செவ்வாய், 19 ஜூன், 2018

கச்சநத்தம் சாதிவெறி .. மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவரை தொடர்கிறது ..

Murugan Kanna : கச்சநத்தம் சாதிவெறியர்களால் படுகாயம் அடைந்தவர்களை
சாதி ரீதியாக வஞ்சிக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகம்

கச்சநத்ததில் சாதிவெறியர்களால் மே மாதம் 28 இரவு நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 3 இறந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். கச்சநத்தம் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களுக்கு பின் அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு உடன்பட்டு மே 31 அன்று படுகாயம் அடைந்தவர்களை சிறப்பு சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதித்தது.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் இருந்து மருத்துமனை நிர்வாகம் அவர்களை டிஸ்ஜார்ஜ் செய்ய தொடர்ந்து வழியுறுத்தி வருகிறது. இது குறித்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடம் தகவல் கொடுத்தும் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இன்றும் வலுகட்டாயமாக வெளிறே்ற முயற்சி நடந்துள்ளது. இதனை அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல்ராஜன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி ராம்ராஜ் ஆகியோர் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகம் மற்றும சிவங்களை எஸ்பி, டிஆர்ஓ (பொறுப்பு ஆட்சியர் )ஆகியோரிடம் பேசி சிகிச்சையை தொடர செய்ய வழியுறுத்தியுள்ளனர்.

மீனாட்சி மிஷன் மருத்துமனையின் உரிமையாளர் டாக்டர் சேதுராமன் கச்சநத்ததில் கொலைவெறி தாக்குதல் நிகழ்த்திய அதே முக்குளத்தோர் சமுகத்தை சார்ந்தவர் என்பதால் படுகாயம் அடைந்தவர்களை வெளியேற வைக்க முயற்சிக்கிறார் இதற்கு காவல்துறை மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் துணை போகிறது. இதனால் படுகொயத்துடன் சிகிச்சையில் இருப்பவர்களின் உயிருக்கு அச்சம் இருப்பதாகவே கருதுகிறோம். எனவே தமிழக அரசு உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்க வேறு ஏதேனும் சிறந்த பாதுகாப்பான மருத்துமனையை தேர்வு செய்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
எச்சரிக்கை :தமிழக அரசே உடனடியாக நடவடிக்கை எடு தவறினால் தமிழக அளவில் மிக பெரிய போராட்டங்கள் வெடிக்கும் ச^♪+*

கருத்துகள் இல்லை: