண்கள் மேலாடை அணியக் கூடாது, கல்வி மறுப்பு ஆகியவற்றை கூறி அடக்குமுறையை ஏவிய இவர்களை எதிர்க்க 'அய்யன்காளிப்படை' என்ற படையை உருவாக்கி தீவிரமாக களமாடியதாலேயே..இவர் மாவீரன் என்று மக்களால் போற்றப்பட்டார்..!
பொதுதெருவில் மாட்டுவண்டி போராட்டத்தை முன்னெடுக்கிறார்..எந்த உடைகளை இம்மக்கள் அணிந்துக்கொள்ளக்கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களான நம்பூதிரிகளும், நாயர்களும் தடைவிதித்து கூறிவந்தனரோ...அதை எதிர்த்து மாட்டின்கழுத்தில் மணி அணிவித்து வண்டி பூட்டி, அங்கவஸ்திரம் அணிந்துகொண்டு, தலைப்பாகையை கட்டிக்கொண்டு தனியாளாக one man Army ஐப்போல ஆதிக்கசாதிகள் வசிக்கும் வீதிகளில் கர்வமாக உலா வத்தவர்தான் நம் காளி...!
1904 லேயே புலையருக்காண அடிப்படை கூலி உயர்வுக்காக போராடியிருக்கிறார்..!1907 ல் புலையருக்காண பொதுக்கல்விக்காண அரசாணை உரிமையை பெற்றிருக்கிறார்..!
1916 ல் புலையருக்கு வேலைக்காண ஒதுக்கீட்டை கோரி போராடியுள்ளார்..! இதனை வலியுறுத்தவே 'சாதுஜனபரிபாலிணி' என்ற இதழை நடத்தியிருக்கிறார்...!
எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இவை அதாவது 1924ல் நாராயணகுருவுடன் இணைந்து வைக்கம் போராட்டத்தில் பங்குபெற்று 1936ல் ஆலயபிரவேச சட்டம் வெற்றி விழாவையும் கண்டவர்தான் நம் மாவீரன் அய்யன் காளி அவர்கள்...!

உத்தர பிரதேசம் பாஜகவின் வாட்டர் லு .. சோனியா + மாயாவதி + அகிலேஷ் அட்டகாசமான கூட்டணி ..

சவுக்கு :2019ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில்
போட்டியிடும் எதிர்க்கட்சிக்கு
மிகவும் நம்பகமான அடையாளம்,   மாயாவதி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் முதிர்ச்சி மற்றும் ஞானம் ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இவர்கள் இருவரும் அதிகாரத்திற்கு கடுமையாக போட்டியிட்டவர்கள்/.
2007-ம் ஆண்டு மாநில சட்டமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மை பெற்றது. மாயாவதி நான்காவது முறையாக முதலமைச்சராவதற்கு இது வழிவகுத்தது.. 2012ல் சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பெற்றது. அகிலேஷ் முதலமைச்சர் ஆனார். அதற்கு முன்னர், அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மூன்று முறை அப்பதவியை வகித்துள்ளார். கடந்த ஆண்டு, மிச்ச மீதமுள்ள மோடி அலையை பயன்படுத்தி, பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. 15 வருடகால இடைவெளிக்குப் பிறகு, ஆதித்யநாத் என்ற ஒரு முதலமைச்சரை பாஜக பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலான இடங்களைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம், நரேந்திர மோடியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தது. மொத்தம் உள்ள 80 இடங்களில் பாஜகவுக்கு 71 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்திற்கு மேலும் இரண்டு இடங்களையும் அம் மாநிலம் வழங்கியது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான போட்டிகளிலிருந்து பாஜக பெரியளவில் பயனடைந்தது. பாஜகவின் வாக்கு சதவீதம் 42.63% ஆகும். இது சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜக் கட்சி ஆகியவற்றின் மொத்த வாக்கு சதவீதத்தைவிட (42.13%) கொஞ்சம் கூடுதலாகும்.

வைரமுத்துவுக்கு எதிராக ஆண்டாள் கோஷ்டியும் அம்பேத்கார்வாதிகளும் ஒரே அணியில்? ஏன்?

LR Jagadheesan : ஆண்டாள் பக்தர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள்
முன்பு செய்த அதே காரியத்தை இப்போது அம்பேட்காரியர்கள் என தம்மை கூறிக்கொள்வோர் செய்துகொண்டிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக.
ஆண்டாளை வைரமுத்து அவமதித்துவிட்டதாக அந்தணர்கள் கொந்தளித்ததைப்போல ஆதிதிராவிடர்களை கேவலப்படுத்திவிட்டதாக தலித்துகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டிலும் உண்மையில்லை. ஆனாலும் இந்த இருதரப்பாரும் அதை ஏற்கப்போவதில்லை. இந்த இருதரப்பாரும் வைரமுத்துவை குறிவைப்பதில் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அது எங்க ஜாதி சங்கதியை நாங்க தான் பேசுவோம்/பார்த்துக்குவோம். மத்த ஜாதிக்காரங்க அதைப்பத்தி பேசாதீங்க. அதுக்குள்ள வராதீங்க. என்பதே இருதரப்பாரின் அரசியல் அணுமுமுறை.
நல்லது. ஆண்டாளை வைரமுத்து அவமதித்துவிட்டதாக அந்த குதிகுதித்தவர்கள் காலா என்கிற திரைப்படத்தில் ராமகாதைக்கு நேர்ந்ததாக சொல்லப்பட்ட அபகீர்த்தியைப் பற்றி எந்த கொந்தளிப்பையும் ஏன் காட்டவில்லை. ஏனென்றால் அந்த படத்தின் கதாநாயகன் இந்துத்துவர்களின் இஷ்டதெய்வம் ரஜினி. காலா திரைப்படம் கல்லா கட்டாவிட்டால் அவருக்குத்தான் நஷ்டம். தம் இஷ்டதெய்வம் நஷ்டப்பட அவர்கள் விட்டுவிடுவார்களா என்ன?

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு பொதுமக்கள் அதிர்ச்சி ... மூடப்பட்ட ஆலையில் எப்படி?

Special Correspondent FB Wing : மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து
ரசாயன கசிவு பொதுமக்கள் அதிர்ச்சி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள போராடிய போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த பின்னர் ஆலை மூடப்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே-28-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, இந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இதையடுத்து சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆலையில் கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

தலித் பகுதியில் பள்ளி : படிக்க மாணவர்கள் மறுப்பு!

தலித் பகுதியில் பள்ளி : படிக்க மாணவர்கள்  மறுப்பு! மின்னம்பலம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவிந்தவாடியில், தலித் மக்கள் வாழும் பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிக்குச் செல்ல தலித் அல்லாத மாணவர்கள் மறுத்துள்ளனர்.
கோவிந்தவாடியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டும் விவகாரத்தில், தலித் மக்களுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, தலித் அல்லாத மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக வகுப்புகளைப் புறக்கணித்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள கோவிந்தவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த அரசுப் பள்ளியானது தலித்துகள் குடியிருப்பை ஒட்டியிருக்கிறது. இந்த அரசுப் பள்ளியானது 1961ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 2016ஆம் ஆண்டு வீசிய வரதா புயல் காரணமாக இப்பள்ளியின் கட்டடங்கள் சேதம் அடைந்தன. இதன்பிறகு இப்பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றப் பெற்றோர் ஆசிரியர் கழகம் முடிவு செய்து, கிராம சபைக் கூட்டத்தின் மூலம் தீர்மானத்தை நிறைவேற்றியது. நபார்டு வங்கி நிதியின் வாயிலாகப் புதிய கட்டடம் கட்டுவதற்கு 3 கோடியே 77 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 22 வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கேஜ்ரிவால் : டெல்லியில் உள்ள ஒவ்வொரு வாக்குகளையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றுவோம்:

Arvind-Kejriwalநக்கீரன் :பாஜகவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் யூனியன் பிரதேச அந்தஸ்தால் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசால் முழு சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. போலீஸ் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதனால் டெல்லியில் முதல்வரை விட மத்திய அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகமான அதிகாரம் இருந்து வருகிறது. இதனால், டெல்லிக்கு மாநில அந்தஸ்து தரக்கோரி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறார்.< இந்நிலையில், டெல்லியில் சட்டப்பேரவையில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு அனைத்து ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்து, தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அப்போது தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது,

ஞாயிறு, 17 ஜூன், 2018

கேஜ்ரிவாலைப் பார்க்கச் சென்ற 4 முதல்வர்கள்: தலைநகருக்கே இந்த கதி; மற்ற மாநிலங்கள் என்னாகும்?’

பிடிஐ THE HINDU TAMIL
அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்த முதல்வர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், எச்.டி.குமாரசாமி   -  படம் உதவி: ட்விட்டர்
டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 7-நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல் அரவிந்த் கேஜ்ரிவாலைச் சந்தித்கச் சென்ற 4 மாநில முதல்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தலைநகருக்கே இந்த கதி என்றால், மற்ற மாநிலங்கள் நிலைமை பாஜக ஆட்சியில் என்னாகும் என்று முதல்வர்கள் வேதனைத் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் டெல்லி அரசின் தலைமைச் செயலாளரை ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில், அமைச்சர்களுடன் ஐஏஎஸ் அதிகாரிகள் எந்தவிதமான ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், அரசும் குற்றம்சாட்டுகின்றன.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவிதமான முயற்சியும் எடுக்காமல், அவர்களைத் தூண்டிவிடுகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.
7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள்
 இதையடுத்து, ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, கடந்த 6 நாட்களாக துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்திலும், உண்ணாவிரதத்திலும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர்கள் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் தலையிட வேண்டும் எனக் கோரி மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதற்கும் மத்திய அரசு சார்பில் எந்தவிதமான பதிலும் இல்லை.

ரஜினி படங்களில் இனி அரசியல் இருக்காது

நக்கீரன் :ரஜினி இனி தான் நடிக்கும் படங்களில் அரசியல் இடம்பெறக் கூடாது என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த 7ஆம் தேதி வெளியாகி வசூலை அள்ளியதாக ஒரு பக்கம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வி, பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஒருசில விநியோகிஸ்தர்கள் பிரச்சனையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தின் வசனம், காட்சி எதிலும் அரசியல் வேண்டாம் என்று ரஜினி ஆரம்பத்திலேயே கூறிவிட்டார். காலா படத்தில் பேசப்பட்ட அரசியல் ரஜினிக்கு நெகட்டிவாக அமைந்தது என்கிற கருத்துக்கள் பரவலாக உள்ளன. எனவே ரஜினி நடித்துவரும் படங்களில் இனி அரசியல் இருக்காது என்றே தெரிகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் தந்த காவலர்!

kumarasamykumarasamyநக்கீரன் - ச.ப.மதிவாணன் : ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த காவலர், அந்தக் குழந்தை இறந்த செய்தியைக் கேட்டு கதறியழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் எலெக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு அருகில் உள்ளது தொட்டதொகுரு. இந்தப் பகுதியில் கட்டுமானப்பணியில் இருக்கும் கட்டிடத்தின் அருகில், கடந்த ஜூன் ஐந்தாம் தேதி பிளாஸ்டிக் பைக்குள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. கழுத்தில் தொப்புள்கொடி சுற்றியிருந்த அந்தக் குழந்தை பிறந்து சில மணிநேரமே ஆகியிருக்கலாம்.
  தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட, குழந்தை மீட்கப்பட்டான். மிகவும் பலவீனமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். சிகிச்சைக்குப் பிறகும் பலவீனமாக இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு காவல்நிலையத்திற்கு விரைந்தார்

நடிகர் மன்சூர் அலிகான் கைது... சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து

nakkeeran  சி.ஜீவா பாரதி:

சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகானை வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக காவல் துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அப்போது அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,< நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.
எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என கூறினார்.