திங்கள், 17 ஏப்ரல், 2017

தமிழ்நாட்டின் பல திட்டங்களை தடுத்து நிறுத்திய முதலாளிகள் பலரும் எம்ஜியார் ஜெயாவின் முகாமில் இருந்தவர்கள்தான்

Stanily Rajan :ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?
காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது
இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது.
மத்திய அரசோடு மல்லுகட்ட வேண்டும், அதனுடன் வாதிட வேண்டும் , நிலமை முற்றினால் பிரிவினை வாதம் பேசிவிடவும் கூடாது, ஒரு மாதிரியாக கையாள வேண்டிய சிக்கல் நிறைந்தது மாநில கட்சிகளின் மாநில ஆட்சி
அண்ணா அதில் சமார்த்தியமாக தேர் நகர்த்தினார், மக்களிடம் தன் பெயர் கெடாமல் அதே நேரம் டெல்லியினை பகைக்காமல் ஆண்டார், தமிழகத்திற்கு செய்யவேண்டியதை செய்தார், தமிழ்நாடு பெயர் உட்பட‌
பின் கலைஞர் வந்தார், சும்மா சொல்ல கூடாது மதுகடைகள் திறந்ததை தவிர வேறு ஒரு குறையும் சொல்லிவிட முடியாது, கள்ளசாராய சாவுகளும் இன்னும் பல சிக்கல்களும் அவரை அதற்கு தூண்டின, மக்களின் எதிர்ப்பால் அதனை மூடும் மனநிலையில்தான் அவரும் இருந்தார்
அணை கட்டுவதில் திமுக அரசு நன்றாகத்தான் செயல்பட்டது, அணை கட்டுவது ஜெயா சமாதி போன்ற எளிதான பணி அல்ல, அதற்கு பல இயற்கை அமைப்புகள் பொருந்திவரவேண்டும்

ஜெயலலிதா உயில் எழுதி வைக்கவில்லை ... சொத்துக்கள் தீபா உட்பட உறவினர்களுக்கே வாய்ப்பு!

Information from an RTI query has revealed that there is no record of a will being left behind former Tamil Nadu Chief Minister J Jayalalithaa.
In response to an RTI query filed by activist S Bhaskaran, the Commercial Taxes and Registration Department (CTRD) said that it did not have in its possession any such documents regarding Jayalalithaa's will.
The CTRD is in charge of recording wills.
"I am to inform that no details as requested in your petition cited is available in the Commercial Taxes and Registration Department, Secretariat, Chennai 9," Thiru C Kannan, Under Secretary to Government, Public Information Officer, wrote in his response.
Since the former AIADMK supremo’s demise on December 5 last year, there has been much speculation over who she has named her legal heir and who will inherit her properties including her Poes Garden residence.
Jayalalithaa's property
Jayalaithaa has left behind assets worth Rs 113.72 crore. In a piece for The Hindu last year, Sanjay Vijayakumar wrote that no one in the AIADMK including the lawyers who handled her legal affairs were aware of any will she had made.

டெல்லியில் விவசாயிகள் புல்-வைக்கோல் தின்னும் போராட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று மாடுகளைப் போன்று புல் மற்றும் வைக்கோலைத் தின்னும் போராட்டம் நடத்தினர். புதுடெல்லி: தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எலிக்கறி, பாம்புக்கறி தின்று போராட்டம், மொட்டை அடித்து, மண் சோறு சாப்பிட்டு, சேலை அணிந்து, தாலி அறுத்து போராட்டம், குட்டிக்கரணம் அடித்து போராட்டம் என தினமும் வித்தியாசமான முறையில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தவைலவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வளர்மதி பன்னீர் அணிக்கு ஓடுகிறார் ...

அ.தி.மு.க., வின் இரு அணிகளிடையே சமரச பேச்சு துவக்கியுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலா அணியிலிருந்து விலகி, பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் பாட நுால் வாரிய தலைவராக உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். அதற்கு பரிசாக, அவருக்கு தமிழக அரசின் பாடநுால் வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. சசிகலா சிறைக்கு சென்ற பின், தினகரன் ஆதரவாளராக வலம் வந்தார். ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்தார். மாநில பேச்சாளர்கள், செய்தி தொடர்பாளர்களின் தேர்தல் பிரசார பயண விவகாரத்தில், வளர்மதி மீது புகார்கள் எழுந்தன. இதுகுறித்து, அவரிடம், தினகரன் விசாரணை நடத்தினார். இதனால், அதிருப்தி அடைந்த வளர்மதி, தேர்தல் ரத்துக்கு மறுநாள், கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தார்.

தினகரன் மீது மூன்று பிரிவில் வழக்கு: டெல்லி கமிஷனர்!

அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதற்காக டிடிவி தினகரனிடம் லஞ்சம் பெற்றதாக புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்துள்ளதை டெல்லி காவல்துறை உறுதி செய்துள்ளது.
டெல்லி காவல்துறை துணை கமிஷனர் மதுர் வர்மா இன்று மதியம்(17.4.2017) செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.
அவரிடம் இருந்து 1.30 கோடி கைப்பற்றியுள்ளோம். மேலும், 2 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்துள்ளோம். லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சுகேஷ் சந்திரசேகர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணை நடப்பதால் வேறு தகவல்களை தெரிவிக்க முடியாது என்றார்.

விஜயபாஸ்கர் தினகரன் விரைவில் கைது ...

‘பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இன்னும்கூட தினமும் சென்று வரும் ஒரே நபர் இளவரசியின் மகன் விவேக் மட்டும்தான். சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து பெரும்பாலும் பெங்களூருவில்தான் இருக்கிறார் விவேக். ஓரிரு நாட்கள் சென்னை வந்தாலுமேகூட, மதியத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டு மறுநாள் காலையில் ஃபிளைட் பிடித்து பெங்களூருவுக்கு பறந்துவிடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவும் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். விவேக் பார்ப்பதற்காக சிறைக்குள் செல்லும்போதெல்லாம், புலம்ப ஆரம்பித்துவிடுகிறாராம் சசிகலா. ‘அவனை (தினகரன்) தேர்தலிலேயே நான் நிற்க வேண்டாம்னு சொன்னேன். அவன் கேட்கவே இல்லை. இப்போ எல்லா பிரச்னைகளும் வந்துடுச்சு. அவன் தேர்தலில் நிற்காமல் இருந்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. பணம் கொடுத்தால் பிரச்னை வரும்னு தெரியும். எலெக்‌ஷன் கமிஷன் பார்த்துட்டு இருக்குன்னு தெரியும்.

முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை! 21 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு : முன்னாள் அமைச்சருக்கு சிறை! ...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர் கோவையைச் சேர்ந்த செ.அரங்கநாயகம். இவர் அமைச்சராக இருந்தபோது இவருடைய மனைவி, மகன்கள் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 1.15 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகக் கூறி, கடந்த 1996ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.இவருடைய சில சொத்துக்களும் முடக்கப்பட்டது. பிறகு அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை ஆணை !

அந்நியச் செலாவணி முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ஆணை அனுப்பியுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையானது ராஜஸ்தான், ஹிகித்சா ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனத்தின் மீது, ஆம்புலன்சுகளை முறைகேடாக இயக்கியதாகக் கூறி கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அமலாக்கத் துறை திங்கள்கிழமை (இன்று) நடத்தி வருகிறது. இதில் குறிப்பாக, வாசன் ஹெல்த் கேர் மூலம் நடந்த கருப்புப் பண பரிவர்த்தனையில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அமைச்சர்களுக்கு இந்தி கட்டாயம்! இந்தியா இனி இந்திக்கு மட்டும்தான்?

தேசிய அலுவல் மொழிகளுக்கான பாராளுமன்றக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி “இந்தி எழுதப் படிக்கத் தெரிந்த மத்திய அரசு அலுவலர்கள், மத்திய அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்” ஆகியோர் இனிமேல் இந்தியில் மட்டுமே உரையாற்ற வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தி மொழியை பிரபலபடுத்துவது தொடர்பாக , பாராளுமன்றக் குழுவினர் அளித்த 117 பரிந்துரைகளை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிக்கை அனைத்து அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் மத்திய அலுவலகங்களுக்கு உடனடியாக அனுப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், புதிதாக பதவியேற்க உள்ள குடியரசுத் தலைவர் இனிமேல் இந்தியில் மட்டுமே உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.thetimestamil இதர மொழி பேசும்  மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?   

தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சுரேஷ் சந்தர் ...

யார் இந்த சுகேஷ் சந்தர்? பரபரப்பு தகவல்கள் இரட்டை இலை சின்னத்தை பெற்று கொடுக்க லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சுகேஷ் சந்தர் மீது இந்தியா முழுவதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. புதுடெல்லி: ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இந்த இரு அணியினரும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கொண்டாடினார்கள். ஆனால் இரு அணிக்கும் இரட்டை இலை சின்னத்தை வழங்காமல் அதை முடக்கி வைத்து தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் ... தேர்தல் அதிகாரிகள் தினகரன் வசமாக சிக்குகிறார்கள்

இரட்டை இலை விவகாரம்: விசாரணை வளையத்துக்குள் தேர்தல் அதிகாரிகள் இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணை தேர்தல் அதிகாரி பவன் ரெய்னா, தற்போதைய அதிகாரி சந்திப்சக்சேனா இருவரும் மத்திய அரசின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில் பவன் ரெய்னா சிக்க வாய்ப்பிருப்பதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முதல்வராக இருந்த ஜெ, டெல்லி சென்றிருந்தபோது அவருக்கும் எல்லாமுமாக இருந்தவர் பவன் ரெய்னா. தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த இவர் தற்போது ஓய்வுபெற்றுவிட்டார். ஓ.பி.எஸ்.சுக்கும் நெருக்கமாக இருந்தவர் பவன் ரெய்னா.நக்கீரன்

140 கன அடி தண்ணீர் திருட்டு முல்லை பெரியாறு படுகையில் .... பிடிஆர்பி தியாகராஜன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிடிஆர்பி தியாகராஜன் எம்எல்ஏ. படம்:எஸ். கிருஷ்ணமூர்த்திமதுரை மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிடிஆர்பி தியாகராஜன் எம்எல்ஏ. படம்:எஸ். கிருஷ்ணமூர்த்தி பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு திறக்கப்படும் தண்ணீரில் 140 கனஅடி வரை திருடுபோவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலே மதுரை உட்பட சில மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம் என பிடிஆர்பி.தியாகராஜன் எம்எல்ஏ கூறினார்.
மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய தொகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியுடன் மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்பி தியாகராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகராட்சி பொறியாளர்கள் 15 பேருடன் தியாகராஜன் எம்எல்ஏ தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது: மதுரையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆலோசனை செய்தேன். தொகுதி மேம்பாட்டு நிதியுடன், எனது ஊதியம் முழுவதையும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பயன்படுத்துவேன்.

7.8 கோடி நகர்புற வீடுகளில் கழிப்பறை இல்லை ...அதிர்ச்சி புள்ளிவிபரம் . ..

நகர்புறங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் 7.8 கோடி அதிர்ச்சி  ...பொதுவாக கழிப்பறை இல்லாத வீடுகள் கிராமங்களில் தான் அதிக அளவில் உள்ளது என்ற ஒரு பொது நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகிறது. ஆனால், மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சரகம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு புள்ளி விவரத்தில், இந்தியா முழுவதும் நகர்புறங்களில் 7.8 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லை என்று தெரிவித்துள்ளது.
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஆண்டுவிழா நாளில் 2019ம் ஆண்டுக்குள் இந்தியாவை திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் சமாதான தூது .... சம்மதிக்காத பொள்ளாச்சி ஜெயராமன் ..

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கிடையே துணைசபாநாயகராக உள்ள பொள்ளாச்சி ஜெயராமன், டி.டி.வி. தினகரனுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சி ஜெயராமனை சமாதானப்படுத்துவதற்காக மூத்த அமைச்சரான செங்கோட்டையன் சனிக்கிழமை இரவு கோவை வந்து நேரில் பொள்ளாச்சி சென்றார். அங்கு பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் வைத்து சுமார் 3 மணி நேரம் இருவரும் பேசியுள்ளார்கள். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி மற்றும் ஆட்சி இரண்டின் எதிர்காலம் கருதி நாங்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தோம். ஆனால் தற்போது நடக்கிற விஷயம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அவமானத்தை சந்திக்க வேண்டியதாக உள்ளது.

புதிய வாடகை தாய் மசோதா ... டாக்டர்கள் வக்கீல்கள் எதிர்ப்பு?


புதுடில்லி:லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வாடகை தாய் மசோதாவுக்கு, வக்கீல் கள், டாக்டர்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.< குழந்தை இல்லாத தம்பதிகள், வாடகை தாய் மூலம், குழந்தை பெற்றுக் கொள்வது, இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. சமூக நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்த திட்டம், தற்போது, வியாபாரமாக மாறி வருகிறது. இதனால், பல மோசடிகள் நடக்கின் றன; இதை தடுக்க, மத்திய அரசு, புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா, லோக்சபாவில், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவில், 'வெளிநாட்டு தம்பதியினர், இந்திய பெண்களை வாடகை தாயாக பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 'திருமணம் < செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கை துணையை பிரிந்து வாழ்பவர்கள், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாத மாணவர்களால் சக மாணவர் அடித்து கொலை ...


நிர்வாணமாக்கப்பட்டு மாணவன் அடித்துக் கொலை: அதிர்ச்சி வீடியோ..!! பாகிஸ்தானில் மாணவர் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மர்தான் நகரில் அப்துல் வாலிகான் என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் மஷால் என்பவர் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் கடவுளை நிந்திக்கும் வகையான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மர்ம கும்பல் மஷால் கானை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நிர்வாணமாக்கி அடித்துக் கொலை செய்துள்ளது. அந்த கும்பல் அவரை தாக்கும்போது 10 மாணவர்கள் அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டனர். மேலும் கானை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. மாறாக சக மாணவர்கள் கான் கொலை செய்யப்பட்டதை தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இன்று தமிழகம் வருகை .. அமைச்சர்கள் பதவி நீக்கம்?

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மீண்டும் ஆஜராகிரார். இதனிடையே ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை ஓரம் கட்டவும் இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருவதாகவும்< tamiloneindia

சிவகங்கை ஜல்லிக்டட்டு கலவரம் .. பரிசு பொருட்களை எடுத்துகொண்டு மக்கள் ஓட்டம் .. இருவர் பலி ..

சிவகங்கை மாவட்டம் எம். புதூரில் ;இன்று நடைபெற்ற பிரமாண்ட ஜல்லிக்கட்டில் காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்க முடியாது என விழாக்கமிட்டி சொல்லியதால் கைகலப்பு ஏற்பட்டது.<சிவகங்கை மாவட்டம் எம்.புதூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அந்தக் காளைகளை அடக்குவதற்கு 1000-க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களத்தில் இருந்தனர். பிற்பகல் 3.30 மணியுடன் ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு முடிக்கப்பட்டாலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வந்த காளைகளுக்கு பரிசு வழங்கவேண்டும் என்பது வழக்கமான விதிமுறை. ஆனால், காத்திருந்த 200க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசு வழங்கமுடியாது என விழாக்கமிட்டி சொல்ல, காளை உரிமையாளருக்கும் கமிட்டிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. லாரிகளில் வைக்கப்பட்டிருந்த பீரோ உட்பட பல பரிசுகளை காளை உரிமையாளர்கள் எடுத்துக் கொள்ள முற்பட இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது.விகடன்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

சீமான் பார்பனீயத்தின் புதிய அடியாள்? ஆரியத்தின் புதிய நண்பன்?

சீமான் "தமிழ்" என்ற இனிப்பு தடவிய ஆரிய ஆதரவுக் கைக்கூலி?
எப்படி ஆர்எஸ்எஸ்,,, பார்ப்பனியத்தின் மீது திரும்பிய எதிர்ப்பை லாவகமாக இஸ்லாமியர் மீது திருப்பியதோ,,அதே போல பார்ப்பனியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழ்நாட்டில்,,,எதிரி பார்ப்பான் அல்ல,,,மாற்று மொழியினர் என்பதும்""
இந்த மண்ணில் பெரியாரின் கொள்கையை ஆர்எஸ்எஸ் என்ற நேரடி முகம் கொண்டு எதிர்க்க முடியாத காவிக் கூட்டம்,,,
தமிழ்நாட்டிற்கென பிரத்யேகமாக,
கொஞ்சம் வண்ணப்பூச்சுகளுடன் " இந்து முன்னணி " என்ற பெயருடன் களம் இறங்கியது,,,
அப்படி வந்த இந்து முன்னணியால்,,
,ஏற்கனவே மதப்பற்றும்,பிற்போக்கு சிந்தனையும் உடையவர்களையே ஈர்க்க முடிந்தது,,,
ஆனால் இந்த சீமான் அதைவிடவும் ஒருபடி மேலே போய்,,பெரியாரிய எதிர்ப்பு என்ற விசத்தை ,,"தமிழ்" என்ற இனிப்பை தடவித் தரும் நாச வேலையை திறன்பட செய்து வருகிறார்,,,

அதிமுக இரு அணிகளும் இணைவதற்கு பன்னீர் - பழனி ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. அணிகள் இணைய எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் பேச்சுவார்த்தை: தினகரன் பதவி விலக வற்புறுத்தல்அ.தி.மு.க. இரு அணிகளும் இணைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டிடிவி தினகரனை நீக்க முடிவு செய்துள்ளனர். சென்னை: ஜெயலலிதாவின் திடீர் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை பெற்ற சசிகலா, முதல்-அமைச்சர் பதவியில் அமரவும் விரும்பினார். இதற்காக அவர் வலுக்கட்டாயமாக முதல்- அமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக வைத்தார். இதனால் அ.தி.மு.க. இரண்டாக பிளவானது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. அ.தி.மு.க.வில் உள்ள 135 எம்.எல்.ஏ.க்களில் 122 பேர் சசிகலாவை ஆதரித்ததால் அந்த அணியின் கை ஓங்கியது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதல்-அமைச்சர் ஆக முடியாமல் சிறை சென்றுள்ளார்.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது ... குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை.. ...

புதுடில்லி: குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு விவகாரத்தில் , பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் ஈரானில் வசித்ததாகவும், அங்கிருந்து கடத்தி செல்லப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஜாதவை மீட்க எந்த எல்லைக்கும் செல்வோம் என பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஜாதவை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி கேட்டும், அவரது தீர்ப்பின் நகலை கேட்டும் இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

விஜயகாந்துக்கு உறவினர்களின் உறுப்பு மாற்ற சிகிச்சை உதவி தேவையாம் ... பிரேமலதா மீது கோபத்தில் உறவினர்கள்?

இப்பதாய்ன் எங்களை கண்ணுக்கு தெரியறதா ?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு சில மருத்துவ ரீதியான உதவிகளை உறவினர்கள் செய்ய மறுத்து வருகிறார்களாம். By: Prabha சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ ரீதியாக சில உதவிகளை ரத்த உறவுகள் செய்ய மறுத்துவருவதால் அவரது குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் அண்மையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சிகிச்சை பல நாட்களாக நீடித்தது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஆர்கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். ஒருநாள் மட்டுமே விஜயகாந்த் பிரசாரம் செய்த நிலையில் இடைத்தேர்தலே ஆர்கே நகரில் ரத்து செய்யப்பட்டது.

நந்தினி (மைனா) : யாரிடமும் எனது நேர்மையை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை

தற்கொலை செய்து கொண்ட தன்னுடைய கணவரின் குடும்பத்தினரால் தானும், தனது குடும்பத்தினரும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக் நடிகை ‘மைனா’ நந்தினி கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சி தொடரில் வெளியான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களுடன் பிரபலமான நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். மேலும், தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தை ராஜேந்திரனின் டார்ச்சர்தான் காரணம். நந்தினியிடம் என்னை பேசவிடாமல் அவர் என்னை தடுத்து வந்தார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என கார்த்திக் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். எனவே, இது தொடர்பாக நந்தினி மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன .. பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு!

அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களையும் - முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதற்கான காரணங்களையும் மக்களுக்கு விளக்கிடும் வகையில், சென்னையில் 22-4-2017 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் ‘மாபெரும் பொதுக்கூட்டம்’ நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி மாநிலம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில், தொழிற் சங்கங்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பேராதரவு தந்து விவசாயிகளின் துயர் துடைக்க துணை நிற்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ஏப். 25ல் பொதுவேலை நிறுத்தம்:
ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவுt; விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பங்கேற்றன. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன. 

ஜெயலலிதா உடல் தேறிவந்த நிலையில் கொடுக்கப்பட்ட பழச்சாறுதான் மரணத்துக்கு காரணம் ... புதிய தகவலகள் ?

உடல்நலம் தேறிய நிலையில் ஜெயலலிதாவின் உயிரை பறித்ததே அந்த 'பழச்சாறு'தான் என புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. By: Prabha l சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலம் தேறிவந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட 'பழச்சாறு'தான் அவரது உயிரை பறித்ததாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் முடிச்சுகள் இன்னமும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன. ஓபிஎஸ் அதிமுக, திமுக உள்ளிட்டவை ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு சிபிஐ விசாரணை கோரிய கோஷம் ஆர்கே நகர் தேர்தல் ரத்தோடு முடிந்துபோய்விட்டது. ஜெயலலிதாவின் நினைவிடமும் அவர் வசித்த போயஸ் கார்டன் பங்களாவும் ஏதோ ராசியில்லாத இடம்போல கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது.