இந்நிலையில், இயக்குனர் பாலச்சந்தர் யூ.சி.ஓ. வங்கியில் வாங்கியிருந்த ரூ.1.36 கோடியைத் திரும்பச் செலுத்தாததால், மயிலாப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தை ஏலத்தில் விற்க சம்மந்தப்பட்ட வங்கி முடிவு செய்துள்ளது. இந்த வீட்டின் ஒரு பகுதி பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பெயரிலும், மற்றொரு பகுதி அவரது மனைவி ராஜம் பாலச்சந்தர் பெயரிலும் உள்ளன.
கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் தமிழில் பல வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளது. நான் மகான் அல்ல, சிந்து பைரவி, புன்னகை மன்னன், சாமி உள்ளிட்ட படங்கள் அதில் முக்கியத்துவம் பெறுபவை. மேலும், பாலச்சந்தர் தான் இயக்கிய பெரும்பாலான படங்களை, கவிதாலயா நிறுவனத்தின் மூலமாகவே தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக