திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அதிமுக ..தினகரனின் பேச்சை இனி தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் கேட்கலாம்! .!

எஸ்.கிருபாகரன் டி.டி.வி தினகரன்
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அதிமுக என்கிற அசுரக்கட்சியைப் பலவீனப்படுத்த தினகரன் தலைமையில் அதிகாரப் பூர்வமாக 3 வது அணி உருவாகிவிட்டது. கருணாநிதி என்ற பலம் வாய்ந்த தலைவரை பகைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் 1972 ம் ஆண்டு துவக்கிய கட்சி அதிமுக. ரத்தச்சிவப்பிலான சைரன் பொருத்தப்பட்ட காரில் அமைச்சர்கள் இன்று பந்தாவாக வலம்வர அன்று தங்கள் சொந்த ரத்தத்தையே இழந்தவர்கள் பலர். கட்சியைத் துவக்கிய 6 மாதங்களில் திண்டுக்கல் பாராளுமன்றத்தேர்தல் வெற்றி, அடுத்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரியணை என மக்களின் அபிமானத்தால் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்தார் எம்.ஜி.ஆர். இறக்கும்வரை அவர் முதல்வராகவே இருந்து மறைந்தார்.> எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில் ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் இருவருக்கிடையே கட்சியில் உருவான  பூசல், அவரது மறைவுக்குப்பின் உச்சகட்டத்திற்குப் போனது. இதனால் எம்.ஜி.ஆர் மறைந்து ஒரு மாதத்திற்குள் அதிகாரத்தை இழந்தது அக்கட்சி.  பூசலின் உச்சகட்டமாக ஜெயலலிதா மற்றும் ஜானகி தலைமையில் இரு அணிகளாக கட்சி உடைந்தது. அடுத்துவந்த தேர்தல் முடிவுகள் ஜானகியிடம் மனமாற்றத்தினை ஏற்படுத்த கட்சியை கவுரவமாக ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு ராமாவரம் தோட்டத்திற்குள் தன்னை முடக்கிக்கொண்டார். ஜெயலலிதாவின் கையில் ஒருங்கிணைந்த அதிமுக வந்தபின் எம்.ஜி.ஆரைவிடவும் சர்வாதிகாரமான போக்கை அவர் கையாண்டார். கட்சியில் யார் வளர்வதையும் அவர் விரும்பவில்லை. வளர்ந்தவர்களை தட்டிவைத்தார். தளர்ந்தவர்களை தட்டிக்கொடுத்தார். யாரும் அதிகார மையமாக உருவாவதை அவர் தடுத்தபடியே இருந்தார்.

டாக்டர் .சுபாஷினி :இவ்வளவு கேவலமாகக் கூட மனிதர்கள் நடந்து கொள்வார்களா?


டாக்டர் சுபாஷினி .(.தமிழ் மரபு அறக்கட்டளை)  கடந்த வாரம் பேஸ்புக் பக்கத்தில் பலர் பகிர்ந்து கொண்ட ஒரு வீடியோ..., காதலர்களை நிர்வாணமாக்கி அவர்களைத் துன்புறுத்தி சாலையில் நடக்க வைத்து ஒரு கிராமமே கோஷமிட்டுக் கொண்டு செல்லும் அக்காட்சி. அது மனதை மிக வேதனைப்படுத்தியது. சிலர் அது பொய்யான தகவல் என்றும், சிலர் அதனைக் கிராமத்து வழக்க தண்டனை என்றும் சிலர் அது கள்ளக் காதலில் ஈடுபட்டதால் கொடுக்கப்பட்டது என்றும், சிலர் அது சாதியைக் காரணம் காட்டி கொடுத்த தண்டனை என்றும் பல செய்திகள் வந்திருந்தன.
நான் வாசித்த ஒரு செய்தி அக்கொடுமையைச் செய்தவர்களைக் காவலதிகாரிகள் பிடித்து விட்டார்கள் என்று தகவல் அளிக்கின்றது.
ஜெய்ப்பூரில் ஒரு கிராமத்தில் அந்தப் பெண்ணுக்குப் பிடிக்காமலேயே அவள் அப்பா 80,000 ரூபாய் வாங்கிக்கொண்டு இவ்வாண்டு ஏப்ரல் 17 திருமணம் செய்து கொடுத்திருக்கின்றார். அடுத்த நாளே அந்தக் கிராமத்து இளைஞன் அவளை மீட்டு வந்திருக்கின்றான். அதற்கு அவர்கள் இருவரையும் கிராமத்தார் நிர்வாணமாக்கி, கொடுமைப்படுத்தி அவமானப்படுத்தியிருக்கின்றார்கள்.

தன் பெருமை சாதியில் இருப்பதாக நம்பும் அறிவீனம் .. சேலத்தில் நால்வர் தற்கொலை.

Ganesh Babu :கேள்வி:: சேலத்தில் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குப் பேர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்களே?
பதில்: (முழுவதும் படிக்கவும்)
இந்தச் செய்தியை இந்திய துணைகண்டத்திற்கு வெளியே பிறந்து வளர்ந்த ஒருவரிடம் சொன்னால், அவரால் இதைப் புரிந்துக்கொள்ளவேமுடியாது. ஆனால் நமக்கு இத்தகைய செய்திகள் புதிதில்லை.
நம் நாட்டில் காதலுக்கான எதிர்விணை பொதுவாக மூன்று வகைப்படும்.
1.காதலர்களை கொன்றுவிடுவது.
2.காதலித்தவர்களின் பெற்றோர் தற்கொலை செய்துக்கொள்வது.
3.கொலை, தற்கொலை இரண்டும் செய்வது.
இதெல்லாம் நடக்காத வீட்டில்கூட குறைந்தப்பட்சம் பெற்றோர் விடுக்கும் 'தற்கொலை மிரட்டல்' என்ற கொடூரமான மனஅழுத்தத்தையாவது ஏறக்குறைய எல்லாக் காதல் ஜோடியும் ஏற்றுத்தான் ஆகவேண்டுமென்பது இங்குள்ள நிலைமை.
இதனாலேயே இந்த முட்டாள் நாட்டில், "காதல் விவகாரம்: இருவர் வெட்டிக்கொலை" போன்ற நகைமுரணான(irony) செய்தித் தலைப்புகள்கூட நமக்குப் பழகிவிட்டன. 'காதலுக்கும், கொலைக்கும் என்னடா சம்பந்தம்?' என்று கேட்பார் எவருமில்லை.
பிள்ளைகளின் காதல் என்ற இயற்கையின் இயல்பான கேள்விக்கு, கொலை முதல் தற்கொலை வரை எல்லாவிதமான அசாத்தியமான, அநியாயமான பதில்களையும் கொடுக்கவே பெற்றோர் அணியமாக இருப்பதன் உளவியல் பின்னணியை நாம் புரிந்துக்கொள்வது அவசியம்.

நட்பை விட மனிதம் மேலானது? ஒருபாலீர்ப்பாளர்கள் ,விவாகரத்து ஆனவர்கள், திருநங்கைகள் ....

Shalin Maria Lawrence : விவாகரத்து ஆனவர்கள் , திருநங்கைகள் ,ஓரின சேர்க்கையாளர்கள் , முற்போக்கானவர்கள் , உண்மை பெண்ணியவாதிகள் , பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களை கேட்டு பார்த்தால் நட்பின் இன்னொரு கோரமுகத்தை பற்றி அப்படி விவரிப்பார்கள் . சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் , நிராகரிக்கப்பட்டவர்கள் , சமுதாயம் இரக்கம் காட்ட மறுக்கும் மனிதர்களுக்கு நட்பிலக்கணம் பலநேரங்களில் பல்லிளித்துவிடும் .
அதையும் தாண்டி மேற்சொன்னவர்களிடம் நட்புபாராட்டப்ட்டுகிறதென்றால் , அவர்களோடு கொண்டாட்டங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறதென்றால் , அவர்களிடம் சுபநிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்கள் இருக்கிறதென்றால் , அவர்களின் தனிமைநேரங்களின் குமுறல்களை கேட்டுக்கொள்ள காதுகள் இருக்கிறதென்றால் , பொதுஇடங்களில் அவர்களின் தோள்மேல் ஒரு அன்பின் கரம் போர்த்தி இருக்கிறதென்றால் அது நட்பு என்கிற புனைபெயரில் இயங்கும் "மனிதம்" தான் .

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

மோடியோடு மோதலுக்கு தயாரான தினகரன் ... தினகரன் கையில்தான் VETO ?

tamil.oneindia.com  ஆர். மணி: அஇஅதிமுக வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி விட்டார். இதன் மூலம் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கும் அஇஅதிமுக தற்போது மூன்று அணிகளாக பிரிந்து போனது.
சசிகலா பிப்ரவரி 15 ம் தேதி பெங்களூர் பரப்பனஹாரா சிறைக்கு போவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் நியமித்தவர்தான் கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அஇஅதிமுக வின் சசிகலா பிரிவின் சார்பில் போட்டியிட்டார் டிடிவி தினகரன். இந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் கட்சியின் முன்னாள் அவைத் தலைவர் ஈ. மதுசூதனன் போட்டியிட்டார். இரண்டு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம், கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்குத் தான் என்று மனு செய்திருந்தன.
இந்த கட்டத்தில்தான் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத் தான் ஒதுக்க வேண்டும் என்று கூறி, அதற்காக தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயற்சி செய்ததாக குற்றஞ் சாட்டி டில்லி போலீஸ் அவரை கைது செய்தது. தேர்தல் ஆணையமும் ஆர்.கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்தது.
ஏப்ரல் 25 ம் தேதி கைதான டிடிவி தினகரனுக்கு டில்லி நீதிமன்றம் ஜூன் 1 ம் தேதி ஜாமீன் வழங்கியது. இரண்டு மாதங்கள் அமைதி காத்த டிடிவி தினகரன் வெள்ளிக் கிழமை, ஆகஸ்ட் 4-ம் தேதி பேசத் துவங்கி விட்டார்.
சென்னை பெசண்ட் நகரில் 4-ம் தேதி மாலை செய்தியாளர்களிடம் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அவருடைய பேட்டியின் முக்கியமான மூன்று விஷயங்கள் இவைதான்;

ஜெர்மனிக்கு செல்பவர்கள் கவனம் .... ஆர் எஸ் எஸ் / நாசி பாணி வணக்கங்கள் வேடிக்கைகாக செய்தாலும் கடும் தண்டனை!

subashini.thf: ஜெர்மனிக்குச் சுற்றிப் பார்க்க வரும்
மக்களே.. உங்கள் கவனத்திற்கு..
பெர்லின் போகும் போதோ அல்லது வேறெங்காவது அரச அலுவலகங்களின் முன் நின்று செய்யக்கூடாத ஒரு வேலை என்னவென்றால் ஹிட்லர் ஸ்டைலில் சல்யூட்டை செய்து காட்டுவது. படம் பிடித்துக் கொள்வதற்காக செய்தேன் எனச் சொன்னாலும் தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும். அண்மையில் இரண்டு சீனச் சுற்றுப் பயணிகள் பெர்லினுக்குச் சென்று பார்லிமண்ட் முன் நின்று கொண்டு ஹிட்லர் மாதிரி சல்யூட் வைத்து படம் பிடித்திருக்கின்றனர். அவர்களைப் போலீசார் கைது செய்து அபராதமாக ஒருவருக்கு 500 யூரோ எனத் தீட்டிவிட்டார்கள். ஆக.. படம் பிடிக்கும் போது சிரித்துக் கொண்டு நின்றோ அமர்ந்தோ சாய்ந்தோ எடுத்துக் கொள்ளுங்கள். ஹிட்லர் போஸ் எல்லாம் வேண்டாம்.. பத்திரம்.. பத்திரம்.
ஆனாலும் இந்தச் சீன, ஜப்பானிய சுற்றுப் பயணிகள் செய்யும் பல காரியஙக்ள் கோமாளித்தனத்திற்கு மேல் கோமாளித்தனமாகத்தான் இருக்கின்றது !!:-)
குறிப்பு: நாசி ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதன் சித்தாந்தங்களை வெளிப்படுத்தும் குறியீடுகளை பொது வெளியில் பயன்படுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகக் கருதப்படும்.

Kumaraguruparan Ramakrishnan ஜெர்மன் அரசின் எச்சரிக்கை உணர்வு பாராட்டத்தக்கது... ஆனால், இந்தியாவில் ஹிட்லர்தாசர்கள் தற்போது பெருகி வருவது ஆபத்தானது.

காதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!

காதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை!
சேலம் அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்ட காரணமாக அவரது குடும்பத்தினர் நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன்(50) என்பவர் தனது மனைவி ராணியின்(45) சொந்த ஊரான தாண்டானூரில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மோகனா (21), ஆர்த்தி(19) ஆகிய மகள்களும், நவீன்குமர் (15) என்ற மகனும் இருந்தனர். இவரது மூத்த மகள் மோகனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காகப் பயிற்சி வகுப்பிற்குச் சென்று வந்தார். ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மோகனாவுக்கும் பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி ... அமைச்சர் வேலுமணி கண்டனம்!

அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அது உறுதியாக நடக்காது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் அதிமுக மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு விடுத்த கெடு முடிந்த நிலையில் தினகரன், அதிரடியாக புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று பெரம்பலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “அதிமுக ஆட்சியை வீழ்த்த நினைத்தால், வீழ்ந்து போவார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் இன்று (ஆகஸ்ட் 6) நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, அங்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

தினகரன் அளித்த பொறுப்பை ஏற்கிறேன் : கதிர்காமு எம்.எல்.ஏ!

பொறுப்பை ஏற்கிறேன் : கதிர்காமு எம்.எல்.ஏ!
தினகரன் அளித்த மருத்துவரணி இணைச் செயலாளர் பதவியை ஏற்க மறுத்த எம்.எல்.ஏ கதிர்காமு, தற்போது பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இரு அணிகளையும் இணைக்க அமைச்சர்களுக்கு, தினகரன் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். கெடு முடிந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். இதில் 19 எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்கள்,' பொதுச்செயலாளர் நியமனமே தேர்தல் ஆணையத்தால் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, அப்படி இருக்க துணைப் பொதுச்செயலாளர் பதவியும் கேள்விக்குறிதான். அவர் நியமித்த புதிய நிர்வாகிகளின் பதவியும் கேள்விக்குறிதான். இதன் மூலம் தினகரன் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்' என்று தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ இந்தி அகற்றப்படுகிறது!


இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துக்கு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. 80 ஆண்டுகள் இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டின் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படாது; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1937ஆம் ஆண்டில் இந்தி மொழி கட்டாயம் என்று பிரிட்டிஷ் இந்திய ஆட்சியாளர்கள் அறிவித்தபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள்தான். 1937 - 38, 1963 - 65 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்கள்தான் மிகப்பெரிய போராட்டங்களாக இருந்தன. இந்தப் போராட்டங்களின் விளைவால்தான் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.

இசட் பிரிவு பாதுக்காப்பு வேண்டி பன்னீர்செல்வம் நாடகம்.. கத்தியோடு வந்த அதிமுக சோலைராஜன்!

திருச்சி விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியுடன் தாக்க முயன்றதாக கூறி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்திலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடேயும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். ஆதரவாளரின் ஒருவரின் இடுப்பில் இருந்து கத்தி கீழே விழுந்துள்ளது. அதை அவர் குனிந்து எடுக்கும்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் பாதுகாவலர் அதனை பார்த்ததும், அவரை தனியே அழைத்து கத்தியை பிடிங்கி விசாரணை நடத்தினார். அப்போது உடனடியாக ஓ.பன்னீர்செல்வத்தை கத்தியால் தாக்க முயற்சி என செய்திகள் பரவத் தொடங்கின.  அதிமுக தொண்டர்கள் கத்தி வைத்திருக்க வேண்டும் என்று முன்பு எம்ஜியார் அறிவித்ததை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கும் இவர்  உண்மையான ரத்தத்தின் ரத்தம்தான்?

கேரளாவில் ஆட்சி கலைக்கப்படுமா? - ஜெட்லியின் திருவனந்தபுரம் பயணம் ..... இந்து பத்திரிகை!

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழிர்கள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்துவருதால் ஜேட்லியின் வருகை கேரளாவில் சிபிஐ எம் ஆட்சி கலைக்கப்படுமா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர். இதன் பின்னணியில் சிபிஐ (எம்) இருப்பதாக பாஜக கருதுகிறது.
தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவரும் கேரள அரசியல் சூழ்நிலையை நேரில் கண்டறியும் பொருட்டு மத்திய அமைச்சர் ஜேட்லி ஒரு சிறப்பு விமானம் மூலம் திருவனந்தபுரத்தில் வந்து சேர்ந்தார். இன்று ஆர்எஸ்எஸ் ஊழியர்களை சந்தித்து ஆய்வு நடத்திவருகிறார்.
ராஜேஷ் குடும்பத்தினருடன் சந்திப்பு
இந்த சந்திப்பின் போது, ராஜேஷ் மற்றும் அவரது வயதான பெற்றோரின் மூன்று வயது மகன் ஜேட்லி பேசினார்.
திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகிரியில் கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷின் வீட்டுக்குச் சென்றார். அங்குள்ள அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தார். அவரது 3 வயது மகன் மற்றும் ராஜேஷின் வயதான பெற்றோரையும் சந்தித்துப் பேசினார்.
ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் மீது சிபிஐ (எம்) கட்சிக்காரர்கள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக எழும் குற்றச்சாட்டுக்களை தேசிய அளவில் கவனிக்கப்படுவதற்கான ஒரு முயற்சியாகவும் ஜேட்லியின் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

சென்னையில் கொள்ளை¦டெல்லியில் சொகுசு வாழ்க்கை

சென்னை, ஆக.6:டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து சென்னையில் 23 இடங்களில் பெண்களிடம் செயின் பறித்து விட்டு டெல்லியில் அடுக்குமாடி இல்லத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கைதான இருவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காவல்துறை இணை ஆணையர் மனோகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 50 சவரன் நகைகள் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்கள் வடமாநில வாலிபர்கள் போன்ற தோற்றத்தில் இருந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் சிலர் ஒரே மோட்டார் சைக்கிளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலீசுக்கு தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.

புதிய தமிழகம் பாஜக கூட்டணி திவ்யாவுக்கு எதிராக போர்க்கொடி! கிருஷ்ணசாமியின் முகமூடி கிழிந்தது!

divya bharathiகீற்று :கக்கூஸ் என்ற ஆவணப்படத்தை எடுத்து சாதியத்தின் முகத்திரையைக் கிழித்த தோழர் திவ்யபாரதிக்கு பிஜேபி மற்றும் புதிய தமிழகத்தைச் சேர்ந்த காலிகள் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எப்பொழுதெல்லாம் தங்களின் இருத்தலுக்கு ஆபத்து வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் தங்களின் இருத்தலுக்கு வேட்டு வைக்க நினைக்கும் நபர்களை கடித்துக் குதறுவது பார்ப்பனர்களின் வேலை. ஆனால் இந்த முறை இதில் பள்ளர் சாதியை பிரநிதித்துவப் படுத்துவதாய் சொல்லிக் கொள்ளும் புதிய தமிழகமும் இடம் பெற்றிருப்பது, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கூட்டத்திற்கு மிக நம்பிக்கையான ஒரு கைக்கூலி கிடைத்துவிட்டது என்பதைத்தான் காட்டுகின்றது.

திவ்யாவுக்கு கொலை மிரட்டல் ..படைப்பாளிகளுக்கு எதிரான புது ஆயுதம் ! மின்னம்பலம்

சண்டே சர்ச்சை: படைப்பாளிகளுக்கு எதிரான புது ஆயுதம் ‘கொலைமிரட்டல்’!
நவீன யுகத்தில் கல்வி, தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுபவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறது நம் நாடு. இதற்காக நாம் ஒருமுறை கைதட்டிக் கொள்ளலாம். அடுத்து...
நம்நாட்டில்,  இந்த 21ஆம் நூற்றாண்டிலும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தொடர்ந்துவருவதை தட்டுவதற்கு யாரிடமிருந்து கையைக் கடன்வாங்குவது? அந்த மனிதர்களிடம் கைகுலுக்கவும் தயாராக இல்லாத இந்த சமூகத்தில் அவர்களது வலியைப்பற்றி யார் பேசுவது. பதிவாவது செய்துவைக்கவேண்டுமல்லவா? அதைத்தான் மதுரையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் திவ்யா, “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.

பிரியாமணி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தொடர்... இன்டர்நெட் மூலம் மட்டுமே வெளியிடப்படும்

மின்னம்பலம் : தமிழில் மெல்ல மெல்ல வெப் சீரிஸ் ஃபீவர் பரவ ஆரம்பித்துவிட்டது. இயக்குநர் பாலாஜி மோகன் வெளியிட்ட As I am suffering from Kaadhal-க்குக் கிடைத்த வரவேற்பு திரைப்படத்துறையில் உள்ள முக்கியமான கதாநாயகர்கள், கதாநாயகிகளைக்கூட இந்தப் பக்கம் இழுத்து வந்துள்ளது. தமிழ் சினிமா கதாநாயகிகளில் அழகை விட நடிப்பால் அதிகம் பேசப்பட்டவர்களின் பட்டியல் அவ்வளவு நீளமானதல்ல. குறிப்பிட்ட சில நடிகைகள்தான் இந்த ஒரு காரணத்துக்காக அதிகம் பேசப்பட்டவர்கள். அதில் சமீபத்தில் சேர்ந்தாலும் அழுத்தமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை போன்ற பல படங்களில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கும் சற்று முன்னால் எந்த நடிகை நடிப்புக்காக அதிகம் பேசப்பட்டவர் என்றால் சந்தேகமே இல்லாமல் கூறலாம் ‘பருத்தி வீரன்’ புகழ் பிரியாமணிதான் என்று. தமிழ் சினிமாவின் முக்கியமான இந்த இரு கதாநாயகிகளும் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ்தான் G-spot.

அதிமுக இணைப்பு ஏன் தோல்வி ? ஒரு கமிஷன் ஏஜென்சியின் வரலாறு ...

மின்னம்பலம் :சிறப்புக் கட்டுரை: அதிமுக இணைப்பு ஏன் தோல்வியில் முடிகிறது?"  அதிகார யுத்தம் எப்போது முடிவுக்கு வருமென்பதுதான் இப்போது எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் கேள்வி. ஏனென்றால் தமிழகத்தின் வலுவான கட்சி, அதைவிட முக்கியமாக தமிழகத்தை ஆளுங்கட்சி கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக குழம்பி கிடக்கிறது. அந்தக் குழப்பம் கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும் கடந்து, பொது மக்களையும் குழப்பமடைய வைத்துள்ளது. இதனால் அரசின் கொள்கை முடிவுகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
பன்னீர்செல்வத்தின் கடற்கரை தியானம், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம், எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவி, சசிகலாவின் சிறை, டி.டி.வி. தினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனம், இரட்டை இலை முடக்கம் என ஏகப்பட்ட உட்கட்சி பிரச்னைக்கு இடையில் தீபாவும் தன்னை இந்த குழப்பத்தில் இணைத்து கொண்டார். இவ்வளவு குழப்பங்களையும் தாண்டி இன்று அதிமுக மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த அணிகள் இணையுமா?அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? இந்த அணிகளை சேர்க்கபோகும் அந்த ஆளுமை யார்? இணைந்த பிறகு கட்சியை யார் வழிநடத்த போகிறார்கள்? என்பன போன்ற எண்ணற்ற கேள்விகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன..

ஓவியா தற்கொலை .. டி ஆர் பி எகிறிடுச்சா? கவண் படம் இன்னும் பார்க்கலையா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகை ஓவியா காதல் தோல்வியால் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்துகொண்டுள்ளதால் அந்த நிகழ்ச்சியின் புகழ் அசுர வளர்ச்சியில் உள்ளது. நிகழ்ச்சிக்கு உள்ள புகழை விட ஓவியாவுக்கு தற்போது உள்ள புகழ் அதிகமே. அந்த அளவுக்கு ஓவியா மீது அன்பு மழை பொழிந்து, ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் நடிகை ஓவியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் கடந்த சில தினங்களாக பலரையும் எரிச்சலடைய வைத்துள்ளது. ஓவியாவின் காதலை ஏற்காத ஆரவ் அவரை புறக்கணித்து வருகிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ள ஓவியா அரக்கத்தனமாக நடந்து வருகிறார்.

ஜெயக்குமார் : தினகரன் சசிகலாவை நம்பி நாங்க இல்லை. ,, கூவத்தூர் பேமென்ட் இவரோடதாய்ன்?

சசிகலா, தினகரனைச் சார்ந்து நாங்கள் இல்லை என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன் நிர்வாகிகளை நியமித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. எனவே அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது.
ஆனால், தினகரன் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகளின் நியமனம் கேள்விக்குறியாகவே உள்ளது. நாங்கள் சசிகலா, தினகரனைச் சார்ந்து இல்லை என்கிற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம்'' என்றார்.
முன்னதாக, அதிமுக கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த டிடிவி தினகரன் ஆக்ஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார்.

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

இந்த ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்கள், வீழ்ந்து போவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் விழா கொண்டாடப்பட்டது. அந்த வரிசையில் பெரம்பலூரில் நேற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர். உருவ படத்தையும், புகைப்பட கண்காட்சியையும் திறந்து வைத்தார். பின்னர் அவர் ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் பெண் எம்.ஜி.ஆராக மக்கள் மனதில் இடம் பிடித்து எவ்வளவோ திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தினார்.

அமைச்சர் உதயகுமார் :புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பால் குழப்பம்

udayakumar
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை ஆர்.பி.உதயகுமார் கூறியது:
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகளாக 18 பேர் அமைப்புச் செயலர்கள், 8 பேர் ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தினகரன் அறிவித்துள்ளார். இத்தகைய புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கட்சியின் நடைமுறையில் இல்லாதது. அதிமுக பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்தபோது, புதிய நிர்வாகிகள் நியமிக்கும்போது அந்தந்த மாவட்ட ச் செயலர்கள், சார்பு அணிகளின் செயலர்களின் பரிந்துரையை ஏற்று அதை விசாரித்து உரிய நபர்களை நியமனம் செய்வார். இவ்வாறு அறிவிக்கும்போது மாவட்டச் செயலர்கள், சார்பு அணிகளின் செயலர்களுடன் நிர்வாகிகள் இணைந்து கட்சிப் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருக்கும்.

சித்தராமையாவுக்கு ஸ்டாலின் : கர்நாடக சமத்துவ மாநாட்டு தீர்மானங்கள் சில திமுகவால் ஏற்கனவே நிறைவேற்றபட்டவை


பெங்களூரு பிரகடனம் வழங்கிய சில பரிந்துரைகளை ஏற்கனவே தமிழகத்தில் தி.மு.க. நிறைவேற்றி இருக்கிறது என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது:–31–7–2017 தேதியிட்ட தங்களுடைய கடிதம் கிடைக்கப்பெற்றது. ‘சமத்துவத்திற்கான தேடல்’ என்ற உன்னத நோக்கத்தோடு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியமைக்காக என்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூலை மாதம் 21 மற்றும் 23–ந் தேதிகளில் நடைபெற்ற அம்பேத்கர் சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெங்களூரு பிரகடனத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தேன். அரசியலமைப்பு சட்டத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படை அம்சங்களை உளமாற தொடர்ந்து பாதுகாக்கவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான தூண்களை மேலும் வலுப்படுத்தவும் அம்பேத்கரின் சிந்தனைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நான் கருதுகிறேன்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா பொன்.ராதாகிருஷ்ணனனை மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக வீடியோ

Veera Kumar Oneindia Tamil டெல்லி: குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்து வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டி கட்டிய ஒரு தென் மாநிலத்துக்காரர் குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையளிப்பதாக பாஜக தமிழக பிரிவு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம் தெரிவித்துள்ள நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் அவமரியாதை செய்யப்பட்டுள்ளார். Pon RadhaKrishnan who was insulted by Venkaiah Naidu?

இலுமினாட்டி நடராசன் ! ராஜிவின் ரத்தத்தில் ஜெயா ஆட்சியை நிறுவிய சசிகலாவின் கணவன்!

இந்திய ஈழ நட்புறவு மையம்" என ஈழ கோஷ்டிகள் ஒன்றை தொடங்கியிருக்கின்றன, இதன் மையமாக இருப்பவர் யார் தெரியுமா? மா.நடராசன்
அதாவது எம்ஜிஆருக்கு பின் ஜெயாவின் ஒவ்வொரு முடிவினையும் எடுத்த நடராசன். இலங்கையில் அமைதிபடை சண்டையிடும் பொழுது ராஜீவிற்கு ஆதரவளித்து, திமுக ஆட்சியினை கலைக்க சொல்லி அழுத்தம் கொடுத்த அந்த நடராசன்
ஆம் அன்று திமுக அமைதிபடையினை கண்டித்து அதனை வெளியேற்ற சொல்லிகொண்டிருந்தது, ஆனால் நடராசனின் அதிமுக கொஞ்சமும் அக்கவலையின்றி ராஜிவிடம் உங்களுக்கு ஆதரவு, கலைஞரை விரட்டுங்கள் என சொல்லிகொண்டே இருந்தது
புலிகளை கலைஞர் வளர்க்கின்றார், அது பத்மநாபா கொலைவரை சென்றது என சொல்லி அவர் ஆட்சியினை கலைக்க சொன்னதே இந்த நடராசன் தான், அந்த ஆதாரங்களை இவர்கள் தான் கொடுத்தார்கள்
அவ்வளவிற்கு ராஜிவிற்கும் இவர்களுக்கும் உறவு இருந்தது
அதில் ஈழமக்களுக்கு நன்மை எதுவும் இவர்கள் செய்யவில்லை, மாறாக புலிகளுக்கும் நன்மை செய்யவில்லை எல்லாம் சுயநலம்..
அமைதிபடை நடவடிக்கையினை எம்ஜிஆர் கண்டிக்க முடியாமலே இறந்தார். நடராஜனும் ஜெயாவும் ராஜிவிடம் காவல் கிடந்தார்கள், புலிகளும் இந்திய ராணுவமும் செத்துகொண்டே இருக்க ஈழ மக்கள் பாதிக்கபட்டுகொண்டே இருக்க கலைஞரின் குரல் மட்டுமே ஓங்கி ஒலித்தது
அந்த குரலை நிறுத்துங்கள் , அவர் ஆட்சியினை கலையுங்கள் என ராஜ்விடம் குனிந்து நின்றவர்கள்தான் ஜெயலலிதாவும் நடராசனும்.
இங்கு நான் மொழிப்போர் தியாகி என நடித்துகொண்டே, ராஜிவிடம் வேறு ஆட்டம் ஆடினார் நடராசன், அதாவது எல்லோருக்கும் நல்லவராக தன்னை காட்டிகொண்டார்.

150 வருடங்களில் வீழ்ச்சிப்போக்கை நோக்கிச் செல்லும் தேயிலை - திலகராஜ் மலையக எம் பி

namathumalayagam.com: இலங்கையில் தேயிலை உற்பத்தி முதல் ஏற்றுமதி வரையான செயன் முறையில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய சுருக்கமான பார்வையினூடாக தேயிலைத் தொழில் துறையானது எவ்வாறு நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவுக்கு அறிந்துக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. இலங்கையில் 150 வருடகால தேயிலை உற்பத்திக் கைத்தொழிலின் பின்னணியிலேயே ரயில் போக்குவரத்து, வங்கித்துறை, பங்குசந்தை வரையான பல்வேறு பொருளாதார அம்சங்கள் வலுப்பறெத் தொடங்கின எனும் விடயத்தை  கடந்த அத்தியாங்களில் பார்த்தோம். தொழிற்படை அடிப்படையில் அதிகளவான சனத்தொகையை ஒரே துறையில் கொண்டிருந்த துறையாகவும் தேயிலையே காணப்பட்டது. இந்த நூற்றியைம்பது கால வரலாற்றில்  தேயிலைத் தொழில் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என்பதற்கு அப்பால் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது என்பதுதான் இன்றைய போக்காகக் காணப்படுகின்றது. அதேநேரம் இதே பெருந்தோட்டத் துறைக்குள் கடந்த பத்தாண்டுகளில் புதிதாக ஒரு தொழில் துறையாக உள்நுழைந்ததே முள்ளுத்தேங்காய்  (Palm Oil) கைத்தொழில். முள்ளுத் தேங்காய்த் தலையங்கத்துடன் தொடராக வெளிவரும் இந்த கட்டுரைகளில் முள்ளுத்தேங்காய்  தவிர்ந்த பெருந்தோட்டத் துறையில் பயிரிடப்படும் ஏனைய விடயங்கள் உரையாடப்பட்டு வந்ததே எவ்வாறு பெருந்தோட்டத்துறையில் ஏற்பட்டுவந்த, ஏற்பட்டுவரும் மாற்றங்கள் அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்திலும் எதிர்காலத்திலும் தாக்கத்தை செலுத்தப்போகின்றது என்பதற்கான ஒரு  முன்னோட்டமாகத்தான்.