மின்னம்பலம் :குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.சமீபத்தில் குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில், குஜராத் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.

























