செவ்வாய், 23 ஜனவரி, 2018

சமூக நீதியை அழிக்க சதி! நீட் தேர்வு சமுகநீதிக்கு விழுந்த ....

சமூக நீதியை அழிக்க சதி!மின்னம்பலம் :நீட் தேர்வு போன்ற சமூகநீதி பிரச்னையிலும் மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படப் போகிறதா என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் வரும் மே மாதம் 6 ஆம் தேதி மருத்துவத்திற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் சென்ற முறை நடந்த நீட் தேர்வில் பல்வேறு
விதமான கேள்வித்தாள்கள் கேட்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் என்ற அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து குறித்து இன்று (ஜனவரி 23) கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 18.1.2018 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தகவலைத் தெரிவித்தார்.இந்தியா முழுவதும் மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களை மனதில் கொண்டு மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்வித்தாள்களைத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பிற்கு முற்றிலும் மாறாக 21.1.2018 நாளேடுகளில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.மருத்துவப் படிப்பில் சேர நாடு முழுவதும் நடத்தப்படும் நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று அதே அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார் .இது எவ்ளவுப் பெரிய கொடுமை, இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குட்கா அமைச்சர் விஜயபாஸ்கர் ஹாவாலா பணம் .... மாநில விசாரணை நேர்மையாக நடக்காது!

மின்னம்பலம் :குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதே நியாயமானதாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குட்கா ஊழலில் ஹவாலா பணம்!குட்கா ஊழல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கில் வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "குட்கா நிறுவன உரிமையாளர் மாதவ் ராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வருமான வரித் துறை கடிதத்தை இணைத்து 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிஜிபி அசோக்குமார் கடிதம் எழுதியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இந்தக் கடிதமானது போயஸ் கார்டனில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது, சசிகலா அறையிலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறை சார்பில் கூறப்பட்டது.

தினகரனுக்கு எதிராக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஜாதிக்கட்சி.. போஸ் மக்கள் பணியகம்!

டிஜிட்டல் திண்ணை: இன்று பணியகம்... நாளை கட்சி!மின்னம்பலம் : இந்தத் தைத் திருநாளைத் தொடர்ந்து, மாவீரன் சுபாஷ் சந்திர போஸ் பெயரில் ஒரு மக்கள் பணியகம் தொடங்கப்படும். இதில் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கப்படும். தமிழகம் முழுவதும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு சமூக வலைதளம் உருவாக்கப்படும். என்னைச் சந்தித்த இளைஞர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது. இதற்கான அடுத்த கட்ட நகர்வை என் முகநூல் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்’- பொங்கல் சமயத்தில் இப்படி ஒரு பதிவிட்டிருந்தார் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த்.
அதில் அடுத்த கட்ட நகர்வை இன்று தொடங்கிவிட்டார். ‘போஸ் மக்கள் பணியகம்’ என அந்த அமைப்புக்குப் பெயர் சூட்டியிருக்கும் ஜெய் ஆனந்த், அந்த அமைப்புக்கான லோகோவையும் வெளியிட்டிருக்கிறார்.

E- சிகரெட் விளம்பரங்கள் ... புதிய கான்சர் அறிமுகம்

tamilthehindu :பூங்கா, கடற்கரை, திரையரங்கு, சந்தை, சாலைகள் போன்ற பொதுஇடங்களில் எங்கு வேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை. சாம்பல் இல்லை. அதிக அளவில் புகையும் இல்லை. ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நவீன சிகரெட்’ என்று இ-சிகரெட் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இப்படியான ஈர்ப்பு அழைப்பில் மயங்கி, பலரும் இ-சிகரெட்டுக்கு அடிமையாகிவிடுகின்றனர். ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்துள்ள புதிய புற்றுநோய் பூதம்தான் இ-சிகரெட் என்பதை நம்மில் பலர் இன்னமும் உணரவில்லை.
2014-ல் ‘புகையிலை சிகரெட்டுக்கு மாற்று’ என்ற போர்வையில் புகுந்துள்ள இ-சிகரெட் புகைப்பழக்கம், இந்தியா உள்ளிட்ட 182 நாடுகளில் பரவியுள்ளது. உலக அளவில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இ-சிகரெட் புகைப்பதாகப் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இந்தப் புதிய பாணி புகைப்பழக்கம் சீனா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் மிக அதிக அளவில் பரவியுள்ளது. இது சந்தைக்கு வந்த முதல் ஆண்டிலேயே 80 கோடி அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை ஆனதாக அமெரிக்க சிகரெட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்தது. தற்போது 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சுமார் 7,000 வகை மணங்களில் இ-சிகரெட்டை விற்பனை செய்கின்றன. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இது விற்பனையில் உள்ளது.

மிஷ்கின் : என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தர்றேன்!

சவரக்கத்தி
மிஷ்கின்விகடன் -அலாவுதின் ஹுசைன்   :  இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் 'சவரக்கத்தி'. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அந்த சந்திப்பில் இருந்து...
இயக்குநர் ராம் பேசுகையில், ``கைவிடப்பட்ட, எளிமையான, தன் வாழ்வை தக்கவைத்துக்கொள்கிற ஒருவன், தன்னை, தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்வதற்காக கோபம் கொள்ளும் வேறொருவன், காது கேட்காதிருந்தும் மக்களை கேட்கக்கூடிய ஒரு பெண்... இவர்களைப் பற்றிய படம்தான் 'சவரக்கத்தி'. இதுவரை என் படங்களிலும் மிஷ்கின் படங்களிலும் நகைச்சுவை இருந்ததே கிடையாது.
ஆனால் இந்தப் படம், முழுக்க முழுக்க நகைச்சுவைத் திரைப்படம்.

மாணவர்களுக்கு பழைய கட்டணத்திலேயே பஸ் பாஸ் வழங்கப்படும்! - தமிழக அரசு அறிவிப்பு

விகடன் - கார்த்திக்.சி : தனியார் கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் பஸ் பாஸ் பழைய கட்டணத்திலேயே தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை 50 சதவிகிதம் அளவுக்கு தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதற்கு தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கல்லூரி மாணவ, மாணவிகள் அதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவசப் பயண அட்டை தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

BBC :அமெரிக்காவில் 7.9 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை அலாஸ்காவில்


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடற்கரை பகுதிகளை 7.9 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. e>கொடியாக் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உணரப்பட்ட அந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி செவ்வாய் நள்ளிரவுக்குப் பின் 12.31 மணிக்கு நிகழ்ந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ்.ஜியாலஜிகல் சர்வே கூறியுள்ளது.
"உயிர் மற்றும் உடைமைகளுக்கு அளவுக்கும் அதிகமான பாதிப்பு ஏற்படலாம்," என்று ஆன்கரேஜில் உள்ள அதிகாரிகள் கற்கரையோரத்தில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் உயரமான பகுதிகளில் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

India For Sale? மோடி : வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள்: உலக பொருளாதார மாநாட்டில் மோடி அழைப்பு

வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள்: உலக பொருளாதார மாநாட்டில் மோடி அழைப்புமாலைமலர் : வாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். #WorldEconomicForum #wef18 #Davos #Modi #NarendraModi டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது.
இந்த மாநாடு 26-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தார்.
அவருடன் மத்திய மந்திரிகள் சுரேஷ்பிரபு, பியூஸ்கோயல், தர்மேந்திரபிரதான், மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் முகேஷ் அம்பானி, ஆசிம்பிரேம்ஜி, ராகுல்பஜாஜ் உள்ளிட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். சுவிட்சர்லாந்து வந்த மோடியை அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.

வளர்ந்து வரும் நாடுகள்...: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா

இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான 
நேபாளம் 22-வது இடத்திலும், 
சீனா 26-வது இடத்திலும், 
வங்காள தேசம் 34-வது இடத்திலும், 
இலங்கை 40-வது இடத்திலும், 
பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன.
தினத்தந்தி :பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடம் பெற்றுள்ளது. , உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவுக்கு 62-வது இடம் கிடைத்துள்ளது.

60 ரூபாயில் குணமாகிய சிறு நீரக கட்டி ... ராகவா லாரான்ஸ் அனுபவம்

No automatic alt text available.ராகவா லாரன்ஸ் :முகநூல் நண்பர் ஒருவரின் பதிவு,,,
உங்களுக்கும்பயன்படலாம்,,,
இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை.
சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி!
பெங்களுரில் தவிர்க்க முடியாத திருமணங்கள்.
போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!
உடனே மருத்துவமனைக்குசென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது.
"உடனே அறுவை சிகிச்சை செய்யா விடில் உயிருக்கே ஆபத்து என்ற எச்சரிக்கை!"
நான் மறுத்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னையில் என் குடும்ப டாக்டரிடம் காண்பிக்க அவரும் உறுதிப்படுத்தினார்...
என் மகன் அமெரிக்காவில் இருந்து உடனே வருவதாக தகவல் அனுப்பினான்...
என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்...
கையமர்த்திய டாக்டர்,

திருமணவிழாவில் ஸ்டாலின் ...சு.சாமி .... சந்திரலேகா ex IAS

வெப்துனியா :கடந்த சில மாதங்களாக பாஜகவின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இயங்குவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை விட்டு வருகின்றனர். எனவே வரும் தேர்தலில் அதிமுகபாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு உள்ள அடுத்த ஒரே வாய்ப்பு திமுகவுடன் கூட்டணி அமைப்பதுதான். அதிலும் பிரதமர் மோடி சென்னை வந்தபோது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பின்னர் பாஜகவும் திமுகவும் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இரு கட்சிகளும் ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் கூட்டணியில் இருந்த கட்சிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 73% சொத்துக்களை ஆளும் 1% கோடீஸ்வர்கள்: 2014 இல் 49 வீத செல்வம் ! தற்போது 73 வீத செல்வம் 1 வீதத்தினரிடம் .. பாஜகவின் செய்வினை

வெப்துனியா :இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஆய்வின் ரீபோர்ட் ஒன்று தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பொருளாதார நடவடிக்கைகள், இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு உள்ளன.
கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான சொத்து மதிப்பில் 82 சதவீதம் அளவு வெறும் ஒரு சதவீதம் பேரிடம் உள்ளது. குறிப்பாக இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது.
அவர்களின் சொத்து மதிப்பு 20.9 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகை. இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார திட்டங்கள், ஏற்கெனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையும் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஆய்வின் ரீபோர்ட் ஒன்று தெரிவிக்கிறது.

தாய்லாந்து மூங்கில் படகு பருத்திதுறையில் கரை ஒதுங்கியது

beach09 பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) beach09beach11 பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) beach11beach06 பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) பருத்தித்துறைக் கடலில் அதிசய மூங்கில் வீடு -படையெடுக்கும் மக்கள்..! - (படங்கள்) beach06யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்படும் வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீனவரொருவரால் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்றிரவு(21) யாழ். பருத்தித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் கடலில் எப்போதும் காணக் கிடைக்காத காட்சியொன்றைக் கண்டுள்ளார். அதாவது கடலில் ஒரு அழகிய வீடொன்று மிதந்து வரும் காட்சியே அது. குறித்த காட்சியைக் கண்ட மீனவருக்கு முதலில் ஒரு வித அச்சம் நிலவினாலும் பின்னர் தமக்குள் துணிவை வரவழைத்துக் கொண்டு அதனருகே சென்று பார்த்துள்ளார். எமது நாட்டில் இல்லாத வித்தியாசமான நுட்ப முறைகளுடன் அமைந்திருந்த குறித்த மூங்கில் வீடு அவரை மிகவும் ஈர்த்துள்ள நிலையில் அதனை மீட்டுக் கடற்கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.

பெருமாளைப் புகழ்ந்தால்கூட 'அந்தக் கூட்டம்,' திமுகவை தன் பரம எதிரியாகத்தான் கருதும்.

டான் அசோக் :ஜெகத்ரட்சகன் அறிக்கை ஆண்டாளை அல்ல, பெருமாளைப் புகழ்ந்தால்கூட 'அந்தக் கூட்டம்,' திமுகவை தன் பரம எதிரியாகத்தான் கருதும். அதையெல்லாம் விட அதில் அம்மையார் துர்கா ஸ்டாலின் குறித்து ஜெகத்ரட்சகன் கூறியிப்பது பொய் என்றால் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மை என்றால் திமுக தன்மீது தானே நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். எல்லாவற்றுக்கும் மேல் ஒன்றை திமுகவும், அதன் செயல்தலைவரும் புரிந்துகொள்ள வேண்டும். திமுகவுக்கு எதிராக இவ்வளவு ஊடகத்திரிபுகள், பிரச்சாரங்கள், வன்மங்கள் விரவிக்கிடக்கும்போதும் பெரும்புயலில் மரத்தைத் தாங்கும் வேரைப் போல சில கொள்கையாளர்கள் திமுகவைத் தாங்குவது அதில் இன்னமும் இருப்பதாக அவர்கள் நம்பும் கொள்கை எனும் ஒளிக்கீற்றால் தான். அந்த ஒளிக்கீற்றை ஜெகத்ரட்சகன்களைப் போன்ற காரிருள் மறைப்பதை திமுக தலைமை வேடிக்கை பார்த்தால், அவ்விருளில் அதன் பங்கும் உண்டென்றே கருத வேண்டியிருக்கும். திமுக என்பது கொம்பு. அந்தக் கொம்பு, வாக்கரசியல் சமரசங்களையெல்லாம் தாண்டியும் இன்றும் கூராக இருக்கக் காரணம், அதைக் கண்டு எதிரிகள் பயப்படக் காரணம், அவ்வப்போது கொள்கை எனும் பாறையில் அது தன்னை பட்டைத்தீட்டிக் கொள்வதால்தான். பாறையை சுக்கலாக உடைத்துவிட்டு ,"திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது," என வசனம் பேசுவதால் யாதொரு நன்மையும் இல்லை.

சுபவீ - பாண்டே நேர்காணல் : அடிவாங்குவதற்கு தமிழிசை ஆனால் அதிகாரத்துக்கு நிர்மலா, குருமுர்த்தி, எச்.ராஜா ...

Ravi Raj :சுபவீ. அவர்களுடன் தந்தி டீவி. பாண்டே ஒரு நேர்காணல் செய்தார்
சாம்பிள்களை மட்டும் படியுங்கள்
 பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே?
அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தியும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி ...
பாண்டே - ஙே...! ஙே...!! ஙே...!!!
"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இடையிலான பிரச்சினை."
பாண்டே : உங்களைப் போன்றவர்கள் #இந்து மதத்தை எதிர்ப்பது போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???

திங்கள், 22 ஜனவரி, 2018

ஏமாற்றம் அளிக்கும் எதிர் கட்சிகள்:... இதுவரை கண்டிராத கிரிமினல் அரசியல்வாதிகள்

சுவாதி : தேசிய அளவில் எதிர்கட்சிகள் இருக்கா?? இல்லையா? இல்ல எங்கயாது பார்க்'ல உக்காந்துட்டு பக்கோடா, பானிபூரி சாப்பிட்டு இருக்காங்களானு தெரியல!!..
பண மதிப்பிழப்பின் விளைவுகள், தவறான GST, பொருளாதார சீரழிவு, பெட்ரோல், டீசல், காஸ் எல்லாமே வரலாறு காணாத விலையேற்றம், ஊழல், கிரிமினல் அரசியல், பண வீக்கம், GDP வீழ்ச்சி, விவசாயிகள் தற்கொலை, ஏற்றுமதி வீழ்ச்சி, இறக்குமதி வரலாறு காணாத வளர்ச்சி, வேலை வாய்ப்பு குறைவு, நாட்டில் அதிகரித்து வரும் வன்முறை, சிறு, குறு தொழில் வீழ்ச்சி, ஒரு பக்கம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெருவுக்கு வந்து போராட்டம், EVM (Electronic Voting Machine) பிரச்சனை, காஷ்மீர்ல தினசரி பாகிஸ்தான் தாக்குதல், சீனா நம்ம நாட்டு எல்லைக்குள் நுழைந்தாச்சு, மாநில சுயாட்சி ஒழிப்பு, "Media, RBI, SC, EC ,CAG, CBIனு எல்லா தன்னிச்சயான அமைப்பை தன்னோட கைக்குள் மோடி கொண்டு வந்தாச்சு.. இதை மாதிரி நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் மக்களுக்கும், ஜனநாயகத்துக்கு.. இப்போது மக்கள் தான் தனியாக போராட்டிட்டு இருக்காங்க எதிர் கட்சி சப்போர்ட் இல்லாமல்..

சிலோன் மனோகரன் காலமானார் ..பொப்பிசை பாடகரும் நடிகரும் Pop Music Maestro A.E. Manoharan

புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் இலங்கை இந்திய  திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் சென்னையில்  காலமானார். பொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார். குறிப்பாக காஷ்மீர் காதலி படத்தில் பெரிய பாத்திரத்தில் பாடி நடித்திருந்தார். இன்று மாலை 7.30 அளவில் அவர் காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.

http://tamilweek.com/news-features/archives/261Although A.E.Manoharan is famous today as a pop singer few will know that he began his entertainment career by acting in dramas and locally produced films in the ‘50s and early ‘60s. Manoharan’s singing career began in Colombo in 1970 when he sang for Great Friends Enterprises. In 1964 he acted as hero in the 1st Tamil movie produced in Jaffna by Joe Devanand named “Pasa Nila”. Since the he has acted in more than 260 films in five languages. In 1972 he was appointed as a Producer for Dramas in the commercial section of the Sri Lanka Broadcasting Corporation. It was during this time that he started specializing in pop-music and released many labels in Tamil, English and Sinhalese. During this period he also recorded the now popular “Surangani” theme on suriya label. In 1973 he was presented with the Pop Chakravarthi title at a music festival at the open-air stadium in Jaffna.

கலைஞர் வாசந்திக்கு கொடுத்த அசிட் பதில் ... Flashback வாஸந்தி : தேவதாசிகளோடு ஆடல் பாடல்களும் அழிந்து போய்விட்டன !

Shankar A : இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன என்று இந்தியா டுடேவில் ஒரு கட்டுரை எழுதினார்.
கட்டுரையை படித்த திமுக தலைவர் கருணாநிதி, உடனடியாக வாஸந்தியை அழைத்து, தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்.
துடித்துப் போனார் வாஸந்தி. தனக்கு தெரிந்த திமுக தலைவர்களையெல்லாம் அழைத்து, கலைஞர் இப்படி பேசி விட்டார் என்று புகார் கூறினார். மூத்த தலைவர்கள் வாஸந்தியின் வருத்தத்தை கருணாநிதியிடம் தெரிவிக்கவும் அவர், பின்ன என்னய்யா... தேவதாசி முறை வேணுமாம். ஆனா வேற ஒரு குடும்பத்து பெண்கள் தேவதாசியா இருக்கணுமாம். இவுங்க இருக்க மாட்டாங்களாம் என்று கண்டு கொள்ளவேயில்லை.
கருணாநிதியின் விமர்சனத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட வாஸந்தி, சில நாட்களிலேயே, தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து ஒரு சிறுகதை எழுதினார். உடனடியாக கருணாநிதி அவரை அழைத்துப் பாராட்டினார்.
பின்னர், தேவதாசி முறையின் கொடுமைகள் குறித்து, விட்டு விடுதலையாகி என்று ஒரு புதினத்தையே படைத்தார் வாஸந்தி.

கடவுள் மறுப்பை இயக்கங்கள் பேசட்டும் .....? ஆட்சியை கவனியுங்கள் ?

Shalin Maria Lawrence : வலதுசாரிகள் உங்களை விமர்சிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்.நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் கொள்கைகளை பின்பற்றுகிறீர்களா என்பதுதான் அவர்களது கேள்வி.
தோழர் ஸ்டாலின் கடவுள் மறுப்பாளரா இல்லை ஆத்திகரா என்பது விமர்சகர்களின் கவலை இல்லை. அவர் எதுவாக இருக்கிறார் என்பதனை தெளிவாக விளக்க வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஜெயலலிதாவை எடுத்து கொள்ளுவோம்.
அவர் திராவிட கட்சியின் தலைமையில் இருந்தாலும் அவர் ஒரு ஆத்திகராக இருந்தார் ,வெளியிலும் அப்படியே நடந்து கொண்டார்.

வலதுசாரிகள் பலம் பெற்றிருப்பதன் ஒரே காரணம் அவர்கள் கொண்ட கொள்கையில் பிடிப்புடன் இருப்பதுதான். நடிப்பே ஆனாலும் அதை சிரத்தையுடன் continuity மாறாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
ஆனால் இடதுசாரி என்று சொல்கிறவர்கள் கட்சியின் கொள்கை ஒன்று அவர்கள் தனிமனித விருப்பு வெறுப்புகள் வேறு என்று இருக்கும்போது அதை மறைக்காமல் வெளியே காட்டிக்கொள்ளவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

மே 6ஆம் தேதி 'நீட் ' தேர்வு!.. சி பி எஸ் சி பாடத்திட்டதில் மட்டுமே கேள்விகள் ,,,

மின்னம்பலம்: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2018-19ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாடு முழுவதுமுள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.டி.எஸ். பட்டப்படிப்பு இடங்களும் உள்ளன. இவற்றில் சேருவதற்கு "நீட்" எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்திவருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவுமே இந்தத் தேர்வை அறிமுகப்படுத்தியதாகக் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் இதன் கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ. தரத்தில் இருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் ‘நீட்’ தேர்வைச் சந்திப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, நீட் தேர்வைத் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைவரும் கடுமையாக எதிர்த்தனர். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் கடந்த கல்வியாண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது.

வெற்றிவேலு :தினகரன் கட்சியில் சேர மாட்டேன்! தங்கத்தமிழ்செல்வனை தொடர்ந்து ..

தினகரன் கட்சியில் சேர மாட்டேன்!மின்னம்பலம்:  தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதில் சேர மாட்டேன் என்று தங்க.தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலும் கூறியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஒன்றரை கோடி தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களுடன் இருக்கும் காரணத்தால் நாங்கள் பெயரில்லாமல் செயல்பட முடியாது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் அறிவிப்பேன் என்று கூறினார். இதையடுத்து தினகரன் தனிக்கட்சி தொடங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை தினகரன் மறுத்துவிட்டார். இதுகுறித்து பேசிய தங்க. தமிழ்ச்செல்வன், தினகரன் கட்சி ஆரம்பித்தால் அதில் சேரமாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 22) ஜெயலலிதா வீடியோ விவகாரம் தொடர்பான வழக்கில் ஆஜராக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பப்பட்டது.

கீழடி அகழாய்வு பிப்ரவரியில் தொடக்கம்!

கீழடி அகழாய்வு பிப்ரவரியில் தொடக்கம்!மின்னம்பலம்: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டுவரும் ஒரு சங்க கால வசிப்பிடமாகும். இந்த அகழாய்வு மையம் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில், கீழடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையால் இங்கு 3 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் இங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்: மாணவர்கள் எச்சரிக்கை!

மின்னம்பலம்: பொங்கலுக்கு முன் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை, பொங்கலுக்குப் பின் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது எனத் தமிழக மக்கள் பிரச்சினை மேல் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு, ஜனவரி 20 முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் பொதுமக்கள் கட்டண உயர்வை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அமைச்சர்கள் கூறும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்குப் பேருந்துக் கட்டண உயர்வா என்று கேள்வி எழுப்பி, தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜனவரி 22) கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
சென்னையில் கவின் கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை முடித்துக்கொண்டு மனிதச் சங்கிலி மற்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அவர்கள் விடுத்த அறிக்கை வருமாறு:

"பேருந்துக் கட்டண உயர்வால் கூலி வேலை செய்யும் ஏழை மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தீவிர அரசியலில் ஈடுபடப்போறேன்... உதயநிதி ஸ்டாலின் திடீர் அறிவிப்பு

Mayura Akilan : அரசியலில் குதிப்பேன்-உதயநிதி ஸ்டாலின்- வீடியோ சென்னை: சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே அரசியலில் ஈடுபட்டதாகவும், தற்போது தீவிர அரசியலில் ஈடுபடும் நேரம் வந்து விட்டதாகவும் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி, திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஹீரோவாக ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தொடங்கி பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது நிமிர் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின். தனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி பிறந்த நாளின் போது பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஜெ.தீபா கோடிக்கணக்கில் வசூல் .. தன் வீட்டை தானே ஆள்வைத்து இடித்து போலீசில் புகார் செய்த ஜெ.தீபாவின் Full story

தீபாவிகடன் :ஜெ.அன்பரசன்; கே.ஜெரோம் வி.ஶ்ரீனிவாசுலு n :
ஈ.சி.ஆர் ராமச்சந்திரன்“மர்ம நபர்கள் யாரோ சிலர், கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி நள்ளிரவு அன்று என் வீட்டின் மீது கற்களையும் கட்டைகளைக் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தி.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீஸார் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது எதிர்வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் போலீஸார் பார்வையிட்டனர். அதில், தீபாவே தனது ஆள்களைச் செட் செய்து அப்படியொரு சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரியவந்தது. இதனால், காவலர்கள் தீபாவைக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றனர். ஏன், தீபா  இப்படிச் செய்யவேண்டும்? விவரமறிந்தவர்களிடம் பேசினோம்.
“ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் காலடி எடுத்துவைத்த தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்கிற கட்சியை ஆரம்பித்து மக்களைத் தன் பக்கம் இழுத்தார். பிறகு, கொஞ்ச நாள்களில் பணம்தான் இவரின் குறிக்கோளாக இருக்க, தன்னைச் சந்திக்க வந்த தொண்டர்களிடம் நன்கொடை வசூலிப்பது, ‘பொறுப்பு தருகிறேன்' என்று சொல்லி பணம் பறித்திருக்கிறார்.