செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி காங்கிரஸ் ...

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக வெற்றி!மின்னம்பலம் :குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் குஜராத் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த நிலையில், குஜராத் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 17ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (பிப்ரவரி 19) எண்ணப்பட்டன. குஜராத் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 93 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நான்கு இடங்களில் சுயேச்சைகள் வெற்றிபெற்ற நிலையில், ஆறு இடங்களில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தாலும் இறுதியில் பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: