விகடன் : கடலூர் மாவட்டத்துக்கு வெள்ளத் தடுப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார், தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.இதுகுறித்து அவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள், சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்கள் தூர் வாரியதில் மெகா ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். தொகுதி அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியில் சென்று மழை பாதிப்புகளைப் பார்வையிடாமல், மக்களைச் சந்திக்காமல், கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.





























