திங்கள், 18 ஜூன், 2018

திருநங்கைகளை அவமதித்த நடிகை கஸ்துரி மன்னிப்பு கேட்டார்

tamilthehindu - போராட்டம் நடத்தும் திருநங்கைகள், மன்னிப்பு கேட்ட கஸ்தூரி- படம்: எல்.சீனிவாசன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்து திருநங்கைகளோடு ஒப்பிட்டு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருநங்கைகள் போராட்டத்தை அடுத்து தனது கருத்துக்கு கஸ்தூரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி வலைதளங்களில் பிரபலமாக வலம் வருபவர். நடிகைகளில் துணிச்சலாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். அரசுக்கு எதிராகவும், மக்கள் பிரச்சினைகளிலும் கஸ்தூரி துணிச்சலாக கருத்து தெரிவிப்பது வரவேற்பைப் பெற்றாலும் சில ட்வீட்கள் அவருக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளன.

சில மாதங்களுக்கு முன் குறிப்பிட்ட சமூகத்தைக் கண்டித்துப் போட்ட ட்வீட்டால் பிரச்சினை ஏற்பட்டபோது கஸ்தூரி பின்வாங்கினார். ஆனாலும் முக்கியக் கருத்துகளில் எதிர்ப்பு வந்தாலும், விமர்சனம் வந்தாலும் உறுதியாக நின்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் டிடிவி அணியின் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வந்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்டக் கருத்தை தெரிவித்திருந்தனர். இதை விமர்சித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “இரு வேறுபட்டுத் தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! அப்போ, 18 ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்!” எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவோடு இரண்டு திருநங்கைகளின் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
திருநங்கைகளின் படத்தை இணைத்து கருத்து பதிவிட்ட கஸ்தூரிக்கு  சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. திருநங்கைகள் சமூகமும் இதை கடுமையாக எதிர்த்தது. நேற்று முன் தினம் நடிகை கஸ்தூரியின் வீட்டை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.
கஸ்தூரி மீது மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரிதாகவே, நடிகை கஸ்தூரி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வீடியோவை இணைத்து அதன் லிங்கை ட்விட்டரில் போட்டு பதிவிட்டுள்ளார். அவரது வீடியோவில் “நேற்று முன்தினம் வேடிக்கையாகப் பேசுவதாக நினைத்து ரொம்ப தவறான ட்வீட் செய்துவிட்டேன். அதனால் நான் பெரிதும் மதிக்கக்கூடிய என்னுடையநண்பர்கள், என்னுடைய சகோதர, சகோதரிகள் மனசு வேதனைப்படுகிறது எனத் தெரிந்தவுடனே அந்தப் பதிவை நீக்கி பகீரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறேன்.
எனக்கு ஏராளமான திருநங்கைகள் சமூகத்தினர் நட்பாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அவர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிட்டேன். சமூக வலைதளங்களிலும் திருநங்கைகளிடம் வருத்தத்தையும்,தெரிவித்துவிட்டேன். மன்னிப்பும் கேட்டிருக்கேன். அவர்கள் என்னை வஞ்சிக்கிட்டாங்க, ஆனாலும் என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு பெருந்தன்மையாய் இதை மறந்து கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ரொம்ப சீக்கிரமாக முடிந்துபோகக் கூடிய இந்த விஷயம், நீக்கப்பட்ட எனது பதிவை சிலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பரப்பு

கருத்துகள் இல்லை: