வியாழன், 6 ஜூலை, 2017

“2ஜி வழக்கில் வரும் தீர்ப்பு தமிழகத்துக்கே நல்ல செய்தியாக இருக்கும்.... எச்ச .ராஜா

மின்னம்பலம் :இந்திய அரசியல் வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி
அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கில் வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா பதவி வகித்தார். அப்போது தொலைத் தொடர்பு உரிமமான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்குத் தணிக்கை குழுவின் அறிக்கையில் சொல்லப்பட, அது பூதாகரமாக வெடித்தது.
2009இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதன் விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த வழக்கை நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வருகிறார்.

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.. மனுஷ்ய புத்திரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியொன்றில்
நான் நுழைந்து
மூன்று வருடங்கள்
கழிந்து விட்டன
எண்ணற்ற மர்ம சம்பவங்கள்
இந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கின்றன
எல்லாவற்றையும்
பிக் பாஸ் கண்காணிக்கிறார்
அதன் எடிட் செய்யப்பட்ட
சில வினோதங்களை
நீங்களும் காண்கிறீர்கள்
பிக் பாஸிற்கு
தெரியாதது என்று ஒன்றுமில்லை
நான் ஒரு காண்டம் வாங்கினாலும்
அது பிக் பாஸிற்கு தெரிந்துதான்
வாங்க வேண்டும்
எனது கிரெடிட் கார்ட் எண்
என் ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்டிருக்கிறது
அதில் என் விழிப்படலத்தின் ரேகைகள்
பதியப்பட்டிருக்கின்றன

புதுவையில் பாஜகவை பின்கதவால் நுழைத்த ஆளுநர் கிரண் பேடி

Gajalakshmi சென்னை : புதுவை சட்டப்பேரவைக்கு 3 நியமன உறுப்பினர்கள்
நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ளலாம். ஆனால் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டுக்கு மேலாகியும் அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை. இதைத்தொடர்ந்து நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு மத்திய அரசின் இந்த நடவடிக்கை புதுச்சேரி ஆளும் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தினகரனை அவமானப்படுத்திய குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்


விரைவில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் மூன்று
அணிகளும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் சென்னை வந்து அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களை சந்தித்தார். அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி என மூன்றாக பிரிந்திருந்தாலும் பாஜக தரப்பு ஜனாதிபதி தேர்தலில் எடப்பாடி அணி மற்றும் ஓபிஎஸ் அணியிடம் மட்டும் தான் ஆதரவு கேட்டது. தினகரன் தரப்பை புறக்கணித்தது. இதனையடுத்து எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு தங்கள் ஆதரவை வரிசையாக அறிவிக்க, தினகரன் தரப்பு தானாக முன்வந்து தங்கள் ஆதரவை பாஜகவுக்கு வாலண்டியராக தெரிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் சென்னை வந்த பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் முதலில் ஓபிஎஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று ஆதரவு எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து பின்னர் எடப்பாடி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்று எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்தார். ஆனால் தினகரனை சந்திக்கவில்லை.

GST- Lyca -- தமிழ்ப் படங்களை தயாரிக்க மறுக்கும் லைகா!

மின்னம்பலம் : விஜய்யின் கத்தி திரைப்படத்தில் தொடங்கிய லைகாவின் பயணம் தற்போது
2.0 திரைப்படத்தின்மூலம் டாப் கியரில் சென்றுகொண்டிருக்கிறது. 2.0-வுக்குப் பிறகு உதயநிதியின் இப்படை வெல்லும், விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிக்கும் கரு ஆகிய இரண்டு திரைப்படங்களில் லைகாவின் கைவசம் உள்ளன. இந்நிலையில் லைகா தமிழ்ப்படங்களைத் தயாரிக்கமாட்டோம் என அறிவித்திருப்பது தமிழ் சினிமாவில் இன்றைய பரபரப்பை உருவாக்கிவிட்டது. லைக்காவின் சார்பில் 3D டிஜிட்டல் மீட்டிங் இன்று காலை(05.07.2017) ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் 3D திரையரங்குகள் தமிழகத்தில் அதிகளவில் உருவாகவேண்டிய அவசியத்தைப்பற்றி பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். தற்போதைய தமிழ்த் திரையுலக சூழ்நிலை நல்ல நிலையில் இல்லாததால், அதைப்பற்றிய விவாதமும் அரங்கேறியது. அப்போது பேசிய லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் Creative Head ராஜு மஹாலிங்கம் பேசுகையில் நாங்கள் 2.0 திரைப்படத்துக்கு 400 கோடி செலவு செய்திருக்கிறோம்.

மோடியின் டீக்கடை சுற்றுலா தலமாகிறது ... மோடியின் டீக்கடை என்பதே பச்சை பொய்.... ஒரு போதும் எந்த தொழிலும் மோடி செய்திருக்கவில்லை.

வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப்t; புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம்.மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையைச் (Archaeological Survey of India) சேர்ந்த அதிகாரிகளும் குஜராத் மாநிலம் வாத்நகருக்கு கடந்த ஞாயிறன்று விஜயம் செய்துள்ளனர்.  வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப் புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம். மேலும் வாத்நகரை சுற்றுலாத் தளமாக்குவதற்கு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்று தயாராக உள்ளதாகவும், முதற்கட்டமாக 8 கோடி ரூபாயை மாநில சுற்றுலாத்துறை ஒதுக்கியிருப்பதாகவும் அகமதாபாத் மண்டல ரயில்வே மேலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வாத்நகருக்கும், அந்நகரத்தின் இரயில்வே நிலையத்திற்கும் அப்படி என்ன சிறப்பு? வேறொன்றுமில்லை, மோடியின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பை வாத்நகரும் அவர் தேனீர் விற்ற கடையை அந்நகரின் இரயில்வே நிலையமும் கொண்டிருக்கின்றன. மேற்படி தேனீர் கடையை அதன் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புனரமைக்கப் போவதாக அதிகாரிகள் நெக்குருகுகின்றனர்... ஒரு அரசியல் குண்டா நாட்டு தலைவர் ஆனால் என்னவெல்லாம் நடக்கும் என்பது இதுதான் .

சென்னையில் ஹரூண் கைது ! ஜூனைத் கானைக் கொன்றவர்கள் கைதில்லை !

ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட சிறுவன் ஜூனைத் ரியானாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஜுனைத் கான், கடந்த ஜூன் 22 அன்று  இந்துமதவெறியர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டது யாருக்கும் மறந்திருக்காது. இரம்ஜான் பண்டிகைக்கு பொருட்களை வாங்கிக் கொண்டு தனது தம்பிகளோடு இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜூனைத் கான். அப்போது அங்கு வந்த இந்துமதவெறிக் கிரிமினல் கும்பல், அவரையும் அவரது சகோதரர்களையும் மாட்டுக்கறி திண்ணும் தேசதுரோகிகள் எனக் கூறிக் கடுமையாகத் தாக்கியது. இறங்க வேண்டிய இடத்தில் அவர்களை இறங்க விடாமல் தடுத்து, மீறி இறங்க முயன்ற ஜுனைத் கானைக் கத்தியால் குத்தி கொலை செய்தது அக்கும்பல்.
பிரதமர் மோடியோ, ஹரியானா முதல்வர் கட்டாரோ, வேறு எந்த பாஜக தலைவரோ இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு இது குறித்து வாய் திறக்கவேயில்லை. நாடு முழுவதும் இது குறித்துப் பல்வேறு கண்டனக் குரல்கள் குவியத் துவங்கியவுடன், ஒரு வாரம் கழித்து பிரதமர் மோடி மொன்னையான ஒரு கண்டன உரையை நிகழ்த்தினார். அவர் எச்சில் ஈரம் காய்வதற்குள் ஜார்கண்டில் பசுவின் பெயரால் மற்றொரு கொலை நடந்து முடிந்திருந்தது.

கதிராமங்கலம் போராட்டத்தில் போலீசு அட்டூழியங்கள் !


வினவு :போலீசு துரத்துகையில் ஓடிய குணசுந்தரியை இழுத்து தள்ளிவிட்டு அவரது கால்களிலேயே குண்டாந்தடியைக் கொண்டு அடித்து அவரது கால்களை முறித்திருக்கிறது போலீசு
மிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தை முழுக்க தரிசாக்கும் வண்ணம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மட்டுமல்ல முழு தமிழக மக்களுமே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே அமைத்திருந்த எண்ணெய்க் குழாயின் மோசமான தரத்தின் காரணமாக கடந்த 30.06.2017 அன்று கதிராமங்கலம் வனதுர்கை கோவில் பகுதியில் ஐந்தாறு இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எண்ணெய் வெளியேறியுள்ளது. வெளியேறிய எண்ணெய் அங்குள்ள வயல்வெளிப்பகுதியில் படர்ந்து வயல்வெளியை நாசபடுத்தியதோடு, அங்கிருக்கும் குடிநீர் கிண்றுகளுக்கும் பரவி, அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் வரை முழுமையாக எண்ணெய் பரவியுள்ளது.

புதன், 5 ஜூலை, 2017

Nasa மூன்று கறுப்பின பெண்களின் உதவியோடுதான் முதல் விண்வெளி பயணம் ...

Shalin Maria Larwrence :  Hidden figures என்றொரு ஆங்கில படம்
.உண்மை சம்பவங்களை கதையாக
கொண்டது .
1961 அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமை போராட்டம் (Civil rights war ) உச்சக்கட்டத்தில் இருந்த நேரம் . கறுப்பின வெறுப்பும் உச்சத்தில் இருந்த நேரம் மூன்று கறுப்பின பெண்கள் நாசாவில் சேருகிறார்கள் .
வரலாறில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் யார் வல்லரசு என்று தீவிரமாக "விண்வெளி பந்தயம்" நடந்து கொண்டிருக்கும் காலம் அது . ரஷ்யா விண்வெளிக்கு மனிதனோடு விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டிருந்த நேரம் .அமெரிக்காவின் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிகிறது .
அந்த மூன்று கறுப்பின பெண்களில்
ஒருத்தி கணித மேதை -கேத்தரின்
ஒருத்தி பொறியியல் அறிவாளி -மேரி
இன்னொருத்தி computers என்று அழைக்கப்படும் வானியல் கணக்குகளை கையாலேயே போடும் கறுப்பின பெண்களுக்கு சூப்பர்வைசர் -டாரத்தி .
அமெரிக்காவின் ஆள் தாங்கிய விண்வெளி பயணத்தை வெற்றி ஆக்குவதற்கு கேத்தரின் மற்றும் மேரியின் உதவி தேவை படுகிறது . முழுதும் வெள்ளையர்கள் இருக்கும் குழுக்களில் அவர்கள் இணைக்கப்படுகிறார்கள் .
அந்த குழுக்களிலேயே அவர்கள் சிறந்து விளங்குகிறாரகள் .வெள்ளையர்களை விட எல்லா விதத்திலேயும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் .

ஆண்களுக்கு இருக்கும் பாலியல் சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை

Lulu Deva Jamla :*கற்பு-உதாசீனம்-பெண்மை*
பெண்மையை பேதையாய் பதுமையாய் மென்மையாய் சித்தரிக்க ஆணாதிக்க சமூகம் உபயோகிக்கும் அத்தனை அணிகலன்களையும் தூக்கி எறிந்து தன் பிறப்பை உணரும் வீரப்பெண்மையே என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பெண்மை!
வீரப்பெண்மணிகள் தூக்கியெறிய வேண்டிய முதல் காப்பு "புனிதம்" என்ற பெயரில் காக்கப்படும் "கற்பு".
கற்பு என்ற வார்த்தையிலேயே ஒரு முரண்பாடு உண்டு.. கற்பு என்பது வெறும் பெண்ணுறுப்பில் மட்டுமே இருப்பது போல் இந்த ஆணாதிக்கச் சமூதாயம் சித்தரித்து வைத்திருக்கிறது. கற்பு என்ற ஒன்று கற்பனையே என்னைப்பொறுத்த வரை! அப்படி ஒன்று இருக்கிறது என்பீர்களாயின் ஆணோ பெண்ணோ இரு பாலினர்க்கும் எல்லா உறுப்புகளிலும் கற்பு இருக்கிறது என்பேன். பெண் உடலால் உறவு கொண்டால் அது கற்பு இழப்பது என்று கூறி அவளை வதைக்கும் ஆண் வர்க்கம் தன் கண்ணாலேயோ உடலாலோ கற்பை இழப்பது மட்டும் எப்படி தப்பில்லாமல் போகும்?

தோழர் பத்மா எங்கே ? அத்துமீறி கைது செய்யபட்ட மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ....

தோழர் பத்மா அவர்களின் கைது விசயத்தில்ஆந்திர போலீசார் அத்துமீறி நடந்து கொண்டிருப்பது பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகும் கூட தமிழக போலீசு வாய் திறக்கவில்லை.
மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த தோழர் பத்மாவை 03.07.2017 அன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூர் இரயில் நிலையத்தில் வைத்து ஆந்திர மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசு கைது செய்து ஆந்திராவிற்கு காரில் அழைத்துச் சென்றதாகப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தோழர் பத்மாவும், அவரது கணவர் தோழர் விவேக்கும் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கடந்த 2002 -ம் ஆண்டு ஊத்தங்கரையில் மற்ற மாவோயிஸ்ட் தோழர்களோடு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்மா, 2006 -ம் ஆண்டு பிணையில் வெளி வந்தார். அதன் பின்னர் மீண்டும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது போலீசு. இவ்வழக்கிலும், கடந்த 2012-ம் ஆண்டு விடுதலையானார். இவர் மீது தமிழக, கேரள மற்றும் ஆந்திரப் போலீசார் பல்வேறு வழக்குகளைத் தொடுத்துள்ளனர்.
தனது இளம் வயது முதலே புரட்சிகர அரசியலில் ஊக்கத்துடன் ஈடுபட்டு வருபவர் தோழர் பத்மா. தற்போது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றியிருக்கும் அவரை துப்பாக்கி முனையில் ஆந்திர போலீசார் கைது செய்திருப்பதாகவும், இந்த கைது குறித்து தமிழக போலீசுக்குத் தெரியாது என்றும் செய்திகள் கூறுகின்றன. சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதன் யோக்கியதை இதுதான்.

கமலஹாசன் : தமிழகம் ஊழலில் பிகாரையும் மிஞ்சிவிட்டது

tamilthehindu : 30% கேளிக்கை வரி விதிப்பு மூலம் தமிழகத்தில் திரைப்படங்கள்
எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது என நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ஜூலை 1 -ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டுமே அமலில் உள்ளது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மத்திய மற்றும் மாநில அரசின் இந்த வரிவிதிப்புக்கு தமிழ்த் திரையுலகரினர் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து நடிகர் கமல்ஹாசன் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியின் கீழ் இன்னும் பல சித்ரவதைகளையும், ஊழல்களையும் திரைப்படத்துறை சகித்துக் கொள்ள இருக்கிறது.

2 G ஸ்பெக்ட்ரம் வழக்கு தீர்ப்பு ஓரிரு மாதங்களில் வருகிறது ..


Lakshmi Priya டெல்லி: 2ஜி வழக்கு தொடர்பாக இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி ஷைனி தெரிவித்தார். முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் ரூ.1.70 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கலைஞர் டிவிக்கு ரூ.214 கோடி கைமாறியது குறித்தும் சிபிஐ துறையும், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 2011-ல் சிபிஐ, 2014-ல் அமலாக்கப் பிரிவு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்தன. இவ் வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: பா.ஜ.க. கோரிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை மிகவும் மோசமாக உள்ளதால், உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவல் வைரலாகப் பரவியதையடுத்து, பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அப்பகுதி போர்க்களமாக மாறியது. இதையடுத்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் கலவரம் பரவியது. கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் மேற்கு வங்க அரசை உடனடியாக கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டு வீசிய யோகா மாஸ்டர்.. கம்யுனிஸ்ட் அலுவலகம் மீது ... விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் சரவணகுமார்

கோவை காந்திபுரம் 100அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. இதில் காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் கோவையில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

ஓ.என்.ஜி.சி மீத்தேனும் சேல் எண்ணெயும் எடுக்கவில்லையா?.

thetimestamil :அருண் நெடுஞ்செழியன்: தமிழ்நாட்டில் சேல் மீத்தேனும், நிலக்கரிபடுகை மீத்தேனும் எடுக்கவே இல்லை என ஓ.என்.ஜி.சி-யும் அரசும் கூறி வருகிற நிலையில், இதன் உண்மைத்தன்மை மற்றும் உள்ளர்த்தம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வது அவசியமாகிறது… இதை சற்றுன் நெருங்கிப் பார்ப்போம் ….
தமிழ்நாட்டில் மீத்தேன், சேல் எரிவாவை இப்போது எடுக்கவில்லை எனக் கூறியுள்ளதே தவிர எடுக்கின்றத் திட்டம் இல்லை என ஓ.என்.ஜி.சி-கூறவில்லை.மேலும்,ஓ.என்.ஜி.சி யோ அல்லது அரசையோ பொருத்தவரை எங்கு என்ன வகை திட்டத்தை மேற்கொள்கிறோம்,என்ன திட்டத்திற்கு ஆய்வு செய்கிறோம் என வெளிப்படையாக சொல்வதில்லை.மாறாக வார்த்தை விளையாட்டுகளில் கெட்டிக்காரத்தனத்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

முழு இந்தியாவும் காஷ்மீர் ஆக மாறிக்கொண்டு வருகிறதா?


இந்தியா முழுவதும் காஷ்மீராக மாறிக்கொண்டு இருக்கிறது, உள்நாட்டு
சண்டையை தூண்டிவிடுகிறது மோடியின் பார்ப்பனிய பணியா அரசு!!! இனி ஒற்றை ஆட்சி முறை, சர்வாதிகார ஆட்சியை நோக்கி ஒற்றை இந்து அடையாளமாக இந்தியா மாற்றப்படப் போகிறது! அதை எதிர்ப்பவர்கள் மண்ணுக்கடியில் புதைக்கப்படுவார்கள்!!! (கனிமொழி) படம்:- இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து மிருகங்கள் கொடுத்த மன அழுத்தத்தால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலை இதுவெனில்.... மற்றவர்களின் நிலையோ....! இவற்றை எதிர்த்தால் புதைக்கப்படுவேன் என்பதால் நான் இந்தியாவில் பிறந்ததற்காய் பெருமையடைகிறேன் என்று கூறிக் கொண்டு... Lulu Moses
Priyatharshan :
 குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மேற்கு வங்கப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆரிய ஆண்களின் வருகையை நிரூபித்த டி என் ஏ தரவுகள்

Special Correspondent FB Wing: ஆண் வழியிலேயே மரபணு கலப்பு
ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது” என்ற தலைப்பிலான அந்த ஆங்கில ஆய்வுக் கட்டுரையில் பேராசிரியர் மார்ட்டின் பி.ரிச்சர்ட்ஸ் தலைமையிலான 16 ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு தரும் தகவல் : சமீப காலம் வரை தாயிடமிருந்து பெண் வாரிசுகளுக்கு கடத்தப்படுகின்ற mtDNA (matrilineal DNA) என்ற தாய்வழி உயிரணுவைப்பற்றிய தகவல்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அந்தத் தரவுகள், இந்திய மக்களின் மரபணு தொகுப்பிற்குள் சுமார் 12,500 ஆண்டுகளாக வெளியிலிருந்து வந்த எந்த புதிய மரபணு சேர்க்கையும் நடைபெறவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

கதறும் கதிராமங்கலம் .. மூடி மறைக்கும் எடப்பாடி- மோடி அரசுகள்!

Special Correspondent FB Wing தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில், கடந்த 30ம்
தேதி ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்ட்தில் ஈடுபட்டனர். அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் போடப்பட்டிருந்த முள் செடிக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் இடையே கதிராமங்கலத்தில் 'சுமூக நிலை நிலவுகிறது' என்று முதலமைச்சர் கூறியிருப்பது நடைபெற்ற போலீஸ் அராஜகத்தை மறைக்கும் முயற்சி என்றும் தீ வைப்பது தமிழக காவல்துறை அதிகாரிகளின் "டிரென்ட்" ஆகிவிட்டது என்றும் திமுக செயல்தலைவர் M. K. Stalin தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வலையில் சிக்கிய இந்தியா.. 80 லட்சம் இந்தியர்கள் அரபு நாடுகளில் பணி...

இன்று இஸ்ரேல் செல்கின்றார் மோடி, அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் அவர்தான்
இஸ்ரேல் என்பது முக்கியமான நாடு என்றாகிற்று மறுப்பதற்கில்லை ஆனால் அதனை கையாள்வது என்பது மகா சிக்கலான ஒன்று
இஸ்ரேல் என்ற நாடு 1948ல் உருவாக்கபட்டாலும் நெடுநாள் இந்தியா அதனை அங்கீகரிக்கவில்லை, அது பாலஸ்தீன் பக்கமே இருந்தது, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இந்திய நிலைப்பாடு
பல்வேறு காரணங்கள் அதற்கு உண்டு, இஸ்ரேல் நிச்சயமாக அமெரிக்காவின் இன்னொரு முகம், இந்திய வளர்ச்சியினை அமெரிக்கா ஒருபோதும் அனுமதித்ததில்லை, பாகிஸ்தானை சீண்டி இந்தியாவிற்கு செக் வைக்கும் வேலையினை எந்நாளும் அது செய்துகொண்டே இருக்கும்
இஸ்ரேல் உறவும், அமெரிக்க்க உறவும் ஒன்றுதான் . ஒரு நாட்டுடன் பேசினால் போதாதா?
இன்னொன்று மகா முக்கியமானது
ஆண்டவன் பெரும் குதர்க்கவாதி, இஸ்ரேலியருக்கு பெரும் அறிவினை கொடுத்தாலும், எண்ணெய் வளத்தை அவன் அரேபியருக்கே கொடுத்திருக்கின்றான்
இஸ்ரேலோடு உறவுபாராட்டும் எல்லா நாடுகளையும் அரபு நாடுகள் ஒரு மாதிரிதான் பார்க்கும், அமெரிக்காவினை
தவிர‌ எந்த நாடும் இஸ்ரேலை ஒரு பக்கமும் அரபுநாடுகளை இன்னொரு பக்கமும் கைபிடித்தபடி நடக்க முடியாது, அதன் பலம் அப்படி

மோடி.. :இஸ்ரேலுக்கு வருகைதரும் முதல் இந்தியப் பிரதமர்!


BBC :இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப்
பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்தின் சார்பாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, அரசின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை காணமுடிகிறது.
இஸ்ரேலில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மோதி, தனது பயணம், புதிய பாதையை உருவாக்கியிருப்பதாக கூறினார். இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய பங்குதாரர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 இஸ்ரேலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையின் முக்கிய ஐந்து அம்சங்களை பார்க்கலாம்.

Big பாஸ் ...எப்படி உண்கிறோம், படுக்கிறோம் ,குனிகிறோம் , நடக்கிறோம் , சிரிக்கிறோம் , காதலிக்கிறோம் , கலவி கொள்கிறோம் ..


Shalin Maria Lawrence: இந்த நகரத்தின் மக்களுக்கு ஒரு புது தொலைக்காட்சி
நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்படுகிறது .நூறு நாட்கள், 15 பேர் பிக் பாஸ் அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் ,கூடவே சேர்ந்து இந்த நகரத்தாரும் பார்த்துகொண்டேயிருக்கிறார்கள் . இந்த நகரத்தின் மக்களுக்கு பிக் பாஸ் அருவருப்பாய் மாறுகிறது . .என்ன இது இன்னொருவர் அந்தரங்கத்தை ஊருக்கு காட்டிக்கொண்டு என்று நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டே முணுமுணுக்க தொடங்கினார்கள் இந்த நகரத்தின் மக்கள் . இந்த நகரத்தில் சில பெண்கள் இருந்தார்கள் .> இந்த நகரத்தில் பெண்ணாய் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள் .இந்த பெண்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள் .பிக் பாஸ் அவர்களுக்கு எத்தகைய ஆச்சரியத்தையும் ,அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை .
மாறாக இந்த பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள் .
" நாங்கள் பிறந்ததில் இருந்தே பல ஜோடி கண்கள் எங்களை பார்க்க துவங்கி விட்டன .எங்கள் முதல் அழுகையிலிருந்தே நாங்கள் கண்காணிக்கப்பட்டோம் .நாங்கள் கண்காணிக்கப்படுவதாக நாங்கள் முதல் அடி எடுத்து வைக்கும்போதிலிருந்தே எங்களுக்கு சொல்ல பட்டிருந்தது . எங்கள் முன்னோர்களும் கண்காணிக்கப்பட்டதாகவும் எங்களுக்கு சொல்ல பட்டது .

Ramesh Praba : TV பூனைகளுக்கு மணி கட்டிய கவண்!

ஊடகங்களை விமர்சித்து
இன்னொரு துணிச்சலான படத்தை
இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இந்தமுறை அவர் தேர்ந்தெடுத்திருப்பது தொலைக்காட்சியை. அவர் எந்தெந்த தொலைக்காட்சிகளை மனதில் வைத்து விமர்சித்திருக்கிறார் என்பதை ரசிகர்களால் சுலபமாக ஊகிக்க முடிகிறது.
தொலைக்காட்சியில் டிராமா பிரபலமாக இருப்பது பரவாயில்லை... ஆனால் எல்லா நிகழ்ச்சிகளையும் டிராமா ஆக்குவது சகிக்க முடியாத ஒன்று என்பதும், சேனல்கள் பரபரப்புக்காக செய்திகளை, நாட்டு நடப்புகளை இருட்டடிப்பு செய்து எப்படி ஒருதலைபட்சமாக காண்பிக்கின்றன என்பதும்தான் படத்தின் சாராம்சம்.
எல்லாவற்றையும் டிராமா ஆக்குவது வடக்கத்திய சேனல்களின் கலாச்சாரம். அந்த சேனல்களின் தமிழ் வரவுக்குப் பின் இங்கும் அது தொற்றிக்கொண்டது. பாட்டுப் போட்டி என்று சொல்லி இளம் பிஞ்சுகளை வரவழைத்து பாடவைத்து அந்த இளம் வயதிலேயே சிறப்பாக பாடுபவர்களை, நடுவர்கள் என்ற பெயரில் சினிமாவில் ஒரு பாட்டு பாடி காணாமல் போனவர்கள் கண்டபடி விமர்சித்து அழ வைப்பதும், வெளியேற்றுவதும், திறமையை தாண்டி குலம் கோத்திரம் பார்த்து பரிசு கொடுப்பதும், பாடவரும் சிறுமிகளை கட்டாயப்படுத்தி கவர்ச்சி உடை அணிய வைப்பதும், மேட்ச் பிக்சிங் போலவே இங்கும் யாருக்கு பரிசு என முடிவு செய்துவிட்டு நிகழ்ச்சியை நடத்துவதும் என அத்தனை விஷயங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

கேரளா முதல்வருக்கு கமல ஹாசன் பாராட்டு ...

கமல்ஹாசன்:தமிழகத்தில் திரைப்படங்கள் எடுப்பது
திட்டமிட்டே கடினமாக்கப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையினர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேளிக்கை வரிவிதிப்பு குறித்து வேண்டுகோள் விடுத்தபோது, அவர் உடனடியாக திரைப்படத் துறைக்கு இனி எந்த வரியும் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அரசுகளும் திரைத்துறைக்கு பல்வேறு சலுகைகளை செய்து தந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் நிலவும் ஊழலில் திரைப்படத் துறை உள்ளிட்ட பல துறைகள் சிக்கிக் கொண்டுள்ளன. இதை எதிர்க்க நான் இன்னும் வலுவான போராட்டங்களை எதிர்பார்க்கிறேன் தீக்கதிர்

அச்சல் குமார் ஜோதி.. புதிய தலைமை தேர்தல் ஆணையாளர் ஒரு குஜராத்தி ,,,

Gajalakshmi டெல்லி: ஜூலை6ம் தேதி புதிய இந்திய தலைமை தேர்தல்
ஆணையராக பொறுப்பேற்க உள்ள அச்சல் குமார் ஜோதியின் பணி விவரங்களை பார்க்கலாம். 64 வயது அச்சல் குமார் ஜோதி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. 1975-ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றத் துவங்கி பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.  1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை, கண்ட்லா துறைமுக அறக்கட்டளை தலைவராகவும், சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார் ஜோதி. 2013ம் ஆண்டு வரை குஜராத் மாநில தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர்.