செவ்வாய், 19 ஜனவரி, 2016

சிவகார்த்திகேயனுக்குதான் பொங்கல் வெற்றி....கெத்து,கதகளி சுமார்...தாரைதப்பட்டை காலி

விஷால், உதயநிதியை ஊதித் தள்ளிய சிவகார்த்திகேயன் இந்த பொங்கல்
பண்டிகையில் 4 படங்கள் வெளியாகின. அதில் ரஜினி முருகன் வசூல் வேட்டையில் முன்னனியில் இருப்பதாக தெரிகிறது.அவ்வை சண்முகியாகும் சிவ கார்த்திகேயன்?" இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், விஷால் நடிப்பில் கதகளி, உதயநிதியின் கெத்து மற்றும் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை ஆகிய படங்கள் வெளியாகின.இதில் தாரை தப்பட்டை குறித்து மோசமான விமர்சனங்களே வருகின்றன. கெத்து, கதகளி படங்கள் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள போதிலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் வசூலில் இந்த படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ரஜினிக்கு ரூ.10 மணியார்டர் அனுப்பிய ரசிகர்...பணக்கஷ்டமாம்

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. 10 மணியார்டர் னுப்பியுள்ளார்.நெல்லை மாவட்டம், திருமலையப்ப புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. மணியார்டர்;அனுப்பியுள்ளார். கூடவே ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பின்போது, தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட பல லட்சம் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்...பொய் வழக்குப் போடும் பெண்களிடம் இருந்து

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால்
வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது. அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது!

Peta சைதன்யா கொடுரி :சட்டம் கொண்டுவந்தாலும் மீண்டும் தடை வாங்குவோம்..டாலருக்கு மாரடிக்கும்.மேட்டுக்குடி ..


jallikattu jan 14ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்குச் சென்று பீட்டா அமைப்பினர் ஆதாரங்களை திரட்ட வில்லை. ஆனால், எங்களுக்காக பல்வேறு ஆதாரங்கள் தமிழகத்தில் இருந்து தமிழர் கள்தான் அனுப்பி வைத்தனர். அதனை வைத்தே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டோம். நாங்கள் கொடுத்த ஆதாரத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதனிடையே மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வந்தா லும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது” என்று பீட்டா இந்தியா (People for the Ethical Treatment of Animals) அமைப்பின் அறிவியல் ஆலோசகர் சைதன்யா கொடூரி தெரிவித்தார்.

திங்கள், 18 ஜனவரி, 2016

விவசாயத்திற்கு கொள்ளி ! பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் WTO-GATS மற்றும் TISA..

tata with gatesபில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி ! கடந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.
ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.
இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்
  • விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
  • எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.

பிரான்சில் பொருளாதார அவசர நிலை பிரகடனம்

பிரான்சில் சமூக, பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான நேரம்
வந்துவிட்டதாகவும், பொருளாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார். பாரிசில் இன்று நடந்த தொழிலதிபர்களுடனான ஆண்டுக் கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், பிரான்சில் நிலவி வரும் கடுமையான பொருளாதார பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை போக்குவதற்கான பல்வேறு பொருளாதார மீட்சி திட்டங்களை வெளியிட்டார். குறிப்பாக, தொழிலாளர்களை அரவணைத்து செல்லக்கூடிய தொழில் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவான முறையில் புதிய பயிற்சிகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார்.

ஈரானில் தினமும் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி...பொருளாதார தடை நீக்கம்...பெட்ரோல் விலை மேலும் குறையும்

Saudi-Iranian Rift Guarantees Oil Overproduction Will Continue; Crisis Possible In Strait Of Hormuz
ஆறு நாடுகளுடன் ஈரான் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து பொருளாதார தடைகளையும் நீக்குவதாக அமெரிக்கா அறிவித்தது. இதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஈரான் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை பெட்ரோலியத்துறை துணை மந்திரி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் சரிவை கண்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 28.74 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது மாலைமலர்.com

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவன் தற்கொலை... நெஞ்சை பிழியும் தற்கொலை கடிதம்

காலை வணக்கம்! இந்தக் கடிதத்தை நீங்கள்
படிக்கும் தருணத்தில் நான்
உங்களுடன் இருக்க மாட்டேன். அதற்காக என் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். உங்களில் சிலர் என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள், என்னை நேசித்தவர்கள், என்னை நன்றாக நடத்தியவர்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. எப்போதுமே என்னால் மட்டும்தான் எனக்கு பிரச்சனை. என்னுடைய ஆன்மாவுக்கும் உடலுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் நான் ஒரு ராட்சசனாக மாறி விட்டதாகவும் உணர்கிறேன்.  நான் ஒரு எழுத்தாளராக இருக்கவே எப்போதும் விரும்பினேன். கார்ல் சாகனைப் போல் ஒரு அறிவியல் எழுத்தாளராக... இறுதியில், இதோ இந்த ஒரு கடிதத்தை மட்டுமே என்னால் எழுத முடிந்துள்ளது.
எனக்கு அறிவியல், நட்சத்திரங்கள், இயற்கை அத்தனையும் பிடிக்கும். மக்களையும்.... அவர்கள் இயற்கையிடமிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டார்கள் என்பது புரியாத போதும். நமது உணர்வுகள் இரண்டாம் பட்சமானவை. நமது அன்பு கட்டமைக்கப்பட்டது. நமது நம்பிக்கைகள் சாயம் பூசப்பட்டவை. நமது சுயத்தன்மை செயற்கையான கலவையின் மூலமாகவே மதிக்கப்படுகிறது.

கலைஞர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜார்..அவதூறு வழக்கு..

தன் மீது தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கில் விளக்கம் அளிக்க திமுக
தலைவர் மு கருணாநிதி இன்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தமிழக முதல்வரும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெ ஜெயலலிதா கருணாநிதி மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அதில் கருணாநிதி நேரில் வந்து ஆஜரானார். அப்போது இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இன்றைய நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து தொடுக்கும் தமிழக அரசின் போக்கு சரியானது அல்ல என இந்திய உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாக தெரிவித்தார். "இதை விட கூடுதலாக நான் கருத்து கூறத் தேவையில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

1916 முதல் தமிழ்த்திரைப்படம் 2016 தமிழ் திரைப்பட நூற்றாண்டு..கீசகவதம்..நடராஜ முதலியார் தயாரிப்பு.


The year marked the birth of the Silent Film in Tamil Nadu, the precursor to the modern day Tamil Cinema, as we know it. R.Nataraja Mudaliyar
 தமிழ் சினிமா நூற்றாண்டு - பரிதாபம்...
ஒரு மாபெரும் கலை தமிழ் மண்ணில் தோன்றி இந்த ஆண்டோடு நூற்றாண்டை நிறைவு செய்யவிருக்கிறது. ஆனால் அது பற்றி எந்த ஊடகமோ, அச்சு இதழ்களோ ஒரு வரிக் கூட எழுதவில்லை. முதலில் யாருக்குமோ இந்த தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்கிற தகவல் கூட தெரியவில்லை. இதுதான் தமிழ் சினிமாவை மையப்படுத்தி வெளிவரும் பல இதழ்கள், தொலைக்காட்சிகளின் லட்சணம். ஊடகங்களை விடவும், இதனை கொண்டாட வேண்டிய தமிழ் சினிமா கலைஞர்களும் இது பற்றி எவ்வித தெளிவும் இல்லாமல் இருக்கிறார்கள். நடந்து முடிந்த சென்னை திரைப்பட விழாவில் கூட இது தமிழ் சினிமாவின் நூற்றாண்டு என்கிற எவ்வித பதிவும், கொண்டாட்டமும் இல்லை.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

இளங்கோவன்:நக்மாவுக்கு பாட்சாவை தெரிந்த அளவு ஜல்லிகட்டு பற்றி தெரியவில்லை..b

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான நக்மாவுக்கு
பாட்ஷாவை தெரிந்த அளவுக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரியவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இதை அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், செய்தி தொடர்பாளர் நக்மா, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாட்சாவை பற்றி அவுகளுக்கு அவ்வளவு அதிகமா தெரியுமா?

ஜல்லிகட்டு...TN பாஜகவின் கதை கந்தல்...இந்துத்வாவின் தவறான கணக்கு கூட்டல்

இருந்த கொஞ்சம் நல்ல பெயரையும் கந்தர கோலத்தில் ஜல்லிக்கட்டு மூலம் தமிழக பி ஜே பி கட்சியினர் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர் . இதன் மூலம் , வரும் சட்ட சபை தேர்தலில் தமிழக பி ஜே பி யை எந்த கட்சியும் கூட்டணிக்குள் சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்பது தான் உண்மை . ஒரு அருமையான வாய்ப்பை பி ஜே பி யினர் பறி கொடுத்து விட்டனர் . தமிழக பி ஜே பி க்கு அருமையான வாய்ப்புகள் இரண்டு கிடைத்தன . 1 ) சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிவாரணம் - அதை சரியான முறையில் கையாள தெரியவில்லை 2 ) ஜல்லிக்கட்டு - இதையும் நழுவ விட்டு விட்டனர் . தமிழக பி ஜே பி யின் தமிழிசை , முரளிதர் ராவ் , இல கணேசன் மூவரும் தவறான பாதையில் சென்றதின் விளைவை இப்போது தான் மத்திய தலைமை உணர்ந்து உள்ளது . கை மீறி போய் விட்டது . TN பி ஜே பி  தனியாக போட்டியிட வேண்டியது தான் .
தமிழக பா.ஜ., மீது பாய்ந்த 'ஜல்லிக்கட்டு' 'ஜல்லிக்கட்டு விவகாரத்தை, சட்ட ரீதியாக அணுக வேண்டிய நேரத்தில், மக்களின் உணர்வு, நம்பிக்கை, கலாசாரம் எனக் கூறி, தேவையற்ற தர்ம சங்கடத்தை, தமிழக பா.ஜ., தலைவர்கள், மத்திய அரசுக்கு ஏற்படுத்திவிட்டனர்' என, அக்கட்சிக்குள் புகைச்சல் கிளம்பி உள்ளது

ஜல்லிகட்டு தடைக்கு எதிராக போராட்டம்..மக்கள் நல கூட்டணியும்....

மதுரை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என மக்கள் நலக்கூட்டியக்கம் அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தி வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு முறையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழர்களின் வாழ்வோடு ஜல்லிக்கட்டு இணைந்தது என்பதை வலியுறுத்தியும் மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் இன்று மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஜல்லிகட்டுக்கு இதைவிட பொருத்தமான படம் இருக்கான்னே?

அரவிந்த் கெஜ்ரிவால் மீது இளம்பெண் ’மை வீச்சு..பாவனா அரோரா ஆமாத்மி சேனாவின் பஞ்சாப்...

As per news agency ANI, the ink thrower claims to be a Punjab in-charge of the Aam Aadmi Sena. According to media reports, Aam Aadmi Sena is an organisation formed by former dissident AAP workers who left the party due to Kejriwal's 'dictatorial' ways of working.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பொதுப் பேரணியில் பேசிக் கொண்டிருந்தபோது இளம்பெண் ஒருவர் அவருக்கு எதிராக கோஷமிட்டு அவர் மீது மையை வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.டெல்லி நகரில் மாசு அதிகமாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படைந்து வருகிறது. இதனால் வாகனப் புகை மாசுவை கட்டுப்படுத்த மாநில முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்தார். இதையடுத்து, வாகனப்புகை அளவை கணக்கிட ஒற்றை, இரட்டைப்படை இலக்கங்கள் கொண்ட வாகனங்களை ஒருநாள் விட்டு ஒரு நாள் இயக்கும் சோதனை ஓட்ட திட்டம் கடந்த 1-ந்தேதி டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது.

சரத்குமார், ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவில்..நடிகர் சங்கம் புகார்

தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் உள்ளிட்டோர் வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யா முன்னாள் நிர்வாகிகளுக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்nakkheeran.in

பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் காலமானார்...தமிழ் தலித் எழுச்சியின் அடையாளம்

நாட்டுப்புற இசைக் கலைஞரும் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை
பேராசிரியருமான முனைவர் கே.ஏ.குணசேகரன் (1955-2016) உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-01-2017) புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற குணசேகரன் தமிழ் நவீன நாடக உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் புகழ்பெற்றவர். சத்திய சோதனை, பவளக்கொடி, பலியாடுகள் உள்ளிட்ட நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
நாட்டுப்புற இசைக்கு பொதுவெளியில் ஏற்பையும் மதிப்பையும் உருவாக்கியவர். தற்போது புகழ்பெற்று விளங்கும் சின்னப்பொண்ணு உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் அவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்.
கவிஞர் இன்குலாப் எழுதி குணசேகரன் பாடிய "மனுசங்கடா நாங்க மனுஷங்கடா....." என்றபாடல் தமிழ்நாட்டு முற்போக்காளர்களின் தேசிய கீதம் எனப் புகழப்பட்ட ஒன்று.

தடையை மீறி பல இடங்களிலும் ஜல்லி கட்டு .....நடந்தது

மதுரை, தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டுவண்டி பந்தயங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, போட்டியை நடத்த மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அனுமதி வழங்கியது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். பாலமேட்டில் போராட்டம் மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. தடையை கண்டித்து ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்தன.

சுப்ரமணியம் சுவாமி: நடிகர் அமிர்கான் பாகிஸ்தான் உளவாளி ...ஐ எஸ் ஐ யுடன் இணைந்து.......

'பாலிவுட் நடிகர் அமீர் கான், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் இணைந்து செயல்படுகிறார். அவரது திரைப்படத்தை பிரபலப்படுத்த அனைத்து வேலைகளையும் ஐ.எஸ்.ஐ., செய்கிறது,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பகீர் புகாரை தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், சில மாதங்களுக்கு முன், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும்; தன் மனைவி, இந்தியாவை விட்டு வெளியேற விரும்புவதாகவும் கூறினார். அவரது இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளதாவது: நடிகர் அமீர் கானின் அறிக்கைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யுடன் இணைந்து செயல்படுகிறார். சு.சுவாமியின் மகள் (இப்போ முஸ்லிம் )சுகாசினியின் கணவர் பிள்ளைகள் எல்லாம் முஸ்லிம்கள் .சு.சுவாமியின் மனைவி கிறிஸ்தவர் 

இந்துத்துவா...ராதா ராஜனின் ஜல்லிக்கட்டு தடை பின்னணி...

மனிதர்கள் கொல்லப்படுவதை இத்தனை வன்மமாக ஆதரிக்கும் ராதா ராஜன், காளைகள் ஜல்லிக்கட்டில் துன்புறுத்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலராக இந்துத்துவத்தைக் காப்பாற்ற கிளம்பியிருப்பது கசப்பான முரண் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பார்களே..அதுதான் ராதா ராஜனின் விலங்கு நல ஆர்வலத்தின் பின்னணி வெளிவந்த கணம் நினைவுக்கு வந்தது. இவரது பேச்சில் எத்தனை வன்மம், குரூரம்! தீவிரவாதத்தை முன்னெடுக்கும் சாமியார்களின் பேச்சைவிட மிக வன்மமாக இருக்கிறது இவருடைய பேச்சு. பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே கொலைக்குற்றத்தில் கைதான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் சமீர் கெய்வாட்டுக்கு ஆதரவாக இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ எத்தனை காழ்ப்பை வெளிப்படுத்துகிறார் ராதா ராஜன் என்பதை நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ராதாராஜன் : வீட்டுக்குள்ளேயே தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கிறேன் .......

“அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன்” தொலைக்காட்சியில் பகிரங்கமாகப் பேசிய விலங்கு நல ஆர்வலர்!
ஜல்லிக்கட்டு தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்று.ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு சீமான் சொல்கிறார். “அப்படியே தடை வந்துட்டாலும் கூட எங்கிட்டே இருபது ஏக்கர் இடம் இருக்கு. முன்னூறு காளைகள் இருக்கு. நான் நடத்திட்டுப் போறேன். யாரென்ன பண்ணுவாங்கன்னு பார்த்துக்கறேன்”அவருக்கு பதிலடியாக ராதா ராஜன் என்கிற விலங்குகள்நல ஆர்வலர் சொல்கிறார். “அப்படின்னா என் வீட்டுக்குள்ளே நான் தீண்டாமையை பிராக்டிஸ் பண்ணிக்கறேன். பால்யவிவாகம் நடத்திக்கறேன். என்னை வந்து நீங்க கேட்கக்கூடாது”நெறியாளர் குணசேகரன் அப்படியே திகைத்துப் போகிறார். சீமானுக்கு என்ன பதிலடி கொடுப்பது என்றே தெரியவில்லை. அந்த விவாத மேடையில் இருந்த யாரும் இந்த பார்ப்பனக் கொழுப்பு வாதத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆயாசமாகவும் இருந்தது.

காபி வித் DD இளையராஜா: நான் கஷ்டப்பட்ட காலத்தில் கம்யுனிஸ்ட்கள் உதவவில்லை.

தொலைக்காட்சியில் “காபி வித் டிடி” நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா, அந்த பேட்டியில் “வறுமையான காலத்தில் கம்யூனிஸ்ட்கள் தனக்கு உதவி செய்யவில்லை” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து , கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வதுடன், இளையராஜாவுக்கு கடுமையான கேள்விகளையும் முன் வைத்துள்ளனர்.
பேட்டியில் பேசிய இளையராஜா தான் கஷ்டப்பட்ட நாட்களில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வாடகைக்கு தங்க இடம் கேட்டதாகவும் அதற்கு மூத்த கம்யூனிஸ்ட் இயக்க தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான ஐ.மாயாண்டி பாரதி இடம் தர மறுத்ததாகவும் கூறினார் . கூடவே மேடைகளில தொழிலாளர் தோழர்களே என்று பேசும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் தனி மனிதனுக்கு இடம் தர மறுத்ததாக குற்றம் சாட்டினார்.
இந்த பேட்டியை பார்த்த ஐ.மா.பாவுடன் நெருங்கி பழகியவர்கள்அதிர்ந்து போயினர். இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் கஷ்டப்பட்ட காலத்தில் ஒரு குழுவாக செயல்படச் சொல்லி அவர்களுக்கு கம்யூனிஸ்ட் இயக்க மேடைகளில் வாய்ப்பு வாங்கி தந்தவர் ஐ.மா.பா.

தைவான் முதல் பெண் அதிபராகிறார் சாய் இங்-வென் !

தைபே: தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாய் இங் - வென் பதவியேற்க உள்ளார். சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. Tsai Ing-wen is elected Taiwan's first female president அதிபர் தேர்தலில் களத்தில் நிற்கும் தேசிய கட்சியின் எரிக் சூ-வின் ஆதரவாளர்களும், ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் சைங்-இன்(Tsai ing) ஆதரவாளர்களும் தலைநகர் தைபே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இயக்குனர் பாலா : அம்மா கொடுக்குற இலவச அரிசியால நம்ம பொழப்பு ஓடுது...ஜிங்குஜா

அதிமுக-வில் இணையப் போகிறாரா இயக்குநர் பாலா? சேது’ படத்தின் மூலம்
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பாலா, தனது முதல் படத்திலையே தேசிய விருது வென்றார். இதையடுத்து தொடர்ந்து அவர் இயக்கிய ‘நந்தா’, ‘பிதாமகன்’, ’நான் கடவுள்’ ஆகியப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தவர் இந்திய சினிமாவின் பார்வையையும் தன் மீது படச்செய்தார்.வியாபார சினிமாவில் சிக்காத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த பாலா, தன் மீது அரசியல் சாயம் பூசிக்கொள்ளாமல் இருந்தார். ஆனால், நேற்று வெளியாகியுள்ள அவரது ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் அவர் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இயக்குனர் பாலாவுக்கு ரொம்ப கொடுமையா சகிக்க முடியாத செட் புரோப்பார்டீஸ் தாய்ன் பிடிக்கும்  இந்த அழுவுணிகளோடதான் செட்டாகும் ....

இந்திய முதியவரை தாக்கிய அமெரிக்க போலீஸ் விடுதலை....

வாஷிங்டன்,ஜன.15
(டி.என்.எஸ்) அமெரிக்காவில் இந்திய முதியவரை தாக்கிய வழக்கில், அந்நாட்டு போலீஸ் ஒருவருக்கு நீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.
அமெரிக்காவில் அலபாமா மாகாணம், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக சென்றவர், இந்தியர் சுரேஷ் பாய் படேல் (வயது 57).
இவர் அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6–ந் தேதி, நடைப்பயிற்சி சென்றபோது, சந்தேகத்தின் அடிப்படையில் எரிக் பார்க்கர் என்ற போலீஸ் அதிகாரி சுற்றி வளைத்து கேள்வி கேட்க, அவருக்கு ஆங்கில மொழி தெரியாததால் சரியாக பதில் அளிக்க முடியாமல் போய்விட்டது. அவரை அந்த போலீஸ் அதிகாரி தாக்கி, கீழே தள்ளி படுகாயப்படுத்தினார். அதில் அவர் முடமானார்.

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆந்திர முதல்வர் சந்திரபாபு ஊரில் மஞ்சு விரட்டு !

சித்தூர்: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊரில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது போல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். நேற்று மாட்டுப் பொங்கல் தமிழகம் மற்றும் ஆந்திராவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனிடையே உச்ச நீதிமன்ற தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. despite the ban of jaallikattu in andra இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புள்ளயாகாரு பள்ளி கிராமம் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர். அந்த கிராமத்தில் நேற்று ஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட மாடுகளின் கொம்புவில் அதன் உரிமையாளர்கள் கழுத்தில் பரிசுத்தொகையை கட்டி தெருவில் ஓட விட்டனர்.